‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் சாதனை!
மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், (Future Runup ) ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டு தனது விநியோகப் பணியை வலுப்படுத்தியது.
கடந்த ஓணம் பண்டிகையையொட்டி துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜிதின் K. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘களம்காவல்’ திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது. இந்த இரு படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு, நிறுவனத்தின் விநியோகப் பயணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.
இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. கிரிஷ் A.D. இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. இப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.
இதன் மூலம், கேரளத்திற்கு வெளியே மலையாளத் திரைப்படங்களை விநியோகம் செய்வதில் ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எனத் தொடர் வெற்றிகளைப் பெற்று ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி, தரமான திரைப்படங்களை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மலையாள சினிமா கேரள எல்லைகளைத் தாண்டி இந்திய அளவில் தனது வரவேற்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் மலையாளத் திரைப்படங்களுக்கான தேசிய அளவிலான விநியோகத் துறையில் வளர்ந்து வரும் முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
*Future Runup Films Achieves Hat-Trick of Blockbuster Successes with Lokah, Kalamkaval and Bethlehem Kudumba Unit*
Future Runup Films is making significant strides in the film distribution sector with a hat-trick of blockbuster successes through Lokah, Kalamkaval and Bethlehem Kudumba Unit. Founded with the vision of taking Malayalam films to Indian markets beyond Kerala, Future Runup Films is rapidly emerging as a notable distribution force within a short span of time.
The company initially began its operations with a focus on distributing Malayalam films in Tamil Nadu. Its first release was Narivetta, starring Tovino Thomas. The company subsequently strengthened its presence in the Tamil Nadu market with Balti, starring Shane Nigam, and expanded its operations with the aim of bringing Malayalam cinema to audiences across India.
Future Runup Films was founded by producer and actor Arun Narayanan, actor and director Dileesh Pothan, and Chennai-based entrepreneur Anup Kumar. The company’s primary objective is to identify new markets for Malayalam cinema outside Kerala and take quality Malayalam films to audiences across the country.
Beyond Tamil Nadu, Future Runup Films is also undertaking the distribution of Malayalam films across various regions of India outside Kerala. The strong response received by the films distributed by the company so far has further strengthened this vision.
Last Onam, Future Runup Films distributed Lokah: Chapter 1 – Chandra, produced by Dulquer Salmaan, in Tamil Nadu. This was followed by Kalamkaval, starring Mammootty and directed by Jithin K. Jose, which was also distributed by Future Runup Films in Tamil Nadu.
Following the success of Lokah and Kalamkaval, the company is now distributing Bethlehem Kudumba Unit, starring Nivin Pauly and Mamitha Baiju, this Onam season.
Directed by Girish A.D., the Tamil and Telugu versions of Bethlehem Kudumba Unit will release in theatres on September 4. Future Runup Films is handling the distribution of the film across Tamil Nadu, Andhra Pradesh and Telangana.
With this, Future Runup Films is achieving a hat-trick of blockbuster successes in the distribution of Malayalam films outside Kerala. The company continues to work towards creating greater opportunities for Malayalam cinema in markets beyond Kerala and bringing quality films to audiences across different parts of the country.
At a time when Malayalam cinema is expanding its reach beyond the borders of Kerala, Future Runup Films is positioning itself as a new and emerging force in the national distribution network for Malayalam cinema.
The First Single from ‘Texas Tiger’ Turns Into a Visual Blast, Musical Carnival and Dance Extravaganza.
The first single “Tigerians Roar” from Texas Tiger has arrived to a phenomenal response, with audiences particularly captivated by the powerful screen presence, infectious energy and electrifying dance performance of Hridhu Haroon. Making his debut as a lead hero with Thugs, Hridhu has, in a remarkably short span, explored diverse characters across Tamil, Malayalam and Hindi cinema, including films such as Mumbaikar, All We Imagine as Light, Mura, Maine Pyar Kiya, Bad Girl and Dude. Having impressed audiences through varied and performance-oriented roles, Hridhu now takes a strikingly different avatar in Texas Tiger, emerging as a 100% commercial entertainer hero in “Tigerians Roar.”
From the very first beat, “Tigerians Roar” unfolds as a vibrant collage of visual spectacle, infectious rhythm and captivating choreography, with Hridhu Haroon owning every frame with his energetic performance. The dynamic percussion and layered instrumentation further amplify the song’s celebratory mood, while Osho Venkat’s composition gives the track its distinctive musical character.
The phenomenal response to the very first single has now added considerable momentum to the expectations surrounding Texas Tiger. When a film’s opening musical offering strikes such an immediate chord with audiences, it becomes a strong indicator of the excitement awaiting the film. In that regard, “Tigerians Roar” has made a resounding statement, promising Texas Tiger as a vibrant and stupendous theatrical treat.
The song features lyrics by Kelithee, Thamizh Aadhavan and Aa.Pa.Raja, with vocals by Kelithee and Thamizh Aadhavan. Osho Venkat has composed the music for the song.
Written and directed by Selvah Kumar Thirumaran, Texas Tiger is produced by UK Squad, with Balaji Kumar, Parthiban Kumar, Selvah Kumar Thirumaran and Sujith as Producers. The film stars Hridhu Haroon, Samyuktha Viswanathan, Rohini Molletti, Anthony Daasan, Sachana Namidass, Ramesh Thilak, Parthiban, Wafa Khatheeja, Peter K, Samyuktha Shanmuganathan and others.
The technical team comprises Osho Venkat as Music Director, Vishnu Mani Vadivu as Cinematographer, Praveen Antony as Editor and K.B. Nandhu as Art Director.
With “Tigerians Roar” setting the musical promotions on a high note and Hridhu Haroon’s energetic performance emerging as one of its major talking points, Texas Tiger has already begun generating strong curiosity for what promises to be an exciting and high-energy cinematic experience.
*’டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!*
‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரிக்கும் திரையிருப்பு, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் மற்றும் எனர்ஜிட்டிக்கான நடனம் போன்றவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஹீரோவாக ஹிருது ஹரூன் களமிறங்குகிறார் என்பதையே ‘டைகரியன் ரோர்’ பாடல் எடுத்துக்காட்டுகிறது.
முதல் பீட்டிலிருந்தே இந்தப் பாடலின் பிரம்மாண்டமான காட்சிகள், எனர்ஜிட்டிக்கான இசை மற்றும் வசீகரிக்கும் நடனம் என வண்ணமயமாக உருவாகியுள்ளது. பாடலின் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் ஹிருது ஹரூன் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார். டைனமிக் பெர்கஷன் இசையும், பல அடுக்குகளைக் கொண்ட இசைக் கருவிகளின் பயன்பாடும் பாடலின் கொண்டாட்ட உணர்வை மேலும் அதிகரிக்கின்றன. ஓஷோ வெங்கட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் சிங்கிளுக்குக் கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு, ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தப் பாடலுக்கு கெலித்தி, தமிழ் ஆதவன் மற்றும் ஆ.பா.ராஜா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். கெலித்தி மற்றும் தமிழ் ஆதவன் பாடலைப் பாடியுள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை செல்வ குமார் திருமாறன் எழுதி இயக்கியுள்ளார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் ஹிருது ஹரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொலெட்டி, அந்தோணி தாசன், சாச்சனா நமிதாஸ், ரமேஷ் திலக், பார்த்திபன், வஃபா கதீஜா, பீட்டர் கே, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட், ஒளிப்பதிவாளர் விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி மற்றும் கலை இயக்குநர் கே.பி. நந்து ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்தப் பாடல் மூலம் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் இசை புரமோஷன் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளது.இதன் மூலம், விறுவிறுப்பும் உற்சாகமும் நிறைந்த சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் தரவிருக்கிறது.
The movie ‘Enna Vilai’ releasing on September 17th marks actor Karunaas’s 25 Years in Cinema!
Actor Karunaas is set to mark a significant milestone in his cinematic journey with Enna Vilai, which coincides with his completion of 25 years in Tamil cinema. Known for his versatility across comedy, character-driven and emotionally demanding roles, Karunaas says the film holds a special place in his career.
Speaking about the film, he said, “As I complete 25 years in cinema, I feel Enna Vilai has come to me at a very special time. Honestly, I feel I was waiting for a film and a team like this for the last 25 years. When director Sajeev Pazhoor narrated the story, I immediately felt connected to it. It is a beautiful and emotional story, and the entire team has done an impeccable job. Awards and festival recognition are encouraging, but ultimately, a film belongs to the audience. I believe Enna Vilai will touch hearts as it speaks about ordinary people, their struggles, dignity and hope.”
Written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh Viswambharn and Anugopal Venugopalan under the banner of Kalamaya Cineverse.
The film features Nimisha Sajayan, Karunaas, Vijayalakshmi, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Chiththa Darshan, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalites and others.
The technical crew includes Alby Antony (Cinematography), Sam C.S. (Music), Sreejith Sarang (Editing) and Tapas Nayak (Sound Design).
Having earned appreciation through screenings at various international film festivals, Enna Vilai is gearing up for its theatrical release in September 17 2026.
திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!
நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்”.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக அல்பி ஆண்டனி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் ஒலி வடிவமைப்பாளராக தபஸ் நாயக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், இந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Arjun Das as Raghuvaran
Aditi Shankar as Anjali
Sona Olickal as Indra Vasudevan
Dravid Selvam as Ibrahim
Anusha Prabhu as Sara
Jagabar as Kiki
Monish Elamaran as Srinath
Varnika Varadh as Varnika
Phillipson Thomas as Phillipy
Arunkumar Mani as Muthu
Sowndarya Manoharan as Sowndarya
Kannan D as Divakar
Richie Richardson as Kevin
Raksha Cherin as Anu
Srikanth as Moj
Niyas Muhammed as Niyas
Chitra Lakshmanan as Paadaga Lingam
Devadarshini Chetan as Therapist Lavanya
Jenson Dhivakar as Father Edwin
Dhayalan as Raghu’s Father
Maheshwar as Anjali’s Father
Rama Rajendra as Raghu’s Mother
Lakshmi Saravanan as Anjali’s Mother
Sudarsan Gandhi as Gurubaran
Aareesh as Kiki’s Boyfriend
Goodnight R Nagarajan as Kumaran
Rithik Krishna as Kerala Volunteer
Pooja Surendar as Indra’s Mother
Nirmal Kumar as Indra’s Father
Abira Praveen as Young Indra
Harikumar as Mechanic
Somasurya as Assistant Mechanic
CREW :
Written & Directed by Vignesh Srikanth
Produced by Yuvaraj Ganesan
Banner: Million Dollar Studios
Music : Hesham Abdul Wahab
DOP : Aravind Viswanathan
Editor: Nash
Art : Raj Kamal
Lyrics : Vignesh Srikanth
Sound Design : Renjith Venugopal, M.Saravana Kumar
Costume Designer : Navadevi Rajkumar
Choreographer : Apsar
Production Controller : A Balamurugan
Production Executive : R Nagarajan
Production Manager: D Prasanth, D Parthiban
Publicity Designs : Gautham J
Stills : Maniyan
Executive Producer : Harish Durairaj
Creative Producer : Vijay M P
PRO : Yuvraaj
‘ஒன்ஸ் மோர்’ அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் நடிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் காதல் திரைப்படம்.
காதலில் ஏற்பட்ட தோல்வியால் கடந்த எட்டு ஆண்டுகளாக சோகமாகவும் விரக்தியாகவும் வாழ்ந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். அவருடைய வாழ்க்கையில் அதிதி ஷங்கர் வருகிறார். முதலில் அவருடைய காதலை ஏற்க மறுக்கும் அர்ஜுன் தாஸ் பின்னர் அதிதியின் அன்பையும் விடாமுயற்சியையும் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவருடைய காதலும் திருமணம் வரை செல்கிறது. அந்த நேரத்தில் அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் மீண்டும் அவரை தொடர்பு கொள்கிறார். எட்டு வருடங்களுக்கு பிறகு ஏன் திரும்பி வந்தார் அவரை விட்டு பிரிந்ததற்கான காரணம் என்ன மீண்டும் அர்ஜுன் தாஸை ஏற்றுக்கொள்ள சொல்லும் அவர் என்ன முடிவை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை
அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட ரகுவரன் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். வழக்கமாக பார்க்கும் அவருடைய தீவிரமான நடிப்பிலிருந்து சற்று விலகி அமைதியான உடல்மொழி மற்றும் முகபாவனைகள் மூலம் கதாபாத்திரத்தின் வலியை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. அதிதி ஷங்கர் படத்திற்கு தேவையான துடிப்பையும் கலகலப்பையும் கொண்டு வருகிறார். அஞ்சலி கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக கையாண்டிருக்கிறார். அர்ஜுன் தாஸுடன் வரும் காட்சிகளில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது
சோனா ஒலிக்கல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய கதாபாத்திரம் ஏன் அர்ஜுன் தாஸை விட்டு பிரிந்தது ஏன் மீண்டும் அவரை தேடி வந்தது என்பதற்கான காரணங்கள் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம். அதனால் அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகள் முழுமையாக பார்வையாளர்களை சென்றடையவில்லை. மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
படத்தின் முதல் பாதி ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அதிதி ஷங்கர் அர்ஜுன் தாஸ் இடையிலான காதல் காட்சிகள் படம் மெதுவாக நகர்ந்தாலும் ஒரு நல்ல ஈர்ப்பை கொடுக்கின்றன. அதிதியின் துறுதுறுப்பான குணமும் அர்ஜுன் தாஸின் அமைதியான குணமும் ஒன்றுக்கொன்று எதிர்மாறாக இருப்பதால் அந்த காட்சிகள் ரசிக்க வைக்கின்றன
ஆனால் இரண்டாம் பாதியில் படம் சற்று தடுமாறுகிறது. அர்ஜுன் தாஸின் கடந்த கால காதல் ஏன் அவரை இவ்வளவு பெரிய அளவில் பாதித்தது என்பதற்கான அழுத்தமான காரணத்தை திரைக்கதை முழுமையாக சொல்லவில்லை. குறிப்பாக முன்னாள் காதலி அவரை விட்டு பிரியும் காட்சிகளுக்கும் பின்னர் அவர் சொல்லும் காரணத்திற்கும் சரியான தொடர்பு இல்லாதது ஒரு குறையாக தெரிகிறது. இதனால் முதல் பாதியில் உருவான எதிர்பார்ப்பு இரண்டாம் பாதியில் குறைந்து விடுகிறது. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்த காதல் படங்களின் நினைவையும் ஏற்படுத்துகின்றன
இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பதோடு மெதுவாக நகரும் திரைக்கதையில் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கின்றன. பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. இயக்குநரே பாடல் வரிகளை எழுதியிருப்பதும் சிறப்பு. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு அழகாக இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளிலும் கேரள பின்னணி காட்சிகளிலும் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது
மொத்தத்தில், ‘ஒன்ஸ் மோர்’ காதல் கதை மற்றும் காதல் உணர்வுகளை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக இருக்கிறது.
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா – HCAS இன்ஃப்ளுயன்சர் பாடத்திட்ட அறிமுகம்- என முப்பெரும் விழா கொண்டாட்டம்.
சென்னை ஆகஸ்ட் 30 2026: சென்னையைச் சார்ந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி – HCAS , (2026 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி) வளாகத்தில் நேற்று ஆசிரியர் தின கொண்டாட்டம்- 2026 முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா- (Fresher’s Day ) மற்றும் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா நடைபெற்றது.
ஆசிரியர் தின கொண்டாட்டம் காலை பத்து மணியளவில் எம் ஜி ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். HCAS இன் இயக்குநர் டாக்டர். சூசன் வர்கீஸ், இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இவருடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக HCAS இன் முப்பது ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழாவும், HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள்- முதலாம் ஆண்டு மாணவகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் HCAS இன் துணை இயக்குநர் திரு. டேவிட் ரயன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
மாணவர்கள், தங்கள் படைப்பாற்றல் – தகவல் தொடர்பு திறன்- டிஜிட்டல் திறமைகள் – ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும் நோக்கத்தில் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக கல்லூரி.. சமூகத்துடன் தீவிரமாக ஈடுபடுவதற்கும், HCAS இன் துடிப்பான வளாக கலாச்சாரத்தை முன்னிறுத்துவதற்கும்… மாணவர்களை இன்ஃப்ளூயன்சர்களாக வலிமைப்படுத்துவது தான் இந்த பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் உயர்கல்வி – மாணவர் திறமை- படைப்பாற்றல்- தலைமைத்துவம்- வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்கள்- ஆகியவற்றின் மீது HCAS கொண்டுள்ள எல்லைகளற்ற ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றன.
ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI.
Mumbai, August 28, 2026:
The much-awaited title and motion poster of Original Monster were unveiled at a special event in Mumbai on August 28, marking the official introduction of the highly anticipated film to audiences beyond its home industry and setting the stage for its pan-Indian journey.
The event brought together the film’s principal members along with some of the most respected names from the Indian film industry. The occasion was graced by Director R. Chandru, renowned producer and presenter Mr. Anand Pandit, Pan-India Superstar Dr. Shivarajkumar, Smt. Geetha Shivarajkumar, popular actor Sunil, music director Ajaneesh Loknath and cinematographer AJ Shetty, making it a memorable evening for the entire Original Monster team.
The much-awaited motion poster was officially launched in the presence of Dr. Shivarajkumar, R. Chandru, Anand Pandit, Geetha Shivarajkumar and the film’s core team, marking the first time the title Original Monster was presented to the audience.
The launch received an enthusiastic response from the gathering, with the event turning into a celebration of the film’s powerful collaboration and creative vision. The presence of acclaimed talents such as Sunil, Ajaneesh Loknath and AJ Shetty further reflected the diverse and accomplished creative team behind the project.
The Mumbai event concluded on a highly positive note, with the title and motion poster receiving strong appreciation from the media, guests and members of the film fraternity present at the occasion.
With its title and motion poster now unveiled, Original Monster embarks on the next phase of its promotional journey, building anticipation among audiences across India. The Mumbai launch marks an important milestone as the film takes its first major step towards establishing its presence on the pan-Indian stage.
🔗 https://youtu.be/bfrZLRxsink
ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு.
மும்பை, ஆகஸ்ட் 28, 2026:
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர்.
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் சிறப்பான கூட்டணி மற்றும் படைப்பாற்றல் பார்வையின் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்ற பாராட்டுக்குரிய திறமையாளர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறப்பான படைப்புக் குழுவையும் எடுத்துக்காட்டியது.
மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மிகுந்த உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.
தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மும்பை வெளியீட்டு நிகழ்வு, பான் இந்தியா அளவில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இப்படம் எடுத்து வைக்கும் முதல் முக்கியமான அடியாக அமைந்துள்ளது.
எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!
எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.
எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் விரியும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
“நான் எந்த உயரத்திற்கு போனாலும் காரணம் வெற்றிமாறன் தான்”: மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் சூரி நெகிழ்ச்சி!
சென்னையில் மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படத் தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் பேசும்போது
படத்திற்கு எது நல்லதோ அதை செய்வேன். கடலில் ஒளிப்பதிவு செய்வது சுலபமல்ல. பெரும்பாலும் கடலில் படம் எடுத்து தோற்று போனவர்கள் தான் அதிகம். ஒரு சில காட்சிகளை மட்டும் கடலில் எடுத்து விட்டு மீதியை க்ரீன் மேட் போட்டு சிஜே வேலைகள் தான் பார்ப்பார்கள். இந்த படத்திலும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், படம் முழுக்க கடலிலேயே எடுத்து வந்திருந்தார்கள். அப்போது தான் தயாரிப்பாளருக்கு சினிமா மீதிருந்த ஆர்வம் புரிந்தது. சூரி சார் இந்த படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். சத்யராஜ் சாரின் கெட்அப்பை பார்த்து அசந்து விட்டேன் என்றார்.
நடன இயக்குனர் அசார் பேசும்போது
முதன் முதலில் என்னை அங்கீகரித்தது ஜி வி சார் தான். கதிர் சாருடன் சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து பயணிக்கிறேன். மண்டாடி பாடல் ஏசி செட்டில் எடுத்தோம். சூரி அண்ணன், இடைவெளியில் தான் வந்து ஆடினார். மஹிமா சிறப்பாக ஆடினார். சத்யராஜ் சாருடைய கெட்அப்பை பார்த்து அசந்து விட்டேன்.
