full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

‘ராயர் பரம்பரை’ திரைப்பட விமர்சனம்

‘ராயர் பரம்பரை’ திரைப்பட ரேட்டிங்:2.5/5

Casting : Krishna, Saranya,Anandraj, Mottai Rajendran, Manobala, RNR Manohan, Krithika, Anshula Jitesh Dhawan KR Vijaya, Kasturi, Sharmila, Bava Laxmanan, Seshu, Mippu, Tiger Thangadurai, Kalloori Vinoth

Directed By : Ramanath T

Music By : Ganesh Ragavendra

Produced By : Chinnasamy Cine Creations – Chinnasamy Mounaguru

சின்ன சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது “ராயர் பரம்பரை”.

மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி சிரிப்பை சீரியசாக எடுத்து இயக்கியுள்ளார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நாயகனாக நடிகர் கிருஷ்ணா. நன்றாக ஆடி, பாடி, காதலித்து, சண்டை போட்டு தமிழ் கமர்ஷியல் சினிமாவின் நாயகனுக்கான அத்தனை தகுதிகளிலும் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்கிறார். ஆனால் இவை அனைத்துக்கும் ஆதாரமான கதைத்தேர்வில் கவனம் செலுத்தினால் நன்மை!

சரண்யா நாயருக்கு வழக்கமான ஹீரோயின் வேடம் இடைவேளை வரை அவ்வப்போது வந்து போகிறவர் கிருஷ்ணா சொல்லும் பிளாஷ் பேக்கில் இருந்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறார்.

கிருஷ்ணாவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் இரண்டாவது மூன்றாவது நாயகிகள் கதா நாயகனை காதலிக்க துரத்துகிறார்கள் ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஏன் வந்தார்கள் எப்படி வந்தார்கள் முடிவில் எங்கு போனார்கள் என்ற எந்த ஒரு விபர குறிப்பும் படத்தில் இல்லை.

ஆனந்தராஜ் வழக்கம்போல் வில்லனாக அதே சமயத்தில் காமெடியனாகவும் வருகிறார் அவர் சொல்லும் “ஐ நோ, ஆல் டோன்ட் நோ… ஆல் டோன்ட் நோ, ஐ நோ…” என்கிற ஆங்கில சொல் ஆங்கிலேயர்களை கண் கலங்க செய்துள்ள பெருமை இயக்குனரை சாரும்.படத்தில் காமெடிக்கென்று வரும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, பாவா லக்ஷ்மணன், சேஷு, டைகர் தங்கதுரை போன்றோர்களை அவரது போக்கில் விட்டிருந்தா கூட நகைச்சுவையைக் அள்ளி கொடுத்திருப்பார்கள். கிருஷ்ணாவின் நண்பனாக வரும் கல்லூரி வினோத் பாவம், கிருஷ்ணாவுக்காக நிறைய அடி வாங்குகிறார்.

படத்தின் இடைவேளையில் கஸ்தூரியும், கிளைமாக்ஸில் பவர் ஸ்டார் சீனிவாசனும் வருகிறார்கள். படத்தில் பவர் ஸ்டாருக்கு கொடுக்கிற ‘சீமான் செங்கல்வராயன்’ பில்டப்பும் அவர் வந்து இறங்குகிற விதமும் அதுவரை பொறுமை காத்த நமக்கு ஆறுதலான சிரிய நமட்டு சிரிப்பைத் தருகிறது.

முதல் பாதியைக் காட்டிலும் கொஞ்சம் சிரிக்க வைத்து ஆசுவாசப்படுத்தும் இரண்டாம் பாதி ஓகே. ஆனால் காதலர்களுக்கு அட்வைஸ், பெற்றோரை வேதனைப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாட்டு என நாம் எந்த நூற்றாண்டு சினிமா பார்க்கிறோம் என வேதனைப் பட வைக்கிறார்கள்!

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் ‘அரபுநாடு ஈச்சமரம்’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. ஆனந்த்பாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை என ரசிக்க வைக்கும் காமெடியன்களுடன் களமிறங்கி சிரிக்க வைக்காமல் நம்மை சோதித்திருக்கிறார்கள்!கணேஷ் ராகவேந்திராவின் இசை சொந்த முயற்சியாக இருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும். பளிச்சென்று துல்லியமாகப் படம் பிடித்திருக்கும் விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள் மோகன் ராஜாவின் பாடல்களில் வாழ்க்கை பற்றிய தத்துவ பாடல் அருமை.

மொத்தத்தில் ராயர் பரம்பரை – காமெடி பரம்பரை




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *