‘வீரவணக்கம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Samuthirakani, Bharath, Rithesh, Prem Kumar, Ramesh Pisharody, Surabhi Lakshmi, P.K. Medini, Adarsh, Sidhangana, Aaiswika
Directed By : Anil V. Nagendran
Music By : M K Arjunan, Perumbavoor G. Raveendranath, James Vasanthan, C.J. Kuttappan and Anchal Udayakumar
Produced By : Visarad Creations
பரத் ஒரு கம்யூனிஸ்ட் வாதி. அவர் ஊரில் அனைவரையும் சாதி பாகுபாடு பார்க்காமல் சமமாக நடத்தி, மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகள் ஒருவர் இருக்கிறார்.
அந்த மகள் பக்கத்து ஊரிலுள்ள கீழ்சாதி இளைஞரை காதலிக்கிறார். இதை அறிந்த பரத், ஊர் மக்களை அழைத்து 96 வயதான கம்யூனிஸ்ட் போராளி பி.கே. மேதினியை சந்திக்கிறார். அப்போது, புரட்சியாளர் பி. கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கையும், கேரளாவில் கம்யூனிசம் உருவான வரலாறும் சொல்லப்படுகிறது.
1940களில், ஜமீன்தார் சித்திக் ஊர் மக்களை அடிமைகளாக நடத்துகிறார். திருமணம் ஆன பெண்களின் வாழ்க்கையையும் சீரழிக்கிறார். அந்த ஊரில் வாழும் பரணி, ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண்ணை ஜமீன்தார் கற்பழிக்கிறார். நியாயம் கேட்கச் சென்ற பரணியை அவர் கொலை செய்கிறார்.
இந்த நிலையில், அந்த ஊருக்கு கம்யூனிஸ்ட் வாதியான சமுத்திரக்கனி வருகிறார். அவர் மக்களைச் சந்திக்கிறார். இது தெரிந்த ஜமீன்தார், போலீஸை பயன்படுத்தி சமுத்திரக்கனியை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
சமுத்திரக்கனி போலீஸிடம் இருந்து தப்பித்தாரா?
ஜமீன்தாரின் அடக்குமுறையிலிருந்து மக்கள் மீண்டார்களா?
பரத் தனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா?
என்பதே கதையின் மீதிப்பகுதி.
பி. கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் அசத்துகிறார். நடை, உடை, வசனம், சண்டை – அனைத்திலும் அக்கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் வாதியாக பரத் நடித்திருப்பது குறைந்த காட்சிகள் என்றாலும் வலிமையாக உள்ளது. மக்களின் பிரச்சனையை தீர்க்கும் மனிதராகவும், மகளின் காதலை புரிந்து கொள்கிற அப்பாவாகவும் பிரகாசிக்கிறார்.
ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற நடிகர்களும் கதைக்கு ஏற்றவர்களாக உள்ளனர்.
எம்.கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே. குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரின் இசை, பின்னணி இசை – படத்திற்கு பலம் சேர்க்கிறது. கவியரசுவின் ஒளிப்பதிவும் மிகுந்த வலிமை.
இயக்குநர் அனில் வி. நாகேந்திரன், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் மற்றும் புரட்சியாளர் பி. கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

















