Categories
Reviews

’லெனின் பாண்டியன்’ திரைப்பட விமர்சனம்

’லெனின் பாண்டியன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast: Gangai Amaran, Roja, Dharsan Ganeshan, Shrrita Rao, George Maryan, Aadukalam Naren, Yugendran, Bose Venkat, Archana Ravichandran

Presented by: Sathya Jyothi Films – T.G. Thyagarajan
Producers: Sendhil Thyagarajan & Arjun Thyagarajan
Written & Directed by: D.D. Balachandran
Music: Ilaiyaraaja
DOP: A.M. Edwin Sakay
Editor: Nagooran Ramachandran
Art: Athuuri Jeykumaar
Stunts: Thalapathi Dhinesh
Choreography: Viji Sathish

‘லெனின் பாண்டியன்’ சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதிகளை சுற்றியுள்ள கிராமப்புற பின்னணியில் கங்கை அமரன் மற்றும் ரோஜா தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் குழந்தை போல் பாசமாக வளர்க்கும் ஆடு மணல் கொள்ளை கும்பலின் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறது. இதற்கு நியாயம் கேட்டு காவல் நிலையம் செல்லும் கங்கை அமரன் அங்கு அவமானப்படுத்தப்படுகிறார். இதன் பிறகு அந்த பகுதியில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக அவர் குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார்.

மணல் கொள்ளையை தடுக்க முயற்சி செய்யும் கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சனா ஆதாரங்களுடன் லாரிகளை பிடிக்கிறார். இதனால் மணல் கொள்ளை கும்பலால் அவர் கொல்லப்படுகிறார். இதையடுத்து கங்கை அமரன் நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதுடன், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

அந்த பாதுகாப்பு பொறுப்பு காவல் நிலையத்தில் பெரிய அளவில் மதிக்கப்படாத கான்ஸ்டபிளான தர்ஷன் கணேசனுக்கு கிடைக்கிறது. ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண பணியாக நினைக்கும் அவர், பின்னர் கங்கை அமரனின் பின்னணி மற்றும் அவரை சுற்றியிருக்கும் ஆபத்தை புரிந்து கொள்கிறார். அதன்பிறகு அவரை பாதுகாப்பது மட்டும் இல்லாமல் அந்த குடும்பத்துடன் நெருக்கமாக பழகி அவர்களில் ஒருவராக மாறுகிறார். மணல் கொள்ளை கும்பல் தர்ஷனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கும் நிலையில் அவர் எடுக்கும் முடிவுகள்தான் படத்தின் முக்கியமான பகுதி.

தர்ஷன் கணேசனின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது. ஆரம்பத்தில் பயத்துடனும் தன்னம்பிக்கை இல்லாமலும் இருக்கும் ஒரு சாதாரண காவலராக அறிமுகமாகி, படிப்படியாக தனது பொறுப்பை உணர்ந்து தைரியமாக மாறும் விதத்தை அவர் இயல்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்ற உணர்வு தெரியாத அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது. காவல் நிலையத்தில் அவமானப்படும் காட்சிகளிலும், காதலியிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஆபத்தான சூழ்நிலைகளில் அவர் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

கங்கை அமரன் துரைராசு என்ற விவசாயி கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். தனது ஆட்டின் மீது அவர் வைத்திருக்கும் பாசம், அதற்காக நீதியை தேடி போராடும் மனநிலை, காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்படும் தருணங்கள் என பல காட்சிகளில் அவரது நடிப்பு கதைக்கு உணர்வை கொடுக்கிறது. சில இடங்களில் அவரது உணர்ச்சி வெளிப்பாடு சற்று அதிகமாக இருந்தாலும், மொத்தத்தில் கதாபாத்திரத்திற்கு அவர் நல்ல நியாயம் செய்திருக்கிறார்.

ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் இந்த படத்தில் குடும்பத்தை தாங்கி நிற்கும் மனைவி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். கணவனுக்கு துணையாக இருப்பது, அவரை சரியான பாதையில் வழிநடத்துவது போன்ற காட்சிகளில் அவரது அனுபவம் தெரிகிறது.

ஜார்ஜ் மரியான் நீதிபதி பீமாராவ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு ஒரு முக்கியமான திருப்பத்தை கொடுக்கிறது. நீதிமன்ற காட்சிகளில் அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. யுகேந்திரன், போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷ்ரித்தாராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கிராமத்து பின்னணிக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் அவரது பின்னணி இசை அமைந்திருக்கிறது. குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் இசை அந்த காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது. பழைய இளையராஜா இசையின் நினைவுகளை ஏற்படுத்தும் சில தருணங்களும் இருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ஏ எம் எட்வின் சகாய் சிவகங்கை மற்றும் மானாமதுரை கிராமப்புற பகுதிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறார். கிராமத்து மண் வாசனை, மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகள், இரவு நேர கடத்தல் காட்சிகள் மற்றும் நீதிமன்ற காட்சிகள் என அனைத்தையும் கதைக்கு ஏற்ற வகையில் பதிவு செய்திருக்கிறார். கலை இயக்கமும் படத்திற்கு இயல்பான தோற்றத்தை கொடுத்திருக்கிறது.

முதல் பாதி விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செல்கிறது. ஒரு ஆட்டின் மரணத்தில் தொடங்கும் பிரச்சனை படிப்படியாக மணல் கொள்ளை மற்றும் அதன் பின்னால் இருக்கும் அதிகார பலம் வரை செல்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் முதல் பாதியில் இருந்த வேகம் சற்று குறைகிறது. சில காட்சிகளையும் கிளைமாக்ஸையும் இன்னும் அழுத்தமாக அமைத்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. சில இடங்களில் சினிமாத்தனமும் அதிகமாக தெரிகிறது.

இருந்தாலும் ஒரு சாதாரண விவசாயி தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும், ஆரம்பத்தில் பயந்து ஒதுங்கும் ஒரு காவலர் சரியான நேரத்தில் தனது கடமையை உணர்ந்து நிற்பதும் படத்தின் முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன. மணல் கொள்ளை போன்ற சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஒரு உணர்வுப்பூர்வமான கதையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டி டி பாலச்சந்திரன்.

மொத்தத்தில், ‘லெனின் பாண்டியன்’ கிராமத்து மனிதனின் உரிமைக்கான ஒருபோராட்டத்தையும், பயத்தை தாண்டி தனது கடமையை செய்யும் ஒரு காவலரின் பயணத்தையும் சொல்லும் சமூக அக்கறை கொண்ட படம்.

Categories
Reviews

‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட விமர்சனம்

‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

Abarnathi
Lingesh
Vettri Cheliyan
Suresh Menon
Aswin
Tamilarasi
Anbu

Crew:
Written and directed by- VettriCheliyan
Producer-Velayutham
Music-Dinesh Antony
Dob-Arjun Ravi,Gnanasekar R.S
Editor-Ranjeet CK
Art director – Ragavan Sanjeevi
Executive Producer-Arun mozhi devan
Sound design – Krishna Samy
Sound design – R.KRISHNAMOORTHY D.F.Tech
Publicity Designer-Rajinkrishnan
Vfx-Art FX Studio
Post-Sasikala productions
Di-Sri kalasa studio
Di colourist-Raghuram
Stunt-Rock Prabhu

‘தி கிராண்ட் மாஸ்டர்’ “திறமைக்கு சாதி கிடையாது; வாய்ப்பு கிடைத்தால் எந்தத் திறமையும் வெல்லும்” என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.

ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவை சாதிய பாகுபாடுகளையும் ஆதிக்க சமூகத் தடைகளையும் கடந்து எப்படி நிறைவேற்றுகிறான் என்பதே படத்தின் மையக்கதை.

நாயகியின் மகன் சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஆனால், அவரது கனவுக்கு குடும்பத்திலும் சில தடைகள் இருக்கின்றன. அவரது தாய் அபர்நதி, மகன் நன்றாகப் படித்து வழக்கறிஞராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், மகனுக்கு உலகமே செஸ் விளையாட்டைச் சுற்றியே நகர்கிறது.

அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுவன், மற்ற மாணவர்களைப் போல விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் PT ஆசிரியரிடம் செஸ் போர்டு கேட்கும் காட்சியும், அதற்குப் பதிலாக அவனுக்கு வழங்கப்படும் வேலையும் சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாட்டின் கொடுமையை வெளிப்படுத்துகின்றன. “யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும்” என்று சமூகமே தீர்மானிக்கும் மனநிலையை அக்காட்சி அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மகனின் கனவைப் புரிந்துகொள்ளும் தாய் அபர்நதி, அவனை செஸ் விளையாட்டில் முன்னேற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதன் பின்னணியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் கதையின் இரண்டாம் பாதி நகர்கிறது.

அபர்நதியின் கணவராக லிங்கேஷ் நடித்திருக்கிறார். கிராமத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் இவர்களது குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கின்றன. ஏற்கனவே அபர்நதியிடம் ∆ போட்டியில் தோல்வியடைந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர், அந்தத் தோல்வியை மனதில் வைத்துக்கொண்டு அவரை அவமானப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சூழலில் ஏற்படும் ஒரு பிரச்சினையில் லிங்கேஷ்வர் கட்டி வைக்கப்படுகிறார். அவரை மீட்க வேண்டுமானால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை செஸ் போட்டியில் அபர்நதி வெல்ல வேண்டும் என்று கிராம மக்கள் நிபந்தனை விதிக்கின்றனர். அனைவரின் முன்னிலையிலும் நடைபெறும் அந்தப் போட்டியில் அபர்நதி வெற்றி பெற்று தனது கணவரை மீட்கிறார்.

மனைவியின் செஸ் திறமையைப் பார்த்து வியக்கும் லிங்கேஷ்வர், அவரை செஸ் விளையாட்டில் சாதிக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார். சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கும் அறிவும் திறமையும் இருக்கிறது, அவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகிறது.

இந்தப் பயணத்தில் செஸ் கிளப்பின் தலைவராக வரும் சுரேஷ் மேனன் கதையில் வில்லனாக நடித்திருக்கிறார். அதிகாரமும் பணமும் சமூக அந்தஸ்தும் எவ்வாறு ஒருவரின் திறமையைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவரது கதாபாத்திரம் வழியாக படம் காட்டுகிறது. அபர்நதிக்கும், சுரேஷ் மேனனுக்கும் இடையே உருவாகும் மோதல் கதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.

இறுதியில், அபர்நதியும் அவரது குடும்பமும் எதிர்கொள்ளும் தடைகள், வெற்றி செழியனின் செஸ் பயணம், அவனை ஒரு சாம்பியனாக உருவாக்கும் முயற்சி ஆகியவை கதையின் முக்கியப் பகுதிகளாக அமைகின்றன.

படத்தில் நாயகி அபர்நதி துப்புரவுப் பணியாளராக மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் வறுமை, குடும்பப் போராட்டம், மகனின் எதிர்காலம் குறித்த அக்கறை என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவரது தோழியாக நடித்திருப்பவரின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

நடிகர் லிங்கேஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவியின் திறமையினை புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற போராடும் அவரது நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது.

நடிகர் சுரேஷ் மேனன், செஸ் கிளப்பின் தலைவராக அதிகார மனப்பான்மையும் ஆதிக்க குணமும் கொண்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

கிராண்ட் மாஸ்டராக நடித்திருக்கும் சிறுவன், செஸ் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தையும், தனது கனவை நோக்கிய பயணத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் போட்டிகளில் பங்கேற்கும் பல காட்சிகள், நிஜ வாழ்க்கையின் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவை நினைவுபடுத்துகின்றன. ஏனெனில், அவரும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இன்று உலகமே பாராட்டும் வகையில் செஸ் போட்டிகளில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறச் சூழலையும், கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கவனம் ஈர்க்கிறது. சில காட்சிகள்( சுரேஷ் மேனனை சாக்கடையில் சுத்தம் செய்யும் காட்சி) கதையின் உணர்வை வார்த்தைகளைக் காட்டிலும் காட்சிகளின் மூலமாகவே பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன.

படத்தில் பாடல்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கதையின் மையமான செஸ் விளையாட்டைச் சுற்றியே திரைக்கதை நகர்த்தப்பட்டிருப்பது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது. சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும் மனிதர்களின் நிலை ஆகியவற்றை ‘செஸ்’ விளையாட்டின் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

‘செஸ்’ என்பது அறிவுக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு. ஆனால், சமூகத்தில் ஒருவரின் திறமையை மதிப்பிடுவதற்குப் பதிலாக அவருடைய பிறப்பையும் சமூகப் பின்னணியையும் வைத்து மதிப்பிடும் மனநிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.

அதே நேரத்தில், படத்தின் இறுதிப்பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் வலுவாகக் காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் செஸ் விளையாட்டை மையமாகக் கொண்டிருந்த படத்தின் கதை சமூகப் பிரச்சினைகளின் பக்கம் திரும்புகிறது. இந்த அணுகுமுறை சில இடங்களில் கதையின் மையத்துடன் எவ்வளவு இயல்பாக இணைகிறது என்பது பார்வையாளர்களின் தனிப்பட்ட கருத்துக்கு விட்டுவிடுகிறது.

மொத்தத்தில், ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திறமை இருந்தும் சமூகத் தடைகளால் வாய்ப்பு மறுக்கப்படும் மனிதர்களைப் பற்றிப் பேசும் படமாகவும் இருக்கிறது. திறமை எந்த சமூகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்தாலும், அவர்களுக்கு சமமான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்” என்பதே இப்படத்தின் முக்கியமான கருத்தாக இருக்கிறது.

#TheGrandMaster #TheGrandMasterMovie
Review By
Antoine

Categories
Reviews

The Dark Heaven திரைப்பட விமர்சனம்

The Dark Heaven திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:
Siddhu, Darshika, Rithvika, Pradeep, Vela Ramamoorthy, Nizhalgal Ravi, Jayakumar, Arul D Shankar, Sathya, Chaplin Balu

Music: Sakthi Balaji
Cinematography: Manikandan P K
Editing: Raja Arumugam
Written & Directed by: Balaji
Produced by: Kothai Entertainment & MS Swiss Film Factory

‘தி டார்க் ஹெவன்’ மலை கிராமம் ஒன்றில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை மர்மமான முறையில் ஆண்கள் இறந்து போகிறார்கள். இதற்கு வனமங்கையின் சாபம்தான் காரணம் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். இதற்கிடையில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லும் ஒரு மர்ம புத்தகமும் கதைக்குள் வருகிறது.

இந்த மர்மமான கிராமத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சித்து அங்கு நடக்கும் தொடர் மரணங்கள் மற்றும் கொலைகள் குறித்து விசாரணையை தொடங்குகிறார். விசாரணை போக போக ஒவ்வொரு முடிச்சாக அவிழும் என்று பார்த்தால் அதற்கு பின்னால் இன்னொரு மர்மம் வந்து நிற்கிறது. ஒரு கட்டத்தில் சைக்கோ கொலையாளி பற்றிய தகவலும் வருவதால் கதை இன்னும் பரபரப்பாகிறது.

ஆனால் உண்மையில் இந்த கொலைகளுக்கும் அந்த சைக்கோ கொலையாளிக்கும் என்ன தொடர்பு, அந்த மர்ம புத்தகத்திற்கும் நடக்கும் சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம், ஏழு வருடங்களுக்கு ஒருமுறை இந்த மரணங்கள் ஏன் நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ்.

படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை. இயக்குநர் பாலாஜி மர்ம புத்தகம், பழைய சம்பவங்கள், சாபம், தொடர் கொலைகள் மற்றும் போலீஸ் விசாரணை என பல விஷயங்களை ஒன்றாக இணைத்து சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார்.

நாம் ஒரு கட்டத்தில் இவர்தான் கொலையாளியாக இருப்பாரோ என்று யூகிக்க ஆரம்பித்தால் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் அந்த யூகங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அதனால் படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருப்பது நல்ல விஷயம்.

சித்து போலீஸ் அதிகாரியாக அமைதியான மற்றும் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதிகமாக பேசாமல் முகபாவனை மற்றும் உடல்மொழி மூலமாக கதாபாத்திரத்தை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார். முதல் படத்திலேயே அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

தர்ஷிகா, ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரித்விகாவின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது.

மணிகண்டன் பிகேவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலை கிராமத்தின் சூழல், இரவு நேர காட்சிகள் மற்றும் மர்மமான இடங்களை கேமரா மூலம் நன்றாக காட்டியிருக்கிறார்.

சக்தி பாலாஜியின் பின்னணி இசையும் படத்தின் பதற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மர்மம் மற்றும் திகில் வரும் காட்சிகளில் இசை நன்றாக வேலை செய்திருக்கிறது. படத்தொகுப்பும் கதையின் வேகத்தை பெரும்பாலும் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.

அதே நேரத்தில் சில இடங்களில் இன்னும் கொஞ்சம் தெளிவாக கதையை சொல்லியிருக்கலாம். பழைய கால சம்பவங்களுக்கும் நிகழ்கால கொலைகளுக்கும் உள்ள தொடர்பை இன்னும் விரிவாக காட்டியிருந்தால் கிளைமாக்ஸ் இன்னும் வலுவாக இருந்திருக்கும். சில சண்டைக்காட்சிகளும் கதையின் ஓட்டத்தில் சற்று தேவையற்றதாக தெரிகிறது.

இருந்தாலும் இந்த குறைகளை தாண்டி மர்மம், சஸ்பென்ஸ், கிரைம் மற்றும் அமானுஷ்யம் என அனைத்தையும் கலந்து ஒரு விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.

மொத்தத்தில், ‘தி டார்க் ஹெவன்’ ஒரு சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

Categories
Reviews

‘Cold Call’ திரைப்பட விமர்சனம்

‘Cold Call’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

Siddhu Moolimani
Santhosh S A
Sri Vaishnav
Krishna Vijay
Balaji Rajasekhar
Sreekanth V
Amitha Ranganatha
Nisha Hegde
Mary Litti
Keerthana Pulki
Nithin Sam Reginald
Rashmika Santhosh

Written and Directed by Thambithurai Ethuraj
Produced by Kesava Murthy, Santhosh Kumar and Thambithurai Ethuraj
Production Company Wagthro Entertainment
Music by Pranav Giridharan
Cinematography by Saravanan Natarajan
Edited by Suresh Arumugam

‘Cold Call’ தமிழகம் கர்நாடகம் ஆந்திரப் பிரதேசம் கேரளா என்று வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த சித்து மூலிமணி சந்தோஷ் ஸ்ரீ வைஷ்ணவ் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்கள் ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் என்றாலும் நாளடைவில் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள்

விற்பனை பிரதிநிதி வேலை சாதாரணமான வேலை கிடையாது தொடர்ந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும் நிறுவனம் கொடுக்கும் இலக்கை அடைய வேண்டும் என்று பல அழுத்தங்கள் இருக்கும் இருந்தாலும் நான்கு பேரும் அந்த வேலையை சந்தோஷமாக செய்து வருகிறார்கள்

ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்களால் செயல்பட முடியாததால் மேலதிகாரியின் கோபத்துக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள் இதற்கிடையில் ஒரு தொழிலதிபரின் மகன் கடத்தப்படுகிறார் அந்த கடத்தல் வழக்கில் இந்த நான்கு நண்பர்களுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகித்து அவர்களை தேட ஆரம்பிக்கிறது.

தாங்கள் செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளும் நான்கு பேரும் காவல்துறையிடம் சிக்காமல் தப்பிப்பதோடு தங்கள் மீது இருக்கும் பழியை போக்க வேண்டும் என்றும் கடத்தப்பட்ட சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள்

அதற்காக தாங்கள் விற்பனை துறையில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் தங்களுடைய சாதுர்யத்தையும் பயன்படுத்தி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் இதிலிருந்து அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதி

நான்கு கதாநாயகர்களும் தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் என்றாலும் அவர்களுடைய நடிப்பு ஓரளவுக்கு இயல்பாக இருக்கிறது ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் நால்வருக்கும் தனித்தனியாக முக்கியத்துவம் கிடைக்கிறது காமெடி காட்சிகளிலும் பதற்றமான காட்சிகளிலும் நன்றாக பங்களிப்பு செய்திருக்கிறார்கள்

அமிதா ரங்கநாதா நிஷா ஹெக்டே மேலி லிட்டி கீர்த்தனா புல்கி ஆகிய நான்கு நாயகிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக செய்திருக்கிறார்கள் துணை கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்

சரவணன் நடராஜனின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது பெங்களூரு நகரத்தின் பின்னணியும் நான்கு நண்பர்களை பின்தொடரும் காட்சிகளும் நன்றாக படமாக்கப்பட்டிருக்கிறது

பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் தன்மையுடன் இருக்கிறது பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தை அதிகமாக பாதிக்காமல் கதையை நகர்த்துகிறது

இயக்குனர் தம்பிதுரை விற்பனை பிரதிநிதிகளின் வேலை எப்படி இருக்கும் என்பதை வெறுமனே விளக்கும் படமாக இல்லாமல் அந்த வேலையின் பின்னணியில் நான்கு நண்பர்களின் வாழ்க்கை ஒரு கடத்தல் பிரச்சனையில் சிக்குவது போல கதையை உருவாக்கியிருக்கிறார் இதுதான் படத்தின் வித்தியாசமான அம்சமாக இருக்கிறது

படம் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இல்லையென்றாலும் கிடைத்த வசதிகளை வைத்து காமெடி நட்பு கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் சில இடங்களில் இன்னும் விறுவிறுப்பு இருந்திருக்கலாம் என்றாலும் மொத்தத்தில் அதிக டென்ஷன் இல்லாமல் ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு டைம் பாஸ் படமாக கோல்ட் கால் இருக்கிறது

Categories
Reviews

‘பாரிஸ் கஃபே’ திரைப்பட விமர்சனம்

‘பாரிஸ் கஃபே’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew

Guru Somasundaram
Anumol
Vijay Vishwa
Archana Kumar
Sai Vicky
Nayana Sai
Bipin

Produced by Kanmani Ranganathan
Production Companies Thunder Media and LV Entertainment
Written and Directed by Saraj Seelan
Music by K
Cinematography by Satheesh G
Edited by V J Sabu Joseph
Art Direction by Thamu MFA
Costume Design by V Dhanaraj
Dance Choreography by Prashanth
Makeup by Karthik and Team
Photography by Sivaraj
Public Relations by Riyas K Ahmed and Paras Riyas

‘பாரிஸ் கஃபே’ குரு சோமசுந்தரம் ஒரு அரசு மருத்துவராக வருகிறார் அவருடைய மனைவி அனுமோல் சமூக அக்கறை கொண்ட பெண்ணாக இருக்கிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் மருத்துவ கருத்தரங்குக்காக பாரிஸ் செல்லும் குரு சோமசுந்தரம் அங்குள்ள ஒரு கஃபேவில் சென்னையை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்க்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது அவர்களை பற்றி விசாரிக்கும் போது அந்த காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது

சென்னைக்கு திரும்பிய குரு இந்த விஷயத்தை தன்னுடைய மனைவியிடம் சொல்ல அதன் பிறகு இருவருக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடு ஏற்படுகிறது அந்த சம்பவத்தில் தன்னுடைய கணவருக்கும் ஒரு தொடர்பு இருப்பதை அனுமோல் தெரிந்து கொள்கிறார் இதனால் கணவரை விட்டு பிரிந்து செல்கிறார்.


அமெரிக்காவில் இருக்கும் இவர்களுடைய மகள் அர்ச்சனா பெற்றோர்கள் பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய காதலன் விஜய் விஷ்வாவுடன் இந்தியா வருகிறார் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார் அதே நேரத்தில் தன்னுடைய பெற்றோர்கள் பிரிந்ததற்கான உண்மையான காரணத்தையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்

இதன் மூலம் படம் கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஆணவக்கொலை சம்பவத்தையும் அதை எப்படி மறைத்தார்கள் என்பதையும் சொல்ல ஆரம்பிக்கிறது

குரு சோமசுந்தரம் இந்த படத்தில் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக அமைதியான மருத்துவராகவும் அதே நேரத்தில் கடந்த கால குற்ற உணர்வை சுமந்து கொண்டிருக்கும் மனிதராகவும் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது அதிகமாக நடிக்காமல் பார்வை மற்றும் உடல்மொழி மூலமாகவே நிறைய விஷயங்களை வெளிப்படுத்துகிறார்

அனுமோலும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் கணவர் ஒரு பக்கம் தான் நம்பும் கொள்கை மற்றும் நீதி இன்னொரு பக்கம் என்று இரண்டுக்கும் நடுவில் சிக்கி நிற்கும் கதாபாத்திரத்தை அழுத்தமாக கொண்டு வந்திருக்கிறார்

விஜய் விஷ்வா அர்ச்சனா சாய் விக்கி நயனா சாய் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள் குறிப்பாக சாய் விக்கி மற்றும் நயனா சாய் வரும் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது

படத்தின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது சென்னை பாரிஸ் அமெரிக்கா போன்ற பின்னணிகளை குறைந்த பட்ஜெட்டிலும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் உதவியுடன் அழகாக காட்டியிருக்கிறார்கள் இசையும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது படத்தொகுப்பும் பெரும்பாலும் படத்தின் ஓட்டத்திற்கு உதவுகிறது

இயக்குனர் சராஜ் சீலன் ஆணவக்கொலை போன்ற ஒரு கனமான விஷயத்தை நேரடியாக வன்முறை காட்சிகள் மூலமாக சொல்லாமல் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனை மற்றும் பல வருடங்களுக்கு முன்பு மறைக்கப்பட்ட ஒரு சம்பவம் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பது படத்தின் வித்தியாசமான விஷயம்

அதே நேரத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம் குறிப்பாக ஆரம்பத்தில் குடும்ப பின்னணியை சொல்ல எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் சில திருப்பங்களையும் முன்கூட்டியே யூகிக்க முடிகிறது

மொத்தத்தில், ‘பாரிஸ் கஃபே’ சமூக கருத்துள்ள படங்களை பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்

Categories
Reviews

‘சண்டக்காரி’ திரைப்பட விமர்சனம்

‘சண்டக்காரி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:
Vimal
Shriya Saran
Prabhu
Punnagai Poo Geetha
K R Vijaya
Sathyan
Rekha
Uma Padmanabhan
Dev Gill
Crane Manohar
Mahanadhi Shankar

Written and Directed by R Mathesh
Produced by Punnagai Poo Geetha
Music by Amrish
Cinematography by R P Gurudev
Edited by Dinesh Ponraj

‘சண்டக்காரி’ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேரும் இளைஞராக வருகிறார். தங்கப்பதக்கம் பெற்ற பொறியியல் பட்டதாரியான அவர் தனக்கென்று ஒரு செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஆனால் அவர் வேலை செய்யும் ஸ்ரேயா மிகவும் கோபக்காரரும் கண்டிப்பான மேலதிகாரியுமாக இருக்கிறார். அவரிடம் ஏற்கனவே பல உதவியாளர்கள் வேலை செய்ய முடியாமல் வெளியேறிய நிலையில் விமல் மட்டும் தொடர்ந்து தாக்குப்பிடிக்கிறார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடையும் சூழ்நிலை வருகிறது. தொடர்ந்து லண்டனில் தங்கி தனது சிஇஓ பதவியை காப்பாற்ற வேண்டும் என்பதால் விமலை திருமணம் செய்து கொண்டது போல் நடித்து குடியுரிமை பெற திட்டமிடுகிறார். ஆனால் விமலுக்கும் ஸ்ரேயா மீது ஒரு கோபம் இருக்கிறது. அதனால் ஸ்ரேயாவின் எதிராளியுடன் சேர்ந்து அவரது திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.

ஸ்ரேயாவின் திருமண திட்டத்திற்கு விமல் சம்மதித்தாலும் ஒரு நிபந்தனை வைக்கிறார். தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை சந்தித்து ஒரு மாதம் அவர்களுடன் தங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதனால் லண்டனில் தொடங்கிய கதை தமிழக கிராமத்திற்கு வருகிறது. அங்கே குடும்பம் காதல் உறவுகள் மற்றும் நகைச்சுவை என கதை வேறு பாதையில் பயணிக்கிறது.

விமல் வழக்கம்போல் தனது இயல்பான நடிப்பாலும் காமெடி டைமிங்காலும் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரேயாவின் கோபத்தையும் கட்டளைகளையும் சமாளிக்கும் காட்சிகளில் நன்றாக ரசிக்க வைக்கிறார். கிராமத்திற்கு வந்த பிறகும் அவரது வழக்கமான உடல் மொழி மற்றும் காமெடி பாணி தொடர்கிறது.

ஸ்ரேயா சரண் படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி கோபக்காரி மற்றும் திமிரான மேலதிகாரியாக வருகிறார். ஆரம்பத்தில் அதிகாரத்துடன் இருக்கும் மாயா கதாபாத்திரம் கிராமத்திற்கு வந்த பிறகு அங்குள்ள மனிதர்களின் அன்பால் மெல்ல மெல்ல மாறுவது கதையில் முக்கியமான பகுதி. ஸ்ரேயா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

விமல் மற்றும் ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல்கள்தான் படத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சம். இருவருடைய குணமும் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால் சில காமெடி காட்சிகள் நன்றாக வேலை செய்கின்றன.

பிரபு கே ஆர் விஜயா உமா பத்மநாபன் சத்யன் புன்னகை பூ கீதா ரேகா தேவ் கில் கிரேன் மனோகர் மகாநதி சங்கர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஆர் பி குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக இருக்கிறது. லண்டன் நகரத்தின் அழகையும் தமிழக கிராமத்தின் இயற்கை அழகையும் வித்தியாசமான பின்னணியில் அழகாக காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளும் வண்ணமயமாக இருக்கின்றன.

அம்ரீஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் காமெடி மற்றும் குடும்ப காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பில் பெரிய குறைகள் இல்லை என்றாலும் சில காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும்.

இயக்குநர் ஆர் மாதேஷ் லண்டன் கார்ப்பரேட் வாழ்க்கையையும் தமிழக கிராமத்து குடும்ப சூழலையும் இணைத்து ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் மையக்கதையில் இருக்கும் சுவாரஸ்யம் முழுமையாக திரைக்கதையில் வெளிப்படவில்லை. சில இடங்களில் படம் மெதுவாக செல்கிறது. சில காமெடி காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை கொடுக்கவில்லை.

மேலும் விமலுக்கு நிரந்தர லண்டன் குடியுரிமை இருக்கும் நிலையில் அவரது குடும்பம் தமிழகத்தில் இருப்பது மற்றும் ஸ்ரேயா பல வருடங்கள் லண்டனில் இருந்தும் குடியுரிமை பெறாமல் இருப்பது போன்ற சில லாஜிக் கேள்விகளும் இருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டு பார்த்தால் படத்தை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘சண்டக்காரி’ ஒரு பெரிய புதுமையான கதை இல்லாவிட்டாலும் விமல் ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல் காட்சிகள் காதல் காமெடி மற்றும் குடும்ப பின்னணி ஆகியவற்றால் ஆங்காங்கே ரசிக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம்.

Categories
Reviews

‘நல்ல படம்’ திரைப்பட விமர்சனம்

‘நல்ல படம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:

Harish Azhagupandian
Thanalakshmi
Kalki Raja
Motta Rajendran
Rama Rajendra

Written and Directed by C Praburam
Produced by A Azhagupandian
Music by Sahishna Xavier
Cinematography by Iniyan J Harish
Lyrics by Pothuvil Asmin
Public Relations by Suresh Chandra, A Abdul Nasser, D One

‘நல்ல படம்’ ஹரிஷ் ஒரு டாஸ்மாக் பார் நடத்திக்கொண்டே எப்போதும் குடிபோதையில் இருக்கும் ஒரு இளைஞராக வருகிறார். அதோடு மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பையும் நடத்துகிறார். அவருடைய குடிப்பழக்கத்தை மாற்றுவதற்கு அம்மா தங்கை காதலி என்று எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவரால் அந்த பழக்கத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் மது கிடைக்காமல் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் படும் அவஸ்தைகள் காமெடியாக செல்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் மது இல்லாமல் வாழ பழகிவிடுகிறார்கள். அதனால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சந்தோஷம் திரும்புகிறது. சமூகத்திலும் அவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது.

ஆனால் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் சூழ்நிலை வருகிறது. அப்போது ஹரிஷ் மற்றும் மற்றவர்கள் மீண்டும் குடிக்க ஆரம்பித்தார்களா அல்லது மதுவை விட்டு நல்ல வாழ்க்கையை தொடர்ந்தார்களா என்பதுதான் படத்தின் முக்கியமான கேள்வி.

ஹரிஷ் அழகுபாண்டியன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நன்றாக சிரிக்க வைக்கிறார். மதுவுக்காக ஏங்கும் காட்சிகளிலும் உடல் மொழியிலும் கவனம் பெறுகிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளிலும் ஓரளவுக்கு நன்றாக நடித்திருக்கிறார்.

தனலட்சுமி காதலியாக வந்து ஹரிஷை குடிப்பழக்கத்திலிருந்து மாற்ற முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரன் வரும் காமெடி காட்சிகள் படத்திற்கு பொழுதுபோக்கு அம்சத்தை கொடுக்கின்றன. ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இனியன் ஜெ ஹரிஷின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகள் இளமையாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளன. சஹிஷ்னா சேவியரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது.

படத்தொகுப்பில் பெரிய குறைகள் இல்லை என்றாலும் முதல் பாதியில் சில காட்சிகளை குறைத்திருந்தால் திரைக்கதை இன்னும் வேகமாக சென்றிருக்கும். சில இடங்களில் படத்தின் குறைந்த பட்ஜெட் உருவாக்கம் தெரிகிறது. அதனால் காட்சிகளில் பெரிய பிரமிப்பு இல்லாமல் இருக்கிறது.

இயக்குநர் சி பிரபுராம் மதுப்பழக்கம் என்ற முக்கியமான சமூக பிரச்சனையை வெறும் பிரசங்கமாக சொல்லாமல் காமெடி காதல் குடும்ப உணர்வுகள் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். மதுவை விட்ட பிறகு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களை காட்டியிருப்பது படத்தின் முக்கியமான அம்சம்.

மொத்தத்தில், ‘நல்ல படம்’ மதுப்பழக்கத்தின் பாதிப்பை பற்றி பேசும் ஒரு வித்தியாசமான முயற்சியாக இந்த படத்தை பார்க்கலாம்.

Categories
Reviews

‘என்ன விலை’ திரைப்பட விமர்சனம்

‘என்ன விலை’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

Karunas
Nimisha Sajayan
Vijayalakshmi Veeramani
Sasha Sivakumar
Kamalesh Jagan
Pasanga Pandi
Mohan Raman
YG Mahendran
Chetan Seenu
Poornima Bhagyaraj
Nizhalgal Ravi
Motta Rajendran
Prabhu Special Appearance

Written and Directed by Sajeev Pazhoor
Music by Sam C S
Cinematography by Alby Antony
Edited by Sreejit Sarang

‘என்ன விலை’ ராமேஸ்வரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். கடலில் பக்தர்கள் வீசும் காசுகளை மூழ்கி எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்

ஒருநாள் கடலுக்குள் செல்லும்போது அவருக்கு விலைமதிப்புள்ள ஒரு பழமையான தங்க பதக்கம் கிடைக்கிறது. அதை தனக்காக வைத்துக்கொள்ளாமல் நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். ஆனால் அந்த நேர்மையே அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது

அந்த பதக்கத்தின் மீது ஆசைப்படும் ஒரு காவலர் அதில் இருக்கும் விலைமதிப்புள்ள கல்லை எடுத்துக்கொண்டு தவசிமுத்து மீதே திருட்டு பழியை சுமத்துகிறார். எந்த தவறும் செய்யாத அவர் திருடனாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். இதனால் அவரது குடும்பமும் அவமானத்தையும் வேதனையையும் சந்திக்கிறது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவசிமுத்துவுக்காக வழக்கறிஞர் காஞ்சனா களத்தில் இறங்குகிறார். நிமிஷா சஜயன் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் அவர் வாதாடும் காட்சிகள் படத்திற்கு நல்ல அழுத்தத்தை கொடுக்கின்றன

படத்தின் மைய கேள்வியே ஒரு மனிதன் எந்த தவறும் செய்யாமல் குற்றவாளியாக்கப்பட்டால் அவன் இழந்த மரியாதைக்கும் மானத்திற்கும் என்ன விலை என்பதுதான். பண இழப்பு மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் சுயமரியாதை பாதிக்கப்படும்போது அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியையும் படம் முன்வைக்கிறது

கருணாஸ் இந்த படத்தில் காமெடியை முழுமையாக ஒதுக்கி தவசிமுத்துவாகவே வாழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதராக வரும் அவர் மீது திருட்டு பழி விழுந்த பிறகு ஏற்படும் பயம் அவமானம் கோபம் இயலாமை மற்றும் வலி என ஒவ்வொரு உணர்வையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

குறிப்பாக தான் திருடன் இல்லை என்று காவல்துறையிடம் கெஞ்சும் காட்சிகளிலும் ஊர் மக்கள் தன்னை தவறாக புரிந்து கொள்ளும்போது குடும்பத்துடன் வேதனைப்படும் காட்சிகளிலும் கருணாஸின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இந்த படம் அவருடைய நடிப்பு திறமையை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது

நிமிஷா சஜயனும் வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில் அவரது உடல்மொழியும் வசனங்களை கையாளும் விதமும் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. தவசிமுத்துவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடும் காட்சிகள் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கின்றன

விஜயலட்சுமி வீரமணி தவசிமுத்துவின் மனைவியாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சாஷா சிவகுமார் கமலேஷ் ஜெகன் மற்றும் பாண்டி உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிழல்கள் ரவி பூர்ணிமா பாக்யராஜ் ஒய் ஜி மகேந்திரன் மோகன் ராமன் கவிதாலயா கிருஷ்ணன் லொள்ளு சபா சுவாமிநாதன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் பிரபுவும் கவனம் பெறுகிறார்

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி ராமேஸ்வரத்தின் கடல் மற்றும் மீனவ மக்களின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார். கடல் இந்த படத்தில் வெறும் பின்னணியாக இல்லாமல் தவசிமுத்துவின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு முக்கியமான பகுதியாகவே தெரிகிறது. நீதிமன்ற காட்சிகளையும் அவர் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்

சாம் சி எஸின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்ற காட்சிகளில் வரும் பின்னணி இசை பதற்றத்தையும் உணர்வையும் அதிகரிக்கிறது. பெரிய அளவில் பாடல்களை நம்பாமல் பின்னணி இசையின் மூலமாகவே கதையை உயர்த்தியிருப்பது சிறப்பு

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. பதக்கம் கிடைப்பது முதல் போலீஸ் விசாரணை கைது சிறை மற்றும் நீதிமன்றம் என கதை பல தளங்களுக்கு சென்றாலும் பெரும்பாலும் தொய்வு இல்லாமல் நகர்கிறது

இயக்குநர் சஜீவ் பழூர் ஒரு பெரிய சமூக பிரச்சினையை நேரடியாக வசனங்களால் சொல்லாமல் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தின் வழியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான பலம்

ராமேஸ்வரம் மக்களின் வாழ்க்கை முறை கடலில் இருந்து காசுகளை எடுத்து வாழும் தொழில் காவல்துறை விசாரணை நீதிமன்ற போராட்டம் என கதையின் பல பகுதிகளையும் இயல்பாக இணைத்திருக்கிறார். ஒரு சிறிய பதக்கம் எப்படி ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது என்பதையும் அதன் மூலம் சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை பேசுவதும் படத்திற்கு வித்தியாசமான தன்மையை கொடுக்கிறது

அதே நேரத்தில் படத்தில் சில கேள்விகளும் இருக்கின்றன. பதக்கம் தொடர்பான சில விஷயங்களை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். சில இடங்களில் திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும். குறிப்பாக பதக்கத்தின் பின்னணி மற்றும் சில சட்ட ரீதியான விஷயங்கள் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு வருகிறது

ஆனால் இந்த சிறிய குறைகளை தாண்டி ஒரு சாதாரண மனிதனின் நேர்மைக்கு என்ன விலை என்ற கேள்வியை படம் அழுத்தமாக முன்வைக்கிறது. தவறு செய்யாத ஒருவரை குற்றவாளியாக்கி அவருடைய மானத்தையும் வாழ்க்கையையும் பாதித்த பிறகு அதை எப்படி மீட்டுக் கொடுப்பது என்பதுதான் படத்தின் முக்கியமான கருத்து

மொத்தத்தில், ‘என்ன விலை’ ஒரு மனிதன் குற்றவாளியாக்கப்பட்டால் அவன் இழந்த மானத்திற்கு என்ன விலை என்பதுதான் என்ன விலை படத்தின் முக்கியமான கேள்வி

Categories
Reviews

‘சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்

‘சர்தார் 2’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:
Produced by Prince Pictures and Ivy Entertainment.

Starring – Karthi, SJ Suryah, Malavika Mohanan, Ashika Ranganath, Yogi Babu, Rajisha Vijayan and others.
Directed – by P.S Mithran
Based on Story & Characters by P.S Mithran
Co Produced by – A. Venkatesh

‘சர்தார் 2’ கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இந்த முறை ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் தவறான பயன்பாடு அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் உயிரியல் ஆயுதம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஸ்பை திரில்லர் கதையாக படத்தை எடுத்திருக்கிறார்கள்.

கதைப்படி ரா அமைப்பில் பணிபுரியும் கார்த்திக்கு பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் அவரது தந்தை சர்தார் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச கூலிப்படை தலைவனாக வரும் எஸ்ஜே சூர்யா ஒரு ஆபத்தான உயிரியல் ஆயுதத்தை கைப்பற்றி நாட்டையே அழிக்கும் திட்டத்தில் இறங்குகிறார். தந்தையை தேடும் கார்த்தி இந்த பிரச்சனையிலும் சிக்குகிறார். கடைசியில் தந்தையும் மகனும் இணைந்து நாட்டை காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் முக்கிய கதை.

கார்த்தி அப்பா மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் உடல் மொழி மற்றும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விமான சண்டை காட்சிகளில் கார்த்தியின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சில விமர்சனங்கள் அவரது நடிப்பை பாராட்டினாலும் முதல் பாகத்தில் இருந்த தந்தை மகன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு இந்த பாகத்தில் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றன.

எஸ்ஜே சூர்யா வில்லனாக தனது வழக்கமான பாணியில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர் பேசும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவரது கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்திலும் புதிதாக எதுவும் இல்லை என்றும் சில இடங்களில் அவரது நடிப்பு அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கூறுகின்றன.

மாளவிகா மோகனனுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான சண்டை மற்றும் அதிரடி காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷிகா ரங்கநாத்தின் கதாபாத்திரம் படம் முழுவதும் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஜிஷா விஜயன் குறைவான காட்சிகளிலேயே வருகிறார். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி கூட்டணி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளில் பெரிய பலமாக இருக்கிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக சேசிங் மற்றும் ஸ்பை திரில்லர் காட்சிகளில் பின்னணி இசை நன்றாக வேலை செய்கிறது.

படத்தொகுப்பு விஜய் வேலுகுட்டியின் முக்கியமான பலமாக இருக்கிறது என்று சில விமர்சனங்கள் பாராட்டியுள்ளன. பல கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு காலகட்ட காட்சிகள் இருந்தாலும் அவற்றை இணைத்து படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார். ஆனால் படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடுவதால் குறிப்பாக இரண்டாம் பாதியில் சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.

இயக்குநர் பிஎஸ் மித்ரன் ஒரு நல்ல சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை நேரடியாக விழிப்புணர்வு படமாக சொல்லாமல் ஸ்பை திரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய முயற்சி. ஆனால் கதையை சொல்லும் விதத்தில் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது. முதல் பாதி ஓரளவு விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகள் மற்றும் அதிகமான விளக்கங்கள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன.

மொத்தத்தில், ‘சர்தார் 2’ முதல் பாகம் அளவுக்கு எதிர்பார்ப்புடன் சென்றால் சில ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் கார்த்தியின் நடிப்புக்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.

Categories
Reviews

‘மண்டாடி’ திரைப்பட விமர்சனம்

‘மண்டாடி’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:

Soori
Suhas
Mahima Nambiar
Sathyaraj
Mithun Jai Sankar
Ravindra Vijay
Bala Saravanan
Stun Siva
Rams
Padhman
Aadukalam Murugadoss
Kritika Balasubramanian
Krish Hassan
Rekha Kumanan
Arun Kumar M
& Others
CREW
Banner — RS Infotainment Pvt Ltd
Writer & Director — Mathimaran Pugazhendhi
Music Director — GV Prakash Kumar
Producer — Elred Kumar
Co-Producer — V Manikandan
Cinematographer — S R Kathir ISC
Editor — Pradeep E Ragav
Production Designer — D R K Kiran
Stunt Directors — Peter Hein, Dhilip Subbarayan, Mahesh Mathew
Dialogue — Ameer Jamal Khan, Mathimaran Pugazhendhi
Sound Mix — T Uday Kumar
Sound Design — Prathap K
VFX Head — R Harihara Suthan
Lyrics — Pa Vijay, Jayashree Mathimaran, Vaaheesan Rasaiya
Additional Writing — Elred Kumar, R Mohanavasanthan, Thiral Sankar
Costume Designer — Dinesh Manoharan
Dance Choreographer — Azar
Executive Producer — G Mahesh
Production Executive — S P Chokkalingam
Stills — G Anand Kumar
DI — Infinity Media
Colorist — Srinath B
Makeup — N Sakthivel
Costumer — Nagu
Publicity Design — Aesthetic Kunjamma
PRO — Rekha
Direction Team — Odam Ilavarasu, Prabhakar, Thozhar Sathish, Dharani Guru, Mahins David Prince, Karthick Kannan V, Surya Gandhimathi
Cinematography Team — SR Santhosh Kumar, Karthick, Raja C Sekar, Jalendiravasan, Prabu Selvaraj, Karthik V, Nirmal G, Neeraj G
Editing Team — Ajith Kumar M, Kavimani, M.S. Anbu Mathi
Art Team — GK. Jagan, S. Bavi Dharani, Vasuki Velmurugan, Gnanavel Angamuthu
Production Managers Team — Dindigul V Sivaraman, K Veeramani, Hariharan, Santhosh
Dubbing Engineers — Rashid J, Venkat C Balaram

‘மண்டாடி’ மீனவ மக்களின் வாழ்க்கையையும் பாய்மர படகு போட்டியையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் மண்டாடி. தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்திருப்பது வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகவைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளி 20 வருடங்களுக்கு முன்பு சில காரணங்களால் ஊரை விட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் தனது முன்னாள் காதலியின் மகன் மாரியை காப்பாற்றுவதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு அவருடைய பழைய நண்பனாக இருந்த சட்டாப்புலியுடன் மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன, முத்துக்காளி ஏன் ஊரை விட்டு சென்றார், இறுதியில் பாய்மர படகு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

முத்துக்காளியாக நடித்திருக்கும் சூரி படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இதுவரை நகைச்சுவை நடிகராக பார்த்த சூரி இப்போது ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் தெரிகிறார். கோபம், பாசம், காதல், செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளிலும் படகு போட்டிக்கான பயிற்சி காட்சிகளிலும் அவரது உழைப்பு நன்றாக தெரிகிறது.

சுஹாஸ் சட்டாப்புலி கதாபாத்திரத்தில் சூரிக்கு சரியான போட்டியாக நடித்திருக்கிறார். அவரது கோபம், வன்மம் மற்றும் கதாபாத்திரத்தின் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இருவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன.

மகிமா நம்பியாருக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல், பிரிவு மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டு காலகட்டங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சத்யராஜ் அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மிதுன் ஜெய்சங்கர் மாரி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ரவீந்திர விஜய், ராம்ஸ், ஸ்டண்ட் சிவா, பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிரிஷ் ஹாசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. எஸ் ஆர் கதிர் கடல், படகுகள், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகு போட்டி காட்சிகளை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். கடலில் நடக்கும் போட்டியை திரையில் பார்க்கும்போது நாமும் அந்த போட்டிக்குள் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. பாய்மர படகு போட்டிக்காக படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பு தெளிவாக தெரிகிறது.

ஜி வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை போட்டி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு நல்ல வேகத்தை கொடுக்கிறது. பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது.

படத்தொகுப்பு படத்தின் இன்னொரு பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் படகு போட்டி காட்சிகளை விறுவிறுப்பாக தொகுத்திருக்கிறார்கள். பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ ஆகியோரின் சண்டைப்பயிற்சியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மீனவ மக்களின் வாழ்க்கையையும் கடலையும் ஒரு புதிய களத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படகு போட்டியின் விதிகள் மற்றும் அதன் பின்னணியை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில் கதை மற்றும் கதாபாத்திரங்களின் சில பகுதிகள் ஏற்கனவே பார்த்த ஸ்போர்ட்ஸ் படங்களை நினைவுபடுத்துகின்றன. நட்பு, துரோகம், காதல், பழைய பகை போன்ற விஷயங்களில் பெரிய புதுமை இல்லை.

முதல் பாதி வேகமாக செல்கிறது. முத்துக்காளி ஊருக்கு திரும்புவது, மாரியை காப்பாற்றுவது, புதிய அணியை உருவாக்குவது மற்றும் போட்டிக்காக பயிற்சி கொடுப்பது என அடுத்தடுத்து சம்பவங்கள் நடப்பதால் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் பழைய கதையை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வருவதால் சில இடங்களில் வேகம் குறைகிறது. இந்த பகுதி சற்று நீளமாக இருப்பது ஒரு குறையாக தெரிகிறது.

ஆனால் கிளைமாக்ஸ் அந்த குறைகளை பெரிதாக தெரியவிடாமல் செய்கிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் செல்லும் படகு போட்டி காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கடைசி வரை நம்மை போட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். படகு போட்டியை விரும்புபவர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில், ‘மண்டாடி’ சூரியின் ஆக்ஷன் அவதாரத்தை பார்க்க விரும்புபவர்களும், வித்தியாசமான படகு போட்டி களத்தை ரசிக்க விரும்புபவர்களும் மண்டாடியை நம்பி பார்க்கலாம்.