‘மொத ராத்திரி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast
Rishikanth, Anishma Anilkumar, Chetan, A. Venkatesh, Bagavathi Perumal, Abdool Lee, Shelly Kishore, Sangeetha Balan, Banupriya, Sumithra Devi L, Varshini Karmegham, Karthikeyan, Velan, Kowshik Kabilan.
Crew
Written & Directed by: Raja Karuppasamy
Producers: Naveen Yerneni & Y. Ravi Shankar
Banner: Mythri Movie Makers
Music: Bharath Sankar
Cinematography: Surendran Paranjothi
Editing: Ashok Arjunan
Costume Design: Poornima Ramaswamy
Lyrics: Yugabharathi
Choreography: Anusha Vishwanathan
PRO: Done
‘மொத ராத்திரி’ படத்தின் பெயரே கில்மாவா இருக்குதுன்னு நினைக்க வேண்டாம். ஆனால் படம் அப்படி இல்லை. ஒரு நடுத்தர திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு சுவாரஸ்யமான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி மற்றும் நடித்தும் இருக்கிறார்.
காதல் தோல்வியால் துபாய் சென்ற நாயகன் ரிஷிகாந்த் ஐந்து வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஊரில் அவருக்கே தெரியாமல் குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். குடும்பத்தினரின் கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதிக்கும் ரிஷிகாந்த் நாயகி அனிஷ்மா அனில்குமாரை மனைக்கிறார். திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற பிறகுதான் தனது மனைவி ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து வருவது தெரிய வருகிறது. அதன் பிறகு ரிஷிகாந்த் எடுக்கும் முடிவும் அந்த திருமணம் என்ன ஆனது என்பதும்தான் படத்தின் மீதி கதை.
சீரியஸான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை முழுக்க நகைச்சுவையுடனும் இயல்பான கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையுடனும் கொஞ்சமாக சாதியையும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். திருமண வீட்டில் நடக்கும் பரபரப்பு, உறவுகளுக்குள் ஏற்படும் சண்டை, சந்தோஷம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என பல உணர்வுகளை இயல்பாக காட்டியிருக்கிறார். மணமகன் ஆண் வீட்டாரும், மணமகள் பெண் வீட்டாரும் துணை நடிகர்களின் கிராமத்து பேச்சு மற்றும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் படத்திற்கு நல்ல பக்கா பாலா இருக்கின்றன.
ரிஷிகாந்த் நாயகனாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். கோபம், குழப்பம், பாசம், படபடப்பு என பலவிதமான உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக ஆலமரத்தடியில் சேத்தனுடன் மழையில் பேசும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல நாயகனாக வருவதற்கான நம்பிக்கையை கொடுக்கிறார்.
அனிஷ்மா அனில்குமார் அதிக வசனங்கள் இல்லாமல் முகபாவனைகள் மூலமாகவே கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார் அவருக்கு இன்னும் கொஞ்சம் வசனங்கள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக இறுதியில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறை, யூத் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் கவனம் பெறுகிறார் இப்படத்துடன் சேர்த்து இவர் நடித்த மூன்று படங்களுமே ஹிட்டு தாங்க.
சேத்தன், அப்துல் லீ, பக்ஸ் பகவதி பெருமாள், ஏ வெங்கடேஷ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம் உள்ளிட்ட அனைவரும் நடிக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் அந்த குடும்பத்தில் இருக்கும் மனிதர்களாகவே இயல்பாக நடித்திருக்கிறார்கள். அப்துல் லீ மற்றும் பக்ஸ் கூட்டணி பல இடங்களில் சிரிக்க வைக்கிறது, குறிப்பாக மொத ராத்திரி இரவு பேருந்து நிழல் கூடையில் இவர்கள் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் அலோகளம்.
இசையமைப்பாளர் பரத் சங்கரின் பாடல்கள் கதைக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான அளவில் உயிர் கொடுக்கிறது, ஆனால் பாடல்கள் எதுவும் மனதிற்குள் ஒட்டும் படியாக இல்லை. சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவு திருமண வீட்டின் சூழலையும் கிராமத்து வாழ்க்கையையும் இயல்பாக காட்டுகிறது. குறிப்பாக இரவு நேர காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன, படத்திற்கு பெரிய பலம்.
ஒரே நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும் ஏராளமான கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன். முதல் பாதி கலகலப்பாகவும் புதுமையான காட்சிகளுடனும் செல்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் சமரசங்கள் இருந்தாலும் இறுதிக்கட்ட காட்சிகள் படத்திற்கு நல்ல பலம் சேர்க்கின்றன.
காதல், திருமணம், குடும்ப உறவுகள், சாதி உள்ளிட்ட விஷயங்களை மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசியிருக்கிறார் இயக்குநர். ஒரு திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து மனிதர்களின் மனநிலையையும் அவர்களுக்குள் இருக்கும் உறவுகளையும் சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது படத்தின் சிறப்பு.
மொத்தத்தில், ‘மொத ராத்திரி, தலைப்பை பார்த்து ஏதோ ஏடாகூடமான படம் என்று நினைக்க வேண்டாம்… நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை கலந்து கொடுத்திருக்கும் ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கிறது.























