full screen background image
Search
Tuesday 30 June 2026
  • :
  • :
Latest Update

‘சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்

‘சிங் கீதம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew

Ayaan
Ahalya Bamroo
Shalini Kondepudi
Nivetha Pethuraj
Rahul Ravindran
Shiva Narayana
Banerjee
Vamshi
Tulasi
Vijay Deverakonda (Special Appearance)

Writer & Director: Singeetam Srinivasa Rao
Producer: Nag Ashwin
Music: Devi Sri Prasad
Cinematography: Ankur C
Art Director: Aravind Mule
Writers: Gauthami Challagulla, Shashank Chinthalapudi, Rathna Srikar, Nandakishore Emani, Rahul V. Rajeshwar

‘சிங் கீதம்’ வித்தியாசமான ஒரு திரை அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் படம். மோசடி வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் பிரதாப், தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை தேடி குபேரபுரம் என்ற கிராமத்திற்கு செல்கிறார். அங்கு தங்க சுரங்கத்தை சுற்றி நடக்கும் பிரச்சனைகளும், மனிதர்களின் பேராசையும், இயற்கை அழிவும் அவருக்கு தெரிய வருகிறது. இதற்கிடையில் ஒரு விநோதமான சம்பவத்தால் அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரும் சாதாரணமாக பேச முடியாமல், பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பாடலாக மட்டுமே சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த சாபம் என்ன, அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் அயான் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகவும் இயல்பாக கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் சுயநலமாக இருக்கும் இளைஞனாகவும், பிறகு மனம் மாறி மக்களுக்காக நிற்பவராகவும் நல்ல மாற்றத்தை காட்டியிருக்கிறார். கௌரியாக நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ படத்தின் மிகப்பெரிய பலம். இயற்கையை காப்பாற்ற போராடும் பெண்ணாக அவரது நடிப்பு மனதில் பதிகிறது. ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சரியான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் தேவரகொண்டாவும் கவனம் ஈர்க்கிறார்.

படத்தின் மிகப்பெரிய ஹீரோ தேவி ஸ்ரீ பிரசாத் தான். சாதாரண வசனங்களையே பாடல்களாக மாற்றி ரசிக்க வைப்பது சாதாரண விஷயம் இல்லை. ஆரம்பத்தில் இது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றினாலும், கொஞ்ச நேரத்தில் அந்த உலகத்திற்குள் நம்மையும் இழுத்து செல்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அங்கூர் சியின் ஒளிப்பதிவு வறண்ட நிலப்பரப்பையும், குபேரபுரம் கிராமத்தையும் மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. அரவிந்த் மூலேவின் கலை இயக்கம் அந்த கிராமத்தை நம்பும்படி உருவாக்கியுள்ளது.

இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் தனது வயதை மறந்து மீண்டும் ஒரு புதிய முயற்சியை செய்திருக்கிறார். பேசும் படம் மூலம் உரையாடலே இல்லாத படத்தை கொடுத்தவர், இந்த முறை உரையாடல்களையே பாடல்களாக மாற்றி புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். அதோடு மனிதர்களின் பேராசை, இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழலின் அவசியம் போன்ற கருத்துகளையும் எந்த இடத்திலும் பிரச்சாரம் போல இல்லாமல் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் இந்த பாடல் வடிவத்திற்கு பழக கொஞ்சம் நேரம் எடுக்கிறது. ஆனால் அதற்கு பிறகு படம் நம்மை அந்த உலகத்திற்குள் கொண்டு சென்று விடுகிறது. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், அதன் வித்தியாசமான மேக்கிங் மற்றும் புதுமையான ஐடியா அதை மறக்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘சிங் கீதம்’ 90 வயதைக் கடந்தும் இவ்வளவு புதிய சிந்தனையுடன் சினிமா எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சிங்கீதம் சீனிவாசராவ். இந்த துணிச்சலான முயற்சிக்காகவே இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *