Categories
Reviews

‘சண்டக்காரி’ திரைப்பட விமர்சனம்

‘சண்டக்காரி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:
Vimal
Shriya Saran
Prabhu
Punnagai Poo Geetha
K R Vijaya
Sathyan
Rekha
Uma Padmanabhan
Dev Gill
Crane Manohar
Mahanadhi Shankar

Written and Directed by R Mathesh
Produced by Punnagai Poo Geetha
Music by Amrish
Cinematography by R P Gurudev
Edited by Dinesh Ponraj

‘சண்டக்காரி’ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேரும் இளைஞராக வருகிறார். தங்கப்பதக்கம் பெற்ற பொறியியல் பட்டதாரியான அவர் தனக்கென்று ஒரு செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஆனால் அவர் வேலை செய்யும் ஸ்ரேயா மிகவும் கோபக்காரரும் கண்டிப்பான மேலதிகாரியுமாக இருக்கிறார். அவரிடம் ஏற்கனவே பல உதவியாளர்கள் வேலை செய்ய முடியாமல் வெளியேறிய நிலையில் விமல் மட்டும் தொடர்ந்து தாக்குப்பிடிக்கிறார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடையும் சூழ்நிலை வருகிறது. தொடர்ந்து லண்டனில் தங்கி தனது சிஇஓ பதவியை காப்பாற்ற வேண்டும் என்பதால் விமலை திருமணம் செய்து கொண்டது போல் நடித்து குடியுரிமை பெற திட்டமிடுகிறார். ஆனால் விமலுக்கும் ஸ்ரேயா மீது ஒரு கோபம் இருக்கிறது. அதனால் ஸ்ரேயாவின் எதிராளியுடன் சேர்ந்து அவரது திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.

ஸ்ரேயாவின் திருமண திட்டத்திற்கு விமல் சம்மதித்தாலும் ஒரு நிபந்தனை வைக்கிறார். தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை சந்தித்து ஒரு மாதம் அவர்களுடன் தங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதனால் லண்டனில் தொடங்கிய கதை தமிழக கிராமத்திற்கு வருகிறது. அங்கே குடும்பம் காதல் உறவுகள் மற்றும் நகைச்சுவை என கதை வேறு பாதையில் பயணிக்கிறது.

விமல் வழக்கம்போல் தனது இயல்பான நடிப்பாலும் காமெடி டைமிங்காலும் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரேயாவின் கோபத்தையும் கட்டளைகளையும் சமாளிக்கும் காட்சிகளில் நன்றாக ரசிக்க வைக்கிறார். கிராமத்திற்கு வந்த பிறகும் அவரது வழக்கமான உடல் மொழி மற்றும் காமெடி பாணி தொடர்கிறது.

ஸ்ரேயா சரண் படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி கோபக்காரி மற்றும் திமிரான மேலதிகாரியாக வருகிறார். ஆரம்பத்தில் அதிகாரத்துடன் இருக்கும் மாயா கதாபாத்திரம் கிராமத்திற்கு வந்த பிறகு அங்குள்ள மனிதர்களின் அன்பால் மெல்ல மெல்ல மாறுவது கதையில் முக்கியமான பகுதி. ஸ்ரேயா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

விமல் மற்றும் ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல்கள்தான் படத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சம். இருவருடைய குணமும் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால் சில காமெடி காட்சிகள் நன்றாக வேலை செய்கின்றன.

பிரபு கே ஆர் விஜயா உமா பத்மநாபன் சத்யன் புன்னகை பூ கீதா ரேகா தேவ் கில் கிரேன் மனோகர் மகாநதி சங்கர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஆர் பி குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக இருக்கிறது. லண்டன் நகரத்தின் அழகையும் தமிழக கிராமத்தின் இயற்கை அழகையும் வித்தியாசமான பின்னணியில் அழகாக காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளும் வண்ணமயமாக இருக்கின்றன.

அம்ரீஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையும் காமெடி மற்றும் குடும்ப காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பில் பெரிய குறைகள் இல்லை என்றாலும் சில காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும்.

இயக்குநர் ஆர் மாதேஷ் லண்டன் கார்ப்பரேட் வாழ்க்கையையும் தமிழக கிராமத்து குடும்ப சூழலையும் இணைத்து ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் மையக்கதையில் இருக்கும் சுவாரஸ்யம் முழுமையாக திரைக்கதையில் வெளிப்படவில்லை. சில இடங்களில் படம் மெதுவாக செல்கிறது. சில காமெடி காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை கொடுக்கவில்லை.

மேலும் விமலுக்கு நிரந்தர லண்டன் குடியுரிமை இருக்கும் நிலையில் அவரது குடும்பம் தமிழகத்தில் இருப்பது மற்றும் ஸ்ரேயா பல வருடங்கள் லண்டனில் இருந்தும் குடியுரிமை பெறாமல் இருப்பது போன்ற சில லாஜிக் கேள்விகளும் இருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டு பார்த்தால் படத்தை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘சண்டக்காரி’ ஒரு பெரிய புதுமையான கதை இல்லாவிட்டாலும் விமல் ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல் காட்சிகள் காதல் காமெடி மற்றும் குடும்ப பின்னணி ஆகியவற்றால் ஆங்காங்கே ரசிக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *