full screen background image
Search
Wednesday 19 August 2026
  • :
  • :
Latest Update

‘சித்தா’ திரைப்பட விமர்சனம்

Casting : Siddharth, Nimisha Sajayan, Anjali Nair, Sahasra Shree, S.Aafiya Tasneem, Balaji

Directed By : SU Arun Kumar

Music By : Dhibu Ninan Thomas and Vishal Chandrasekar

Produced By : Etaki Entertainment – Siddharth

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் சித்தார்த். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சித்தா. முதல் ஷோ பார்த்த அனைவரும் தங்களது இணையதள பக்கத்தில் விமர்சனம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். எனவே இப்படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மதுரையை சேர்ந்த புதுமுக இயக்குனர் அருண்குமார், இதுவரை வெளியாகாத திரைக்கதையை அமைத்துள்ளார். சொல்லப்போனால் முதல் திரைப்படம் வெற்றியை கொண்டாடிய இயக்குனர்கள் வரிசையில் அருண் குமாரும் இடம்பெற்றுள்ளார்.

பழனியில் அரசு வேலை பார்க்கும் நாயகன் சித்தார்த் அண்ணன் மறைவிற்கு பிறகு அப்பா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படாத வகையில்அன்னான் மகள் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாக வளர்க்கிறார். குழந்தையும் சித்தா, சித்தா என்று பாசமாக அழைத்து எப்போதும் சித்தார்த் கூடவே ஒட்டிக்கொள்கிறது.

சித்தார்த் வேலை பார்க்கும் இடத்தில் பல வருடங்களுக்கு பிறகு தன் காதலி நிமிஷா சஜயனை எதார்த்தமாக பார்க்கிறார். மீண்டும் காதல் வசப்படுகிறார். பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். சித்தார்த் நண்பனின் அக்கா மகளும் சித்தார்த் அன்னான் மகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர்.

அதே ஊரில் ஐய்யனார் கோவில் அருகே, தொடர்ந்து குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது காவல்துறை குற்றவாளிகளை தீவிரமாக தேடித் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சித்தார்த் நண்பனின் அக்கா மகளுக்கு காமூகன் ஒருவனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுகிறது. ஆனால் இந்த பழி சித்தார்த் மீது விழுகிறது. இதே சமயம் சித்தார்த் அன்னான் மகள் திடீர் என காணாமல் போகிறாள். இறுதியில் சித்தார்த் மீது ஏற்பட்ட பழி நீங்கியதா? இல்லையா? காணாமல் போன சித்தார்த் அன்னான் மகள் கிடைத்தாரா இல்லையா? என்பதே ’சித்தா படத்தின் மீதிக்கதை..

நாயகன் சித்தார்த் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சித்தார்த்.தான் தவறாக பழியை சுமக்கும் போது தவிப்பதும், அண்ணன் மகள் பாதிக்கப்படும் போது ஒரு அன்பான சித்தப்பாவாகவும் முழுப்படத்தையும் தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். இதுவரை கமர்சியல் படங்களை கொடுத்து வந்த சித்தார்த் சமூக அக்கறை கொண்ட கதைகளத்தில் நடித்திருப்பது பாராட்டக் கூடிய விஷயம்.

நாயகியாக நிநடித்திருக்கும் நிமிஷா சஜயன் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.அண்ணியாக அஞ்சலி நாயர் இயல்பான நடித்திருக்கிறார். சிறுமிகள் சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் எஸ்.ஆபியா தஷ்னீம். இரு சிறுமிகளின் இயல்பான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. பழனியின் அழகையும் அவலங்களையும் அழகாக படமாக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம்

பெண் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.சித்தப்பா – மகள் இடையிலான உறவை சிறப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் சமுக அக்கறையோடு படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *