Categories
Cinema News

BIGG BOSS TAMIL SEASON 10 GRAND LAUNCH ON SEPTEMBER 6 FROM 6 PM ON JIOHOTSTAR AND STAR VIJAY, The milestone season arrives with ‘Carnivizha’, Vijay Sethupathi’s ‘Ottikichu’ music video and 24×7 streaming on JioHotstar.

https://www.instagram.com/reel/DcWCHN0x3hB/?igsi=cGptcmw0dWY1bHo1

BIGG BOSS TAMIL SEASON 10 GRAND LAUNCH ON SEPTEMBER 6 FROM 6 PM ON JIOHOTSTAR AND STAR VIJAY, The milestone season arrives with ‘Carnivizha’, Vijay Sethupathi’s ‘Ottikichu’ music video and 24×7 streaming on JioHotstar.

Oplus_131072

**Chennai, 24 August 2026:** The countdown to **Bigg Boss Tamil Season 10** has begun. The milestone season will have its **Grand Launch on September 6 from 6 PM onwards**, streaming on **JioHotstar** and airing simultaneously on **Star Vijay**. Audiences can also follow all the action inside the house with **24×7 streaming on JioHotstar**.

Building excitement for the tenth season, the recently released **‘Carnivizha’ promo featuring Vijay Sethupathi** has generated strong buzz across social media, setting the tone for a celebratory new chapter of Bigg Boss Tamil.

Taking the campaign forward, **JioHotstar and Star Vijay have now released ‘Ottikichu’**, a special music video featuring Vijay Sethupathi that reveals the much-awaited launch date and builds anticipation for the return of the reality phenomenon.

Adding a fresh dimension this year, **Bigg Boss Tamil Season 10 will feature a mix of celebrities and a select few commoners chosen through the Bigg Boss: The Common Man show**. *The Common Man* will conclude ahead of the Season 10 launch, with its selected winners expected to enter the Bigg Boss house alongside the celebrity contestants.

With **Vijay Sethupathi returning as host**, Season 10 promises a fresh mix of personalities, emotions, conflicts and entertainment as the franchise enters its landmark tenth season.

**Bigg Boss Tamil Season 10 Grand Launch streams on JioHotstar and airs on Star Vijay on September 6 from 6 PM onwards, with 24×7 streaming available on JioHotstar throughout the season.

About JioHotstar

JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

Categories
Cinema News

சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இது சரியான நேரம்..। “சொடக்கு” டைரக்டர் காமராஜ் மனோன்மணி !

சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இது சரியான நேரம்..। “சொடக்கு” டைரக்டர் காமராஜ் மனோன்மணி !!

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் #சொடக்கு!

காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் அதிரடி திரில்லர் படம் !

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும்
மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்‌ஷன்ஸ் கூட்டு முயற்சியில்,
அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்!

இதன் டைரக்டர் காமராஜ் மனோன்மணி கூறும் போது..

சினிமாவை வித்தியாசமாக செய்ய நினைக்கிறவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்த சமயத்தில் என்னுடைய ‘சொடக்கு’ படம் வருவது பெரிய பிளஸ். இது த்ரில்லர் படம்.
‘சொடக்கு’ டைட்டில் மாதிரியே தனி வித்தியாசம் காட்டும். எங்க படம் வீட்டுச் சாப்பாடு மாதிரி.
உடம்பை உற்சாகம் படுத்தும் . ருசிக்க ருசிக்க சுவை தரும்.

‘சொடக்கு’ போடுகிற நேரத்தில் ஒருவருடைய வாழ்க்கையே மாறும். அப்படி ஒரு நேரத்தில் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்னென்ன நடந்தது என்பதுதான் இந்தக் கதை. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அப்படி திருப்பிப் போடுகிற நிகழ்ச்சிகள் கொண்டு வந்து சேர்க்கிற சுவாரஸ்யங்களும், அதிரடி திருப்பங்களும் இதில் இருக்கும்.
இந்தக்கதை நமக்கு நெருக்கமாக இருக்கும் என்பது உண்மை. இன்னுமொரு விஷயமாக நாளை நடப்பது இன்றைக்கே நமக்குத் தெரிந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படுகிற மாற்றங்களும், குழப்பங்களும் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் கதையாக இருக்கிறது. இந்த திரைக்கதை ஒரு த்ரில்லர் குடும்பத்தோடு பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும்.

நட்டி, கதையை உள்வாங்கிக் கொண்டு அதில் தன் இயல்பையும் கொண்டு வந்து சேர்கிறார். உங்களிடம் நல்ல பிரசன்டேஷன் இருக்கிறது. நல்ல கதை இருந்தால் தயக்கமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் போன் செய்யுங்கள். பேசலாம். படமும் பண்ணலாம் என்றார். எனக்கு இயக்குநர்கள் லிங்குசாமியும், சரணும் நெருங்கிய நண்பர்கள். என் உயர்வில் சந்தோஷப்படுகிறவர்கள். அவர்களின் முயற்சியிலும் இந்த கூட்டணி அமைந்தது. கயல் ஆனந்தி , ரக்ஷிதா, அபிஷேக், டத்தோ கணேசன் என நல்ல கூட்டணி அமைந்தது.

படங்களுக்கு வசனம் எழுதாத இயக்குநர் சரண் எனக்காக வசனத்தை எழுதினார்.

சொல்லில் வருவது பாதி என்பார்கள். அது மாதிரி டைரக்டர் சொல்வதை ஒரு மாதிரி புரிந்து கொண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒரு மாதிரி எடுப்பதெல்லாம் இங்கே நடக்கும். அப்படி எதுவும் இல்லாமல் அப்படியே நான் நினைப்பதை எடுத்தார் ஒளிப்பதிவாளர் உதயகுமார். இவர் ‘குரங்கு பொம்மை’யில் வித்தை காட்டியவர்.
இப்படத்தின் மியூசிக் டைரக்டர் அபிஷேக்.
உயிரையும், உணர்வையும் உறுத்துகிற விதத்தில் பாடல்களும், பின்னணியையும் செய்து கொடுத்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் படித்த மாணவர் இவர்.
மலேஷியாவில் தான் கதை முழுக்கவும் நடக்கிறது. அதன் அழகையும் படம் பிடித்து இருக்கிறோம். படம் மொத்தமும் மலேசியாவில் படமானதற்கும் தயாரிப்பாளர்கள் முத்துக்குமார், தேவா அர்ஜுன், டத்தோ கணேசன் ஆறுமுகமும் உதவினார்கள்.

சினிமாவை படிக்க முடியாது. ஆனால் உணர முடியும் என்று ‘குயின் டிரான்சநாண்டோ’ சொன்னார். அதை நானும் உணர்ந்தவன். ஒரு நல்ல த்ரில்லருக்காகவும், ஒரு நல்ல கமர்ஷியலுக்காகவும் ‘சொடக்கு’ படத்தை பார்க்க வந்தால் அது வீண் போகாது. உரிய அழகியல் மதிப்போடு இன்றைய இளைஞர்களைக் குறிவைத்து உழைப்பை விதைக்கிறோம். நிச்சயம் அறுவடை செய்வோம்.

Editing: G.Ramarao,
DOP: N.S.Uthayakumar (குரங்கு பொம்மை),
Stunt: ‘Vin’ Veera,
Executive Producer: K.S.Mayilvaganan

Music: Abhishek.A.R Introdection ( குறும்படங்களுக்கான இசையமைப்பு போட்டியில் தேசிய விருது பெற்றவர் ).

Presents: Masterpiece

Production: Deva Entertainments & Jubilee Film Productions
PRO: Johnson

Produced By: Muthukumar, Devha Arjhun &
Dato Ganesan Arumugam

Title: “SODAKU”

Dialogue: Director Saran,
Story,Screenplay & Direction: Kamaraj Manonmani.

Categories
Cinema News

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.

*200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்*

மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.

குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!

சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது அவரது நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு வகைத் திரைப்படங்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரையுலகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.

“விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.

“வாத்தி”, “லக்கி பாஸ்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி , மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்கு தேவையான அம்சங்களுடன் இப்படத்தைத் தந்து அசத்தியுள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

ரூ.200 கோடியை கடந்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம்: வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள்: சூர்யதேவரா நாக வம்சி & சாய் சௌஜன்யா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி
படத்தொகுப்பு: நவீன் நூலி
கலை இயக்கம்: பங்களன்
நிர்வாக தயாரிப்பாளர்: யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
சண்டை பயிற்சி: V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள்: சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

Categories
Cinema News

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

*திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல்களை சுவாரசியமாக சொல்லும் திரைப்படம்*

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார்.

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், “90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; கிரியேட்டிவ் இயக்குநர்: ராப்ஸ் பிரசாத்; பப்ளிசிட்டி டிசைனர்: ரமேஷ் செந்தில், பிரவீண்; ஸ்டில்ஸ்: சந்தோஷ்.

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

***

*‘Middle Class Mappillai’ (MCM): A film about challenges faced by 90s kids in finding a suitable bride*

*Made on Aanshva Productions banner, the film is written, directed and headlined by Prabhu Ekambaram*

IT professional Prabhu Ekambaram is turning his passion for filmmaking into reality with ‘Middle Class Mappillai’ (MCM), a feature film he wrote, directed, and stars in under the banner of Aanshva Productions.

Backed by Aanshva Productions, the film features Haripriya as the female lead, while Sheeba Christy, Aroul D. Shankar and Elizabeth play important roles.

Speaking about ‘Middle Class Mappillai’, director Prabhu Ekambaram said, “The film will present in an entertaining manner the struggles faced by 90s kids, particularly the difficulties they encounter in finding a suitable bride. We are making the film in a way that realistically reflects the lives and experiences of middle-class families.”

Rashaanth Arwin has composed the music for ‘Middle Class Mappillai’, with Abishek handling the cinematography. The film has editing by Suriya Murugan and lyrics by VJP Raghupathi.

The direction team comprises Srujith, Naveen and Jaisankar. Nikil Murukan is the Publicist, while Raps Prasaath is the Creative Director. Publicity designs are by Ramesh Senthil and Praveen, with still photography by Santhosh.

Made on Aanshva Productions banner and written, directed and headlined by Prabhu Ekambaram, ‘Middle Class Mappillai’ has completed its shooting. Post-production work is currently progressing at a brisk pace, and the team is planning to release the film soon.

Categories
Uncategorized

FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future.

FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future.

*Avichi College of Arts and Science to Host the First Edition of its Five-Year International Conclave Series*

*Chennai, August 2026: Avichi College of Arts and Science, Chennai, is set to host FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future on 21 August 2026, marking the launch of its Five-Year International Conclave Series focused on FinTech, digital innovation and trusted financial ecosystems.*

The event is being organised with the support and encouragement of our respected Secretary, Mr. A. V. M. K. Shanmugam, and will commence with the Welcome Address by our Principal, Dr. N. Bhuma.

The conclave is envisioned by its Conclave Directors, Mr. Balasubramaniam M, GCC Leader, CEO, Board Member, Investor, StratInfinity – AI First GCC Enabler, and Mr. Ramkumar N, Director, ITWare LLC, Dubai and Professor of Practice, Avichi College of Arts & Science.

The Inaugural Session will be graced by Amb. T. S. Tirumurti, Professor, IIT Madras; Former Ambassador of India to the United Nations, New York; and Former Secretary to the Government of India, as the Guest of Honour, along with the Conclave Director’s Address by Mr. Balasubramaniam M.

The conclave will feature a series of keynote addresses, expert panels and interactive sessions. Mr. Mahesh Ramachandran will deliver the Keynote Address on “The Confluence of AI + FinTech – From Digital Finance to Intelligent Finance,” followed by Mr. Lenin Velu, who will deliver a Keynote Address on “Trust First.”

The Expert Panel – “Future of Banking Beyond Branches” will be moderated by Mr. Jubran Siddique, TEDx Speaker, United Nations, and CEO & Founder, Zaryah Angels Pvt. Ltd., with panellists Mr. Vetrivelan AB, Partner, Big 4; Mr. Gobinath Padmanadhan, Founder & CEO, Yosaney Fintech Pvt. Ltd.; and Mr. Srinivas Lingam, CEO, Centrico.

An Expert Address on “From Job Seekers to FinTech Innovators: Building Startups in the Age of AI” will be delivered by Mr. Ghanshyam Ahuja, Group CEO, VC VSaas Global.

A Fireside Conversation titled “The New SUNAMY of AI – Age of Innovative Quantum Computing Era” will feature Mr. Kannappan Chetiar, Founder, Sunamy.AI, in conversation with Mr. Ramkumar N.

The Expert Panel – “AI & FinTech – The Autonomous Finance Era” will be moderated by Ms. Sangeetha B, Founder & CEO, ThinkInfinity, with panellists Mr. Nathan, CISO, Equitas Bank; Mr. Avinash Karn, Senior Director – AI, PayPal; Mr. Sathyanarayanan Chandrasekaran, CISO, Sundaram Home Finance Ltd.; and Mr. Venugopal, CISO, Cholamandalam.

The Future Leaders Fireside Chat will feature Mr. Vijay, Founder, GoldPE.AI, moderated by Ms. Shangamithra, III B.Sc.

A TEDx-style Session on “Unified Platform from India to the World – Reimagining the $1.3 Trillion Global Money Movement Economy” will be delivered by Mr. Uthayashankar, CTO, Finaara.

The Expert Panel – “Digital Public Infrastructure – India’s Secret Weapon” will feature Ms. Shakila Banu, AGM, RBI; Mr. Balasubramiam, DPO, TMB; and Mr. Ayyappan, Partner, Big 4, with Mr. Ramkumar, StratInfinity, as moderator.

The conclave culminated with a Valedictory Ceremony, graced by Mr. Srikanth V, CEO, ICT Academy, as the Chief Guest. The ceremony featured an insightful Chief Guest Address, the Conclave Summary by the Conclave Director, Mr. Ramkumar, and the Closing Remarks by the Secretary, Mr. AVM K. Shanmugam.

The conclave will provide students with valuable exposure to emerging opportunities in FinTech, Artificial Intelligence, Data Science, Banking, Cybersecurity and Digital Entrepreneurship, while creating meaningful interaction between academia and industry.

As the first edition of a five-year journey, FINTECH 2030 seeks to inspire the next generation to Learn • Connect • Innovate • Collaborate and contribute to India’s vision of a secure, inclusive and trusted digital financial future.

FINTECH 2030 – Where Banking, Technology, Innovation, Entrepreneurship and Talent converge.

Categories
Cinema News Videos

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,

“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.

அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.

ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”

நடிகை கலா பேசியதாவது..,

“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,

“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம், இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகை சோனா பேசியதாவது..,

“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,

“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.
இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.

இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,

“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.
இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.

இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.

இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”

நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,

“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.

நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,

“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.

என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.

அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”
இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.
அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Categories
Cinema News

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு.

இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப் பேசப்பட்டது.

அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில்
பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.

கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.இந்தப் பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.

இப்படத்தின் கதை திரைக்கதை ஒரு பக்கம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதில் பங்களித்துள்ள நடிப்புக் கலைஞர்களின் பாத்திரச் சித்தரிப்புகளும் பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும்.
பிக் பாஸ் புகழ் சித்து இதில் ஒரு புதிய பரிமாணத்தில் முகம் காட்டியிருக்கிறார்.கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் இவர் வருகிறார். அவருக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷிகா இதில் சித்துவின் மனைவியாக ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மற்றொரு பிக்பாஸ் முகமாகி இன்று பிரபல நடிகையாக இருக்கும் ரித்விகா இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.அவர் நடித்துள்ள பாத்திரம் யாரும் எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும்.

நிழல்கள் ரவி ,வேல ராமமூர்த்தி போன்ற அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை தொடரும் சஸ்பென்சையும் விறுவிறுப்பையும் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.
இது ரசிகர்களுக்கு ஒரு நல்லதொரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.

படத்தின் தரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கியதால் பொறுமையாகப் படத்தைச் செதுக்கி செதுக்கி முழுமையான செய்தொழில் நேர்த்தியுடன் உருவாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.

படத்தைப் பார்த்த திரை உலகப் பிரமுகர்கள் அனைவருமே இது ஒரு நம்பிக்கைக்குரிய படமாக மாறி இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள்.

இந்தப் படம் முன்பே வெளியாகியிருக்க வேண்டியது. ‘ஜனநாயகன்’ வெளிவந்ததால் வெளியீட்டுத்தேதி மாற்றி வைக்கப்பட்டது. எனவே வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வெளிவர இருக்கிறது.

ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்.

Categories
Cinema News

”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!

Sumithra Devi — From Kannagi to Keerthi

Before the camera found her, Sumithra found acting on a school stage—playing Kannagi, a character whose fire, dignity and emotional strength gave her an early taste of performance.

A Visual Communication graduate from Vaishnav College, Chromepet, Sumithra brings a visual sensibility to her craft. Her training in classical dance has given her an instinctive command over movement, expression and body language. She is also widely admired within her circles for her dancing skills, with dance being one of the talents that has consistently earned her appreciation.

In Motha Raathiri, she steps into the role of Keerthi, bringing to the character a combination of natural charm and quiet confidence. Her dusky beauty gives her a distinctive screen presence—an earthy, contemporary appeal that doesn’t need excessive styling to make an impression. There is a warmth to her complexion and an understated elegance that may remind audiences of the natural screen appeal of Nandita Das and Aishwarya Rajesh. Like them, Sumithra carries her dusky beauty with authenticity, while retaining a distinct identity of her own.

But what truly sets Sumithra apart is her Tamil diction. Her pronunciation is crisp, natural and beautifully rooted, allowing even simple lines to carry personality. There is an effortless ease in the way she speaks Tamil—an increasingly rare quality on screen.

Sumithra is a great admirer of Vijay both as an actor and as a performer. His screen presence, discipline and ability to connect with audiences have made a strong impression on her and truly believes that he is a great inspiration to all the youngsters of this land.

She also looks up to Tamannaah Bhatia’s dancing, while her own classical dance background continues to influence the way she approaches performance.

Sumithra is particularly grateful to Mythri Movie Makers for creating a platform where so many new faces have been given an opportunity to be part of a single film. She believes that giving fresh talent such a significant opportunity is both encouraging and exciting, and feels fortunate to have begun her cinematic journey with Motha Raathiri.

From a schoolgirl performing Kannagi to Keerthi in Motha Raathiri, Sumithra’s journey is only beginning. With her dusky elegance, expressive face, classical dance skills and particularly strong Tamil diction, she has all the qualities to emerge as one of the film’s most noticeable discoveries.

Motha Raathiri is directed by Raja Karuppasamy and produced by Mythri Movie Makers, with Sumithra Devi L. playing an important role in the ensemble cast.

”இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!

தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின்மீது ஆர்வம் கொண்டர் சுமித்ரா. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரம் ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரதநாட்டியத்தில் தேர்ந்தவர். இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது.

’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா, நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது. அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக்கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது. அதேபோல, சுமித்ராவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பேசும் எளிய வசனங்கள்கூட அவரை தனித்து காட்டுகிறது.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை தான் என்கிறார் சுமித்ரா. விஜய்யின் திரை வசீகரம், ஒழுக்கம் மற்றும் ரசிகர்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு விஜய் மிகப்பெரிய உத்வேகம் என்கிறார். அதேபோல், நடிகை தமன்னா பாட்டியாவின் நடனத்தையும் அவர் மிகவும் ரசிக்கிறார்.

ஒரே திரைப்படத்தில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கி, உற்சாகமளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சுமித்ரா நன்றி தெரிவித்துள்ளார். ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியிருப்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார்.

பள்ளி மாணவியாக கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் கீர்த்தியாக சுமித்ராவின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அவரது மாநிற அழகு, முகபாவனைகள், நடனத் திறமை மற்றும்தமிழ் உச்சரிப்பு போன்றவை தமிழ் திரைத்துறைக்கு மற்றுமொரு திறமையான நடிகை கிடைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறது.

‘மொத ராத்திரி’ திரைப்படத்தை ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில், சுமித்ரா தேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Categories
Cinema News

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

*பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் உருவாக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் திரைப்படம் “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று பான் இந்தியா வெளியீடு !!*

மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து  இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான “மஹாவீர் கர்ணா” படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ராட்சசன் மற்றும் கில்லாடி உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.

ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் படைக்கிறார். “மஹாவீர் கர்ணா” மூலம், லைவ்-ஆக்ஷன் வடிவத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும், நவீன விஷுவல் எஃபெக்ட்ஸின் எல்லையற்ற சாத்தியங்களையும் ஒன்றிணைக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் முறையை அவர் பரிசோதிக்கிறார்.

கர்ணனை படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இந்த முயற்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. கர்ணனின் கதை வெறும் புகழைத் தேடும் ஒரு வீரனின் கதை மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்கை அனைத்திற்கும் மேலாகக் கருதிய ஒரு மனிதனின் கதை. குந்திக்கு பிறந்தாலும், அரச குடும்ப அங்கீகாரத்திலிருந்து விலகி வளர்ந்த கர்ணன், நிராகரிப்பு, அடையாளம் மற்றும் விதி ஆகியவற்றுடன் தனது வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். இருந்தாலும், தான் தேர்ந்தெடுத்த மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது.

தான் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக எந்த விளைவையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்த கர்ணனின் உறுதியும், அவரது புகழ்பெற்ற கொடைத்தன்மையும், அவரது குணத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. தன் வார்த்தையை மீறுவதைவிட அதன் விளைவுகளை எதிர்கொள்வதையே விரும்பியவர் கர்ணன். இந்த சமரசமற்ற குணமே, மகாபாரதத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதாபாத்திரங்களில் ஒருவராக கர்ணனை மாற்றுகிறது. இதுவே “மஹாவீர் கர்ணா” படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக அமைந்துள்ளது.

படத்தின் டீசர், கர்ணனின் இந்த முக்கியமான குணத்தை உடனடியாக பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. வீரர்கள், ராஜ்ஜியங்கள், ஆயுதங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும் விஷயம், தான் கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கும் ஒரு மனிதனின் இருப்புதான்.

கர்ணனை வெறும் புராணக் கதாபாத்திரமாகவோ அல்லது பிரம்மாண்டமான புராண திரைப்படமாகவோ அணுகாமல், கௌரவம், விசுவாசம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை டீசரின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.

இந்த ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் அணுகுமுறை, பிரம்மாண்டம், காட்சியமைப்பு மற்றும் சினிமா உலக உருவாக்கம் ஆகியவற்றில் இயக்குநர் ரமேஷ் வர்மா புதிய முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை அரிதாக முயற்சிக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை, படத்தின் காட்சியனுபவத்தை மேலும் பிரம்மாண்டமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பக் குழுவில், முன்னணி கிரியேட்டர் ராம்ஜி டாட் ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீமணி வசன எழுத்தாளராகவும், ஞானி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இதுவரையிலான படைப்புகளில் மிகவும் பிரம்மாண்டமான முயற்சியாக உருவாகி வரும் “மஹாவீர் கர்ணா”, இந்தியாவின் மிகச்சிறந்த காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனை புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக மாற்றும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.

இப்படம் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் பான் இந்தியா திரையரங்க வெளியீடாக வெளியாகிறது.

*தொழில்நுட்பக் குழு*

இயக்கம்: ரமேஷ் வர்மா
வசனம்: ஸ்ரீமணி
இசை: ஞானி
ஒளிப்பதிவு: ராம்ஜி டாட் (ஹைப்ரிட் கிரியேட்டர்)
படத்தொகுப்பு: பிரவீன் புடி
கலை இயக்கம்: காந்தி நாடுகுடிகர்
தயாரிப்பு நிறுவனங்கள்: பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ்

*Pen Movies, Sri Neeladri Productions and RV Studios Join Hands with Blockbuster Director Ramesh Varma for Hybrid Live-Action Film “Mahaveer Karna”; Pan India Release on Dec 4th, 2026*

The prestigious banners Pen Movies and Sri Neeladri Productions, in association with RV Studios, proudly present Mahaveer Karna, an Epic Hybrid Live-Action Film that promises to take Indian cinema into an extraordinary new visual territory. The film is presented by Jayantilal Gada. At the helm of this ambitious project is blockbuster director Ramesh Varma, the filmmaker known for commercially successful and genre-driven films such as Rakshasudu and Khiladi.

Having explored action, thriller and commercial cinema, Ramesh Varma is now venturing into an entirely new space with the timeless story of Karna from the Mahabharata. With Mahaveer Karna, the filmmaker is experimenting with a hybrid live-action format that brings together the emotional power of live performance and the limitless possibilities of advanced visual effects.

What makes this experiment particularly exciting is the choice of Karna as its emotional centre. Karna’s story is not simply that of a warrior seeking glory; it is the story of a man for whom his word stood above everything else. Born to Kunti but raised away from royal recognition, Karna spends his life confronting rejection, identity and fate, yet remains fiercely loyal to the people and principles he chooses.

His commitment to his promises and his legendary generosity reveal a man who would rather face the consequences of his word than break it. This uncompromising quality makes Karna one of the most fascinating and tragic figures in the Mahabharata, and it is this powerful dimension that gives Mahaveer Karna its emotional foundation.

The teaser makes this defining quality of Karna immediately felt. Beyond the grandeur of warriors, kingdoms, weapons and spectacular imagery, what stays with the viewer is the presence of a man who stands firmly by his promise. The visual treatment suggests that the makers are not approaching Karna merely as a mythological spectacle, but as a deeply human epic about honour, loyalty, friendship, betrayal, destiny and the price of keeping one’s word.

The hybrid live-action approach further amplifies this vision, giving Ramesh Varma the opportunity to experiment with scale, imagery and cinematic world-building in a manner rarely attempted in Indian cinema. The creative and technical team includes Hybrid Creator Ramji Dott as DOP, Prawin Pudi as editor, lyricist Shreemani as dialogue writer and Gyaani as music director.

Director Ramesh Varma’s most ambitious experiment yet has the potential to transform one of India’s greatest epic characters into a spectacular cinematic experience for a new generation. The film will have a grand Pan India release on December 4th, 2026.

*Technical crew*

Director: Ramesh Varma
VFX
Dialogues: Shreemani
Music: Gyaani
DOP: Ramji Dott (Hybrid Creator)
Editor: Prawin Pudi
Production Designer: Gandhi Nadikudikar
Banners: Pen Studios, Sri Neeladri Productions, RV Studios

Categories
Cinema News

பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani.

பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani.

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு…! ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது

ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி’- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் – நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், ஏனைய 15 மொழிகளில் உரையாடல் குறிப்புகளுடன் ( Subtitles) ஒளிபரப்பாகும் இந்த இணைய தொடர்… இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

இந்த இணையத் தொடரின் முதல் பாகமான வதந்தி,: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ – Vadhandhi: The Fable of Velonie – சஸ்பென்ஸ் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட தொடர் வகைகளில் தனக்கென பிரத்யேகமான இடத்தை பிடித்திருந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக புதிய வழக்கு- எம். சசிகுமார் தலைமையிலான புதிய நடிகர்கள் குழு- இந்த தொடருக்கே உரித்தான ஆழமான… கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை சொல்லல் பாணி- என பல அம்சங்களுடன் இரண்டாம் பாகம் உருவானது.

கலாச்சார சிறப்புமிக்க மதுரையை பின்னணியாகக் கொண்ட இக்கதை… பாரம்பரியம்- புலனாய்வு -ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பான ஆற்றல்- ஆகியவற்றை தனித்தன்மையுடன் இணைக்கிறது.

‘வதந்திக்கும், உண்மைக்கும் இடையிலான முரண் ‘ என்ற இத்தொடரின் மையக் கருப்பொருளை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உருவான இரண்டாம் பாகம் பார்வையாளர்களை ஒரு விறுவிறுப்பான மர்ம உலகத்திற்குள் ஈர்க்கிறது. இதற்கு விரிவான விசாலமான கதை சொல்லல்- சிக்கலான கதாபாத்திரங்கள்- உணர்ச்சி பூர்வமான உறவுகள்- ஆகியவை சிறப்பம்சங்களாக அமைகின்றன.

இந்த இணையத் தொடரில் சசிகுமார் நேர்மையான மற்றும் தளராத நம்பிக்கை கொண்ட காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ராசாவாக நடித்துள்ளார். உண்மையைக் கண்டறிய அவர் மேற்கொள்ளும் முயற்சியானது… அரசியல் மற்றும் ஊடகங்களின் பரப்பரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதுகிறது.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தொடக்கத்தின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் விசாரணை எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது. இது அவரை ‘மணி’ என்ற பிடிப்படாத கைதியை நோக்கி பயணப்பட வைக்கிறது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்தத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ( Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில் படைப்பாளிகள் புஷ்கர் – காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் புரொடியூசர்களாக இருந்து தயாரித்துள்ளனர். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் எம். சசிகுமார், முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

உலகெங்கிலும் ஒளிபரப்பாகும் இந்தி, ஆங்கிலம், கொரிய மொழி உள்ளிட்ட பல முன்னணி தொடர்களை பின்னுக்குத் தள்ளி, சசிகுமாரின் ‘வதந்தி : சீசன் 2 தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடர் – சாதனை படைத்துள்ள தமிழ் தொடர் என்பதும், பிரைம் வீடியோவின் உலகளாவிய டாப் 10 தரவரிசையில் ‘ஒரிஜினல் சீரிஸ்’ என்ற வகையில் ஆறாவது இடத்தையும், ஆங்கிலம் அல்லாத இணைய தொடர் வகையில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

*From Madurai to the World: Vadhandhi: The Mystery of Mani Climbs to No. 2 Non-English Series Worldwide on Prime Video*

Within two weeks into its global premiere on August 7, Tamil Original suspense thriller series Vadhandhi: The Mystery of Mani has climbed to No. 2 among Non-English series worldwide on Prime Video, while also emerging as the No. 1 Scripted title globally. The milestone marks a strong outing for season two of the acclaimed franchise, which returned with an entirely new mystery, cast, and setting while staying true to the series’ essence. Streaming in Tamil with dubs in Telugu and Hindi, and subtitles in 15 languages, the series has found audiences across India and in over 240 countries and territories worldwide.

The first season, Vadhandhi: The Fable of Velonie, carved out a distinct space in the suspense-crime drama genre; season two builds on that legacy with a fresh case, a new lead in M. Sasikumar, and the same layered, character-driven storytelling that defines the franchise.

Set against the culturally rich backdrop of Madurai, the narrative seamlessly intertwines tradition and investigation with the raw energy and essence of the iconic Jallikattu festival. Staying true to the franchise’s core themes of rumor against reality, season 2 draws audiences into a gripping mystery through layered storytelling, complex characters, and emotionally charged relationships. The season introduces Sasikumar as SI Moosa Raza, an honest, relentless police officer whose pursuit of the truth collides with politics, media frenzy, and human frailty. When skeletal remains are unearthed during the inauguration of a highway project, the investigation takes unexpected turns, leading him to an elusive prisoner named Mani.

Created, written, and directed by Andrew Louis, produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, the eight-episode series stars M. Sasikumar in the lead as SI Moosa Raza, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles.

Link: https://www.instagram.com/p/DcQqndyHWLg/?img_index=1