full screen background image
Search
Wednesday 19 August 2026
  • :
  • :
Latest Update

‘இட்லி கடை’ திரைப்பட விமர்சனம்

‘இட்லி கடை’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Dhanush, Nithya Menon, Arun Vijay, Shalini Pandey, Sathyaraj, Rajkiran, Parthiban, Samuthirakani , Ilavarasu

Directed By : Dhanush

Music By : G.V Prakash Kumar

Produced By : Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd – Aakash Baskaran & Dhanush

சின்ன ஊர்ல இட்லி கடை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் சிவநேசன் (ராஜ்கிரண்). மகன் முருகன் (தனுஷ்) வெளியூர்ல பெரிய கனவுகளோட வேலைக்கு சென்று அங்க நல்ல பெயரும், பணமும் வாங்குறான். அப்போதே விஷ்ணுவர்தனின் (சத்யராஜ்) குடும்பத்தோட அவனோட வாழ்க்கை இணைகிறது. அவரோட மகள் மீரா (ஷாலினி பாண்டே) காதலிக்கிறாள். ஆனா, அந்த வீட்டுக்கார மகன் அஷ்வினுக்கு (அருண் விஜய்) தனுஷ் மேல பொறாமை மேலோங்குகிறது. ஒரு சம்பவத்துக்குப் பிறகு அந்த பகை இன்னும் மோசமாகிறது. அடுத்து என்ன நடக்குது என்பதுதான் படம்.

முதல் பாதி நல்லா இருக்கு. தந்தை – மகன் இடையிலான பாசம், குடும்ப பிணைப்பு ரொம்ப இயல்பாக காட்டப்பட்டிருக்கிறது. ராஜ்கிரண் வந்தாலே காட்சிகள் உயிர் பெற்று விடுகிறது. இடைவேளைக்குள் படம் ஓட்டமாக செல்கிறது.

ஆனா, இடைவேளைக்குப் பிறகு படம் வழக்கமான “ஹீரோ–வில்லன்” மோதலுக்கு மாறி விடுகிறது. கதையின் போக்கு எளிதாக ஊகிக்கக்கூடியதாகி, கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. அதிலும் தனுஷ் – அருண் விஜய் மோதல் காட்சிகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்த மாதிரி தான் இருக்கும்.

இரண்டாம் பாதியை ஓரளவு காப்பாற்றியது நித்யா மேனன் தான். தனுஷுடன் வரும் அவங்க காட்சிகள் அழகாகவும் இயல்பாகவும் இருந்தது. குறிப்பாக படத்தின் முடிவில் அவருடைய நடிப்பு மனசை தொட்டுவிடுகிறது.

நடிப்பில் தனுஷ் இன்னும் ஒரு படி முன்னேறியிருக்கிறார். ஆசையும், குழப்பமும் கலந்த ஒரு இளைஞனின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜ்கிரண் வழக்கம்போல் மிக அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அருண் விஜய் பணக்கார வீட்டுப் பிள்ளை கேரக்டருக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறார். மற்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.

பாடல்களில் “என் பாட்டன் சாமி”, “என்ன சுகம்” இரண்டும் இனிமை. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. காட்சியமைப்பும் அழகாக இருக்கிறது. ஆனால் சண்டைக் காட்சிகளில் அந்த தாக்கம் இல்லாதது குறையாகவே தோன்றுகிறது.

சில வசனங்கள் தான் சற்று மனதில் குடியிருக்கும். “ஊரைவிட்டு நகரத்துக்குப் போறவங்க தப்பா?” என்பதுபோன்ற வரிகள், இன்றைய தலைமுறைக்கு பிற்போக்கான சிந்தனை போலவே தோன்றுகிறது.

மொத்தத்தில், இட்லி கடை புதுமையில்லாத கதை தான். ஆனாலும் குடும்ப பாசம், கிராம வாழ்க்கை, சென்டிமென்ட் விரும்பும் பார்வையாளர்களை கவரும் வகையில் எடுத்திருக்கிறார் தனுஷ். இன்னும் சுருக்கமான, வலுவான திரைக்கதை இருந்திருந்தால், படம் முழுமையான குடும்பப்படமாக உயர்ந்திருக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *