‘மரியா’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : SaiShri Prabhakaran, Pavel Navageethan, Sidhu Kumaresan, Vignesh Ravi, Balaji Velan, Sudha Pushpa, Abinaya
Directed By : Hari K Sudhan
Music By : Aravind Gopalakrishnan & Bharath Sudharshan
Produced By : Hari K Harasudhan
“மரியா” படம் பார்த்தவுடன் மனசுல கொஞ்சம் குழப்பம் மாதிரி ஆனது. நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன் கன்னியாஸ்திரி வேடத்தில் நடிச்சிருப்பாங்க. விடுமுறைக்கு வீடு வரும்போது, மற்ற பெண்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழணும் என்ற ஆசை அவருக்கு வரும். ஆனா குடும்பம் அதையே மறுக்குது, கோபத்தில் வீட்டிலிருந்து துரத்துறாங்க. அதுக்கப்புறம் மதத்தை வெறுத்து, சாத்தான் வழிபாட்டு குழுவோட சேருறாங்க. இதுவே கதையின் முக்கிய டர்னிங் பாயிண்ட்.
சாய்ஸ்ரீ தன்னோட நடிப்பால படத்தையே தாங்கிச்சுட்டாங்க. ஒரு பெண்ணின் உள்ளம், உணர்ச்சி, கோபம் எல்லாத்தையும் நம்ப வைக்குற மாதிரி காட்டிருக்காங்க. சாத்தான் குழுவின் தலைவராக பாவல் நவகீதன் நல்ல பக்கம் பக்கமா வசனம் பேசி, அந்த பாத்திரத்துக்கு வலிமை சேர்த்திருக்கார். விக்னேஷ் ரவி, சிது குமரேசன், சுதா புஷ்பா, அபிநயா, பாலாஜி வேலன் எல்லாரும் தங்களுக்கான பாத்திரத்துல சும்மா இல்லாமல் உழைத்திருக்காங்க.
படத்துல நீளமான காட்சிகள் இருந்தாலும், அரவிந்த் கோபால கிருஷ்ணன் – பரத் சுதர்ஷன் இசையால சுவாரஸ்யம் குறையவில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துச்சு. ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி கூடுதல் அலங்காரம் இல்லாமல் இயல்பான விளக்கை வைத்து எடுக்கிற விதம் நல்லா இருந்தது.
ஆனா சிக்கல் எங்கேனா, திரைக்கதை. முதல் பாதி ஒரு பெண்ணின் மனதைச் சொல்லும் மாதிரி நிதானமா சென்றாலும், இரண்டாம் பாதியில் கதை பக்கத்துக்கு விலகி, “பெண் ஆசை நிறைவேறலையென்றால் மதத்தை வெறுத்து வேறு வழியில் போகிறாள்”ன்னு காட்டியிருப்பது படம் கொஞ்சம் பலவீனமா மாற்றிடுச்சு. இயக்குநர் ஹரி கே.சுதன் தைரியமா சொல்ல வந்த விஷயம் சர்ச்சை தான், ஆனா அது மத விமர்சனமா மாறிடுச்சு.
மொத்தத்துல பார்த்தா, “மரியா” படம் ஒரு பெண்ணின் உள்ளக் குழப்பத்தை தொடக்கத்தில் நல்லா காட்டினாலும், பின்னாடி கதை சிதறியதால் மனசுக்குள் களங்கம்தான் அதிகமா மிஞ்சுது.
.
















