Categories
Cinema News

முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நன்றி…

முதல்வர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நன்றி…


மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு 2.50 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த செய்தித்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும் இயக்குநர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

இது “ஒரு படைப்பாளிக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய கவுரவம்“

– ஆர் .வி.உதயகுமார் .

Categories
Cinema News

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாள் அன்று நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாள் அன்று நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு

*’ஒரண்ட’ படக்குழுவினருடன் பிரியாணி விருந்தோடு பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் சுசி கணேசன்*

தனது அடுத்த படைப்பின் பெயர் ‘ஒரண்ட’ என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான்று ( ஆகஸ்ட் 25) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில சமயங்களில் வித்தியாசமாக அமைந்து விடும். அந்த வகையில், இத்தனை படங்களில் ‘ஒரண்ட’ மட்டுமே என் பிறந்தநாளில் முடிந்திருக்கிறது. அதுவும் இரட்டை கொண்டாட்டமாக பிறந்தநாளோடு சேர்த்து படப்பிடிப்பின் நிறைவு நாளையும் படக்குழுவினரோடு கொண்டாடியது நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்,” என்றார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் ‘ஒரண்ட’ படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் ரகசியமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக சமீபத்தில் மாற்றினார் இயக்குநர் சுசி கணேசன்.

கதை குறித்தோ, கதாபாத்திரங்கள் குறித்தோ எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில், அன்றாட பேச்சுவழக்கில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

*Director Susi Ganeshan’s ‘Orenda’ shoot wraps up on his birthday*

*Director Susi Ganeshan celebrates birthday with biriyani feast alongside ‘Orenda’ film crew*

Director Susi Ganeshan, who recently announced the title of his next venture as ‘Orenda’, has now revealed the film’s shooting wrapped up on his birthday (August 25).

Speaking about this, he said, “Birthday celebrations of film celebrities sometimes turn out to be unique. In that way, among all my films, only ‘Orenda’ has wrapped up on my birthday. Celebrating both my birthday and the final day of shooting together as a double celebration with the crew will remain memorable for a long time.”

It is noteworthy that the details of the actors, actresses, and technicians of ‘Orenda’, which has been produced on a grand budget, are still being kept secret.

Without revealing any details such as who the cast and crew are, when the first look will be released, or when the teaser will drop, Director Susi Ganesan recently made his next film a topic of discussion among Tamils worldwide solely through the title ‘Orenda’.

With no information disclosed about the story or characters, turning a local slang word commonly used in everyday speech into a film title created immense curiosity and expectation among fans.

Categories
Cinema News

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர்வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் படத்தின் மையக்கருவான தந்தை – மகன் உறவு குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. தனது இயல்பான நடிப்பாலும், நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பிரகாஷ் ராஜ், ‘ஃபாதர்’ டீசரிலும் தனது திரை இருப்பால் கவனம் ஈர்த்துள்ளார். அவரது பார்வை, முகபாவனைகள் மற்றும் நடிப்பில் வெளிப்படும் உணர்வுகள் படத்தின் மைய உணர்வுக்கு முக்கியத்துவம் சேர்ப்பதாக அமைந்துள்ளன. மேலும், பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா இருவருக்கும் இடையேயான திரை உறவு குறித்தும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘ஃபாதர்’ படத்தின் மையத்தில் இருப்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய தந்தை – மகன் உறவு. ஒரு தந்தை தனது அன்பை எப்போதும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. பொறுப்பு, கண்டிப்பு, தியாகம், பாதுகாப்பு என குடும்பத்திற்காக அவர் அமைதியாகச் செய்யும் எண்ணற்ற செயல்களிலேயே அந்த அன்பு வெளிப்படும். அதே நேரத்தில், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு மகன் தனது தந்தையை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். இந்த இருவருக்கும் இடையே அன்பு, புரிதலின்மை, எதிர்பார்ப்புகள், கருத்து வேறுபாடுகள் என பல உணர்வுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி ஆழமான பாசப்பிணைப்பு இருக்கும். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே ‘ஃபாதர்’ திரைப்படம் ஆராய்கிறது.

குடும்பம், உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு மனதைத் தொடும் திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொழி, நாடு, கலாச்சாரம் என எல்லைகளைக் கடந்தும் பெற்றோர் – பிள்ளைகள் இடையேயான உறவு அனைவராலும் உணரக்கூடியது என்பதால், இப்படத்தின் கதைக்கரு பொதுவான ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘ஃபாதர்’ குறித்து R. சந்துரு

“‘ஃபாதர்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை கேட்ட அந்த நொடியிலேயே, இதன் மைய உணர்வு ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புபடுத்தக்கூடியது என்று உணர்ந்தேன். தந்தை – மகன் உறவு மிகவும் தனித்துவமானது. அவர்களுக்குள் அன்பு, எதிர்பார்ப்புகள், புரிதலின்மை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்களை இணைப்பது ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு. இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த உணர்வுகள் அணுகப்பட்ட விதம்தான். ‘ஃபாதர்’ ஒரு உறவைப் பற்றி மட்டுமே பேசவில்லை. குடும்பம், அன்பு, பொறுப்பு, தியாகம் மற்றும் பல நேரங்களில் சொல்லப்படாமல் போகும் உணர்வுகளைப் பற்றியும் பேசுகிறது.

இந்தக் கதை மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்பினேன். மிகுந்த நேர்மையுடனும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். முழுத் திரைப்படம் அவர்களுக்கு இன்னும் ஆழமான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறேன்.

டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தை மிகுந்த நேர்மையுடன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் சார் ஒரு அசாத்தியமான நடிகர். அவரது இருப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்திற்கு மிகப்பெரிய ஆழத்தை சேர்த்துள்ளது. இருவரின் கூட்டணி இப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது இறுதியில் உணர்வுகளைப் பற்றியது. ஒரு கதை பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் உணர வைத்தால், அது அவர்களுடன் நீண்ட காலம் பயணிக்கும். ‘ஃபாதர்’ படத்திலும் அந்த பலத்தை நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘ஃபாதர்’ குறித்து இயக்குனர் ராஜ்மோகன்

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன், ‘ஃபாதர்’ மூலம் தந்தை – மகன் உறவின் ஆழமான உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை ‘ஃபாதர்’ ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். தந்தை – மகன் உறவு என்பது நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பொறுப்பு, அக்கறை, கண்டிப்பு அல்லது அவர்கள் செய்யும் தியாகங்கள் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வுகளை ஒரு மகன் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் போகலாம். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே படம் ஆராய்கிறது.

அன்பால் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தத் தெரியாத இரண்டு மனிதர்களின் பயணம்தான் இந்தப் படம். பார்வையாளர்கள் தங்களது வாழ்க்கையில் பார்த்த அல்லது அனுபவித்த ஏதோ ஒன்றை இந்தக் கதையில் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தில் முழுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரகாஷ் ராஜ் சார் அசாத்தியமான ஆழத்தையும் உணர்வையும் கொண்டு வந்துள்ளார். இவர்களின் உறவுதான் படத்தின் மையம்.

டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் உற்சாகமளிக்கிறது. ஆனால் டீசர் என்பது ஒரு சிறிய பார்வை மட்டுமே. ‘ஃபாதர்’ படத்தின் முழுமையான பயணம் இன்னும் வலுவான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

டீசருக்கு கிடைத்துள்ள நேர்மறையான வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தைப் பார்த்து கவரப்பட்ட Macis Productions, ‘ஃபாதர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் ரசிகர்களிடம் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் மீது விநியோக நிறுவனத்திற்கு இருக்கும் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. R. சந்துருவின் தயாரிப்பு, ராஜ்மோகனின் இயக்கம், டார்லிங் கிருஷ்ணாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் பிரகாஷ் ராஜின் வலுவான திரை இருப்பு ஆகியவற்றுடன் ‘ஃபாதர்’ ஒரு அர்த்தமுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்பட அனுபவமாக உருவாகி வருகிறது.

விரைவில் திரையரங்குகளில்!

Categories
Cinema News

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

‘ஹைவான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே, இப்படத்தின் இருண்ட மற்றும் திருப்பங்கள் நிறைந்த உலகத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் (ஹைவான்) மற்றும் சைஃப் அலிகான் (நாயகன்) இடையேயான அதிரடி மோதலைக் காட்டும் விறுவிறுப்பான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இருண்ட, த்ரில்லிங் பின்னணியில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர், இருவருக்கு இடையிலான தீவிரமான மோதலை பிரதிபலிக்கிறது. இயக்குநர் பிரியதர்ஷன், தனது சுவாரசியமான பின்னணி இசை மூலம் படத்தின் பதற்றத்தையும் சுவாரசியத்தையும் மேலும் கூட்டி, ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார் இதுவரை திரையில் பார்த்திராத மிகவும் இருண்ட மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருக்கு எதிராக சைஃப் அலிகான் பார்வையற்றவராக சவாலான வேடத்தில் மோதியுள்ளார்.

இவர்களுடன் நீதிபதியாக போமன் இரானி, காவல் அதிகாரியாக சயாமி கெர் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ஷ்ரியா பில்கோன்கர், ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

“இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்போது வெல்லப்போவது யார்?” என்ற பெரிய கேள்வியுடன் இந்த டிரெய்லர் நிறைவடைகிறது.

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தியேஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் இணைந்து தயாரித்துள்ள ‘ஹைவான்’ திரைப்படம், வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

The Chase Begins! Akshay Kumar and Saif Ali Khan Face Off in the Dark and Gripping Haiwaan Trailer

Link: https://www.youtube.com/watch?v=Bm5S7ZKk6K8

Ever since the intriguing teaser of Haiwaan dropped, audiences have been keenly waiting to see more of the dark and unpredictable world of the film. The wait is finally over as the trailer arrives, offering a thrilling glimpse into the face off between superstar Akshay Kumar aka the Haiwaan and Saif Ali Khan aka the Hero.

Dark, chilling and packed with tension, the trailer sets up a gripping cat and mouse chase between the two. Director Priyadarshan uses an intriguing background score to further heighten the suspense, setting the stage for a taut theatrical thriller.

Akshay Kumar steps into one of his darkest avatars yet, going head to head with Saif Ali Khan, who takes on the challenging role of a blind man. Adding further intrigue to the chase are Boman Irani as a judge and Saiyami Kher as a cop, alongside Shriya Pilgaonkar and Sharib Hashmi in pivotal roles.

The trailer leaves you with one question, when they finally come face to face who will emerge victorious?

Haiwaan is produced under KVN Productions and Thespian Films by Venkat K. Narayana and Shailaja Desai Fenn. The film releases worldwide in Cinemas on 11th September 2026.

Categories
Cinema News

Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission

Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission

The first video glimpse from Ratheesh Vega’s directorial debut sets the stage for a gripping investigation rooted in a fatal Kashmir convoy ambush; teaser released in Malayalam, Hindi, Tamil, Telugu and Kannada.

Goodwill Entertainments has officially released the teaser of its upcoming pan-Indian investigative action thriller Operation Tral, marking the film’s first video glimpse. The teaser has been released in Malayalam, Hindi, Tamil, Telugu and Kannada, offering audiences across languages a brief yet high-impact look into the dangerous mission at the heart of the film.

Frontlined by Jayasurya as an NIA officer, the teaser offers a glimpse into a high-stakes world where investigation and national security converge.

The teaser packs considerable intrigue, introducing the central mystery at the heart of Operation Tral while offering glimpses of its expansive world, tense atmosphere and high-stakes narrative. Rather than revealing too much, the sharply cut visual sets the plot in motion, leaving audiences with questions about the incident, the investigation and what lies behind it.

Inspired by true events, Operation Tral is set against the backdrop of a fatal convoy ambush in Tral, Jammu & Kashmir, and follows a NIA officer tasked with investigating the incident. As the investigation unfolds, the film delves into the complex world of investigative operations, uncovering layers of danger, conspiracy and unanswered questions. The teaser establishes the film as an investigative thriller where the pursuit of truth becomes a mission fraught with risk.

At the centre of this world is Jayasurya, who plays the role of an NIA officer navigating an investigation that takes him deep into the circumstances surrounding the Kashmir convoy attack. The role presents the actor in an intense and action-driven avatar, anchoring a narrative that moves between investigation, intelligence operations and high-stakes action.

The scale of Operation Tral is further reflected in its extensive production, with the film shot across Kerala, Coimbatore, New Delhi, Kulu, Manali, Mussoorie and Ladakh. Designed as a pan-Indian thriller, the film is gearing up for a worldwide release in Malayalam, Tamil, Telugu, Kannada and Hindi, taking its story of intelligence and investigation to audiences across languages and regions.

Operation Tral also marks the directorial debut of acclaimed music composer Ratheesh Vega, who has taken on multiple creative responsibilities on the project. Along with writing and directing the film, Ratheesh Vega has composed its music and background score, bringing together the film’s narrative and musical worlds.

Jayasurya leads an ensemble cast featuring Murali Sharma, Vinay Rai, Siddique, Sai Kumar, Nandalal Krishnamoorthy, Rithika Singh, Kavya Shetty, Anson Paul and Sirajudheen, alongside Bollywood actors including Vikram Kochhar, Yash Pal Gera, Mir Sarwar, Chandan Bisht, Hansika Jangid, Vaani Dogra, Jai Thakore, Vijay Trivedi and Manhar Singh Trivia.

Produced by Joby George Thadathil under the banner of Goodwill Entertainments, with Sunimol Joby as co-producer, Operation Tral features cinematography by Najose and editing by Shafeeque V.B. Project design is by Noble Jacob, production design by Sajeesh Thamarassery, art direction by Suneesh Sodharan, costumes by Sameera Saneesh and Saritha Jayasurya, and makeup by Ronex Xavier.

With its first video glimpse now out in Malayalam, Hindi, Tamil, Telugu and Kannada, Operation Tral establishes itself as a high-scale investigative action thriller built around a compelling real-world premise. The teaser deliberately offers only a glimpse into the film’s larger narrative, setting up an intense investigation and a world where every clue could lead closer to the truth, and deeper into danger.

As Operation Tral gears up for its pan-Indian release, the multilingual teaser marks the beginning of the film’s journey towards audiences, promising a gripping cinematic experience driven by investigation, action and intrigue.

*குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!*

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகாவின் ’ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் முதல் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட பரபரப்பான விசாரணைக் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது.

குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லரான ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆபத்தான ஒரு பணியின் பின்னணியில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களின் அறிமுகம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். விசாரணையும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும் பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது.

‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் மையக்கருவை சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. படத்தின் பிரம்மாண்டமான உலகம், பதற்றமான சூழல் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவற்றின் சில காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கதையின் முக்கிய விஷயங்களை முழுமையாக வெளிப்படுத்தாமல், சம்பவம் என்ன, விசாரணை எதை நோக்கிச் செல்கிறது, அதன் பின்னணியில் இருப்பது யார் போன்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ’ஆபரேஷன் டிரால்‘ திரைப்படம் ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பு ஒரு என்ஐஏ அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகரும்போது ஆபத்து, சதி மற்றும் விடை தெரியாத பல கேள்விகள் நிறைந்த சிக்கலான உலகத்திற்குள் படம் பயணிக்கிறது. உண்மையைத் தேடும் பயணம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் விசாரணைத் த்ரில்லராக இப்படத்தை டீசர் அறிமுகப்படுத்துகிறது.

இந்தக் கதையின் கதாநாயகனாக, என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா நடித்துள்ளார். காஷ்மீர் கான்வாய் தாக்குதலின் பின்னணியை ஆராயும் விசாரணையில், அதன் உண்மைகளைத் தேடி அவர் பயணிக்கிறார். விசாரணை, உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த இந்த கதையில் ஜெயசூர்யா தீவிரமான மற்றும் ஆக்‌ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

’ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. பான் இந்திய த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

பிரபல இசையமைப்பாளர் ரத்தீஷ் வேகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கத்துடன், இசை மற்றும் பின்னணி இசையையும் அவரே கவனித்துள்ளார். ஜெயசூர்யாவுடன் முரளி சர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர்களான விக்ரம் கோச்சர், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி மற்றும் மன்ஹர் சிங் ட்ரிவியா ஆகியோரும் நடித்துள்ளனர்.

விசாரணை, அதிரடி மற்றும் பரபரப்பு நிறைந்த ஒரு விறுவிறுப்பான சினிமா அனுபவத்தை இப்படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

தயாரிப்பு நிறுவனம்: குட்வில் எண்டரடெயின்மெண்ட்ஸ்,
தயாரிப்பாளர்: ஜோபி ஜார்ஜ்,
இணை தயாரிப்பாளர்: சுனிமோல் ஜோபி,
ஒளிப்பதிவு: நஜோஸ்,
படத்தொகுப்பு: ஷஃபீக் வி.பி.,
புராஜெக்ட் டிசைன்: நோபிள் ஜேக்கப்,
புரொடக்‌ஷன் டிசைன்: சஜீஷ் தாமரசேரி,
கலை இயக்கம்: சுனீஷ் சோதரன்,
ஆடை வடிவமைப்பு: சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா,
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்.

Categories
Cinema News

Avengers Fans, Assemble One More Time!

Avengers Fans, Assemble One More Time!

Calling all MCU fans to reunite as _Avengers Endgame: Encore_ hits cinemas on 25th Sept in Marvel Studios presents Infinity Vision across 4 languages – English, Hindi, Tamil and Telugu.

Marvel Studios is bringing the epic conclusion to the Infinity Saga back to the big screen with _Avengers Endgame: Encore_, releasing in theatres across India in English, Hindi, Tamil and Telugu from 25th September 2026. The film will be available in IMAX®️ and Marvel Studios Presents INFINITY VISION – a new certification for Premium Large Format (PLF) theatres that guarantees audiences an exceptional cinematic presentation, with larger screens, brighter images and outstanding sound.

The special Encore presentation of the record-breaking blockbuster will give fans the opportunity to relive one of the most monumental cinematic experiences of all time, while also offering an exclusive look at the highly anticipated _Avengers: Doomsday_, arriving in theatres on 18th December 2026. Audiences watching _Avengers Endgame: Encore_ on IMAX®️ and Marvel Studios presents INFINITY VISION-certified screens will also be treated to an additional sneak peek of the upcoming Marvel Studios epic.

