full screen background image
Search
Wednesday 30 April 2025
  • :
  • :
Latest Update

‘இன்ஃபினிட்டி’ திரைப்பட விமர்சனம்

‘இன்ஃபினிட்டி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Natty Natarajan, Vidhya Pradheep, Munishkanth, Tha.Muruganandham, Vinod Sagar, Charles Vinoth, Nikitha, Jeeva Ravi, Sindhuja, Adhavan

Directed By : Sai Karthik

Music By : Balasubramanian.G

Produced By : Menpani Productions – V.Manikandan, U.Prabhu, K.Arputharajan, D.Balabaskaran

நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இளம் பெண் உள்பட 4 கொலைகள் நடக்கிறது. இந்த வழக்கு மீதான விசாரணை சி பி ஐ யின் தரப்படுகிறது. சிபிஐ அதிகாரி நட்டி உடனடியாக விசாரணையில் இறங்குகிறார். இந்நிலையில் அவரை கொல்ல் கொலைகாரன் முயல்கிறான் அதிலிருந்து தப்பிக்கும் நட்டி இறுதியில் கொலைகாரனை பிடித்தாரா, எதற்காக கொலைகள் நடக்கிறது என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். உண்மையான கொலையாளி யார்? எதற்காக இத்தனைக் கொலை நடந்தது? என சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் ‘இன்ஃபினிட்டி’ இயக்குநர் சாய் கார்த்திக்.

‘இன்ஃபினிட்டி’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைகளில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே வெற்றிக்கான காரணமாக இருக்கும். ஆனால் ‘இன்ஃபினிட்டி’ படம் ஏதோ அவசர அவசரமாக தயாரானது போல இருக்கிறது.

இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்தால் போதாது. காவல் துறை எப்படி இயங்குகிறது, சிபிஐ அதிகாரிகள் எப்படி செயல்படுகின்றனர் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.படத்தின் ஒரே ஆறுதல் நட்டி நட்ராஜ் மட்டுமே. துடிப்பான சிபிஐ அதிகாரியான குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார். மற்றபடி படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் முதல் துணைக் கதாபாத்திரங்கள் வரை அனைவரிடமும் அமெச்சூர்த்தனமான நடிப்பே வெளிப்படுகிறது. பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை ஓகே ரகம். பிரதீப் குமார் குரலில் ’உயிர் துறந்து’ பாடல் ஈர்க்கிறது.

இளம்பெண் படுகொலைக்கு சொல்லப்படும் காரணம் படு அபத்தம். கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காட்சிகள் அவை. தனது உதவியாளருடன் சென்று நட்டி விசாரிக்கும் காட்சிகள் கொட்டாவி வரவைக்கின்றன. கான்ஸ்டபிளாக வரும் முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.

எல்லாம் முடிந்ததும் தன் முன்னால் மைக்கை நீட்டும் பத்திரிகையாளர்களிடம் சம்பந்தமே இன்றி தனி மனித ஒழுக்கம் குறித்தெல்லாம் கிளாஸ் எடுக்கிறார் நட்டி. இதையெல்லாம் விட மணிமகுடமாக ரோலக்ஸ் பாணியில் க்ளைமாக்ஸில் எங்கிருந்தோ புதிதாக ’காட்வின்’ என்ற ஒரு வில்லனை இறக்கியதெல்லாம் கொடுமையின் உச்சம். படத்தின் இறுதியில் ‘இனிஃபினிட்டி: சாப்டர் 2’ என்று போட்டு முடிக்கிறார்கள்.

இன்ஃபினிட்டி – தொடரவேண்டாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *