full screen background image
Search
Tuesday 14 October 2025
  • :
  • :
Latest Update

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில் நாயகனாக களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம். இளைஞர்களின் கனவுகன்னியாக கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *