full screen background image
Search
Friday 14 August 2026
  • :
  • :
Latest Update

‘காந்தா’ திரைப்பட விமர்சனம்

‘காந்தா’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Casting : Dulquer Salmaan, Samuthrakani, Rana Daggubati, Bhagyashri Borse, Ravindra Vijay, Aadukalam Naren, Vaiyapuri, Gayathri Shankar, Brijesh Nagesh, Bucks, Barathan, Nizhalgal Ravi, Java Sunderasan

Directed By : Selvamani Selvaraj

Music By : Jhanu Chanthar

Produced By : Spirit Media, Wayfarer Films – Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, Jom Varghese

இந்த ‘காந்தா’ படம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தொடங்கி, சுதந்திரத்துக்கு பிறகான காலத்தில் முடியும் ஒரு காலத்தைக் காட்டுகிறது. அந்த நேரத்தில் சினிமாவுக்கு இருந்த கம்பீரம், புகழ், கவர்ச்சி — இதை படம் நன்றாகப் பிடித்துக் காட்டுகிறது.

அந்தக் காலத்தில் மிக பிரபலமான நடிகர் ஒருவரும், அவரை உருவாக்கி வளர்த்த ஒரு இயக்குநரும் இடையே நடக்கும் ஆணவப் போரே இந்தக் கதையின் மையம்.
இயக்குநர் — “நான் தான் உன்னை உருவாக்கினேன்” என்று நினைக்கிறார்.


நடிகர் — “நீ வாய்ப்பு தந்தே தவிர என் புகழ் என் முயற்சிதான்” என்று நினைக்கிறார்.ஒரு தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கு இருவரும் சேர்ந்து நிற்கும் படத்தை மீண்டும் தொடங்குகிறார்கள். ஆனா படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் பிரச்சினை வெடிக்க ஆரம்பிக்கிறது. கதாநாயகியை மையப்படுத்திய “சாந்தா” கதையை, நாயகன் “காந்தா” என்று மாற்றிவிட முயற்சிப்பது முதலே முரண்பாடு மேலேறுகிறது.

காட்சி மாற்று, கிளைமாக்ஸ் மாற்று — நாயகனின் தலையீடு அதிகரிக்க, இயக்குநர் அதை ஏற்க மறுக்கிறார்.
இருவருக்கும் இடையே பெரும் ஆணவச் சண்டை வெடிக்கிறது. இதற்கிடையே ஒரு கொலை நடக்கிறது. அதை யார் செய்தது என்ற மிஸ்டரி படம் முழுக்க நம்மை இழுத்துக்கொண்டு போகிறது. இறுதியில் அந்த மர்மம் தான் படத்தின் சுவாரஸ்யம்.

மொத்தத்தில் இந்த ‘காந்தா’ பிரம்மாண்டமா காட்டாமல், நடிகர்களின் நடிப்பை ரொம்ப நம்பிக்கையோடு வைத்துப் போகும் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *