‘அந்தரன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew
Prajin Padmanabhan
Ivana Varun
Anupama Kumar
M.K. Sambasivam
Senthil Kumari
Adhiran
Rameshbabu Geetha
Phathmen
Priyanka Selvi
Aishwarya Kannan
Written & Directed by: Santhosh Raavanan
Producer: M.K. Sambasivam
DOP: Kishore Ramachandran
Music: Hari S R
Editors: Ignatious Aswin, Sathish Kurosawa
Stunts: Ram Kumar
Choreography: Vijisatish
Lyrics: Karthik Netha, Mohan Rajan, Hariharan, Subha Prabhu
PRO: Nikil Murukan
Publicity Designer: Hipson Uga
‘அந்தரன்’ கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஆரம்பத்திலேயே ஒரு மர்மத்தை வைத்து கதைக்குள் நம்மை இழுத்து விடுகிறது. கார்த்திகாவை திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஐபிஎஸ் அதிகாரி செழியன் விசாரணையில் இறங்குகிறார். அந்த விசாரணை எப்படி போகிறது, இறுதியில் உண்மை என்ன என்பது தான் படத்தின் கதை.
பிரஜின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு தேவையான கம்பீரமும், அமைதியான நடிப்பும் அவரிடம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இவானா வருண் படத்தின் மிகப்பெரிய பலம். காதல், பயம், பதற்றம், வேதனை என எல்லா உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவரது நடிப்பு நல்ல ஆச்சரியத்தை கொடுக்கிறது.
எம் கே சாம்பசிவம், அனுபமா குமார், செந்தில் குமாரி மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் கதைக்கு தேவையான பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள்.
கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு த்ரில்லர் படத்திற்கு தேவையான சூழலை சிறப்பாக உருவாக்குகிறது. ஹரி எஸ் ஆர் இசையில் பாடல்கள் ஓகே. ஆனால் பின்னணி இசை தான் படத்தின் பரபரப்பை இன்னும் உயர்த்துகிறது. படத்தொகுப்பும் விறுவிறுப்பை காப்பாற்ற உதவியுள்ளது.
இயக்குநர் சந்தோஷ் ராவணன் வழக்கமான கிரைம் த்ரில்லர் கதையை எடுத்திருந்தாலும், அதை சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும், இடைவேளைக்கு பிறகு படம் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக கடைசி அரை மணி நேரம் தொடர்ந்து சஸ்பென்ஸ் வைத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. கிளைமாக்ஸ் யாரும் எளிதில் கணிக்க முடியாத வகையில் அமைந்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில், ‘அந்தரன்’ கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படமாக மாறியுள்ளது.





















