DC திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Cast: Lokesh Kanagaraj as Devadas, Wamiqa Gabbi as Chandra, Sanjana as Parvathi, Avinash Raghudevan, Kasthuri Raja & Jawahar Sakthi.
Writer & Director: Arun Matheswaran
Producer: Kalanithi Maran
DOP: Mukesh G
Music: Anirudh Ravichander
Editor: G. K. Prasanna
Art Director: Kannan S
Stunt: PC Stunts
Production: Sun Pictures
‘டிசி’ இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம்
தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் வரும் லோகேஷ் கனகராஜ் சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக மாறி காவல்துறையால் தேடப்படும் நிலைக்கு செல்கிறார் காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில் பார்வதியை சந்திக்கிறார் ஆனால் அந்த சந்திப்பு நீண்ட நேரம் தொடராமல் எதிர்பாராத விதமாக முடிகிறது அதன் பிறகு தனது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் சந்திராவை சந்திக்கிறார்
தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் சந்திராவை தேவதாஸ் காப்பாற்றுகிறார் அதன் பிறகு இருவரும் ஒன்றாக பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் இவர்களது பயணத்தில் காதலும் உருவாகிறது அதே நேரத்தில் காவல்துறையும் இவர்களை தொடர்ந்து துரத்துகிறது தேவதாஸ் மற்றும் சந்திரா இருவரும் தங்களது கடந்த கால வலிகளிலிருந்து வெளியே வர முயற்சிப்பதும் அவர்களை துரத்தும் காவல்துறை மற்றும் குற்ற கும்பலுக்கு எதிராக போராடுவதும் தான் படத்தின் முக்கிய கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் லோகேஷ் கனகராஜின் நடிப்பு கதாநாயகனாக முதல் படமாக இருந்தாலும் அதிகப்படியான வசனங்களை நம்பாமல் உடல் மொழி மற்றும் முகபாவனைகள் மூலமாக தேவதாஸ் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் மிகவும் நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார் கோபம் மற்றும் சில ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் மட்டும் சில இடங்களில் தடுமாற்றம் தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக அவரது அறிமுகம் நன்றாக அமைந்துள்ளது
வாமிகா கபி சந்திரா கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த வலியையும் கோபத்தையும் உடல் மொழி மூலமாக அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கதாநாயகி என்றால் கதாநாயகனை சார்ந்து இருக்கும் கதாபாத்திரம் என்ற வழக்கமான முறையில் இல்லாமல் தன்னுடைய முடிவுகளை தானே எடுக்கும் பெண்ணாக சந்திராவை நடித்திருப்பது சிறப்பு
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி கதாபாத்திரத்தில் குறைவான நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார் அவரது கதாபாத்திரத்தின் முடிவு தேவதாஸின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்ற நடிகர்களான கிரிஷ் தயாள் சரத் ரவி அவினாஷ் ரகுதேவன் ஜவஹர் சக்தி பாலாஜி தேவிபிரசாத் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வழக்கமான வன்முறை இருந்தாலும் இந்த படத்தில் அதனுடன் மனித உணர்வுகளையும் சேர்த்து சொல்ல முயற்சித்திருக்கிறார் தேவதாஸ் மற்றும் சந்திரா இருவரும் சமூகத்தாலும் வாழ்க்கையாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பின்னணியை வைத்து அவர்களுக்குள் உருவாகும் உறவை அழுத்தமாக காட்டியிருக்கிறார் குறிப்பாக இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் காட்சிகள் படத்திற்கு நல்ல உணர்வை கொடுக்கின்றன
படத்தின் ஆக்சன் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன ரத்தம் மற்றும் வன்முறை அதிகமாக இருந்தாலும் அவை வெறும் அதிர்ச்சிக்காக மட்டும் வைக்கப்படாமல் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் ஆக்சன் காட்சி ரசிகர்களை அதிகமாக கவரும் வகையில் அமைந்துள்ளது
அனிருத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று ஆக்சன் காட்சிகளுக்கு மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் அவரது இசை நல்ல பலம் சேர்க்கிறது பல இடங்களில் காட்சிகளை இன்னும் உயர்த்தி காட்டுவதற்கு அனிருத்தின் இசை முக்கிய காரணமாக இருக்கிறது
முகேஷ் ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு தனி அழகை கொடுத்திருக்கிறது இருள் நிறைந்த காட்சிகள் வித்தியாசமான கேமரா கோணங்கள் சிவப்பு மற்றும் நீல நிறங்களின் பயன்பாடு ஆகியவை படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை கொடுக்கின்றன குறிப்பாக இயற்கை காட்சிகள் சண்டை காட்சிகள் மற்றும் சாலை பயண காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன
ஜி கே பிரசன்னாவின் படத்தொகுப்பும் ஆக்சன் காட்சிகளின் வேகத்தையும் உணர்வுகளின் இடைவெளியையும் சரியாக சமநிலைப்படுத்துகிறது ஸ்டண்ட் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் அவர்களின் கடந்த காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தியிருப்பது நல்ல விஷயம் ஆனால் இரண்டாம் பாதியில் வன்முறை மற்றும் சண்டை காட்சிகள் தொடர்ந்து அதிகரிப்பதால் ஒரு கட்டத்தில் சற்று சலிப்பு ஏற்படுகிறது கதையின் உணர்வுபூர்வமான பகுதி அதே அளவுக்கு தொடர்ந்து வளரவில்லை என்ற குறையும் இருக்கிறது
சில வசனங்கள் இயல்பான உரையாடலாக இல்லாமல் கதையை விளக்குவதற்காக எழுதப்பட்டவை போல் தெரிகின்றன பார்வதி கதாபாத்திரத்திற்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது
மொத்தத்தில், ‘டிசி’ ஆக்சன் மற்றும் வன்முறை காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு டிசி ஒரு நல்ல திரையரங்க அனுபவமாக இருக்கும் குறிப்பாக லோகேஷ் கனகராஜின் புதிய அவதாரத்தையும் அனிருத்தின் இசையையும் ரசிக்க விரும்புபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்

