In _Avengers Endgame: Encore_, after devastating events wiped out half the world’s population, the remaining heroes struggle to move forward. Ultimately, they must come together to restore order and harmony in the universe and bring their loved ones back in a dramatic showdown against Thanos. The film is produced by Kevin Feige and directed by Anthony and Joe Russo. Louis D’Esposito, Victoria Alonso, Michael Grillo, Trinh Tran, Jon Favreau, James Gunn, and Stan Lee serve as executive producers.

Marvel Studios’ _Avengers Endgame: Encore_ releases in theatres across India in English, Hindi, Tamil and Telugu on 25th September 2026.

*அவெஞ்சர்ஸ் ரசிகர்களே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்!*

*’அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25 முதல் இன்ஃபினிட்டி விஷன் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது!*

மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில், வரும் செப்டம்பர் 25, 2026 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் எனும் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் (PLF) திரையரங்குகளிலும் வெளியாகிறது. பெரிய திரைகள், அதிக ஒளிர்வுடன் கூடிய காட்சிகள் மற்றும் சிறப்பான ஒலி அனுபவம் என ரசிகர்களுக்கு மிகச் சிறந்த சினிமா அனுபவத்தை இந்த இன்ஃபினிட்டி விஷன் வழங்குகிறது.

சாதனைகளைப் படைத்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை மீண்டும் ஒருமுறை திரையில் காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சியையும் ரசிகர்கள் காணலாம். ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் சான்றிதழ் பெற்ற திரையரங்குகளில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படத்தை காணும் ரசிகர்களுக்கு, வரவிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்டமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் கூடுதல் பிரத்யேக ஸ்னீக் பீக் காட்சியும் திரையிடப்படும்.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கோம்- என்கோர்’ திரைப்படத்தில், பேரழிவை ஏற்படுத்திய சம்பவங்களுக்குப் பிறகு உலக மக்கள் தொகையில் பாதி பேர் அழிந்து போகின்றனர். மீதமுள்ள ஹீரோக்கள் அந்த இழப்பிலிருந்து மீண்டு வாழ்க்கையைத் தொடர போராடுகின்றனர். இறுதியில், பிரபஞ்சத்தில் மீண்டும் ஒழுங்கையும் அமைதியையும் கொண்டு வரவும், தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுக்கவும் அவர்கள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக தானோஸூக்கு எதிரான மாபெரும் இறுதிப்போரில் அவர்கள் களம் இறங்குகின்றனர்.

இப்படத்தை கெவின் பீக் தயாரித்துள்ளார். ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கியுள்ளனர். லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, ட்ரின் ட்ரான், ஜான் ஃபேவ்ரோ, ஜேம்ஸ் கன் மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸின் ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் 2026 செப்டம்பர் 25ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிப்பில் காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கலர்ஃபுல் என்டர்டெய்னர்!

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.

பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது.

சாதாரண விஷயங்கள்… செம கலாட்டா!

நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான். ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது… அந்தச் சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும்!

அப்படிப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், misunderstanding, comedy என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது.

சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என, ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது.

கதையின் பலம்… திரைக்கதையின் வேகம்… இயக்கத்தின் ரசனை!

இப்படத்தின் முக்கிய கிரியேட்டிவ் கூட்டணியாக டாக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சீயோன் ராஜா இணைந்துள்ளனர்.

கதை, வசனம் மற்றும் தயாரிப்பு – டாக்டர் எஸ். கார்த்திகேயன்
திரைக்கதை மற்றும் இயக்கம் – சீயோன் ராஜா
தயாரிப்பு நிறுவனம் – பெஸ்டி பிக்சர்ஸ்

கதையின் மையத்தையும் கதாபாத்திரங்களின் உலகத்தையும் உருவாக்கியிருக்கும் டாக்டர் எஸ். கார்த்திகேயனின் கதை மற்றும் வசனத்தை, சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்து, தனது இயக்குநர் பார்வையில் திரைக்கு கொண்டு வருகிறார் சீயோன் ராஜா.

இளம் நட்சத்திரங்கள்… அனுபவம் வாய்ந்த காமெடி கூட்டணி!

இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

மேலும் ரமேஷ் கண்ணா கதாநாயகனின் தந்தையாகவும், சுஜாதா (பருத்திவீரன்) தாயாகவும் நடிக்கின்றனர்.

அதோடு அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இளம் நடிகர்களின் energy-க்கும், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் comedy timing-க்கும் இடையேயான combination, கதையின் கலாட்டாவை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

டெக்னிக்கல் டீமும் அசத்தல்!

ஒளிப்பதிவு – வினோத் பெருமாள்
கலை இயக்கம் – ஜெயா முருகன்
இசை – விக்னேஷ் ராஜா
மேலாண்மை – வினு சுந்தரம்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி (PRO)
ஆடை வடிவமைப்பு – Beaulet

இளமைத் துடிப்பு நிறைந்த visuals, catchy music, இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் கலகலப்பான சூழ்நிலைகள் என ஒவ்வொரு அம்சத்திலும் ரசிகர்களுக்கு ரசனையான அனுபவத்தை வழங்க படக்குழு பணியாற்றி வருகிறது.

‘பொதுநலன்கருதி’ முதல்… புதிய வண்ணத்தில் சீயோன் ராஜா!

இயக்குநர் சீயோன் ராஜாவின் ‘பொதுநலன்கருதி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, அவரது ‘சமூகவிரோதி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஒரு பக்கம் இளமை…
மறுபக்கம் குடும்பம்…
நடுவில் காதலும் நட்பும்…
அனைத்தையும் சுற்றி செம கலாட்டாவும்!

இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும், தலைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகி, சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் படக்குழு தற்போது fun mode-ல் பரபரப்பாக பணியாற்றி வருகிறது.

சிரிக்கலாம்… ரசிக்கலாம்… feel பண்ணலாம்… குடும்பத்தோடு கொண்டாடலாம்! ❤️🎬🔥

Categories
Uncategorized

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்.

காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் பெருமையுடன் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

மேலும், “இந்த வெற்றியின் மூலம் நீங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கும் நமது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். குறிப்பாக, நமது தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் சர்வதேச அரங்கில் இத்தகைய சாதனையைப் படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இதே உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் வென்று சாதிக்க வேண்டும்,” என்று சிம்ரன் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து, ராஜா முத்துப்பாண்டியுடன் அன்பாக உரையாடிய சிம்ரன், அவரது சொந்த ஊரான கோவில்பட்டி மற்றும் குடும்பத்தினர் குறித்தும் விசாரித்தார். தனது சொந்த ஊர் கோவில்பட்டி என்பதை ராஜா முத்துப்பாண்டி தெரிவித்தபோது, அந்த ஊருடன் தனக்குள்ள திரைப்படத் தொடர்பான நினைவுகளையும் சிம்ரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சந்திப்பின் இறுதியில், ராஜா முத்துப்பாண்டி தனது வெள்ளிப் பதக்கத்துடன் நடிகை சிம்ரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக வீரரின் வெற்றியைப் பாராட்டி, அவரது எதிர்காலப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு இனிய தருணமாக இந்தச் சந்திப்பு அமைந்தது.

Actress Simran personally met and congratulated Commonwealth Games silver medalist Raja Muthupandi.

Tamil Nadu weightlifting athlete Raja Muthupandi, who won a silver medal in the men’s 65 kg category at the Commonwealth competition and brought pride to India and Tamil Nadu, was personally congratulated by actress Simran.

During the meeting, Raja Muthupandi proudly showed his Commonwealth silver medal to Simran. Appreciating his hard work, dedication and determination, Simran said that this achievement was just the beginning and wished him greater success in the future.

Further encouraging Raja Muthupandi, Simran said, “With this victory, you have already brought pride to India and our Tamil Nadu. It is a matter of even greater happiness and pride to see someone from our own Tamil Nadu achieve such a remarkable feat on the international stage. With the same determination and perseverance, I wish you continue to achieve many more victories and win several more medals in national and international competitions.”

Simran also interacted warmly with Raja Muthupandi, enquiring about his hometown, Kovilpatti, and his family. When he mentioned that he was from Kovilpatti, Simran fondly shared her memories and association with the town through her film career.

The meeting concluded with Simran and Raja Muthupandi posing for photographs together, with the athlete proudly holding his silver medal. The interaction stood as a heartwarming moment of encouragement and appreciation for a Tamil Nadu athlete’s remarkable achievement on the international stage.

Categories
Cinema News

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்ற இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது. யாஷின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, கீது மோகன்தாஸின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்தது.

விழாவில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள், படத்தின் உலகம் மற்றும் தமிழ் ரசிகர்களுடனான தங்களது எதிர்பார்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில், பாடலாசிரியர், இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,

“இங்கு நிற்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. யாஷ் சார் நான் மிகவும் ரசிக்கும் ஒரு ஐகான். முதலில் இப்படத்திற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இன்னொரு பாடலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தமாக இப்படத்திற்காக மூன்று பாடல்களை எழுதியுள்ளேன்.

யாஷ் சாருக்கு இந்தியா முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். டாக்ஸிக் திரைப்படத்தின் மூலம் அவரது புகழ் உலகளவில் இன்னும் பெரிய அளவில் சென்றடையும் என்று நம்புகிறேன்.
வெங்கட் சார் நமது மாண்புமிகு முதல்வர் விஜய் சாரின் Jananayagan படத்தை தயாரிக்கும்போது பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டார். படம் ஆன்லைனில் கசிந்தபோதும் அவர் மிகவும் உறுதியுடன் இருந்தார். தமிழக மக்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கீதுமோகன்தாஸ் மேம் எனக்கு குடும்ப நண்பர் போன்றவர். இப்படத்தை உருவாக்க உங்களிடம் இருந்த தைரியமும் துணிச்சலும் அளப்பரியது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.

நடிகர் சுதேவ் நாயர் பேசியதாவது..,

“கடைசியாக ‘காட்டான்’ தொடருக்காக தமிழ்நாடு வந்திருந்தேன். அது எனக்குப் பிடித்த படைப்பு. விஜய் சேதுபதி சாருடன் நடித்தது மறக்க முடியாதது. இப்போது எனக்குப் பிடித்த யாஷ் சாருக்காக மீண்டும் இங்கு வந்திருக்கிறேன். ‘டாக்ஸிக்’ படத்திற்கு முன்பு இருந்த என்னையும், ‘டாக்ஸிக்’ படத்திற்குப் பிறகு உருவாகப் போகும் என்னையும் நானே பார்க்கிறேன். இந்தப் படத்தின் நட்சத்திரக் குழுவினரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் உத்வேகம் அளிக்கும் மனிதர் யாஷ் சார்.” இப்படம் எல்லோருக்கும் புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.

நடிகை ருக்மிணி வசந்த் பேசியதாவது..,

“வணக்கம் சென்னை! ‘டாக்ஸிக்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். யாஷ் சார், நீங்கள் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். அதில் நானும் ஒருவர். உங்கள் ரசிகையாக இருந்த என்னுடைய பயணம், தற்போது உங்களுடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. கீது மோகன்தாஸ் மேடம், இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.”

நடிகை ஹுமா குரேஷி பேசியதாவது..,

“நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். இங்கு வருவது எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான் எங்கு சென்றாலும், பலரும் என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக எனது நேரத்தை செலவிட்டிருக்கிறேன்.

கீது மோகன்தாஸ் மேடம் இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே ஒரு அசத்தலான படைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் KVN Productions இப்படத்தை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறது.

இந்தப் படத்திற்காக கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் கூட அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ‘ராக்கிங் ஸ்டார்’ மட்டுமே இருக்கிறார்; அது யாஷ் சார். அவர் திரையுலகை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.

இந்தப் பிரம்மாண்டமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

நடிகை கியாரா அத்வானி பேசியதாவது..,

“சென்னைக்கு நான் வருவது இதுதான் முதல் முறை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த வரவேற்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கினோம். அப்போது வெங்கட் சார் பிறந்தநாளையும் கொண்டாடினோம். தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எங்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. அதைவிட முக்கியமாக, அவர் ஒரு அற்புதமான மனிதர். என்னுடன் நடித்த அனைத்து சக நடிகர்களும் தங்களது திறமையால் அசத்தக்கூடியவர்கள்.

ஒரு பெண்ணின் கனவு மற்றும் பார்வையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அது கீது மோகன்தாஸ் மேடம். இந்திய சினிமா உங்கள் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு யாஷ் சார் இந்திய சினிமாவை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.”

இயக்குநர் கீது மோகன்தாஸ் பேசியதாவது..,

“எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. அதே நிலை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான யாஷ் சார் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார்.

‘படையப்பா’ உள்ளிட்ட பல மாஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை எனக்கு ரெஃபரன்ஸாக யாஷ் சார் காட்டினார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது. அனைவருக்கும் நன்றி. “

தயாரிப்பாளர் KVN Productions வெங்கட் நாராயணன் பேசியதாவது..,

“‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக, எனது கடினமான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக நின்ற தளபதி விஜய் சாரின் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் சார், சினிமாவில் இது தனது கடைசி படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் விஜய் சார் தற்போது திரையில் இல்லாததை மிகவும் வெறுமையாக உணர்கிறேன். எனவே, அவர் மீண்டும் திரையில் நடிக்க வர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

‘டாக்ஸிக்’ ஒரு புதிய பாதையை உருவாக்கும் படமாக இருக்கும். கீது மோகன்தாஸ் இப்படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் முற்றிலும் வேறொரு அனுபவமாக இருக்கும். நயன்தாராவுக்கு என்று தனி ஒரு ஆரா இருக்கிறது. அவரது கதாப்பாத்திரம் திரையில் மிகப்பெரிய மாஸை உருவாக்க போதுமானது கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் அசாத்தியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

யாஷ் சார் இந்தப் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நீங்கள் உண்மையிலேயே அசாத்தியமானவர் சார்; அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்கள் திரைப்பயணத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு மைல்கல்லாக அமையும்.

‘டாக்ஸிக்’ முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகம். ‘டாக்ஸிக்’ உலகத்திற்குள் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நன்றி”

நடிகர் யாஷ் பேசியதாவது ..,

“தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.

நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என்று மட்டும் பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம் தரும் அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென ஒரு இருண்ட, அடர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம், கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என, திரைப்படம் மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன் மூலம் யாஷின் ரசிகர் வட்டத்தை தாண்டி, இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

Karthikeyan DK: From Pattukottai to the Screen

Karthikeyan DK: From Pattukottai to the Screen.

Hailing from Pattukottai, Karthikeyan DK, popularly known as Dee Kay, is steadily making his presence felt in the world of Tamil entertainment. His journey has taken him from the popular television space to increasingly prominent roles on screen.

He first caught the attention of audiences through shows such as Kana Kaanum Kaalangal and Heart Beat, before expanding his horizons into the world of OTT. His appearance in ZEE5’s Aindham Vedham gave him another opportunity to showcase his versatility and connect with a wider audience.

A naturally handsome actor with a classic screen presence, Karthikeyan has a look that reminds many of the younger Kamal Haasan—particularly the combination of charm, expressive features and effortless style. It is a resemblance he takes as a compliment, especially since Kamal sir is his favourite hero and a major inspiration.

Among Kamal Haasan’s films, Anbe Sivam holds a special place for him. He is particularly drawn to the way Kamal Haasan has approached character-driven roles, where performance takes precedence over conventional heroism.

Karthikeyan also carries a deep love for music, especially the compositions of Ilaiyaraaja, whose music has been an important part of his personal and artistic journey.

Despite his growing visibility, Karthikeyan is in no hurry to chase stardom. “I’m never in a hurry to become big. I believe in biding my time, choosing the right opportunities and waiting for the role that truly challenges me. I would rather grow steadily than rush into being noticed,” he says.

That patience reflects his approach to acting. Rather than simply looking for opportunities to appear on screen, he is keen to explore challenging character roles that allow him to discover different shades as an actor.

With his striking looks, natural screen appeal and growing experience across television and OTT, Dee Kay is now ready for the next phase of his journey.

From Pattukottai to the wider Tamil entertainment industry, Karthikeyan DK is not rushing the journey—he is biding his time, waiting for the roles that can make the wait worthwhile.

*”நடிகர் கமல்ஹாசனை போல இருப்பது எனக்கு பலம்”- நடிகர் கார்த்திகேயன்!*

‘டீ கே’ (Dee Kay) எனப் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, தற்போது திரையுலகிலும் குறிப்பிடத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களின் மூலமும் ஓடிடி தளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் கார்த்திகேயன். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ தொடரில் நடித்து பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு மேலும் பரிச்சியமானார்.

கார்த்திகேயனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள், ஸ்டைல் மற்றும் வசீகரிக்கும் தோற்றம் ஆகியவை இளம் வயது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகின்றனர். இதை கார்த்திகேயன் பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறார். அதிலும், கமல்ஹாசன் தனது விருப்பமான கதாநாயகன் மட்டுமல்லாமல், தனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனும் கூட என்கிறார். கமல்ஹாசனின் படங்களில் ‘அன்பே சிவம்’ திரைப்படம் கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வழக்கமான ஹீரோயிசத்தைத் தாண்டி, கதாபாத்திரத்திற்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கமல்ஹாசன் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

இசையின் மீதும் கார்த்திகேயனுக்கு ஆழமான காதல் உண்டு. குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் இசை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கலைப் பயணத்திலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. தனக்கென வாய்ப்புகள் அதிகம் வந்தபோதிலும் தனது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கிறார் கார்த்திகேயன்.

“நான் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்று ஒருபோதும் அவசரப்படுவதில்லை. சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, சரியான வாய்ப்புகளைத் தேர்வு செய்து, உண்மையிலேயே எனக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெறும் கவனத்தைப் பெறுவதற்காக அவசரப்படுவதைவிட, படிப்படியாக வளர்வதையே விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

வெறுமனே திரையில் வந்துபோகும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல், ஒரு நடிகராக தன்னுள் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க அவர் விரும்புகிறார். வசீகரிக்கும் தோற்றம் மற்றும் தொலைக்காட்சி, ஓடிடி என பல்வேறு தளங்களில் கிடைத்துவரும் அனுபவம் ஆகியவற்றுடன், கார்த்திகேயன் தனது நடிப்பு பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

பட்டுக்கோட்டையிலிருந்து தமிழ் திரையுலகில் நுழைந்திருக்கும் கார்த்திகேயன் தனது திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறார். அவரது காத்திருப்பு நிச்சயம் அர்த்தமுள்ளது எனவும் நம்புகிறார்.