‘Cold Call’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew:
Siddhu Moolimani
Santhosh S A
Sri Vaishnav
Krishna Vijay
Balaji Rajasekhar
Sreekanth V
Amitha Ranganatha
Nisha Hegde
Mary Litti
Keerthana Pulki
Nithin Sam Reginald
Rashmika Santhosh
Written and Directed by Thambithurai Ethuraj
Produced by Kesava Murthy, Santhosh Kumar and Thambithurai Ethuraj
Production Company Wagthro Entertainment
Music by Pranav Giridharan
Cinematography by Saravanan Natarajan
Edited by Suresh Arumugam
‘Cold Call’ தமிழகம் கர்நாடகம் ஆந்திரப் பிரதேசம் கேரளா என்று வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த சித்து மூலிமணி சந்தோஷ் ஸ்ரீ வைஷ்ணவ் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்கள் ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் என்றாலும் நாளடைவில் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள்
விற்பனை பிரதிநிதி வேலை சாதாரணமான வேலை கிடையாது தொடர்ந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும் நிறுவனம் கொடுக்கும் இலக்கை அடைய வேண்டும் என்று பல அழுத்தங்கள் இருக்கும் இருந்தாலும் நான்கு பேரும் அந்த வேலையை சந்தோஷமாக செய்து வருகிறார்கள்
ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்களால் செயல்பட முடியாததால் மேலதிகாரியின் கோபத்துக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள் இதற்கிடையில் ஒரு தொழிலதிபரின் மகன் கடத்தப்படுகிறார் அந்த கடத்தல் வழக்கில் இந்த நான்கு நண்பர்களுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகித்து அவர்களை தேட ஆரம்பிக்கிறது.
தாங்கள் செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளும் நான்கு பேரும் காவல்துறையிடம் சிக்காமல் தப்பிப்பதோடு தங்கள் மீது இருக்கும் பழியை போக்க வேண்டும் என்றும் கடத்தப்பட்ட சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள்
அதற்காக தாங்கள் விற்பனை துறையில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் தங்களுடைய சாதுர்யத்தையும் பயன்படுத்தி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் இதிலிருந்து அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதி
நான்கு கதாநாயகர்களும் தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் என்றாலும் அவர்களுடைய நடிப்பு ஓரளவுக்கு இயல்பாக இருக்கிறது ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் நால்வருக்கும் தனித்தனியாக முக்கியத்துவம் கிடைக்கிறது காமெடி காட்சிகளிலும் பதற்றமான காட்சிகளிலும் நன்றாக பங்களிப்பு செய்திருக்கிறார்கள்
அமிதா ரங்கநாதா நிஷா ஹெக்டே மேலி லிட்டி கீர்த்தனா புல்கி ஆகிய நான்கு நாயகிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக செய்திருக்கிறார்கள் துணை கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்
சரவணன் நடராஜனின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது பெங்களூரு நகரத்தின் பின்னணியும் நான்கு நண்பர்களை பின்தொடரும் காட்சிகளும் நன்றாக படமாக்கப்பட்டிருக்கிறது
பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் தன்மையுடன் இருக்கிறது பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்தை அதிகமாக பாதிக்காமல் கதையை நகர்த்துகிறது
இயக்குனர் தம்பிதுரை விற்பனை பிரதிநிதிகளின் வேலை எப்படி இருக்கும் என்பதை வெறுமனே விளக்கும் படமாக இல்லாமல் அந்த வேலையின் பின்னணியில் நான்கு நண்பர்களின் வாழ்க்கை ஒரு கடத்தல் பிரச்சனையில் சிக்குவது போல கதையை உருவாக்கியிருக்கிறார் இதுதான் படத்தின் வித்தியாசமான அம்சமாக இருக்கிறது
படம் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இல்லையென்றாலும் கிடைத்த வசதிகளை வைத்து காமெடி நட்பு கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் சில இடங்களில் இன்னும் விறுவிறுப்பு இருந்திருக்கலாம் என்றாலும் மொத்தத்தில் அதிக டென்ஷன் இல்லாமல் ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு டைம் பாஸ் படமாக கோல்ட் கால் இருக்கிறது











