full screen background image
Search
Friday 24 July 2026
  • :
  • :
Latest Update

23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது

23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான மதிப்பிற்குரிய திரு.வி.சி.குகநாதன் அவர்கள்.

தேர்தல் அதிகாரி திரு. உமாசங்கர் பாபு அவர்களின் முன்னிலையில்.. தலைவராக திரு.சேரன், பொதுச் செயலாளராக திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக திரு.ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றார்கள்.

தலைவர் சேரன் அனைவரையும் வரவேற்று சங்கத்தின் நலனுக்காக இணைந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று உரையாற்றினார்.

இனி இங்கு இரண்டு அணிகள் இல்லை, எல்லோரும் ஒரே அணி, சங்கத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையாக செயல்படுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார் திரு.வி.சி.குகநாதன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *