full screen background image
Search
Friday 14 August 2026
  • :
  • :
Latest Update

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்பட விமர்சனம்

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Anandraj, Samyuktha, Deepa, Sasilaya, Munishkanth, Raams, Aradhya

Directed By : A.S. Mukundan

Music By : Srikanth Deva

Produced By : Anna Productions – V.Suganthi Annadurai

‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’ ஒரு பெரிய மாஃபியா தலைவனை மையமாக கொண்டு சென்னையில் நடக்கும் ரவுடி, போலீஸ், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்த ஒரு மசாலா படம்.
சென்னையில் பெரிய நிறுவனங்களுக்கு கிளைகள் இருப்பது போல, ஆனந்தராஜ் என்ற பெரிய மாஃபியா தலைவனுக்கு எல்லா ஆள்களும் கிளை ஆபீஸ் மாதிரி வேலை செய்கிறார்கள்.

எவ்வளவு கெட்ட வேலை செய்தாலும் அவர்மேல் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட வராத நிலை. லாயர் படித்தவர் போல வெள்ளுடை போட்டுட்டு பாஸாகப் போய் திரிந்தாலும், உள்ளுக்குள்ளே எல்லா குற்றங்களிலும் கை வைத்திருக்கிறார்.
அவன் மகள் காதலிச்சவனை மிரட்டி, அந்த பையன் காயப்பட்டு சாவதால் கூட குடும்பம் புகார் செய்யாது பேய் பிடிச்ச மாதிரி அமைதியாக இருக்கிறது.


அவனுக்குப் எதிரிகள் ஆக்சன் பண்ணணும் என்று வாய்ப்புக்காக காத்திருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை.
இந்நேரத்தில், சம்யுக்தா தலைமையிலான போலீஸ் குழு அவர்மேல் ஆதாரம் தேடி ஒரு பக்கம் முயற்சி.

மறுபக்கம் தொழில் போட்டியாளர்கள் இவரை தரைமட்டமாக்கப் பிளான். இந்த இரண்டு பக்கத்திலிருந்தும் வர்ற சூழ்நிலைகளிலிருந்து ஆனந்தராஜ் எப்படி தப்பிக்கிறார், அவர் மாஃபியா கம்பெனி தொடர்ந்து ஓடியதா இல்லையா — அதுதான் படத்தின் மீதிக் கதை.

மொத்தத்தில் இந்த ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’
— நேரம் போகுது தெரியாம பக்கா கமர்ஷியல் டிஷ்யூம் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *