full screen background image
Search
Saturday 15 August 2026
  • :
  • :
Latest Update

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !!

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

*காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !*

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.

இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த மெலடி, பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையை போர்த்தொழில் படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *