Categories
Reviews

‘சண்டக்காரி’ திரைப்பட விமர்சனம்

‘சண்டக்காரி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:
Vimal
Shriya Saran
Prabhu
Punnagai Poo Geetha
K R Vijaya
Sathyan
Rekha
Uma Padmanabhan
Dev Gill
Crane Manohar
Mahanadhi Shankar

Written and Directed by R Mathesh
Produced by Punnagai Poo Geetha
Music by Amrish
Cinematography by R P Gurudev
Edited by Dinesh Ponraj

‘சண்டக்காரி’ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேரும் இளைஞராக வருகிறார். தங்கப்பதக்கம் பெற்ற பொறியியல் பட்டதாரியான அவர் தனக்கென்று ஒரு செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஆனால் அவர் வேலை செய்யும் ஸ்ரேயா மிகவும் கோபக்காரரும் கண்டிப்பான மேலதிகாரியுமாக இருக்கிறார். அவரிடம் ஏற்கனவே பல உதவியாளர்கள் வேலை செய்ய முடியாமல் வெளியேறிய நிலையில் விமல் மட்டும் தொடர்ந்து தாக்குப்பிடிக்கிறார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடையும் சூழ்நிலை வருகிறது. தொடர்ந்து லண்டனில் தங்கி தனது சிஇஓ பதவியை காப்பாற்ற வேண்டும் என்பதால் விமலை திருமணம் செய்து கொண்டது போல் நடித்து குடியுரிமை பெற திட்டமிடுகிறார். ஆனால் விமலுக்கும் ஸ்ரேயா மீது ஒரு கோபம் இருக்கிறது. அதனால் ஸ்ரேயாவின் எதிராளியுடன் சேர்ந்து அவரது திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.

ஸ்ரேயாவின் திருமண திட்டத்திற்கு விமல் சம்மதித்தாலும் ஒரு நிபந்தனை வைக்கிறார். தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை சந்தித்து ஒரு மாதம் அவர்களுடன் தங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதனால் லண்டனில் தொடங்கிய கதை தமிழக கிராமத்திற்கு வருகிறது. அங்கே குடும்பம் காதல் உறவுகள் மற்றும் நகைச்சுவை என கதை வேறு பாதையில் பயணிக்கிறது.

விமல் வழக்கம்போல் தனது இயல்பான நடிப்பாலும் காமெடி டைமிங்காலும் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரேயாவின் கோபத்தையும் கட்டளைகளையும் சமாளிக்கும் காட்சிகளில் நன்றாக ரசிக்க வைக்கிறார். கிராமத்திற்கு வந்த பிறகும் அவரது வழக்கமான உடல் மொழி மற்றும் காமெடி பாணி தொடர்கிறது.

ஸ்ரேயா சரண் படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி கோபக்காரி மற்றும் திமிரான மேலதிகாரியாக வருகிறார். ஆரம்பத்தில் அதிகாரத்துடன் இருக்கும் மாயா கதாபாத்திரம் கிராமத்திற்கு வந்த பிறகு அங்குள்ள மனிதர்களின் அன்பால் மெல்ல மெல்ல மாறுவது கதையில் முக்கியமான பகுதி. ஸ்ரேயா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

விமல் மற்றும் ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல்கள்தான் படத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சம். இருவருடைய குணமும் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால் சில காமெடி காட்சிகள் நன்றாக வேலை செய்கின்றன.

பிரபு கே ஆர் விஜயா உமா பத்மநாபன் சத்யன் புன்னகை பூ கீதா ரேகா தேவ் கில் கிரேன் மனோகர் மகாநதி சங்கர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஆர் பி குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக இருக்கிறது. லண்டன் நகரத்தின் அழகையும் தமிழக கிராமத்தின் இயற்கை அழகையும் வித்தியாசமான பின்னணியில் அழகாக காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளும் வண்ணமயமாக இருக்கின்றன.

அம்ரீஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் காமெடி மற்றும் குடும்ப காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பில் பெரிய குறைகள் இல்லை என்றாலும் சில காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும்.

இயக்குநர் ஆர் மாதேஷ் லண்டன் கார்ப்பரேட் வாழ்க்கையையும் தமிழக கிராமத்து குடும்ப சூழலையும் இணைத்து ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் மையக்கதையில் இருக்கும் சுவாரஸ்யம் முழுமையாக திரைக்கதையில் வெளிப்படவில்லை. சில இடங்களில் படம் மெதுவாக செல்கிறது. சில காமெடி காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை கொடுக்கவில்லை.

மேலும் விமலுக்கு நிரந்தர லண்டன் குடியுரிமை இருக்கும் நிலையில் அவரது குடும்பம் தமிழகத்தில் இருப்பது மற்றும் ஸ்ரேயா பல வருடங்கள் லண்டனில் இருந்தும் குடியுரிமை பெறாமல் இருப்பது போன்ற சில லாஜிக் கேள்விகளும் இருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டு பார்த்தால் படத்தை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘சண்டக்காரி’ ஒரு பெரிய புதுமையான கதை இல்லாவிட்டாலும் விமல் ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல் காட்சிகள் காதல் காமெடி மற்றும் குடும்ப பின்னணி ஆகியவற்றால் ஆங்காங்கே ரசிக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம்.

