‘அமரம்’ திரைப்பட விமர்சனம்
Cast: Rajan Tejaswar, Aira Agarwal, George, Sai Dheena, Nagineedu, Kalki Rajan, Harish Peradi, Vasudevan Murali.
Technical Crew: Written & Directed by Thiru Arul Krishna | Music – Mickey J. Meyer | Cinematography – Bharath Kumar | Editing – R. Sriramar | Art – Janarthanan | Stunts – Miracle Michael.
Produced by: C. R. Rajan | Released by: Trident Arts Ravindran | PRO: Sathish Kumar, Bhuvan Selvaraj.
https://youtu.be/ZHdBCLFw4PM?si=nMVlEGK2EyY3oFRJ
‘அமரம்’ கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கிறது. சிறுவயதில் தனது கண் முன்னால் நடந்த கொடூரமான சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்படும் அருகன் பணத்திற்காக உயிர்களை பறிக்கும் கூலிப்படை கொலையாளியாக மாறுகிறார். ஒரு அரசியல்வாதியை கொலை செய்யும் பணியை செய்து முடித்த பிறகு அந்த அரசியல்வாதியின் மகள் ஷர்மிளா பாரதி பழிவாங்கும் நோக்கத்துடன் அருகனை தேடி செல்கிறார். ஆனால் எதிர்பாராத சூழலில் அருகனே ஷர்மிளாவை காப்பாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. அதன் பிறகு இருவரும் உண்மையான எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் பயணம்தான் படத்தின் கதை.
அருகன் கதாபாத்திரத்தில் ராஜன் தேஜஸ்வர் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிகமான வசனங்கள் இல்லாமல் தனது பார்வை உடல்மொழி மற்றும் ஆக்சன் காட்சிகள் மூலம் கதாபாத்திரத்தின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவரது உழைப்பு நன்றாக தெரிகிறது. ஐரா அகர்வாலும் பழிவாங்கும் கோபம் மற்றும் பின்னர் ஏற்படும் மனமாற்றத்தை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
ஜார்ஜ் மரியான் சாய் தீனா நாகிநீடு ஹரிஷ் பெராடி கல்கி ராஜன் மற்றும் வாசுதேவன் முரளி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர். அதே நேரத்தில் சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்ற குறையும் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பரத் குமார் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வறண்ட நிலப்பரப்பையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை சூழலையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளும் குறிப்பாக சண்டைக்காட்சிகளும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை படத்தின் பதற்றத்தையும் ஆக்சன் காட்சிகளின் வேகத்தையும் அதிகரிக்கிறது.
இயக்குநர் திருவருள் கிருஷ்ணா படத்தின் முதல் பாதியில் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். அதிகார வர்க்கம் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் விதத்தை கதையுடன் இணைத்திருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. கிழக்கு தொடர்ச்சி மலை மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஒரு பின்னணியை எடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது.
முதல் பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் ஆக்சன் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரசியமாக கொண்டு செல்கின்றன. குறிப்பாக தன்னை கொல்ல வந்த பெண்ணையே அருகன் காப்பாற்றும் சூழல் உருவாகும் இடம் படத்தின் சிறப்பான திருப்பமாக அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை வேகம் குறைகிறது. வழக்கமான பழிவாங்கும் காட்சிகள் அதிகமாக நீளுவதால் விறுவிறுப்பு சற்று குறைகிறது என்ற குறையும் இருக்கிறது.
மொத்தத்தில், ‘அமரம்’ ஆக்சன் காட்சிகள் வித்தியாசமான கதைக்களம் மற்றும் ராஜன் தேஜஸ்வர் ஐரா அகர்வால் ஆகியோரின் நடிப்பு காரணமாக அமரம் வித்தியாசமான கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.























