full screen background image
Search
Friday 14 August 2026
  • :
  • :
Latest Update

‘கும்கி 2’ திரைப்பட விமர்சனம்

‘கும்கி 2’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Madhi, Shridha Rao, Andrews, Arjun Dass, Akash, Harish Peradi, Srinath

Directed By : Prabhu Solomon

Music By : Nivas K.Prasanna

Produced By : Jayanthilal Gada, Thaval Gada

‘கும்கி 2’ basically ஒரு பையனும், ஒரு யானையும் இருக்கும் பந்தத்தை அழகா சொல்லும் படம். கதையே முழுக்க மலை, காடு, அருவி, மழை, பறவைகள், விலங்குகள்… அப்படியே இயற்கை நடுவுலே நம்மை அழைத்துச் செல்லும் மாதிரியானது.

பூமி என்ற பையன், வீட்டில் அன்பு இல்லாம வளர்ந்தவன். அப்பா இல்ல, அம்மா வேற ஒருத்தருடன் வாழறாங்க. அவங்க குடித்தனம்… சண்டை… இதெல்லாம் காரணமா, பையன் எப்பவும் தனிமையா உணருறான். பள்ளியிலும் அவன் ஒதுங்கிக் கிடக்கிறான்.

அந்த நேரத்தில்தான் ஒரு நல்ல ஆசிரியர் அவனுக்கு இயற்கை தான் நல்ல தோழன், அதை நேசிக்கணும் என்று சொல்லிக்கொடுப்பார். அதனால் பையன் மரம், மலை, காடு எல்லாத்தையும் அன்பாகப் பார்க்க ஆரம்பிக்கிறான்.

அப்படியே ஒரு நாள் குழியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயற்சி செய்றான். அப்படித் தான் அந்த குட்டி யானைக்கும், பூமிக்கும் ஒரு உண்மையான பந்தம் உருவாகிறது. யானை பெரியதா வளர, பூமியும் அதையே சுற்றி சுத்தி, அதையே குடும்பம் மாதிரி நேசித்து வாழ்கிறான்.

ஆனா அவனுடைய அம்மா, யானையை பெரிய பணத்துக்கு விற்க முயலுறாங்க. பூமிக்கு தெரியாம ஒரு நாள் யானையை விற்கிறாங்க. பையன் துயரம் ஆகி யானையைத் தேடி ஓடுறான். அது ஒரு பெரிய பூஜைக்காக வாங்கி, பலி கொடுக்கப் போகிறாங்க என்று தெரிந்தவுடன் கலங்குறான். எப்படி காப்பாற்றுவது என்று அலையும்.

அதை தேடி பிடித்து, யானையை ஓட்டிக்கொண்டு காட்டு உள்ளே போகிறான். பின்னால் வாங்கியவர்கள் துரத்துறாங்க. இன்னொரு பக்கம் பாரி என்ற ஒருத்தன் நல்லவனாக நடித்து மீண்டும் அவனை மீட்டுக் கொண்டு அவர்களிடமே ஒப்படைக்கிறான்.

இறுதியில் யானை பலிபீடத்தில் நிற்கும் நேரத்தில் பூமிக்கு நடக்கும் மன வேதனை… அதிலிருந்து யானை எப்படி காப்படிக்கப்படும்… அதுதான் climax.

நடிப்புகள்

மதி பூமி ஆக ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். யானையோட பாசம் காட்டும் சீன்களில் அவர் உண்மையிலேயே அந்த பையனைப் போலத் தோன்றுகிறார். சிறுவயது பூமியாக ஜூனியர் மதியோ, தன்னுடைய துள்ளல் நடிப்பால் கவர்ச்சி.

திருச்செல்வம் ஆசிரியராக செட்டாக இருக்கிறார்.
சூசன், இந்தப் படத்திலும் ‘மைனா’ ஃபீல் மாதிரி வில்லத்தனத்தோட வர்றாங்க.
ஹரிஷ் பெராடி போலீஸ் தலைவராக ரொம்ப கம்பீரமா வர்றார்.
ஆண்ட்ரூஸ் காமெடி முயற்சியில் சில இடங்களில் வேலை செய்கிறது.
ஷ்ரிதா ராவ் உட்பட மற்றவர்கள் யாரும் தவற வைக்கவில்லை.

யானை தான் படத்தின் உண்மையான ஹீரோ. சண்டை சீன்களும், காட்சி அமைப்பும் செம. யானைக்கு emotion கொடுத்திருக்கும் விஎஃப் எக்ஸும் அழகா இருக்கு.

ஒளிப்பதிவு செம — காட்சிகள் பசுமையா, கண்ணுக்கே ரிலீஃப்.
இசை கொஞ்சம் குறைவா இருந்தாலும் படத்துக்கு பெரிய இடர் இல்லை.

மொத்தத்தில் இந்த — ‘கும்கி 2’ யானை–மனிதன் பந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல மனசைத் தொட்டிருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *