Categories
Cinema News

G. V. Prakash Kumar as Lead, Sean Roldan as Composer: K.S. Sinish presents ‘Ninja’ shooting starts with a ritual pooja ceremony on August 24!

G. V. Prakash Kumar as Lead, Sean Roldan as Composer: K.S. Sinish presents ‘Ninja’ shooting starts with a ritual pooja ceremony on August 24!

_*Filmmaker Murugu collaborates with G.V. Prakash Kumar for an out-and-out Rom-Com Family Entertainer. The shooting commences with a ritual pooja ceremony and will have a 20-day first schedule in Thanjavur.*_

Some collaborations instantly spark curiosity, and ‘Ninja’ brings together two of Tamil cinema’s celebrated musical talents in an exciting new avatar. G. V. Prakash Kumar, who was initially onboard as the music composer, now steps into the lead role, with Prarthana (Thalaivar Thambi Thalaimayil-Love Today-Parking fame) playing female lead, while acclaimed composer Sean Roldan takes charge of the film’s music. Written and directed by Murugu, the film is produced by S. Sai Devanand and K. S. Sinish under the banners of Soldiers’ Factory and Learn and Teach Production.

The shooting of Ninja commenced today (August 24) in Thanjavur, with the production beginning with a traditional pooja ceremony held at Sripathy Cinemas. The first schedule is planned for 20 days, marking the beginning of a fresh cinematic journey featuring a new combination of talent both in front of and behind the camera.

K. S. Sinish has previously produced the National Award-winning film ‘Parking’, while he is also simultaneously producing another project titled ‘Superhero’ starring Arjun Das and Sandy. It is worth mentioning that Learn and Teach Production (Production house behind Pa. Ranjith-Arya’s ’Vettuvam’).

The biggest talking point surrounding Ninja marks an interesting shift in their respective creative roles and adds to the curiosity surrounding the project. The film also features Jenson Diwakar, Radha Ravi, Dheepa Ramanujam, Devadarshini, and Kalyani Natarajan, adding a strong ensemble of performers to the project.

The technical crew comprises Harish Kannan as Director of Photography, Ganesh Siva as Editor, Gopi Anand as Art Director, Priya Ravi as Costume Designer and Dinesh Kaasi as Stunt Director. With Sean Roldan composing the music and Murugu at the helm, the film brings together an intriguing mix of experienced talents and fresh creative voices.

With a fresh combination of G. V. Prakash Kumar, Sean Roldan and debutant director Murugu, Ninja promises to be an exciting addition to Tamil cinema’s upcoming slate. Produced by S. Sai Devanand and K. S. Sinish under Soldiers’ Factory and Learn and Teach Production, the film has now commenced its first schedule in Thanjavur, with further updates on the project to follow.

*ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!*

இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில், ஸ்ரீபதி சினிமாஸில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறுகிறது. கேமராவுக்கு முன்னும் பின்னும் பல புதிய திறமையாளர்கள் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்துள்ள கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். மேலும், பா. இரஞ்சித், ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும், பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராகவும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார், சீன் ரோல்டன் மற்றும் அறிமுக இயக்குநர் முருகு ஆகியோரின் புதிய கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’, தமிழ் சினிமாவின் வரவிருக்கும் படங்களின் பட்டியலில் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. படத்தைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Categories
Cinema News

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

பிரசாந்த் வர்மா- ஆர் கே டி ஸ்டுடியோஸ் (RKD Studios)- பூஜா கொல்லூரு- ஆகியோரின் கூட்டணியில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான படைப்பான ‘மகாகாளி- #MAHAKALI படத்தில் அக்ஷய் கண்ணா ‘சுக்ராச்சாரியார்’- SHUKRACHARYA அவதாரத்தில் தனது ‘போர் முழக்க’த்தை – ( WarCry) வெளிப்படுத்தும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ஆர் கே டி ஸ்டுடியோஸ் – RKD Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K துக்கல் மற்றும் பிரசாந்த் வர்மா ஆகியோர் இந்திய வரலாற்றுப் பின்னணியிலான மகாகாளி – MAHAKALI பிரம்மாண்ட படைப்பின் அறிமுக காணொளியை- Glimpse அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் ரசிகர்களின் நீண்ட காத்திருப்பும் நிறைவடைந்துள்ளது. பார்வையாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டிய இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பை தொடர்ந்து, ரசிகர்கள் அதன் அறிமுக காணொளிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். சுக்ராச்சாரியாரின் போர் முழக்கம் – SHUKRACHARYA’s WarCry என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிமுக காணொளியுடன் இந்த படம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான சாதாரண மோதலை விடவும்.. மிகப்பெரியதொரு முரண்பாட்டில் தெய்வீக சக்திகள் சிக்கிக் கொள்ளும் நிலையில், தர்மத்திற்கும்… அதர்மத்திற்கும்… இடையிலான ஒரு வலிமையான போருக்கான களத்தை இந்த காட்சிகள் அமைக்கிறது. அசுரர்களின் வலிமைமிக்க குருவான சுக்ராச்சாரியாரின் தலைமையில் நடைபெறும் இந்த போர்… ஒட்டுமொத்த உலகின் விதியை தீர்மானிக்கக்கூடிய ஒரு மாபெரும் போருக்கான அறிகுறியாக அமைகிறது. அச்சுறுத்தும் தொனி- வரவிருக்கும் மோதலின் வலிமையான காட்சிகளுடன், ‘முடிவு தொடங்குகிறது- The End Begins ‘ என்பதை உணர்த்தும் இந்த காட்சி… ‘மகாகாளி’ படத்தில் விரிவாக நிகழவிருக்கும் காவியப் போருக்கான அடித்தளத்தை பிரதிபலிக்கிறது.

இந்த காணொளியின் சிறப்பம்சமாக திகழ்வது… அக்ஷய் கண்ணா- சுக்ராச்சாரியாராக மற்றும் எளிதில் அடையாளம் காண இயலாத தோற்றத்தில் தோன்றுவது தான். தீவிரமான பார்வை- கம்பீரமான திரை ஆளுமையுடன் காணப்படும் அவர், இந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறார். அவரது ஃபர்ஸ்ட் லுக் ( First Look) ஏற்படுத்திய பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து… இந்த காணொளி… அவரது நடிப்பின் முதல் உண்மையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இது அந்த வலிமைமிக்க ஒரு அசுர குரு மற்றும் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான போரில் அவருடைய பங்களிப்பு குறித்த ஆர்வத்தை மேலும் கூடுதலாக்குகிறது.

பிரமிக்க வைக்கும் காட்சிகள்- விரிவான உலக உருவாக்கம்- ஈர்க்கக்கூடிய விஷுவல் எபெக்ட்ஸ் – ஆகியவை இணைந்து ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை உருவாக்கும் ‘மகாகாளி’யின் உலகத்தை… இந்த காணொளி முதன் முறையாக விரிவாக எடுத்துரைக்கிறது. இதில் ஸ்ரியா ரெட்டியும் வலிமையான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பிரம்மாண்டமான சூழலையும்… நுணுக்கமான விவரங்களையும் வெளிப்படுத்தும் காட்சிகள்… தயாரிப்பாளர்கள் உருவாக்கிய அந்த பிரம்மாண்டமான உலகத்தை உணர்த்துவதுடன் கதையின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன.‌

ஹனு -மேன் – Hanu-man திரைப்படம் – பிவிசியு – PVCU (பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ்) எனும் பிரம்மாண்டமான திரைப்பட பிரபஞ்சத்திற்கான அடித்தளத்தை அமைத்து, இந்திய இதிகாச கதைகளை திரையில் கண்கவர் அனுபவமாக மாற்றும் இயக்குநரின் அசாத்தியமான திறமையை நிரூபித்தது. அந்த பார்வையை இன்னும் பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க அளவில் முன்னெடுத்துச் செல்ல ‘மகாகாளி- MAHAKALI’ தயாராகி வருகிறது. 2: 55 நிமிடங்கள் கொண்ட இந்த முன்னோட்ட காணொளி- பிரசாந்த் வர்மாவின் பரந்து விரிந்த திரைப்படப் பார்வையை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன்… கதைக்களம்- பிரம்மாண்டம் மற்றும் காட்சி அனுபவம் ஆகியவற்றில் தொடர்ந்து விரிவடையும் ஒரு மகா பிரபஞ்சத்தை பற்றியும் எடுத்துரைக்கிறது.

ஆர் கே டி ஸ்டுடியோஸ் RKD Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர் கே துக்கல் வழங்குகிறார். இதனை இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லூரு இயக்குகிறார். இது பிரசாந்த் வர்மாவின் திரைப்பட பிரபஞ்சத்தின் அடுத்த படைப்பாக அமைகிறது. இப்படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, பூமி ஷெட்டி, ரோஹித் ஷரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்:
பூமி ஷெட்டி , அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, ரோஹித் ஷரஃப், குஷ்பூ சுந்தர், ராகேஷ் பேடி , சமுத்திரக்கனி, ஜிதின் குலாட்டி, ரஜத் கபூர் ,முரளி சர்மா, நாசர், பப்லு பிருத்விராஜ் .

தொழில்நுட்பக் குழு :
படைப்பு : பிரசாந் வர்மா
இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லூரு தயாரிப்பு நிறுவனம் : ஆர் கே டி ஸ்டுடியோஸ்
வழங்குபவர் : ஆர் கே துக்கல் தயாரிப்பாளர் : ரிவாஸ் ரமேஷ் துக்கல் இசை: ஸ்மரன் சாய்
ஒளிப்பதிவு : சுரேஷ் ரஹடு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஸ்ரீ நாகேந்திர தங்கலா
நிர்வாகத் தயாரிப்பாளர் : வெங்கட் குமார் ஜெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

Prasanth Varma, RKD Studios, Pooja Kolluru, PVCU’s much-awaited historic spectacle, #MAHAKALI, unleashes Akshaye Khanna as SHUKRACHARYA in his WAR-CRY.. Grand Release Worldwide on 8th January 2027.

The wait is over as the makers of Mahakali, RKD Studios and Prasanth Varma, have officially unveiled the first glimpse of the much-awaited Indian Historical spectacle. Following the announcement that sparked intrigue and curiosity among audiences, fans have been eagerly awaiting the glimpse. Titled #Shukracharya’s WarCry, the glimpse also comes with a release date announcement, with Mahakali set to hit theatres on January 8, 2027.

The glimpse sets the stage for a powerful battle between Dharma and Adharma, as the forces of the divine find themselves locked in a conflict far greater than a mere clash between good and evil. Led by Shukracharya, the formidable guru of the Asuras, the battle hints at a larger war that could determine the fate of an entire world. With its ominous tone, powerful imagery of impending conflict, the glimpse signals that “the end begins,” setting the stage for the epic battle that will unfold in Mahakali.

The highlight of the glimpse is undoubtedly Akshaye Khanna, who appears in a fierce and unrecognisable avatar as Shukracharya. Seen with an intense gaze and commanding screen presence, the actor brings an unmistakable gravitas to the character. Following the massive intrigue generated by his first look, the glimpse offers audiences their first real taste of his portrayal, further amplifying curiosity around the powerful Asura guru and his role in the battle between Dharma and Adharma.

The glimpse also offers a first expansive look into the grand visual world of Mahakali, with striking imagery, elaborate world-building and impressive visual effects coming together to create a larger-than-life cinematic experience. Sriya Reddy makes a powerful appearance, adding another layer of intrigue to the unfolding story with the scale and detailing of the visuals that hint at the ambitious world that the makers have created.

With Hanu-Man establishing the foundation of the PVCU – PURANA VEERA CHITRA UDYAM and demonstrating the filmmaker’s ability to transform Indian Itihasa into a visually spectacular big-screen experience, Mahakali now looks to take that vision forward on an even more ambitious scale. The 2-minute-and-55-second glimpse offers the first window into Prasanth Varma’s larger cinematic vision, hinting at a universe that continues to grow in scale, storytelling and spectacle.

Presented by RK Duggal and produced by Riwaz Ramesh Duggal under the RKD Studios banner, Mahakali is directed by Puja Aparna Kolluru and serves as the next installment in the Cinematic Universe. The film also stars Bhoomi Shetty, Rohit Saraf and several other prominent actors alongside Akshaye Khanna and Sriya Reddy.

Cast: Bhoomi Shetty, Akshaye Khanna, Sriya Reddy, Rohit Saraf, Khusboo Sundar, Rakesh Bedi, Samuthirakani, Jitin Gulati, Rajat Kapoor, Murali Sharma, Nassar, Babloo Prithveeraj

Technical Crew:
Created by : Prasanth Varma
Directed by Puja Aparna Kolluru
Banner: RKD Studios
Presenter: RK Duggal
Producer: Riwaz Duggal
Music: Smaran Sai
DoP: Suresh Ragatu
Production Designer: Sri Nagendra Tangala
Ex-Producer: Venkat Kumar Jetty
Costume Designer: Shilpa GNS
Publicity: Ananth Kancherla
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media

Categories
Cinema News

Varshini: From Physics to Performance

Varshini: From Physics to Performance

Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmmal college, Coimbatore. Varshini discovered her passion for performance through short films and stage experiences.

Her artistic journey has also been shaped by Bharatanatyam, which gave her a strong foundation in expression, discipline and body language. She has been part of short films,gradually building her confidence in front of the camera.

Varshini has a particular admiration for Hindi cinema and draws inspiration from performers such as Tabu, Rekha, Aishwarya Rai and Shobana . She is fascinated by actors who can bring depth and individuality to their characters rather than merely performing for the camera.

She also considers her command of Hindi an important advantage. Varshini can both read and pronounce Hindi well, and believes this could give her access to a much wider range of opportunities as an artist.

“Knowing Hindi gives an artiste the ability to explore multiple options, especially with the growing reach of OTT platforms. It allows us to look beyond one language and discover more interesting characters and opportunities,” she says.

Among contemporary actors, Sai Pallavi is someone she greatly admires for her natural performances and ability to remain authentic on screen. She also looks up to Dhanush sir, particularly for his versatility and his ability to completely transform himself for a character.

Music is another important influence in her creative world. She is a fan of both Yuvan Shankar Raja and Ilaiyaraaja, appreciating the distinctive emotional worlds created by their music.

For Varshini karmegham, Motha Raathiri is an important step forward—a chance to move beyond short films and bring her preparation, dance training and love for performance to a much larger audience.

From studying Physics in Coimbatore to stepping into the cinematic world as Karmegam, Varshini’s journey proves that sometimes the most unexpected paths can lead to the most exciting destinations.

*”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!*

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரம்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி கார்மேகம், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இயற்பியல் படித்தவர். குறும்படங்கள் மற்றும் மேடை அனுபவங்கள் மூலம் நடிப்புத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அவரது கலைப் பயணத்தில் பரதநாட்டியத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒழுக்கம் மற்றும் உடல் மொழி ஆகியவற்றில் அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பரதநாட்டியம். தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த அவர், கேமரா முன் தனது தன்னம்பிக்கையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.

வர்ஷினிக்கு இந்தி சினிமா மீது தனி ஈர்ப்பு உண்டு. கேமராவுக்காக வெறுமனே நடிப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களை தங்கள் திறமையான நடிப்பு மூலம் உயிர்ப்பிக்கும் தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷோபனா போன்ற நடிகைகள் தனக்கு முன்மாதிரியானவர்கள் என்கிறார். இந்தி மொழியை நன்றாகப் படிக்கவும், சரியாக உச்சரிக்கவும் முடியும் என்று கூறும் அவர், இது ஒரு கலைஞராக தனக்கு இன்னும் அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என நம்புகிறார்.

“இந்தி தெரிந்திருப்பது ஒரு கலைஞருக்கு இன்னும் பல்வேறு வாய்ப்புகளை கொடுக்கும்.குறிப்பாக, ஓடிடி தளங்கள் வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஒரே மொழிக்குள்ளேயே சுருங்கி விடாமல், பல்வேறு கதாபாத்திரங்களையும் வாய்ப்புகளையும் தேடிச் செல்ல இது உதவுகிறது” என்கிறார் வர்ஷினி.

தற்கால நடிகர்களில் சாய் பல்லவியின் இயல்பான நடிப்பும், நடிகர் தனுஷின் பன்முகத்தன்மை மற்றும் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறனும் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் வர்ஷினி. அதேபோல, யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரின் இசைக்கும் அவர் ரசிகை.

தனது திரைத்துறை பயணத்தில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் முக்கியமான மைல்கல் என்கிறார் வர்ஷினி. குறும்படங்களைக் கடந்து, தனது நடிப்பு திறமை, நடன அனுபவம் மற்றும் நடிப்பின் மீதான காதலை பலதரப்பட்ட பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பாக இப்படத்தை அவர் பார்க்கிறார். கோயம்புத்தூரில் இயற்பியல் படித்ததிலிருந்து, திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வர்ஷினியின் பயணம், எதிர்பாராத பாதைகள்கூட சில நேரங்களில் மிகவும் உற்சாகமான இலக்குகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்பதை நிரூபிக்கிறது.

Categories
Cinema News Videos

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் ரவி சங்கர், “திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என நடிகர்களும், தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த கல்ட் கிளாசிக் படத்தை திரையரங்குகளில் ரசிப்பார்கள். சிவா நிர்வாணாவின் இந்த படத்தை அந்த கடவுள் ஐயப்பாவே தேர்வு செய்து உள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

வசனகர்த்தா விஜய் பாலாஜி, “மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். மூன்று தந்தைகளுக்கும் இடையே நடைபெறும் கதை இது. இந்தப் படத்திற்கு பெரும் பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான். மெட்ராஸ் தினத்தில் சென்னை வந்திருக்கிறார் மாஸ் மகாராஜா. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்”.

பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ” ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதியிருப்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று. தமிழ் படத்தை விட இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரியா பவானி சங்கரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸில் நெகிழ்ந்து விட்டேன். இந்தப் படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களுமே கதையோடு ஒன்றிய முக்கியமான பாடல்கள். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்”.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, ” ரவி தேஜா சாரின் படத்தில் பணிபுரிந்திருப்பது பெருமையான விஷயம். சிவா சார் கதையை சிறப்பாக எடுத்துள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் இது புதுவிதமான கதையாக இருக்கும்”.

குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, “இந்த படம் எனக்கு ரொமவே ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவா சார், மாஸ் மகாராஜா ரவி தேஜா சார், பிரியா பவானி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

நடிகை பிரியா பவானி சங்கர், ” படத்தின் கதை கேட்ட போது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்த போது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது. மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின் போது எந்த விதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள். மொழி என்பது தடையல்ல! அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த படம் வெற்றி பெறும்”.

இயக்குநர் சிவா நிர்வாணா, “தமிழ் சினிமாவோடு எப்போதும் எனக்கு எமோஷனல் கனெக்ட் உண்டு. குறிப்பாக பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். திரையரங்குகளை விட்டு ரசிகர்கள் வெளியேறும் பொழுது அவர்களுக்கு அந்த படத்தில் இருந்து எடுத்துக் கொள்ள நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த மாதிரி படங்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அந்த வகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. குடும்பத்துடன் பார்த்து மகிழும் திரைப்படம் ஆக ‘இருமுடி கட்டு’ இருக்கும். இந்த படம் பார்த்து முடித்ததும் அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள், மனைவியை பற்றி யோசிப்பீர்கள். தெலுங்கில் படம் சூப்பர் ஹிட். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதை போலவே தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தில் பிரியாவின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரை இந்த படத்தில் வேறொரு கோணத்தில் பார்க்கலாம். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்”.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது. அதுபோலவே ‘இருமுடி கட்டு’ படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது. இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜா சாருக்கு ரசிகர்கள். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அது போலவே கமர்சியல் படங்களில் ரவி தேஜா சருக்கும் தனித்துவம் இருக்கிறது. நிறைய இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். இனி சிவா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி விடுவார்கள். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்த படத்திற்காக பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி”.

நடிகர் ரவி தேஜா, “இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா. தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Categories
Cinema News

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்

மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை.

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.

குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!

சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது அவரது நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு வகைத் திரைப்படங்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரையுலகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.

“விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.

“வாத்தி”, “லக்கி பாஸ்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி , மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்கு தேவையான அம்சங்களுடன் இப்படத்தைத் தந்து அசத்தியுள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

ரூ.200 கோடியை கடந்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம்: வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள்: சூர்யதேவரா நாக வம்சி & சாய் சௌஜன்யா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி
படத்தொகுப்பு: நவீன் நூலி
கலை இயக்கம்: பங்களன்
நிர்வாக தயாரிப்பாளர்: யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
சண்டை பயிற்சி: V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள்: சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

Categories
Reviews

‘அமரம்’ திரைப்பட விமர்சனம்

‘அமரம்’ திரைப்பட விமர்சனம்

Cast: Rajan Tejaswar, Aira Agarwal, George, Sai Dheena, Nagineedu, Kalki Rajan, Harish Peradi, Vasudevan Murali.

Technical Crew: Written & Directed by Thiru Arul Krishna | Music – Mickey J. Meyer | Cinematography – Bharath Kumar | Editing – R. Sriramar | Art – Janarthanan | Stunts – Miracle Michael.

Produced by: C. R. Rajan | Released by: Trident Arts Ravindran | PRO: Sathish Kumar, Bhuvan Selvaraj.

‘அமரம்’ கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கிறது. சிறுவயதில் தனது கண் முன்னால் நடந்த கொடூரமான சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்படும் அருகன் பணத்திற்காக உயிர்களை பறிக்கும் கூலிப்படை கொலையாளியாக மாறுகிறார். ஒரு அரசியல்வாதியை கொலை செய்யும் பணியை செய்து முடித்த பிறகு அந்த அரசியல்வாதியின் மகள் ஷர்மிளா பாரதி பழிவாங்கும் நோக்கத்துடன் அருகனை தேடி செல்கிறார். ஆனால் எதிர்பாராத சூழலில் அருகனே ஷர்மிளாவை காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. அதன் பிறகு இருவரும் உண்மையான எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் பயணம்தான் படத்தின் கதை.

அருகன் கதாபாத்திரத்தில் ராஜன் தேஜஸ்வர் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிகமான வசனங்கள் இல்லாமல் தனது பார்வை உடல்மொழி மற்றும் ஆக்சன் காட்சிகள் மூலம் கதாபாத்திரத்தின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவரது உழைப்பு நன்றாக தெரிகிறது. ஐரா அகர்வாலும் பழிவாங்கும் கோபம் மற்றும் பின்னர் ஏற்படும் மனமாற்றத்தை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

ஜார்ஜ் மரியான் சாய் தீனா நாகிநீடு ஹரிஷ் பெராடி கல்கி ராஜன் மற்றும் வாசுதேவன் முரளி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர். அதே நேரத்தில் சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்ற குறையும் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பரத் குமார் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வறண்ட நிலப்பரப்பையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை சூழலையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளும் குறிப்பாக சண்டைக்காட்சிகளும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை படத்தின் பதற்றத்தையும் ஆக்சன் காட்சிகளின் வேகத்தையும் அதிகரிக்கிறது.

இயக்குநர் திருவருள் கிருஷ்ணா படத்தின் முதல் பாதியில் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். அதிகார வர்க்கம் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் விதத்தை கதையுடன் இணைத்திருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. கிழக்கு தொடர்ச்சி மலை மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஒரு பின்னணியை எடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது.

முதல் பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் ஆக்சன் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரசியமாக கொண்டு செல்கின்றன. குறிப்பாக தன்னை கொல்ல வந்த பெண்ணையே அருகன் காப்பாற்றும் சூழல் உருவாகும் இடம் படத்தின் சிறப்பான திருப்பமாக அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை வேகம் குறைகிறது. வழக்கமான பழிவாங்கும் காட்சிகள் அதிகமாக நீளுவதால் விறுவிறுப்பு சற்று குறைகிறது என்ற குறையும் இருக்கிறது.

மொத்தத்தில், ‘அமரம்’ ஆக்சன் காட்சிகள் வித்தியாசமான கதைக்களம் மற்றும் ராஜன் தேஜஸ்வர் ஐரா அகர்வால் ஆகியோரின் நடிப்பு காரணமாக அமரம் வித்தியாசமான கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Categories
Reviews

‘இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம்

‘இருமுடி கட்டு’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

‘இருமுடி கட்டு’ ஐயப்ப பக்தி கிரைம் திரில்லர் சமூக பிரச்சனை மற்றும் மாஸ் ஆக்ஷன் ஆகியவற்றை கலந்து சொல்லியிருக்கும் படம். ரவி தேஜா பிரியா பவானி சங்கர் மற்றும் சிறுமி நக்ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ரவி தேஜா விவசாயம் மற்றும் விளைபொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் ஐயப்பன் மீது தீவிரமான பக்தி கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் 41 நாட்கள் ஐயப்ப விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நீண்ட காலத்திற்கு பிறகு ஐயப்பனை வேண்டி பிறந்த குழந்தை என்பதால் தனது மகள் மீது உயிருக்கு மேலாக பாசம் வைத்திருக்கிறார்.

தனது மகளை மட்டும் இல்லாமல் ஊரில் இருக்கும் அனைத்து பெண் குழந்தைகளையும் தன் மகள்களைப் போலவே பார்க்கும் குணம் ரவி தேஜாவுக்கு இருக்கிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெண்கள் பயப்படாமல் தைரியமாக அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று தனது மகளையும் வளர்க்கிறார்.

இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் சில மாணவிகளுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒரு மாணவி மர்மமான முறையில் இறக்கிறார். மற்றொரு மாணவி காணாமல் போகிறார். சிறப்பு வகுப்பு என்ற பெயரில் சில மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியை சுவாசிகாவை சுற்றியும் சந்தேகம் ஏற்படுகிறது. மாணவிகளுக்கு நடக்கும் இந்த சம்பவங்களின் பின்னணி பற்றி ரவி தேஜாவின் மகள் தெரிந்து கொள்கிறாள்.

இந்த விஷயத்தை தந்தையிடம் சொல்லி மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் ரவி தேஜாவின் மது பழக்கம் மற்றும் ஐயப்ப விரதம் ஆகியவை அந்த உண்மையை உடனடியாக அவரிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக இருக்கின்றன. ஒரு கட்டத்தில் தனது மகளும் ஆபத்தில் சிக்கும்போது உண்மையை தெரிந்து கொள்ளும் ரவி தேஜா எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதி.

ரவி தேஜா இந்த படத்தில் வழக்கமான மாஸ் ஹீரோ பாணியை சற்று குறைத்துக்கொண்டு ஒரு சாதாரண கிராமத்து தந்தையாக நடித்திருக்கிறார். மகளுடன் இருக்கும் காட்சிகளில் மிகவும் இயல்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நடித்திருக்கிறார். மகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பதறிப்போகும் தந்தையாகவும் பெண்களுக்கு எதிரான அநீதியை பார்த்தால் கோபமாகும் மனிதராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பில் வரும் மாற்றமும் கிளைமாக்ஸ் காட்சிகளில் காட்டும் மாஸும் ரசிக்க வைக்கிறது.

பேபி நக்ஷத்ரா இந்த படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறார். அப்பா மீது வைத்திருக்கும் பாசம் பயம் பதற்றம் என பல உணர்வுகளை முகபாவனைகளிலேயே நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரவி தேஜாவுடன் வரும் காட்சிகளில் இருவருக்கும் இடையிலான பாசம் நன்றாக வேலை செய்கிறது. பல இடங்களில் படத்தின் உணர்ச்சியை நக்ஷத்ராவின் நடிப்புதான் தாங்கி நிற்கிறது.

பிரியா பவானி சங்கர் குடும்பத் தலைவியாகவும் அன்பான மனைவியாகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கு அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் கிடைத்த காட்சிகளில் கதைக்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறார்.

சாய் குமார் குருசாமி கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். ரவி தேஜாவின் கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட சிந்தனையுடன் இருக்கும் ஒரு தந்தையாக அவரது கதாபாத்திரம் அமைந்திருப்பது கவனிக்க வைக்கிறது. அஜய் கோஷ் ரமேஷ் இந்திரா சுவாசிகா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா வரும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் கிராமத்து சூழலை அழகாக காட்டுகிறது. இயற்கையான காட்சிகளையும் குடும்ப உணர்வுகளையும் திரில்லர் காட்சிகளையும் வேறு வேறு மனநிலையுடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பதற்றமான காட்சிகளில் கேமரா வேலை படத்திற்கு நல்ல பலம்.

ஜி வி பிரகாஷ் குமாரின் இசை படத்தின் உணர்ச்சிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. ஐயப்ப பக்தி பாடல்கள் கதையுடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளன. பின்னணி இசை தந்தை மகள் பாசம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேவையான தாக்கத்தை கொடுக்கிறது.

பிரவீன் புடியின் படத்தொகுப்பு முதல் பாதியில் அமைதியான குடும்ப சூழலில் இருந்து இரண்டாம் பாதியில் வேகமான திரில்லர் பகுதிக்கு படத்தை சரியாக கொண்டு செல்கிறது. தேவையான இடங்களில் வேகத்தை கூட்டி முக்கியமான திருப்பங்களை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் சிவா நிர்வாணாவின் மிகப்பெரிய பலம் எளிமையான கதையை உணர்ச்சியுடன் சொல்லியிருப்பதுதான். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பெற்றோர்கள் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதுடன் ஒரு தந்தையின் மகள் மீதான பாசத்தையும் இணைத்திருக்கிறார். முதல் பாதியில் படம் சற்று மெதுவாக நகர்ந்தாலும் கதாபாத்திரங்களையும் குடும்ப சூழலையும் அமைக்க அந்த பகுதி உதவுகிறது.

இரண்டாம் பாதியில் படம் வேகம் எடுக்கிறது. மாணவிகளுக்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணி மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸை நோக்கி வரும் திருப்பங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. சில விஷயங்கள் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக இருந்தாலும் தந்தை மகள் பாசம் மற்றும் ரவி தேஜாவின் நடிப்பு அந்த குறைகளை பெரிதாக தெரியாமல் செய்கிறது.

மது பழக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் உருவாக்கிக்கொள்ளும் தவறான புரிதல்கள் பற்றியும் படம் சில இடங்களில் பேசுகிறது. அதே நேரத்தில் பெண் குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் தவறுகளை பயப்படாமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறது.

மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ தந்தை மகள் பாசத்தை விரும்பும் குடும்ப ரசிகர்களுக்கு இருமுடி கட்டு ஒரு உணர்ச்சிப்பூர்வமான திரில்லர் அனுபவமாக இருக்கும்.

Categories
Reviews

‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்பட விமர்சனம்

‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்பட ரேட்டிங்:2.5/5

‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் காதலை ரசிக்கும்படி கொடுத்த இளன் இந்த படத்தில் திருமண வாழ்க்கையில் இருக்கும் சில சமூக பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

இளனும் சான்வி மேக்னாவும் காதலித்து இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே சான்வி மேக்னா மணக்கோலத்திலேயே மண்டபத்தை விட்டு ஓடி விடுகிறார். கணவன் வீட்டுக்கு சென்று வாழ விருப்பம் இல்லாமல் தனது பெற்றோரையும் வீட்டையும் விட்டு பிரிய முடியாது என்று கூறுகிறார். திருமணம் முடிந்த பிறகு பெண் மட்டும் ஏன் கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் கணவரும் மனைவி வீட்டில் வந்து வாழலாம் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளன் பின்னர் மனைவியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அவரது வீட்டிலேயே தங்குகிறார். வேலை இல்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் இளன் மாமியார் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் மரியாதை குறைவுகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கிய கதை.

படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளாலும் இளன் மற்றும் சான்வி மேக்னாவின் ஜோடி கெமிஸ்ட்ரியாலும் ரசிக்க வைக்கிறது. சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் எப்படி வேகமாக பரவுகிறது அதற்கு மக்கள் எப்படி விதவிதமாக கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். இளனின் துள்ளலான நடிப்பும் இந்த பகுதிக்கு பலம் சேர்க்கிறது.

இரண்டாம் பாதியில் திருமண வாழ்க்கை மற்றும் மாமியார் வீட்டில் வசிக்கும் மருமகனின் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகர்கிறது. பெண்கள் திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் சில சிக்கல்களை ஆண்கள் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்தை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாம். சில காட்சிகள் கருத்தை சொல்லாமல் வெறும் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது போல தெரிகிறது.

இளன் ஹீரோவாக நல்ல முயற்சி செய்திருக்கிறார். பொறுப்பில்லாத மகன் காதலன் மற்றும் மாமியார் வீட்டில் வசிக்கும் மருமகன் என வெவ்வேறு நிலைகளில் இயல்பாக நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் உணர்ச்சிகரமான சில காட்சிகளில் இன்னும் அனுபவம் தேவைப்படுவது தெரிகிறது.

சான்வி மேக்னா நாயகியாக நன்றாக நடித்திருக்கிறார். நவீன சிந்தனை கொண்ட பெண்ணாகவும் தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட பெண்ணாகவும் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராதிகா சரத்குமார் தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். எம் எஸ் பாஸ்கர் வழக்கம்போல தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். செந்தில் கீதா கைலாசம் இளங்கோ குமரவேல் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள். யோகி பாபு வரும் சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வண்ணமயமான காட்சிகள் மற்றும் அழகான கேமரா கோணங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் குறைந்த இடங்களிலேயே நடந்தாலும் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பு முதல் பாதியில் விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது.

படத்தின் முக்கியமான பலம் அதன் கதைக்கரு. திருமணத்திற்கு பிறகு பெண்கள் மட்டும் தங்கள் வீட்டையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சமூக நடைமுறையை கேள்வி கேட்பது நல்ல முயற்சி. கணவன் மனைவி இருவருக்கும் சம உரிமையும் சம பொறுப்பும் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் படம் முன்வைக்கிறது.

ஆனால் இந்த நல்ல கருத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. சமூக விமர்சனத்தையும் நகைச்சுவையையும் சரியான அளவில் கலந்து கொடுக்க முடியாதது படத்தின் பெரிய குறையாக தெரிகிறது. சில மீம்கள் மற்றும் சினிமா தொடர்பான காட்சிகள் செயற்கையாக சேர்க்கப்பட்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

மொத்தத்தில், ‘பியார் பிரேமா கல்யாணம்’ சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாகவும் இயல்பாகவும் சொல்லியிருந்தால் பியார் பிரேமா கல்யாணம் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

Categories
Cinema News

Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது.

Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது.

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் – காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். வான்கோ போஸ்டர் வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படத்தில் DC படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில் இளைய திலகம் பிரபு பேசியதாவது:

“ஃபிராங்க்ளின் தம்பி ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர். அவர் ஒரு அருமையான கதையைச் சொன்னார். இப்படியொரு வித்தியாசமான படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பான கலைஞர்கள். குறிப்பாக, புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர் ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து கலந்துகொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர் யுவனுக்கும், படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். ராகுல் ஒரு சிறப்பான திரைப்படத் தயாரிப்பாளர். ஒரு படத்தை உருவாக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. இந்தக் கதைக்கு ஏற்ற வகையில் என்னையும் இப்படத்தில் இணைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் சிறப்பாக உருவாகி, அனைவருக்கும் நல்ல அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகர் விஜய் வர்மா பேசியதாவது:

“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தப் படத்திற்காக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் பணிகள் பற்றி எனக்குத் தெரியும். கடந்த சில ஆண்டுகளாக இந்த ப்ராஜெக்ட் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். இப்போது இந்தப் படம் உருவாகும் நிலையில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் சிறப்பாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்தப் பயணத்தில் இணைத்துக்கொண்ட ஃபிராங்க்ளின் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது:

“ஃபிராங்க்ளின் என்னுடைய இணை இயக்குநர். இது இன்னொரு திரைப்படம் என்ற அளவில் மட்டும் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. இந்தப் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது.

குறிப்பாக, இளம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்களுக்கான தனித்துவமான கதைகளையும் புதிய களங்களையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தின் முயற்சி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். ‘டிசி’ படத்தில் பணியாற்றிய குழு அப்படியே இதிலும் பணியாற்றுகிறார்கள். ஃபிராங்க்ளின் ‘டிசி’ படத்திற்கு வசனம் எழுதினார். ‘வேட்டுவம்’ படத்திற்கும் எழுதியுள்ளார். ‘டிசி’ போல இந்தப் படமும் வெற்றி பெறட்டும். எனக்கு ‘ரைட்டர்’ படம் மிகவும் பிடிக்கும். ஃபிராங்க்ளினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இடம் உள்ளது. அது இப்படத்தின் மூலம் நடக்கும் என்று நம்புகிறேன்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இப்படத்தின் மிகப்பெரும் பலம். இளைய திலகம் பிரபு சார் போன்ற மிகப்பெரிய நடிகர் இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞருடன் புதிய தலைமுறை படைப்பாளிகள் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம். இந்தப் படம் சிறப்பாக உருவாகி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது:

“ராகுல் பிரதர் எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய வளர்ச்சியை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தப் புதிய முயற்சிக்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரபு சார், உங்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ‘ராக்கி’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது அப்போது நடக்கவில்லை. ஃபிராங்க்ளினுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு நல்ல திறமைசாலி. அவருடைய படைப்பில் ஒரு தனித்துவமான அணுகுமுறை இருக்கிறது. என்னுடைய முதல் படமும் ஃபிராங்க்ளினுடைய முதல் படமும் ஒரே நாளில் வெளியானவை. அதன்பிறகு நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அவருடைய கதைகள் எனக்குத் தெரியும்; என்னுடைய கதைகள் அவருக்குத் தெரியும். இந்தப் படத்தின் கதையும் எனக்குத் தெரியும். இது மிகவும் நல்ல கதை.

ஒரு நல்ல இயக்குநருக்கு படம் அமையாமல் இருப்பதை மிகப்பெரும் வன்முறையாகக் கருதுகிறேன். இப்போது அவருக்கு இந்தப் படம் அமைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக் கதையில் பிரபு சார் நடிக்கிறார் என்று சொன்னபோது, அது எனக்கு மிகவும் ஆச்சரியமான, எதிர்பாராத தேர்வாக இருந்தது. ஆனால் அந்தக் கூட்டணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை தனித்துவமானது. அவர் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். பிரபு சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட். நன்றி.”

இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் பேசியதாவது:

“முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வரவேற்பும் நன்றியும்.

ராகுல் என்னிடம் இந்த ப்ராஜெக்ட் குறித்து பேசியபோது, அவரிடம் நான் சொன்ன ஐடியா அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை நாமே செய்யலாம் என முடிவு செய்தோம். இப்போது அந்தப் படத்தை சிறப்பாக டேக்-ஆஃப் செய்திருக்கிறோம். இனி இதை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். பிரபு சாரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று ராகுல்தான் முதலில் சொன்னார். எனக்கும் அதில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

தமிழ் சினிமாவில் அவருக்கென்று இருக்கும் தனித்துவமான நடிப்பு பாணியை வைத்து, இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் அவரை இந்தப் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, அவர் மிகவும் ஆர்வமாகக் கேட்டு ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதை ரசித்து, ‘இந்தப் படம் பண்ணலாம்’ என்று சொன்னது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

இந்தக் கதையில் பிரபு சார் நடிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படத்தின் தொடக்க நிகழ்வுக்கு வந்து எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக பா. ரஞ்சித் அண்ணன், அருண் மாதேஸ்வரன் சார், நீங்கள் வந்ததற்கு மிக்க நன்றி. இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரின் ஆதரவுடனும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்குவோம். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது:

“இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவரும் என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர்கள். அவர்களைப் பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். இப்படத்தின் கதை மிகவும் சிறப்பானது. என்னுடைய நண்பரான இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்புடன் இணைந்து பணியாற்றுவதைவிட, இளைய திலகம் பிரபு அவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்படம் கண்டிப்பாக அவருக்குப் பிடித்தமான படமாக அமையும். அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.

படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Categories
Cinema News

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார்.

‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

ஃபேமிலி ரோம் காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு கலகலப்பான திரைக்கதையில் உருவாகிறது.

பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க வாழை படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோர் முக்கிய இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.

கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தின் பூஜை விழா உற்சாகமாக நடைபெற்றது. இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.