Over 1,000 patients successfully treated at Apollo Proton Cancer Centre, IBA partners exclusively for Proton Beam Therapy Training.
India to train oncologists from across the globe on Proton Beam Therapy
India / Chennai, July 7, 2023: Since its inception in 2019, Apollo Proton Cancer Centre (APCC), the first Proton Therapy Centre in South Asia & the Middle East, has marked a definitive step ahead by making the world’s most advanced radiation therapy more accessible to cancer patients from across the globe. APCC has shown remarkable expertise in Proton Beam Therapy (PBT) and has showcased excellent clinical outcomes. Over 1,000 patients have been treated with proton beam therapy at APCC.
In line with our vision to drive positive change across the world, we announce an exclusive partnership with Ion Beam Applications SA (IBA), a leading manufacturer of innovative advanced Proton Therapy System. This collaboration, which will be effective from July 15, 2023, marks a significant milestone in the field of oncology as it brings together two prominent names to provide specialized Proton Beam Therapy training to oncologists from across the globe.
Proton Beam Therapy has emerged as a highly effective and precise radiation treatment for various types of cancers. By utilizing protons, this innovative therapy allows for targeted tumor treatment while minimizing damage to surrounding healthy tissues. The Apollo Proton Cancer Centre with its highly trained and experienced professionals has been at the forefront of harnessing this cutting-edge technology to deliver better outcomes and improved quality of life for cancer patients.
This unique collaboration between APCC and IBA aims to extend expertise in proton therapy through an advanced training and education program for the benefit of cancer patients and facilitate the development of cancer care.
The center will host training programs designed to enhance the expertise of oncologists from diverse backgrounds. By sharing their in-depth knowledge and experiences, the aim is to foster collaboration and knowledge exchange to drive further innovation in cancer treatment across the globe.
Commenting on the collaboration, Mr Claude Dupont, Sales Director at IBA, said, “Since the opening of the Apollo Proton Cancer Centre more than four years ago, Apollo Hospitals has shown its expertise in successfully treating a large variety of cancer cases. IBA is delighted to sign the final Collaboration Agreement in which Apollo Hospitals commits to sharing its expertise in providing high-quality training and education to Proton Therapy users in Asia and other regions of the globe.”
Dr Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprises Limited said, “We are pleased to announce our exclusive partnership with IBA for Proton Beam Therapy training at Apollo Proton Cancer Centre. This collaboration represents a significant milestone in our mission to provide world-class cancer care and foster global advancements in the field of oncology. By joining forces with IBA, a leader in proton therapy solutions, we aim to not only train oncologists from across the world but also contribute to the wider adoption of Proton Beam Therapy as a highly effective treatment option. We believe that this partnership will help shape the future of cancer care and enable us to make a positive impact on the lives of patients worldwide.”
Mr Dinesh Madhavan, President, Group Oncology & International, Apollo Hospital Enterprises Limited, stated, “Proton Beam Therapy one of the most advanced cancer treatments was introduced to India and South Asia by Apollo. With over 1000 patients that have benefitted from the treatment, we are now set to train clinicians, physicists and technologists from across the world, this will ensure that access to proton beam therapy improves and we continue to spearhead the heal in India and heal by India.”
To meet the growing demand for Proton Beam Therapy training, the Apollo Proton Cancer Centre has outlined its future expansion plans for the benefit of oncologists from Asia and other parts of the world.
About Apollo Proton Cancer Centre
Apollo Proton Cancer Centre, the most advanced Cancer Centre and the first Proton Therapy Centre in South Asia & the Middle East and it is India’s first JCI accredited Cancer hospital. At the bedrock of APCC’s approach to treating cancer is its robust multi-disciplinary platform; highly skilled professionals who come together to form a cancer management team (CMT). Each CMT is focused on delivering the best possible outcomes for its patients. An added feather in the cap is the recent launch of India’s first & only site-specific Robotic Oncology Program.
About IBA
IBA (Ion Beam Applications S.A.) is the world leader in particle accelerator technology. The company is the leading supplier of equipment and services in the field of proton therapy, considered to be the most advanced form of radiation therapy available today. IBA is also a leading player in the fields of industrial sterilization, radiopharmaceuticals and dosimetry. The company, based in Louvain-la-Neuve, Belgium, employs approximately 1,600 people worldwide. IBA is a certified B Corporation (B Corp) meeting the highest standards of verified social and environmental performance.
IBA is listed on the pan-European stock exchange EURONEXT (IBA: Reuters IBAB.BR and Bloomberg IBAB.BB).
For media queries, please contact MSL
Jagan | jagan.rajagopalan@mslgroup.com | 9840966867
Nishtha Chandel | Nishtha.chandel@mslgroup.com | 9999772954
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில்
1000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பலனளிக்கும் வெற்றிகர சிகிச்சை!
புரோட்டான் பீம் தெரபி பயிற்சிக்காக பிரத்யேக கூட்டுவகிப்பில் இணையும் ஐபிஏ
புரோட்டான் பீம் தெரபி மீது உலகெங்கிலுமிருந்து வருகை தரும் புற்றுநோயியல் மருத்துவர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும்
இந்தியா / சென்னை, ஜுலை 7, 2023: தெற்காசியா மற்றும் மத்தியகிழக்கு பிராந்தியத்தின் முதல் புரோட்டான் தெரபி மையமாக அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்தே உலகெங்கிலுமிருந்து வரும் புற்றுநோயாளிகளுக்கு உலகின் மிக நவீன, கதிரியக்க சிகிச்சையினை அணுகிப் பெறத்தக்கதாக ஆக்கியதன் வழியாக உறுதியான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. புரோட்டான் பீம் தெரபி (PBT) – ல் குறிப்பிடத்தக்க நிபுணத்துவ திறனை APCC, வலுவாக நிரூபித்திருக்கிறது. இதன் மூலம் மிகச்சிறப்பான மருத்துவ விளைவுகள் கிடைக்கின்றன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. APCC – ல் புரோட்டான் பீம் தெரபியின் மூலம் 1000-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
புற்றுநோய்க்கான சிகிச்சையில் உலகெங்கிலும் நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில், புத்தாக்கமான, நவீன புரோட்டான் தெரபி சிஸ்டம் – ன் முன்னணி தயாரிப்பாளரான ஐயன் பீம் அப்ளிகேஷன்ஸ் SA (IBA) நிறுவனத்துடன் ஒரு பிரத்யேக கூட்டுவகிப்பு நடவடிக்கையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் பெருமிதத்துடன் அறிவிக்கிறது. 2023 ஜுலை 15 முதல், செயல்பாட்டிற்கு வரும் இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள புற்றுநோயியல் மருத்துவர்களுக்கு தனிச்சிறப்பான புரோட்டான் பீம் தெரபி மீது பயிற்சியை வழங்க இத்துறையில் சிறந்து விளங்கும் இரு பிரபல அமைப்புகளை ஒருங்கிணைத்திருப்பதே இதற்கு காரணம்.
புரோட்டான் பீம் தெரபி, புற்றுநோய்களின் பல்வேறு வகைகளுக்கு அதிகம் பலனளிக்கின்ற, துல்லியமான கதிரியக்க சிகிச்சையாக உருவெடுத்திருக்கிறது. புரோட்டான்களை பயன்படுத்துவதன் மூலம் புற்றுக்கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தை பெருமளவு குறைக்கவும் மற்றும் புற்றுநோய் கட்டிகளை துல்லியமான இலக்காக கொண்டு கதிரியக்க சிகிச்சை வழங்கப்படுவதையும் இந்த புதுமையான சிகிச்சை சாத்தியமாக்குகிறது. சிறப்பான பயிற்சியும், அனுபவமும் கொண்ட மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை விளைவுகளையும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரத்தையும் வழங்குவதற்கு மிக நவீன தொழில்நுட்பத்தை நேர்த்தியாக பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
புற்றுநோயாளிகள் பலன் பெறுவதற்காக ஒரு மேம்பட்ட பயிற்சி மற்றும் கல்வி திட்டத்தின் வழியாக புரோட்டான் தெரபியில் நிபுணத்துவத்தை மேலும் பரவலாக்குவதை நோக்கமாக கொண்டே APCC மற்றும் IBA -க்கு இடையிலான இந்த கூட்டு செயல்பாடுக்கான ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பு மேலும் மேம்படுவதை இது உறுதிசெய்யும்.
மாறுபட்ட பின்புலங்களை கொண்ட புற்றுநோயியல் சிகிச்சை மருத்துவர்களின் திறனையும், நிபுணத்துவத்தையும் இன்னும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சி செயல்திட்டங்களை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் நடத்தும். உலகெங்கிலும் புற்றுநோய் சிகிச்சையில் மேலும் புத்தாக்க செயல்பாட்டை முன்னெடுப்பதற்காக ஒத்துழைப்பையும் மற்றும் அறிவு பரிமாற்றத்தையும் வளர்ப்பது என்ற குறிக்கோளை தங்களது ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்வதன் மூலம் இம்மையம், செயல்படுத்தும்.
இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை குறித்து IBA -ன் விற்பனை துறை இயக்குனர் திரு. கிளாட் டூபான்ட் பேசுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு வகையான புற்றுநோய் நேர்வுகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிப்பதில் தனது நிபுணத்துவத்தை அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறது. அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் உடன் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் IBA பெருமகிழ்ச்சி கொள்கிறது. ஆசியாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள புரோட்டான் தெரபியை பயன்படுத்தும் மருத்துவப் பணியாளர்களுக்கு அதன்மீது உயர்தர பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதில் தனது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள இதன்மூலம் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் பொறுப்புறுதி ஏற்றிருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது: “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் புரோட்ன் பீம் தெரபி மீது பயிற்சியளிப்பதற்காக ஐபிஏ உடன் எமது பிரத்யேக கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவது இத்துறையில் உலகளாவிய மேம்பாடுகளை பேணி வளர்ப்பது என்ற இலக்குடன் செயல்படும் எமது பயணத்தில் இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கிறது. புரோட்டான் தெரபி தீர்வுகளில் முதன்மை வகிக்கும் ஐபிஏ உடன் இணைந்து செயல்படுவதன் வழியாக உலகெங்கிலும் உள்ள புற்றுநோயியல் மருத்துவர்களுக்கு பயிற்சியளிப்பது எமது நோக்கமாகும்; அதுமட்டுமன்றி, அதிக பயனளிக்கும் சிகிச்சை விருப்பத்தேர்வாக புரோட்டான் பீம் தெரபி இன்னும் பரவலாக ஏற்கப்படுவதற்கும் சிறந்த பங்களிப்பை இது வழங்கும். புற்றுநோய் சிகிச்சை துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நோயாளிகளின் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த கூட்டுவகிப்பு நடவடிக்கை உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குரூப் ஆன்காலஜி & இன்டர்நேஷனல் துறையின் தலைவர் திரு. தினேஷ் மாதவன் பேசுகையில், “உலகளவில் மிக நவீன புற்றுநோய் சிகிச்சைகளுள் ஒன்றான புரோட்டான் பீம் தெரபி, இந்தியாவிலும், தெற்காசியாவிலும் அப்போலோவால் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இச்சிகிச்சையின் மூலம் 1000-க்கும் அதிகமான நோயாளிகள் பலனடைந்திருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள இத்துறை மருத்துவர்கள், இயற்பியல் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பயிற்சியளிக்க இப்போது நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். புரோட்டான் பீம் தெரபியை பெறுவதற்கான அணுகுவசதியை இது உறுதிசெய்யும். இந்தியாவில் குணம் பெறுங்கள் மற்றும் இந்தியாவால் குணமடையுங்கள் என்ற செயல்திட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம்.” என்று கூறினார்.
புரோட்டான் பீம் தெரபி பயிற்சிக்காக வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த புற்றுநோயியல் மருத்துவர்களின் நலனுக்காக தனது எதிர்கால விரிவாக்க திட்டங்களையும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் வகுத்திருக்கிறது.
அப்போலோ புரோட்டான் சென்டர் குறித்து
அப்போலோ புரோட்டான் சென்டர் என்பது, மிக நவீன புற்றுநோய் சிகிச்சை மையமாகும். இது, தெற்காசியா மற்றும் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெரபி சென்டர் என்ற பெருமைக்குரியது. JCI அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான APCC – ன் அணுகுமுறையின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் வலுவான பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல்தளம் மற்றும் ஒரு புற்றுநோய் மேலாண்மை குழுவாக (CMT) உருவாக ஒன்றிணையும் அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள். ஒவ்வொரு CMT – ம், அவர்களது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் முதல் மற்றும் ஒரே அமைவிடத்திற்குரிய – ரோபோட்டிக் புற்றுநோயியல் செயல்திட்டம் என்ற இதன் சமீபத்திய அறிமுகம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் திறனை இன்னும் சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறது.
ஐபிஏ (IBA) குறித்து
ஐபிஏ என்பது (அயன் பீம் அப்ளிகேஷன்ஸ் S.A.), துகள்முடுக்கி தொழில்நுட்பத்தில் உலகளவில் முதன்மை வகிக்கும் நிறுவனமாகும். இன்றைக்கு கிடைக்கக்கூடிய மிக நவீன வடிவிலான கதிரியக்க சிகிச்சையாக கருதப்படுகின்ற புரோட்டான் தெரபி பிரிவில் சாதனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தொழிலக தூய்மையாக்கல் தொழில்நுட்பம், ரேடியோபார்மாசூட்டிகல்ஸ் மற்றும் கதிர்வீச்சு ஏற்பளவியல் ஆகிய பிரிவுகளிலும் ஐபிஏ பிரபலமாக அறியப்படுகிறது. பெல்ஜியம் நாட்டின் லுவைன் – லா -நியூவ் என்ற இடத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தில் உலகளவில் ஏறக்குறைய 1600 நபர்கள் பணியாற்றுகின்றனர். சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறனில் மிக உயர்ந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்ற, சான்றாக்கம் செய்யப்பட்ட ஒரு B கார்ப்பரேஷன் (B கார்ப்) என ஐபிஏ திகழ்கிறது.
ஐரோப்பியா முழுவதுக்குமான பங்குச்சந்தையான யூரோநெக்ஸ்ட் (IBA: Reuters IBAB.BR மற்றும் Bloomberg IBAB.BB) என்பதில் ஐபிஏ நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஊடக விசாரணைகளுக்கு, தொடர்புகொள்க: எம்எஸ்எல்
Nanda Gopal | nanda.gopal@mslgroup.com | 9176218089