full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட ரேட்டிங்: 2/5

Casting : Jayam Ravi, Nayanthara, Vijayalakshmi, Rahul Bose, Narain, Ashish Vidyarthi, Charle, Ashwin Kuma,Vinoth Kishan, Azhagam Perumal, Bagavathi Perumal

Directed By : I. Ahmed

Music By : Yuvan Shankar Raja

Produced By : Passion Studios

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது ‘இறைவன்’ படம். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐ.அஹமது இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள “இறைவன்” படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.எந்தவித சட்டதிட்டங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்காத ஒரு சர்வாதிகாரி காவல்துறை அதிகாரி ஜெயம் ரவி. அதனாலேயே திருமணம் போன்ற எந்தவித சிக்கல்களுக்குள்ளும் சிக்கிவிடக்கூடாது என நினைத்து தனி மரமாய் நிற்கிறார். அதே சமயம், அவருக்கு நரேன், நரேனின் தங்கை நயன்தாரா, நரேனின் மனைவி விஜயலட்சுமி, மருத்துவர் சார்லி, காவல்துறை அதிகாரி அழகம்பெருமாள் என்று சில நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஊரையே கதிகலங்க வைக்கிறார் ஸ்மைலி கொலைகாரரான ராகுல் போஸ். இளம்பெண்களைக் குறிவைத்து கொல்லும் அவரைப் பிடிக்க முடியாமல் திணறுகிறது ஆசிஷ் வித்யார்த்தி தலைமையிலான காவல்துறை. இந்தக் கொலைகள் ஏன் நடக்கிறது; உண்மையான கொலையாளி யார்; ஜெயம் ரவிக்கும் சீரியல் கொலைகாரருக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்கள். அர்ஜூனாக வரும் ஜெயம் ரவி ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்குகிறார். மேலும் ஆக்ரோஷம், இயலாமை, இழப்பு, வெளிப்படுத்த முடியாத அன்பு என அனைத்தையும் கலந்து கட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார்.

இரண்டாவதாக வில்லனாக நடித்திருக்கும் ராகுல் போஸ் பார்வையிலேயே பயத்தை வரவழைக்கிறார். ஸ்மைலி கில்லர் பிரம்மா என்ற அந்த சைக்கோ கேரக்டரை அச்சு அசலாக கண்முன்னே நடத்துகிறார். இவர்களைத் தவிர நயன்தாரா, சார்லி, நரேன், அழகம் பெருமாள், பகவதி பெருமாள், ஆஷிஷ் வித்யார்த்தி என அனைவரும் நடிப்பில் மிளிர்கிறார்கள். இதைத் தவிர படத்தில் பாராட்டுவதற்கு ஏதும் இல்லை. இரண்டு வேறு கதைகளாக ஓடும் முதல் பாதி, இரண்டாம் பாதி, பெரும் அயர்ச்சியை உண்டாக்கும் காதல் காட்சிகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு, பொறுமையை சோதிக்கும் திரைக்கதை என எதைத் தொட்டாலும், சுக்கு சுக்காய் நொறுங்கி விழுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் எந்த அழுத்தமும் இல்லாமல் நகர்கிறது. அர்ஜுன் எதற்காக பதட்டத்துடனே இருக்கிறார்?, ஆண்ட்ரூஸ் எதற்காக அவரை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்? என்பது வெறும் வசனமாக வருகிறதே தவிர பார்வையாளர்களால் அதை உணர முடியவில்லை. இது போன்ற கதைகளில் ஒரு கதாபாத்திரம் கடத்தப்பட்ட உடன், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நமக்கு ஒரு பதைபதைப்பு வரும். ஆனால், இந்தப் படத்தில் யாருக்கு என்ன ஆனால் என்ன? என்ற மனநிலை தான் வருகிறது.இந்தப் படத்தின் கதை வழக்கமான சைக்கோ திரில்லர் படங்களில் வரும் அதே கதைதான் என்றாலும், ஹார்ட் பீட்டை எகிற செய்யும் அளவுக்கு இயக்குநர் ஐ.அஹமதுவின் திரைக்கதை இருக்கிறது. அதுதான் இருக்கை நுனியில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. மேலும் இடைவேளை ட்விஸ்ட்டும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் படத்துக்கு மற்றொரு மிகப்பெரிய பலம், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை தான். முதல் பாதி முழுக்க மிரள வைக்கும் அளவுக்கு அசத்தியுள்ளார். மேலும் ஹரி கே.வெங்கடத்தின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது. இப்படி படத்தில் பாராட்ட நிறைய விஷயங்கள் இருந்தாலும் சில விஷயங்கள் மிகவும் உறுத்தலாக அமைந்துள்ளது.

படத்தின் முதல் மைனஸ் நீண்ட நேரம் படம் பார்க்கும் உணர்வை ரசிகர்களுக்கு உண்டாக்கி சலிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக பல இடங்களில் லாஜிக் இல்லாமல் இழுத்த பக்கமெல்லாம் கதை செல்கிறது. அதனை எடிட்டில் கட் செய்திருக்கலாம். அதேபோல் சைக்கோ த்ரில்லர் படங்களுக்கு பெண்கள் தான் பலியாடாக கிடைத்தார்களா என தெரியவில்லை. இதிலும் மரணத்தைப் பார்த்து மகிழும் சைக்கோ கேரக்டரின் டார்கெட் இளம்பெண்கள் தான். உண்மையில் படம் பார்க்கும் பெண்கள் தனியாக செல்ல மிரளும் அளவுக்கு பயத்தைக் காட்டியுள்ளார்கள்.

கொடூரமான கொலைகள் ஒரு புறம் இருக்க, அதை வெளிப்படையாக காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றை நிறையவே குறைத்திருக்கலாம். ரசிகர்களுக்கு த்ரில்லரான எக்ஸ்பீரியன்ஸை தர வேண்டும் என்ற இயக்குநரின் மெனக்கெடல் எல்லாம் சரி தான். ஆனால் உணர்வுகளில் ஊறிப்போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு வித அதிர்ச்சியை தான் உண்டாகும். அதனால் குழந்தைகள் மட்டுமல்ல சற்று மனம் பலவீனமாக இருப்பவர்கள் கூட இந்தப் படத்தை பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது…!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *