full screen background image
Search
Tuesday 30 June 2026
  • :
  • :
Latest Update

‘ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்

‘ஹார்ட்டின்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

CAST & CREW

Sananth as Shiva
Madonna Sebastian as Sahitya
Emaya T as Sadhana
WhatsApp Mani as Mani
Debnita as Ankita

Writer – Director : Kishore Kumar
Music : Rajesh Murugesan
DOP : Mukeswaran V
Editor : Barath Vikraman
Art Director : G. Durairaj
Costume Designer : Uthara Menon
Creative Consultant : Manimegalai T
Production Controller : T. Selvaraj
Production Executive : S. N. Asraf
Sound Mix : Rajakrishnan M.R
Sound Design : Sree Sankar
Lyrics : Vivek, Mohan Rajan, Sarathi
Chief Makeup Artist : Shyed Malik
Costumer : P.R. Ganesh
Stunts : Rugger Ramkumar
VFX : Spectre Post
DI : Prasad
Colorist : Ranga
Co-Director : J.J. Jill
Stills : Jaikumar Vairavan
Publicity Stills : Maheswar Singh
Publicity Designer : Kannadasan DKD
Produced by : Trident Arts – R. Ravindran
Co-Produced by : Step One Studios
PRO : Nikil Murukan

‘ஹார்ட்டின்’ ஜெய்ப்பூரில் நண்பரின் உணவகத்தில் வேலை பார்க்கும் சிவா கடந்த காதல் தோல்வியின் வலியால் யாரையும் காதலிக்க விரும்பாமல் வாழ்கிறார். அந்த நேரத்தில் அவரது வாழ்க்கையில் சாதனா வருகிறார். ஆரம்பத்தில் மறுத்தாலும், பிறகு அவரது உண்மையான காதலை புரிந்து கொண்டு சிவாவும் காதலிக்கிறார். எல்லாம் சரியாக போகும் நேரத்தில் ஒரு விபத்தில் சிவாவுக்கு சமீபத்திய ஆறு வருட நினைவுகள் மறந்துவிடுகின்றன. அதனால் சாதனாவையே மறந்துவிட்டு தனது பழைய காதலியான சாகித்யாவை தேடி செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சிவாவாக நடித்துள்ள சனத் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியால் உடைந்து போன இளைஞனாகவும், நினைவிழந்த பிறகு குழப்பத்தில் தவிக்கும் மனிதராகவும் இரண்டு விதமான உணர்வுகளையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகை இமயா தனது முதல் படமென்றே தெரியாத அளவுக்கு எளிமையாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். மடோனா செபாஸ்டியனுக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அவருடைய நடிப்பு பல இடங்களில் மனதை தொடுகிறது. வாட்ஸ்அப் மணி வரும் காட்சிகள் படத்திற்கு லேசான நகைச்சுவையையும் கொடுக்கின்றன.

முகேஷ்வரனின் ஒளிப்பதிவு ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியின் அழகை திரையில் ரசிக்க வைக்கிறது. ராஜேஷ் முருகேசனின் பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது.

இயக்குநர் கிஷோர் குமார் ஒரு வித்தியாசமான காதல் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். நினைவிழப்பை மையமாக வைத்து முக்கோண காதலை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார். முதல் பாதி நன்றாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் படம் மெதுவாக செல்வது போல தோன்றுகிறது. சில உணர்ச்சிகரமான காட்சிகளில் இன்னும் ஆழம் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது. இருந்தாலும் கிளைமாக்ஸில் எடுத்திருக்கும் முடிவு வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல் யதார்த்தமாக இருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ஹார்ட்டின் பரபரப்பான காதல் படம் அல்ல. அமைதியாக நகரும் மென்மையான காதல் கதையை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த படம் பிடிக்கும். வலுவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு, இனிமையான இசை ஆகியவை படத்திற்கு பலம். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் மற்றும் உணர்ச்சி இருந்திருந்தால் இந்த படம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *