full screen background image
Search
Monday 27 July 2026
  • :
  • :
Latest Update

“உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் கலந்துகொண்டன. இவ்விழாவில் திரையிடப்பட்ட “உடன்பால்” படம் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களைக் குவித்தது.

படத்தின் திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான திரைக்கதையில் சொல்லிய இந்தத் திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிவிழாவில் உடன்பால் திரைப்படம் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.
தயாரிப்பாளருக்கு 50000 காசோலையும், இயக்குனருக்கு 50000 காசோலையும், விருதுடன் வழங்கப்பட்டது.

‘உடன்பால்’ விருதைவென்ற போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் படக்குழுவினரைப் பாராட்டினர்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் ஓடிடித் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *