full screen background image
Search
Tuesday 8 September 2026
  • :
  • :
Latest Update

‘போட்டோகிராபர்’ திரைப்பட விமர்சனம்

‘போட்டோகிராபர்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast: Ashraf – Veera | Janani Saminathan – Dharshini | Karunakaran – Kabilan | Uriyadi Shiva – Mathi | Aadukalam Naren – Sengutavan | Devi Mahesh – Aadhini

Writer & Director: Ashraf
Producer: Abdul Basit Syed
Co-Producer: Mohamed Feroz
Creative Producer: Chandru KN
DOP: Rayeez Ahmed
Music: Rajkumar Chandrasekaran
Editor: RC Pranav
Stunt: Dinesh Subbarayan
Art: P. Saravanan MFA
Dialogues & Lyrics: Preman
Costume Designer: Monisha
Sound Design: Sync Cinemas
Sound Mix: Aravind Menon
Makeup: Arun
Stills: Komalam Ranjith
VFX & Animation: Paperplane – Sanath TG & Sathish CD
DI: Mango Post
Colorist: Franklin V
PRO: Sri Venkatesh

‘போட்டோகிராபர்’ திரைப்படம் ஒரு புகைப்பட கலைஞனின் வித்தியாசமான பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சர்வைவல் சைக்காலஜிக்கல் த்ரில்லர்.

புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட வீரா அஷ்ரஃப் தனது குடும்ப தொழிலை விட்டுவிட்டு புகைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். மதிகெட்டான் சோலையில் இருக்கும் அரிய தங்க மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பலரது எச்சரிக்கைகளையும் மீறி காட்டுக்குள் செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக வழிதவறி சிக்கிக்கொள்ளும் அவர் எப்படி உயிர் பிழைத்து வெளியே வருகிறார் என்பதுதான் படத்தின் முக்கிய கதை.

வீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்ரஃப் படத்தை தனி ஆளாக சுமந்திருக்கிறார். காட்டுக்குள் சிக்கிக்கொண்ட பதற்றம், பயம், குழப்பம், உயிர் பிழைக்க வேண்டும் என்ற போராட்டம் என பல்வேறு உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு இன்னும் சிறப்பாக தெரிகிறது.


ஜனனி சாமிநாதன் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் இயல்பாக நடித்திருக்கிறார். கருணாகரன் வழக்கமான தனது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு தேவையான இலகுத்தன்மையை கொடுக்கிறார். உறியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஆடுகளம் நரேனின் அனுபவமான நடிப்பும் தேவி மகேஷின் அம்மா மகன் பாச காட்சிகளும் கவனம் பெறுகின்றன.

படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒளிப்பதிவும் ஒன்று. ரயீஸ் அஹ்மத் காட்டின் இயற்கை அழகையும் அதன் மர்மமான சூழலையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் காட்சிகளிலும் கேமரா வேலை நன்றாக இருக்கிறது.

ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை படத்தின் திரில்லர் உணர்வுக்கு நன்றாக துணை நிற்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் பின்னணி இசை பல காட்சிகளின் பதற்றத்தை அதிகரிக்கிறது.

படத்தின் முக்கிய குறை முதல் பாதி. கதை தொடங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் சில இடங்களில் படம் மெதுவாக நகர்கிறது. கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் சில காட்சிகள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் தான் படம் உண்மையான திரில்லர் பயணத்திற்குள் செல்கிறது. அப்போது எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சர்வைவல் காட்சிகள் படத்திற்கு விறுவிறுப்பை கொடுக்கின்றன.

மர்மம், அமானுஷ்யம், உளவியல் பாதிப்பு, தாய் மகன் பாசம், சர்வைவல் என பல விஷயங்களை ஒன்றாக இணைத்து சொல்ல முயற்சித்திருப்பது படத்தின் வித்தியாசமான அம்சம். சில இடங்களில் இந்த ஜானர்கள் அதிகமாக கலப்பதால் கதை சற்று குழப்பமாகவும் தோன்றுகிறது. இருந்தாலும் வழக்கமான ஹாரர் படங்களைப் போல வெறும் பயமுறுத்தும் காட்சிகளை மட்டும் நம்பாமல் வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்க முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில், ‘போட்டோகிராபர்’ த்ரில்லர் மற்றும் சர்வைவல் படங்களை விரும்புபவர்கள் போட்டோகிராபரை ஒரு முறை பார்க்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *