‘ஜி.டி.என்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew
Cast: R. Madhavan, Priyamani, Sathyaraj, Jayaram, Dushara Vijayan, Thambi Ramaiah, Vinay Rai, Yogi Babu & Karunakaran
Writer & Director: Krishnakumar Ramkumar
Producers: R. Madhavan, Varghese Moolan & Vijay Moolan
DOP: Aravind Kamalnathan
Music: Govind Vasantha
Editor: Bijith Bala
Production Designer: Cyril Kuruvilla
‘ஜி டி என்’ இந்தியாவின் மறக்கப்பட்ட மிகப்பெரிய விஞ்ஞானியும் தொழிலதிபருமான ஜி டி நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை வரலாற்று திரைப்படம்
கோவையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய ஜி டி நாயுடு தனது கடின உழைப்பாலும் அறிவாலும் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து மிகப்பெரிய தொழிலதிபராக உயர்கிறார்
மோட்டார் சைக்கிளை வாங்கிய பிறகு அதை பிரித்து அதன் செயல்பாட்டை தெரிந்து கொண்டது முதல் பேருந்து நிறுவனம் தொடங்கி பல்வேறு தொழில்களில் சாதனை படைத்தது வரை அவரது வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களை படம் சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.
அதே நேரத்தில் ஜி டி நாயுடு சந்தித்த பிரச்சனைகளையும் படம் அழுத்தமாக பேசுகிறது குறிப்பாக வருமான வரித்துறையுடன் அவர் நடத்திய போராட்டம் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் நிலை மற்றும் தனது கண்டுபிடிப்புகளுக்கு சொந்த நாட்டிலேயே கிடைக்காத அங்கீகாரம் போன்ற விஷயங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன
ஜி டி நாயுடுவாக நடித்திருக்கும் மாதவன் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம் இளம் வயது முதல் முதுமை வரை பல்வேறு தோற்றங்களில் அவர் காட்டியிருக்கும் மாற்றம் மட்டுமல்லாமல் உடல் மொழி குரல் உச்சரிப்பு மற்றும் முகபாவனைகள் மூலமாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ஜி டி நாயுடு என்றால் மாதவன் தான் என்று நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது
ஜெயராம் வருமான வரித்துறை அதிகாரியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நேர்மையான அதிகாரியின் கோபம் பிடிவாதம் மற்றும் அதிகாரத்தன்மையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவனுக்கு இணையாக அவரது நடிப்பும் பல இடங்களில் கவனம் பெறுகிறது
சத்யராஜ் ஜி டி நாயுடுவின் நண்பராக வந்து தனது அனுபவமான நடிப்பாலும் நக்கல் கலந்த வசனங்களாலும் படத்திற்கு நல்ல பலம் சேர்க்கிறார் பிரியாமணி துஷாரா விஜயன் அதிதி பாலன் வினய் ராய் கருணாகரன் தம்பி ராமையா மோகன் ராமன் மற்றும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் குறிப்பாக கருணாகரன் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்
படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது அரவிந்த் கமலநாதன் அந்த காலகட்டத்தையே திரையில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் பழைய கோவை நகரம் பழைய வாகனங்கள் உடைகள் மற்றும் ஜெர்மனி பயணம் போன்ற காட்சிகள் பார்வையாளர்களை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன
கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு நல்ல பலமாக அமைந்திருக்கிறது அந்த காலகட்டத்திற்கு ஏற்ற இசையையும் பின்னணி இசையையும் பயன்படுத்தியிருப்பதால் காட்சிகளின் உணர்வு இன்னும் அதிகமாகிறது
படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது பழைய காலத்து பொருட்கள் வாகனங்கள் உடைகள் மற்றும் பின்னணி அமைப்புகள் என அனைத்திலும் நிறைய உழைப்பு தெரிகிறது
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ஜி டி நாயுடுவின் வாழ்க்கையை வெறும் ஆவணப்படம் போல சொல்லாமல் கமர்ஷியல் சினிமா பாணியில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அவரது சாதனைகள் மட்டுமின்றி அவர் சந்தித்த தடைகள் தோல்விகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் காட்டியிருப்பது படத்தின் சிறப்பு
ஆனால் சில இடங்களில் வருமான வரித்துறை தொடர்பான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வருவதால் திரைக்கதையின் வேகம் சற்று குறைகிறது சில காட்சிகள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது
மொத்தத்தில்,’ஜி டி என்’நாயுடுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக தெரியாதவர்களுக்கும் இந்த படம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் குறிப்பாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த படம் ஒரு தன்னம்பிக்கை அனுபவமாக அமையும்.


















