full screen background image
Search
Friday 14 August 2026
  • :
  • :
Latest Update

‘நறுவீ’ திரைப்பட விமர்சனம்

‘நறுவீ’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Haris Alag, Vinshu, VJ Pappu, paadini Kumar, Jeeva Ravi, Praveena, Kathey, Muruganandham, Pradheep, Madhan S. Raja, Sarada Nandagopal

Directed By : Subarak Mubarak

Music By : Aswanth

Produced By : A.Alagu Pandiyan

மலைப்பாங்கான கிராமத்தில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் சென்ற ஆண்கள் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அந்தக் காட்டை ஆராய்ச்சிக்குச் செல்லும் ஐந்து பேரின் வாழ்க்கையில் நடக்கும் மர்மங்களையும் அமானுஷ்யம் கலந்த சம்பவங்களையும் தான் ‘நறுவீ’ படம் சொல்கிறது.

புதிய நடிகர் ஹரிஷ் அலக், விஜே பப்பு – பாடினி குமார் ஜோடி மற்றும் மற்ற நடிகர்கள் அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். நகைச்சுவையும், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்கு பலமாக இருக்கிறது.


இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாம் கதைக்கு ஏற்ற மாதிரி அமைந்துள்ளது. கதை மத்தியில் வரும் டைரி, காதல், கல்விக்கான போராட்டம், மூடநம்பிக்கையின் தீமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

இயக்குநர் சுபராக் முபாரக் அமானுஷ்யம் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் சொல்ல முயன்றாலும் சில காட்சிகளில் அச்சத்தை உருவாக்க முடியவில்லை. இருந்தாலும், பெண்களுக்கு கல்வியே விடுதலை என்ற நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நறுவீ’ – சில குறைகளுடன் இருந்தாலும், நல்ல கருத்தை சொல்லும் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *