Categories
Reviews

‘பாரிஸ் கஃபே’ திரைப்பட விமர்சனம்

‘பாரிஸ் கஃபே’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew

Guru Somasundaram
Anumol
Vijay Vishwa
Archana Kumar
Sai Vicky
Nayana Sai
Bipin

Produced by Kanmani Ranganathan
Production Companies Thunder Media and LV Entertainment
Written and Directed by Saraj Seelan
Music by K
Cinematography by Satheesh G
Edited by V J Sabu Joseph
Art Direction by Thamu MFA
Costume Design by V Dhanaraj
Dance Choreography by Prashanth
Makeup by Karthik and Team
Photography by Sivaraj
Public Relations by Riyas K Ahmed and Paras Riyas

‘பாரிஸ் கஃபே’ குரு சோமசுந்தரம் ஒரு அரசு மருத்துவராக வருகிறார் அவருடைய மனைவி அனுமோல் சமூக அக்கறை கொண்ட பெண்ணாக இருக்கிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் மருத்துவ கருத்தரங்குக்காக பாரிஸ் செல்லும் குரு சோமசுந்தரம் அங்குள்ள ஒரு கஃபேவில் சென்னையை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்க்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது அவர்களை பற்றி விசாரிக்கும் போது அந்த காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது

சென்னைக்கு திரும்பிய குரு இந்த விஷயத்தை தன்னுடைய மனைவியிடம் சொல்ல அதன் பிறகு இருவருக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடு ஏற்படுகிறது அந்த சம்பவத்தில் தன்னுடைய கணவருக்கும் ஒரு தொடர்பு இருப்பதை அனுமோல் தெரிந்து கொள்கிறார் இதனால் கணவரை விட்டு பிரிந்து செல்கிறார்.


அமெரிக்காவில் இருக்கும் இவர்களுடைய மகள் அர்ச்சனா பெற்றோர்கள் பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய காதலன் விஜய் விஷ்வாவுடன் இந்தியா வருகிறார் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார் அதே நேரத்தில் தன்னுடைய பெற்றோர்கள் பிரிந்ததற்கான உண்மையான காரணத்தையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்

இதன் மூலம் படம் கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஆணவக்கொலை சம்பவத்தையும் அதை எப்படி மறைத்தார்கள் என்பதையும் சொல்ல ஆரம்பிக்கிறது

குரு சோமசுந்தரம் இந்த படத்தில் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக அமைதியான மருத்துவராகவும் அதே நேரத்தில் கடந்த கால குற்ற உணர்வை சுமந்து கொண்டிருக்கும் மனிதராகவும் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது அதிகமாக நடிக்காமல் பார்வை மற்றும் உடல்மொழி மூலமாகவே நிறைய விஷயங்களை வெளிப்படுத்துகிறார்

அனுமோலும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் கணவர் ஒரு பக்கம் தான் நம்பும் கொள்கை மற்றும் நீதி இன்னொரு பக்கம் என்று இரண்டுக்கும் நடுவில் சிக்கி நிற்கும் கதாபாத்திரத்தை அழுத்தமாக கொண்டு வந்திருக்கிறார்

விஜய் விஷ்வா அர்ச்சனா சாய் விக்கி நயனா சாய் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள் குறிப்பாக சாய் விக்கி மற்றும் நயனா சாய் வரும் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது

படத்தின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது சென்னை பாரிஸ் அமெரிக்கா போன்ற பின்னணிகளை குறைந்த பட்ஜெட்டிலும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் உதவியுடன் அழகாக காட்டியிருக்கிறார்கள் இசையும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது படத்தொகுப்பும் பெரும்பாலும் படத்தின் ஓட்டத்திற்கு உதவுகிறது

இயக்குனர் சராஜ் சீலன் ஆணவக்கொலை போன்ற ஒரு கனமான விஷயத்தை நேரடியாக வன்முறை காட்சிகள் மூலமாக சொல்லாமல் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனை மற்றும் பல வருடங்களுக்கு முன்பு மறைக்கப்பட்ட ஒரு சம்பவம் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பது படத்தின் வித்தியாசமான விஷயம்

அதே நேரத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம் குறிப்பாக ஆரம்பத்தில் குடும்ப பின்னணியை சொல்ல எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் சில திருப்பங்களையும் முன்கூட்டியே யூகிக்க முடிகிறது

மொத்தத்தில், ‘பாரிஸ் கஃபே’ சமூக கருத்துள்ள படங்களை பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *