Categories
Reviews

‘என்ன விலை’ திரைப்பட விமர்சனம்

‘என்ன விலை’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

Karunas
Nimisha Sajayan
Vijayalakshmi Veeramani
Sasha Sivakumar
Kamalesh Jagan
Pasanga Pandi
Mohan Raman
YG Mahendran
Chetan Seenu
Poornima Bhagyaraj
Nizhalgal Ravi
Motta Rajendran
Prabhu Special Appearance

Written and Directed by Sajeev Pazhoor
Music by Sam C S
Cinematography by Alby Antony
Edited by Sreejit Sarang

‘என்ன விலை’ ராமேஸ்வரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். கடலில் பக்தர்கள் வீசும் காசுகளை மூழ்கி எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்

ஒருநாள் கடலுக்குள் செல்லும்போது அவருக்கு விலைமதிப்புள்ள ஒரு பழமையான தங்க பதக்கம் கிடைக்கிறது. அதை தனக்காக வைத்துக்கொள்ளாமல் நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். ஆனால் அந்த நேர்மையே அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது

அந்த பதக்கத்தின் மீது ஆசைப்படும் ஒரு காவலர் அதில் இருக்கும் விலைமதிப்புள்ள கல்லை எடுத்துக்கொண்டு தவசிமுத்து மீதே திருட்டு பழியை சுமத்துகிறார். எந்த தவறும் செய்யாத அவர் திருடனாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். இதனால் அவரது குடும்பமும் அவமானத்தையும் வேதனையையும் சந்திக்கிறது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவசிமுத்துவுக்காக வழக்கறிஞர் காஞ்சனா களத்தில் இறங்குகிறார். நிமிஷா சஜயன் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் அவர் வாதாடும் காட்சிகள் படத்திற்கு நல்ல அழுத்தத்தை கொடுக்கின்றன

படத்தின் மைய கேள்வியே ஒரு மனிதன் எந்த தவறும் செய்யாமல் குற்றவாளியாக்கப்பட்டால் அவன் இழந்த மரியாதைக்கும் மானத்திற்கும் என்ன விலை என்பதுதான். பண இழப்பு மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் சுயமரியாதை பாதிக்கப்படும்போது அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியையும் படம் முன்வைக்கிறது

கருணாஸ் இந்த படத்தில் காமெடியை முழுமையாக ஒதுக்கி தவசிமுத்துவாகவே வாழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதராக வரும் அவர் மீது திருட்டு பழி விழுந்த பிறகு ஏற்படும் பயம் அவமானம் கோபம் இயலாமை மற்றும் வலி என ஒவ்வொரு உணர்வையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

குறிப்பாக தான் திருடன் இல்லை என்று காவல்துறையிடம் கெஞ்சும் காட்சிகளிலும் ஊர் மக்கள் தன்னை தவறாக புரிந்து கொள்ளும்போது குடும்பத்துடன் வேதனைப்படும் காட்சிகளிலும் கருணாஸின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இந்த படம் அவருடைய நடிப்பு திறமையை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது

நிமிஷா சஜயனும் வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில் அவரது உடல்மொழியும் வசனங்களை கையாளும் விதமும் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. தவசிமுத்துவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடும் காட்சிகள் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கின்றன

விஜயலட்சுமி வீரமணி தவசிமுத்துவின் மனைவியாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சாஷா சிவகுமார் கமலேஷ் ஜெகன் மற்றும் பாண்டி உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிழல்கள் ரவி பூர்ணிமா பாக்யராஜ் ஒய் ஜி மகேந்திரன் மோகன் ராமன் கவிதாலயா கிருஷ்ணன் லொள்ளு சபா சுவாமிநாதன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் பிரபுவும் கவனம் பெறுகிறார்

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி ராமேஸ்வரத்தின் கடல் மற்றும் மீனவ மக்களின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார். கடல் இந்த படத்தில் வெறும் பின்னணியாக இல்லாமல் தவசிமுத்துவின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு முக்கியமான பகுதியாகவே தெரிகிறது. நீதிமன்ற காட்சிகளையும் அவர் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்

சாம் சி எஸின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்ற காட்சிகளில் வரும் பின்னணி இசை பதற்றத்தையும் உணர்வையும் அதிகரிக்கிறது. பெரிய அளவில் பாடல்களை நம்பாமல் பின்னணி இசையின் மூலமாகவே கதையை உயர்த்தியிருப்பது சிறப்பு

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. பதக்கம் கிடைப்பது முதல் போலீஸ் விசாரணை கைது சிறை மற்றும் நீதிமன்றம் என கதை பல தளங்களுக்கு சென்றாலும் பெரும்பாலும் தொய்வு இல்லாமல் நகர்கிறது

இயக்குநர் சஜீவ் பழூர் ஒரு பெரிய சமூக பிரச்சினையை நேரடியாக வசனங்களால் சொல்லாமல் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தின் வழியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான பலம்

ராமேஸ்வரம் மக்களின் வாழ்க்கை முறை கடலில் இருந்து காசுகளை எடுத்து வாழும் தொழில் காவல்துறை விசாரணை நீதிமன்ற போராட்டம் என கதையின் பல பகுதிகளையும் இயல்பாக இணைத்திருக்கிறார். ஒரு சிறிய பதக்கம் எப்படி ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது என்பதையும் அதன் மூலம் சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை பேசுவதும் படத்திற்கு வித்தியாசமான தன்மையை கொடுக்கிறது

அதே நேரத்தில் படத்தில் சில கேள்விகளும் இருக்கின்றன. பதக்கம் தொடர்பான சில விஷயங்களை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். சில இடங்களில் திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும். குறிப்பாக பதக்கத்தின் பின்னணி மற்றும் சில சட்ட ரீதியான விஷயங்கள் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு வருகிறது

ஆனால் இந்த சிறிய குறைகளை தாண்டி ஒரு சாதாரண மனிதனின் நேர்மைக்கு என்ன விலை என்ற கேள்வியை படம் அழுத்தமாக முன்வைக்கிறது. தவறு செய்யாத ஒருவரை குற்றவாளியாக்கி அவருடைய மானத்தையும் வாழ்க்கையையும் பாதித்த பிறகு அதை எப்படி மீட்டுக் கொடுப்பது என்பதுதான் படத்தின் முக்கியமான கருத்து

மொத்தத்தில், ‘என்ன விலை’ ஒரு மனிதன் குற்றவாளியாக்கப்பட்டால் அவன் இழந்த மானத்திற்கு என்ன விலை என்பதுதான் என்ன விலை படத்தின் முக்கியமான கேள்வி