Categories
Reviews

‘நல்ல படம்’ திரைப்பட விமர்சனம்

‘நல்ல படம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:

Harish Azhagupandian
Thanalakshmi
Kalki Raja
Motta Rajendran
Rama Rajendra

Written and Directed by C Praburam
Produced by A Azhagupandian
Music by Sahishna Xavier
Cinematography by Iniyan J Harish
Lyrics by Pothuvil Asmin
Public Relations by Suresh Chandra, A Abdul Nasser, D One

‘நல்ல படம்’ ஹரிஷ் ஒரு டாஸ்மாக் பார் நடத்திக்கொண்டே எப்போதும் குடிபோதையில் இருக்கும் ஒரு இளைஞராக வருகிறார். அதோடு மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பையும் நடத்துகிறார். அவருடைய குடிப்பழக்கத்தை மாற்றுவதற்கு அம்மா தங்கை காதலி என்று எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவரால் அந்த பழக்கத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் மது கிடைக்காமல் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் படும் அவஸ்தைகள் காமெடியாக செல்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் மது இல்லாமல் வாழ பழகிவிடுகிறார்கள். அதனால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சந்தோஷம் திரும்புகிறது. சமூகத்திலும் அவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது.

ஆனால் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் சூழ்நிலை வருகிறது. அப்போது ஹரிஷ் மற்றும் மற்றவர்கள் மீண்டும் குடிக்க ஆரம்பித்தார்களா அல்லது மதுவை விட்டு நல்ல வாழ்க்கையை தொடர்ந்தார்களா என்பதுதான் படத்தின் முக்கியமான கேள்வி.

ஹரிஷ் அழகுபாண்டியன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நன்றாக சிரிக்க வைக்கிறார். மதுவுக்காக ஏங்கும் காட்சிகளிலும் உடல் மொழியிலும் கவனம் பெறுகிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளிலும் ஓரளவுக்கு நன்றாக நடித்திருக்கிறார்.

தனலட்சுமி காதலியாக வந்து ஹரிஷை குடிப்பழக்கத்திலிருந்து மாற்ற முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரன் வரும் காமெடி காட்சிகள் படத்திற்கு பொழுதுபோக்கு அம்சத்தை கொடுக்கின்றன. ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இனியன் ஜெ ஹரிஷின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகள் இளமையாகவும் அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளன. சஹிஷ்னா சேவியரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது.

படத்தொகுப்பில் பெரிய குறைகள் இல்லை என்றாலும் முதல் பாதியில் சில காட்சிகளை குறைத்திருந்தால் திரைக்கதை இன்னும் வேகமாக சென்றிருக்கும். சில இடங்களில் படத்தின் குறைந்த பட்ஜெட் உருவாக்கம் தெரிகிறது. அதனால் காட்சிகளில் பெரிய பிரமிப்பு இல்லாமல் இருக்கிறது.

இயக்குநர் சி பிரபுராம் மதுப்பழக்கம் என்ற முக்கியமான சமூக பிரச்சனையை வெறும் பிரசங்கமாக சொல்லாமல் காமெடி காதல் குடும்ப உணர்வுகள் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். மதுவை விட்ட பிறகு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களை காட்டியிருப்பது படத்தின் முக்கியமான அம்சம்.

மொத்தத்தில், ‘நல்ல படம்’ மதுப்பழக்கத்தின் பாதிப்பை பற்றி பேசும் ஒரு வித்தியாசமான முயற்சியாக இந்த படத்தை பார்க்கலாம்.

Categories
Reviews

‘என்ன விலை’ திரைப்பட விமர்சனம்

‘என்ன விலை’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

Karunas
Nimisha Sajayan
Vijayalakshmi Veeramani
Sasha Sivakumar
Kamalesh Jagan
Pasanga Pandi
Mohan Raman
YG Mahendran
Chetan Seenu
Poornima Bhagyaraj
Nizhalgal Ravi
Motta Rajendran
Prabhu Special Appearance

Written and Directed by Sajeev Pazhoor
Music by Sam C S
Cinematography by Alby Antony
Edited by Sreejit Sarang

‘என்ன விலை’ ராமேஸ்வரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். கடலில் பக்தர்கள் வீசும் காசுகளை மூழ்கி எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்

ஒருநாள் கடலுக்குள் செல்லும்போது அவருக்கு விலைமதிப்புள்ள ஒரு பழமையான தங்க பதக்கம் கிடைக்கிறது. அதை தனக்காக வைத்துக்கொள்ளாமல் நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். ஆனால் அந்த நேர்மையே அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது

அந்த பதக்கத்தின் மீது ஆசைப்படும் ஒரு காவலர் அதில் இருக்கும் விலைமதிப்புள்ள கல்லை எடுத்துக்கொண்டு தவசிமுத்து மீதே திருட்டு பழியை சுமத்துகிறார். எந்த தவறும் செய்யாத அவர் திருடனாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். இதனால் அவரது குடும்பமும் அவமானத்தையும் வேதனையையும் சந்திக்கிறது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவசிமுத்துவுக்காக வழக்கறிஞர் காஞ்சனா களத்தில் இறங்குகிறார். நிமிஷா சஜயன் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் அவர் வாதாடும் காட்சிகள் படத்திற்கு நல்ல அழுத்தத்தை கொடுக்கின்றன

படத்தின் மைய கேள்வியே ஒரு மனிதன் எந்த தவறும் செய்யாமல் குற்றவாளியாக்கப்பட்டால் அவன் இழந்த மரியாதைக்கும் மானத்திற்கும் என்ன விலை என்பதுதான். பண இழப்பு மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் சுயமரியாதை பாதிக்கப்படும்போது அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியையும் படம் முன்வைக்கிறது

கருணாஸ் இந்த படத்தில் காமெடியை முழுமையாக ஒதுக்கி தவசிமுத்துவாகவே வாழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதராக வரும் அவர் மீது திருட்டு பழி விழுந்த பிறகு ஏற்படும் பயம் அவமானம் கோபம் இயலாமை மற்றும் வலி என ஒவ்வொரு உணர்வையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

குறிப்பாக தான் திருடன் இல்லை என்று காவல்துறையிடம் கெஞ்சும் காட்சிகளிலும் ஊர் மக்கள் தன்னை தவறாக புரிந்து கொள்ளும்போது குடும்பத்துடன் வேதனைப்படும் காட்சிகளிலும் கருணாஸின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இந்த படம் அவருடைய நடிப்பு திறமையை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது

நிமிஷா சஜயனும் வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில் அவரது உடல்மொழியும் வசனங்களை கையாளும் விதமும் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. தவசிமுத்துவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடும் காட்சிகள் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கின்றன

விஜயலட்சுமி வீரமணி தவசிமுத்துவின் மனைவியாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சாஷா சிவகுமார் கமலேஷ் ஜெகன் மற்றும் பாண்டி உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிழல்கள் ரவி பூர்ணிமா பாக்யராஜ் ஒய் ஜி மகேந்திரன் மோகன் ராமன் கவிதாலயா கிருஷ்ணன் லொள்ளு சபா சுவாமிநாதன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் பிரபுவும் கவனம் பெறுகிறார்

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி ராமேஸ்வரத்தின் கடல் மற்றும் மீனவ மக்களின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார். கடல் இந்த படத்தில் வெறும் பின்னணியாக இல்லாமல் தவசிமுத்துவின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு முக்கியமான பகுதியாகவே தெரிகிறது. நீதிமன்ற காட்சிகளையும் அவர் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்

சாம் சி எஸின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்ற காட்சிகளில் வரும் பின்னணி இசை பதற்றத்தையும் உணர்வையும் அதிகரிக்கிறது. பெரிய அளவில் பாடல்களை நம்பாமல் பின்னணி இசையின் மூலமாகவே கதையை உயர்த்தியிருப்பது சிறப்பு

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. பதக்கம் கிடைப்பது முதல் போலீஸ் விசாரணை கைது சிறை மற்றும் நீதிமன்றம் என கதை பல தளங்களுக்கு சென்றாலும் பெரும்பாலும் தொய்வு இல்லாமல் நகர்கிறது

இயக்குநர் சஜீவ் பழூர் ஒரு பெரிய சமூக பிரச்சினையை நேரடியாக வசனங்களால் சொல்லாமல் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தின் வழியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான பலம்

ராமேஸ்வரம் மக்களின் வாழ்க்கை முறை கடலில் இருந்து காசுகளை எடுத்து வாழும் தொழில் காவல்துறை விசாரணை நீதிமன்ற போராட்டம் என கதையின் பல பகுதிகளையும் இயல்பாக இணைத்திருக்கிறார். ஒரு சிறிய பதக்கம் எப்படி ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது என்பதையும் அதன் மூலம் சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை பேசுவதும் படத்திற்கு வித்தியாசமான தன்மையை கொடுக்கிறது

அதே நேரத்தில் படத்தில் சில கேள்விகளும் இருக்கின்றன. பதக்கம் தொடர்பான சில விஷயங்களை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். சில இடங்களில் திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும். குறிப்பாக பதக்கத்தின் பின்னணி மற்றும் சில சட்ட ரீதியான விஷயங்கள் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு வருகிறது

ஆனால் இந்த சிறிய குறைகளை தாண்டி ஒரு சாதாரண மனிதனின் நேர்மைக்கு என்ன விலை என்ற கேள்வியை படம் அழுத்தமாக முன்வைக்கிறது. தவறு செய்யாத ஒருவரை குற்றவாளியாக்கி அவருடைய மானத்தையும் வாழ்க்கையையும் பாதித்த பிறகு அதை எப்படி மீட்டுக் கொடுப்பது என்பதுதான் படத்தின் முக்கியமான கருத்து

மொத்தத்தில், ‘என்ன விலை’ ஒரு மனிதன் குற்றவாளியாக்கப்பட்டால் அவன் இழந்த மானத்திற்கு என்ன விலை என்பதுதான் என்ன விலை படத்தின் முக்கியமான கேள்வி

Categories
Reviews

‘சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்

‘சர்தார் 2’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:
Produced by Prince Pictures and Ivy Entertainment.

Starring – Karthi, SJ Suryah, Malavika Mohanan, Ashika Ranganath, Yogi Babu, Rajisha Vijayan and others.
Directed – by P.S Mithran
Based on Story & Characters by P.S Mithran
Co Produced by – A. Venkatesh

‘சர்தார் 2’ கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இந்த முறை ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் தவறான பயன்பாடு அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் உயிரியல் ஆயுதம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஸ்பை திரில்லர் கதையாக படத்தை எடுத்திருக்கிறார்கள்.

கதைப்படி ரா அமைப்பில் பணிபுரியும் கார்த்திக்கு பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் அவரது தந்தை சர்தார் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச கூலிப்படை தலைவனாக வரும் எஸ்ஜே சூர்யா ஒரு ஆபத்தான உயிரியல் ஆயுதத்தை கைப்பற்றி நாட்டையே அழிக்கும் திட்டத்தில் இறங்குகிறார். தந்தையை தேடும் கார்த்தி இந்த பிரச்சனையிலும் சிக்குகிறார். கடைசியில் தந்தையும் மகனும் இணைந்து நாட்டை காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் முக்கிய கதை.

கார்த்தி அப்பா மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் உடல் மொழி மற்றும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விமான சண்டை காட்சிகளில் கார்த்தியின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சில விமர்சனங்கள் அவரது நடிப்பை பாராட்டினாலும் முதல் பாகத்தில் இருந்த தந்தை மகன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு இந்த பாகத்தில் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றன.

எஸ்ஜே சூர்யா வில்லனாக தனது வழக்கமான பாணியில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர் பேசும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவரது கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்திலும் புதிதாக எதுவும் இல்லை என்றும் சில இடங்களில் அவரது நடிப்பு அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கூறுகின்றன.

மாளவிகா மோகனனுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான சண்டை மற்றும் அதிரடி காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷிகா ரங்கநாத்தின் கதாபாத்திரம் படம் முழுவதும் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஜிஷா விஜயன் குறைவான காட்சிகளிலேயே வருகிறார். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி கூட்டணி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளில் பெரிய பலமாக இருக்கிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக சேசிங் மற்றும் ஸ்பை திரில்லர் காட்சிகளில் பின்னணி இசை நன்றாக வேலை செய்கிறது.

படத்தொகுப்பு விஜய் வேலுகுட்டியின் முக்கியமான பலமாக இருக்கிறது என்று சில விமர்சனங்கள் பாராட்டியுள்ளன. பல கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு காலகட்ட காட்சிகள் இருந்தாலும் அவற்றை இணைத்து படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார். ஆனால் படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடுவதால் குறிப்பாக இரண்டாம் பாதியில் சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.

இயக்குநர் பிஎஸ் மித்ரன் ஒரு நல்ல சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை நேரடியாக விழிப்புணர்வு படமாக சொல்லாமல் ஸ்பை திரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய முயற்சி. ஆனால் கதையை சொல்லும் விதத்தில் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது. முதல் பாதி ஓரளவு விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகள் மற்றும் அதிகமான விளக்கங்கள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன.

மொத்தத்தில், ‘சர்தார் 2’ முதல் பாகம் அளவுக்கு எதிர்பார்ப்புடன் சென்றால் சில ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் கார்த்தியின் நடிப்புக்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.

Categories
Reviews

‘மண்டாடி’ திரைப்பட விமர்சனம்

‘மண்டாடி’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:

Soori
Suhas
Mahima Nambiar
Sathyaraj
Mithun Jai Sankar
Ravindra Vijay
Bala Saravanan
Stun Siva
Rams
Padhman
Aadukalam Murugadoss
Kritika Balasubramanian
Krish Hassan
Rekha Kumanan
Arun Kumar M
& Others
CREW
Banner — RS Infotainment Pvt Ltd
Writer & Director — Mathimaran Pugazhendhi
Music Director — GV Prakash Kumar
Producer — Elred Kumar
Co-Producer — V Manikandan
Cinematographer — S R Kathir ISC
Editor — Pradeep E Ragav
Production Designer — D R K Kiran
Stunt Directors — Peter Hein, Dhilip Subbarayan, Mahesh Mathew
Dialogue — Ameer Jamal Khan, Mathimaran Pugazhendhi
Sound Mix — T Uday Kumar
Sound Design — Prathap K
VFX Head — R Harihara Suthan
Lyrics — Pa Vijay, Jayashree Mathimaran, Vaaheesan Rasaiya
Additional Writing — Elred Kumar, R Mohanavasanthan, Thiral Sankar
Costume Designer — Dinesh Manoharan
Dance Choreographer — Azar
Executive Producer — G Mahesh
Production Executive — S P Chokkalingam
Stills — G Anand Kumar
DI — Infinity Media
Colorist — Srinath B
Makeup — N Sakthivel
Costumer — Nagu
Publicity Design — Aesthetic Kunjamma
PRO — Rekha
Direction Team — Odam Ilavarasu, Prabhakar, Thozhar Sathish, Dharani Guru, Mahins David Prince, Karthick Kannan V, Surya Gandhimathi
Cinematography Team — SR Santhosh Kumar, Karthick, Raja C Sekar, Jalendiravasan, Prabu Selvaraj, Karthik V, Nirmal G, Neeraj G
Editing Team — Ajith Kumar M, Kavimani, M.S. Anbu Mathi
Art Team — GK. Jagan, S. Bavi Dharani, Vasuki Velmurugan, Gnanavel Angamuthu
Production Managers Team — Dindigul V Sivaraman, K Veeramani, Hariharan, Santhosh
Dubbing Engineers — Rashid J, Venkat C Balaram

‘மண்டாடி’ மீனவ மக்களின் வாழ்க்கையையும் பாய்மர படகு போட்டியையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் மண்டாடி. தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்திருப்பது வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகவைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளி 20 வருடங்களுக்கு முன்பு சில காரணங்களால் ஊரை விட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் தனது முன்னாள் காதலியின் மகன் மாரியை காப்பாற்றுவதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு அவருடைய பழைய நண்பனாக இருந்த சட்டாப்புலியுடன் மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன, முத்துக்காளி ஏன் ஊரை விட்டு சென்றார், இறுதியில் பாய்மர படகு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

முத்துக்காளியாக நடித்திருக்கும் சூரி படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இதுவரை நகைச்சுவை நடிகராக பார்த்த சூரி இப்போது ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் தெரிகிறார். கோபம், பாசம், காதல், செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளிலும் படகு போட்டிக்கான பயிற்சி காட்சிகளிலும் அவரது உழைப்பு நன்றாக தெரிகிறது.

சுஹாஸ் சட்டாப்புலி கதாபாத்திரத்தில் சூரிக்கு சரியான போட்டியாக நடித்திருக்கிறார். அவரது கோபம், வன்மம் மற்றும் கதாபாத்திரத்தின் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இருவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன.

மகிமா நம்பியாருக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல், பிரிவு மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டு காலகட்டங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சத்யராஜ் அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மிதுன் ஜெய்சங்கர் மாரி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ரவீந்திர விஜய், ராம்ஸ், ஸ்டண்ட் சிவா, பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிரிஷ் ஹாசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. எஸ் ஆர் கதிர் கடல், படகுகள், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகு போட்டி காட்சிகளை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். கடலில் நடக்கும் போட்டியை திரையில் பார்க்கும்போது நாமும் அந்த போட்டிக்குள் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. பாய்மர படகு போட்டிக்காக படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பு தெளிவாக தெரிகிறது.

ஜி வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை போட்டி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு நல்ல வேகத்தை கொடுக்கிறது. பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது.

படத்தொகுப்பு படத்தின் இன்னொரு பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் படகு போட்டி காட்சிகளை விறுவிறுப்பாக தொகுத்திருக்கிறார்கள். பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ ஆகியோரின் சண்டைப்பயிற்சியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மீனவ மக்களின் வாழ்க்கையையும் கடலையும் ஒரு புதிய களத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படகு போட்டியின் விதிகள் மற்றும் அதன் பின்னணியை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில் கதை மற்றும் கதாபாத்திரங்களின் சில பகுதிகள் ஏற்கனவே பார்த்த ஸ்போர்ட்ஸ் படங்களை நினைவுபடுத்துகின்றன. நட்பு, துரோகம், காதல், பழைய பகை போன்ற விஷயங்களில் பெரிய புதுமை இல்லை.

முதல் பாதி வேகமாக செல்கிறது. முத்துக்காளி ஊருக்கு திரும்புவது, மாரியை காப்பாற்றுவது, புதிய அணியை உருவாக்குவது மற்றும் போட்டிக்காக பயிற்சி கொடுப்பது என அடுத்தடுத்து சம்பவங்கள் நடப்பதால் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் பழைய கதையை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வருவதால் சில இடங்களில் வேகம் குறைகிறது. இந்த பகுதி சற்று நீளமாக இருப்பது ஒரு குறையாக தெரிகிறது.

ஆனால் கிளைமாக்ஸ் அந்த குறைகளை பெரிதாக தெரியவிடாமல் செய்கிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் செல்லும் படகு போட்டி காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கடைசி வரை நம்மை போட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். படகு போட்டியை விரும்புபவர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில், ‘மண்டாடி’ சூரியின் ஆக்ஷன் அவதாரத்தை பார்க்க விரும்புபவர்களும், வித்தியாசமான படகு போட்டி களத்தை ரசிக்க விரும்புபவர்களும் மண்டாடியை நம்பி பார்க்கலாம்.

Categories
Cinema News Reviews Videos

‘ அழகிய லைலா ‘ படத்தின் பூஜை கோலாகோலமாக நடந்தது

பிரபு, அப்சரா ராணி, யோகி பாபு,தம்பி ராமையா நடிக்கும் ‘ அழகிய லைலா ‘ படத்தின் பூஜை கோலாகோலமாக நடந்தது

#kollywoodmix 2026
#newmovie
#tamilfilm
#pooja
#newmovie #tamilfilm #pooja #prabhu #apsararani #yogibabu #azhagiyalailamovie

Categories
Reviews

‘ஐ ஆம் கேம்’ திரைப்பட விமர்சனம்

‘ஐ ஆம் கேம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

CAST & Crew:

Dulquer Salmaan – Dan John
Kayadu Lohar –  Isha
Mysskin – David Abraham
Antony Varghese – Vignesh “Vicky” Das
Samyuktha Viswanathan – Tharini
Vinay Forrt – Freddy
Kathir – Jason Antony

Director: Nahas Hidhayath
Produced by: Dulquer Salmaan & Jom Varghese
Story: Nahas Hidhayath
Screenplay: Sajeer Baba, Bilal Moidu, Ismail Aboobacker
Director Of Photography: Jimshi Khalid
Film Editor: Chaman Chakko
Music & Original Score: Jakes Bejoy
Production Designer: Ajayan Chalissery
Costume: Mashar Hamsa
Choreography: Sandy
Still Photographer: Sbk Shuhaib
Sound Design: Sync Cinema
VFX: Egg White VFX
PRO : Yuvraaj

‘I Am Game’ வித்தியாசமான ஒரு கதைக்களத்துடன் வந்திருக்கும் ஆக்‌ஷன் மிஸ்டரி ரிவெஞ்ச் திரைப்படம். துல்கர் சல்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார்.

பணக்கார குடும்பத்தை சேர்ந்த டான் ஜான் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். தந்தையின் உதவியுடன் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் அவருக்கு சூதாட்டத்தில் அதிக ஆர்வம். அதனால் கடனில் சிக்குகிறார். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பெரிய தொகையை இழந்து பிரச்சனையில் சிக்கும்போது அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் விபத்து ஏற்பட்டு தனது இடது கையை இழக்கிறார்.

அதன் பிறகு வேறு ஒரு விபத்தில் இறந்த இளைஞரின் கையை துல்கருக்கு பொருத்துகிறார்கள். இங்கிருந்துதான் படத்தின் முக்கியமான கதை ஆரம்பமாகிறது. தனக்கு பொருத்தப்பட்ட கை தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே செயல்பட ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த கை மிஷ்கின் நடித்திருக்கும் டேவிட் ஆபிரகாமை கொலை செய்ய முயற்சிக்கிறது. அந்த கை ஏன் இப்படி செய்கிறது அந்த கையின் உண்மையான பின்னணி என்ன அந்த கையை தானமாக கொடுத்தவர் யார் அவருக்கும் துல்கருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வித்தியாசமான கான்செப்ட். கட்டுப்பாட்டை மீறி செயல்படும் ஒரு கை என்ற ஐடியா ஆரம்பத்திலேயே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதல் பாதியில் மர்மத்தை தொடர்ந்து வைத்திருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நன்றாக உருவாகிறது. துல்கர் தனது புதிய சக்தியை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் காட்சிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

துல்கர் சல்மான் தனது நடிப்பால் படத்தை பெரும்பாலும் தாங்கி செல்கிறார். ஆரம்பத்தில் பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் இளைஞராகவும் பின்னர் தனது கையை கட்டுப்படுத்த முடியாமல் போராடும் கதாபாத்திரமாகவும் நன்றாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸும் சிறப்பாக இருக்கிறது.

மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் தனது வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். அவரது பார்வை உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு கவனம் பெறுகிறது. ஆனால் அவரைப் போன்ற ஒரு நடிகரின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.

கயாடு லோஹர் தனது கதாபாத்திரத்திற்குள் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆண்டனி வர்கீஸ் கதிர் வினய் ஃபோர்ட் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நன்றாக செய்திருக்கிறார்கள். பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும் அனைவருக்கும் இன்னும் முக்கியமான தருணங்கள் கொடுத்திருக்கலாம்.

முதல் பாதி படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மர்மம் ஆக்‌ஷன் மற்றும் துல்கரின் கதாபாத்திர மாற்றம் ஆகியவை நல்ல வேகத்தில் செல்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் வேறு ஒரு பாதைக்கு செல்கிறது. ஆரம்பத்தில் இருந்த வித்தியாசமான கான்செப்ட்டை ஓரமாக வைத்துவிட்டு சாதாரணமான பழிவாங்கும் கதைக்குள் படம் செல்ல ஆரம்பிப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தேவையில்லாமல் நீளமாக இருப்பதால் வேகம் குறைகிறது. குறிப்பாக நீண்ட ஃபிளாஷ்பேக் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் சில ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றன. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் கிரிஸ்ப்பாக இருந்திருக்கும்.

ரிவெஞ்ச் கதைக்கு தேவையான எமோஷனல் கனெக்ட் முழுமையாக வரவில்லை என்பதும் படத்தின் ஒரு குறையாக இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் பழிவாங்கும் போது அதற்கான காரணத்துடன் பார்வையாளர்களும் உணர்வுப்பூர்வமாக இணைந்தால் தான் அந்த பழிவாங்கல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த விஷயத்தில் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்றிருக்கலாம்.

தொழில்நுட்ப ரீதியாக ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு நல்ல பலம். குறிப்பாக முதல் பாதியில் மிஸ்டரி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அவரது இசை நல்ல எனர்ஜி கொடுக்கிறது. ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை ஸ்டைலிஷாக படமாக்கியிருக்கிறார். படத்தின் விஷுவல்ஸ் ரிச்சாகவும் டிரெண்டியாகவும் இருக்கின்றன.

மொத்தத்தில், I Am Game வித்தியாசமான கான்செப்ட் மற்றும் துல்கர் சல்மானின் நடிப்புக்காக படம் கவனம் பெறுகிறது. ஆனால் அந்த கான்செப்ட்டை இன்னும் வலுவான திரைக்கதையுடன் கொண்டு சென்றிருந்தால் I Am Game இன்னும் சிறப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக இருந்திருக்கும்.

Categories
Reviews

‘Immortal’ திரைப்பட விமர்சனம்

Immortal திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:

Starring : GV Prakash Kumar, Kayadu Lohar, TM Karthik, Kumar Natarajan, Lollu Sabha Maaran, Aaditya Kathir, Arshu Maharjan, Pema Tsamchoe, Sunita Shrestha & Others.

Theatrical Release by Sakthi Film Factory

Banner : AK Film Factory
Produced by Arunkumar Dhanasekaran
Writer and Director : Mariyappan Chinna
Director of Photography : Arun Radhakrishnan
Music Director : Sam CS
Editor : Rajesh M
Art Director : Siva Sankar
Stunt : R.Sakthi Saravanan, G.N.Murugan
Publicity Designer : Gopi Prasanna
Choreography : M. Sherif, Sabarish
Costume Designer : Vynod Sundar, Tamilselvan UK
Makeup : P.Mariyappan
Costumer : Ravi Devaraj
Lyrics : Sam CS, Shalli C, Sharanya Gopinath, Tamizh Aadhavan, Sathyan Illanko, Na.Idhaya
Singers : Sam CS, G V Prakash Kumar, Sharanya Gopinath, Adithya RK, Reshma Shyam, Gana Guna
PRO : Sathish (AIM)

‘இம்மார்டல்’ கதை, வாடகைக்கு வீடு தேடும் ஜி வி பிரகாஷ் குமாருக்கு கயாது லோஹர் தனது வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விடுகிறார். அழகான வீட்டையும் கயாது லோஹரின் அழகையும் பார்த்து மயங்கும் ஜி வி பிரகாஷ் அங்கே குடியேறுகிறார். ஆரம்பத்தில் காதலாக செல்லும் இவர்களது உறவு, அந்த வீட்டில் நடக்கும் மர்மமான சம்பவங்களால் திகில் நிறைந்ததாக மாறுகிறது.

கயாது லோஹர் சாதாரண பெண் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் ஜி வி பிரகாஷ், அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக்கதை.

ஜி வி பிரகாஷ் குமார் பயம் மற்றும் பதற்றத்தை நன்றாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அவரை விட கயாது லோஹர் தனது அழகும் நடிப்பும் கலந்த கதாபாத்திரத்தில் அதிக கவனம் பெறுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

சாம் சி எஸ் பின்னணி இசையும், ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக இருக்கின்றன. ஒரே வீட்டை மையமாக வைத்து கதை நகர்ந்தாலும் காட்சிகளை சுவாரசியமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் வித்தியாசமான கதைக்களம் இருந்தாலும் திரைக்கதையில் சில லாஜிக் குறைகள் இருக்கின்றன. முதல் பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் இரண்டாம் பாதியில் சற்று குறைந்து விடுகிறது. சில விஷயங்களுக்கு சரியான விளக்கம் இல்லாததும் படத்தின் பலவீனம்.

மொத்தத்தில்,’இம்மார்டல்’ இது தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி, ஒரு முறை பார்க்கக்கூடிய ஹாரர் திரில்லர் படமாக இம்மார்டல் இருக்கிறது.

Categories
Reviews

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்பட விமர்சனம்

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew:

D Anthony
Madhumita Das
Jeeva Ravi
Regin Rose
Navya Suji

Crew
Written, Directed & Edited by: D Anthony
Producer : D Anthony
Banner : M/s. Anthony’s Atelier
DOP : Pietro Villani
Special Thanks : Arunmani Palani
Music Composer (Songs) : Jaikar Harinath & Ashok Sridharan
Music Composer (RR) : Joey Reda
Lyricist : Karthik Netha, Tamil Mani
Singer : RK Adithya, Sanjana Kalmanje, Deepak Blue & Jaikar Harinath
Audiography : Jaikar Harinath
Sound Mixing: Anand Ramachandran
Art Director : KK Surendaran
Executive Producer : Hariharan & Santosh
Co Director : Janet Sophia
Associate Director : Sai Kishore
Production Manager : Vijayan
Production Controller : Udhayakumar & Sriram
PRO : Team Aim
Marketing Head : Vivek Amirthalingam
Publicity Designs : Udhaya Prakash

ஒரு வித்தியாசமான காதல் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா தான்
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’

சிறுவயதிலேயே அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பும் கிடைக்காமல் தனிமையில் வளரும் ஆண்டனி பின்னர் மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி எந்தவித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் அவரது வீட்டிற்கு வரும் மதுமிதா தாஸுடன் பழக்கம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் வெறும் பேச்சாக தொடங்கும் இவர்களது உறவு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்படும் சில பிரச்சினைகள் அவர்களை பிரிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதன் பிறகு இவர்களது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை

டி ஆண்டனி இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததோடு கதை எழுதி இயக்கி எடிட்டிங்கும் செய்திருக்கிறார். தனிமை காதல் தவிப்பு ஏக்கம் கோபம் என தனது கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மதுமிதா காணாமல் போகும் போது அவர் வெளிப்படுத்தும் தவிப்பு நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

மதுமிதா தாஸ் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். முதல் படத்திலேயே மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல் குறும்பு கோபம் ஏக்கம் மனவேதனை என பல உணர்வுகளை முகபாவனைகள் மூலமாகவே அழகாக வெளிப்படுத்துகிறார். ஆண்டனி மற்றும் மதுமிதா இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு நல்ல பலம்

படத்தின் இன்னொரு சிறப்பு அதன் ஒளிப்பதிவு மற்றும் இசை. பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு இயற்கையான முறையில் இருக்கிறது. குறிப்பாக கடற்கரை காட்சிகள் படத்தின் காதல் உணர்வுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. ஜெய்கர்ஹ ரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரனின் பாடல்களும் ஜோயி ரெடாவின் பின்னணி இசையும் படத்தின் எமோஷனல் காட்சிகளுக்கு நல்ல பலம் கொடுக்கின்றன

இயக்குநர் வழக்கமான ஹீரோ ஹீரோயின் காதலித்து பிரச்சனை வந்து கடைசியில் சேரும் கமர்ஷியல் பாணியில் கதையை சொல்லாமல் இரண்டு தனிமையான மனிதர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாக மாறுகிறார்கள் என்பதை நிதானமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அதனால் படம் சில இடங்களில் மெதுவாக நகர்வது போல் தெரிகிறது. நீளமான உரையாடல்கள் மற்றும் சில காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆங்கில உரையாடல்கள் அதிகமாக இருப்பதும் சிலருக்கு தடையாக இருக்கலாம்.

மொத்தத்தில், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய், மெதுவான திரைக்கதை மற்றும் சில நீளமான காட்சிகள் குறையாக இருந்தாலும் காதல் மற்றும் எமோஷனல் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும்.

Categories
Reviews

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:

Nivin Pauly – Justin
Mamitha Baiju – Ashley
Sangeeth Prathap – Joel
Bindu Panicker – Kunjanty
Suresh Krishna – Baiju S
Vinay Fort – Alex
Srinda – Reshma
Shameer Khan – Brinto
Meenakshi Raveendran – Riya
Ayashankar Karimuttam -Thankachaj
Thankam Mohan – Rosily
Vettukili Prakash – Davis

*CREW*

Director – Girish AD
Producers – Dileesh Pothan , Fahadh Faasil , Syam Pushkaran
Music – Vishnu Vijay
Writters – Girish AD , Kiran Josey
Cinematographer – Ajmal Sabu
Film Editor – Akash Joseph Varghese
Art Director – Ashik S
Costume – Dhanya Balakrishnan
Sound Design – Sankaran AS, KC Sidharthan
Lyrics – Suhail Koya , Vinayak Sasikumar
Action – Santhosh
Production Executive – Jamsheer Purakkattiri
VFX – Egg White VFX
Executive Producers- Benny Kattapana , Jos Vijay
PRO – Yuvraaj

‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ இறந்துபோன காதலியின் நினைவில் திருமணம் செய்யாமல் வாழும் நிவின் பாலியின் வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்கு வரும் கல்லூரி மாணவி மமிதா பைஜூவால் மீண்டும் காதல் வருகிறது. இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் இந்த காதலுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது. குடும்பத்தினர் இந்த காதலை எப்படி எதிர்கொள்கிறார்கள் அவர்களுடைய காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை

நிவின் பாலி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியில் இருக்கும் வலி மமிதாவின் குறும்புத்தனத்தை பார்த்து வெட்கப்படுவது மீண்டும் காதலில் விழும் தயக்கம் என பல உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். மமிதா பைஜூவும் தனது சுட்டித்தனமான நடிப்பால் படம் முழுவதும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக நிவினிடம் தைரியமாக காதலை சொல்லும் காட்சிகளில் நல்ல ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒன் லைன் கவுண்டர் வசனங்கள் பல இடங்களில் நல்ல சிரிப்பை வரவழைக்கின்றன. முதல் பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியிலும் சுவாரஸ்யம் இருந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. சில காமெடி காட்சிகள் இயல்பாக இல்லாமல் செயற்கையாக இருப்பது மட்டும் குறையாக தெரிகிறது

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பலம். அந்த ஊர் தேவாலயம் வீடுகள் என படம் நடக்கும் இடங்களை மிகவும் இயல்பாக காட்டியிருக்கிறார். விஷ்ணு விஜய்யின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியும் உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது

மொத்தத்தில்,’பெத்லகேம் குடும்ப யூனிட்’ குறையாக இருந்தாலும் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. மலையாள சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக ஒரு லைட்டான காதல் மற்றும் காமெடி படமாக பெத்லஹேம் குடும்ப யூனிட் ஒருமுறை பார்க்கலாம்.