சண்டை இயக்குனர் மகேஷ் மேத்யூ பேசும்போது
சூரி அண்ணன் இந்த படத்தில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். வெற்றி மாறன் சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் சார் எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. உண்மையான மீனவர் கெட்அப்பில் சத்யராஜ் சாரை பார்த்து மெய் மறந்து நின்றோம் என்றார்.
நடிகர் மிதுன் ஜெய் ஷங்கர் பேசும்போது
சுகா சார், நீங்கள் படத்தில் வில்லன். ஆனால் நிஜத்தில் அழகான மனிதர். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் இரண்டு படங்கள் தான் நடித்திருக்கிறேன். அந்த நேரடி படங்களின் அவர் பார்த்ததில்லை என்பதை முதலிலேயே கூறிவிட்டார். இருந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இனிமேல் தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி. அவர் நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
படத்தின் இறுதி கட்ட காட்சிகள் 29 நிமிடங்கள் படப்பிடிப்பு நடந்து இருக்கும் அந்த காட்சிகளில் சூரி சாருக்கு பலத்த அடிபட்டிருக்கும் எனக்கும் என்னுடன் நடித்தவர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டிருக்கும் எங்களுக்கு மிகவும் நாங்கள் சோர்ந்து இருந்த சமயத்திலும் சிறிதும் சோர்வு குறையாமல் சூரி சார் இருந்ததை பார்த்து தான் நாங்களும் சோர்வில் இருந்து சக்தியை பெற்றோம் என்றார்.
நடிகை கிருத்திகா பேசும்போது
இது போன்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மிக்க நன்றி. சரி சார் உங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் போராடி தான் வந்திருப்பீர்கள். எங்களை போன்று வளர்ந்து வரும் கலைஞர்களின் போராட்டங்களுக்கு நன்றாகவே தெரியும் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. மிதுன், உடன் நடிக்கும் மிக சிறந்த நடிகர். மண்டாடி செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசும்போது
மண்டாடி மாபெரும் படம். பட்ஜெட்டில், பிரமாண்டத்தில் எப்படி வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், உழைப்பால் மாபெரும் படம் என்று கூறுவது தான் சரியாக இருக்கும். 2014ஆம் ஆண்டு டார்லிங் படத்தின் தினமும் ஜிவி பிரகாஷ் சரியான அலுவலகத்தில் தான் எப்பொழுதும் இருப்பேன். அவர் நீ ஏன் எப்பொழுதும் எங்கே இருக்கிறாய்? என்று கேட்பார். அதேபோல், இங்கு வர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அது போல் இன்று நான் இருக்கிறேன். அதற்கு நான் அவருக்கு நன்றியும் கூறுகிறேன். அவர் அலுவலகத்திற்கு வர முடியாததற்கு மன்னிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
விடா முயற்சி, கடின உழைப்பு என்று என்ன பெயர் வைத்தாலும் அதற்கு மொத்த உருவமும் எங்கள் சூரி அண்ணன் தான். அடிபட்டு ரத்தம் கொட்டினாலும் மருந்து கூட போடாமல் தொடர்ந்து நடித்தார். பத்து நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மருந்து கூட போடாமல் ஏன் நடிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, இது கடல் என்பதால் படகு மற்றும் கேமரா லைட் மறுபடியும் செட் செய்வதற்கு அரை நாள் ஆகிவிடும் என்பதால் தொடர்ந்து நடித்தேன் என்று மற்றவர்கள் மீதும் அக்கறை கொண்டு பேசினார். இப்படத்தில் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். படமும் நன்றாக வந்திருக்கிறது. செப்டம்பர் 10 அன்று நீங்கள் அனைவரும் இந்த படத்தைப் பார்க்கும்போது அனைவருக்கும் புரியும் என்றார்.
நடிகை மஹிமா பேசும்போது
“எல்லாருக்கும் வணக்கம். இந்த ‘மந்தாடி’ படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த குழுவும் போட்ட உழைப்பும் ஆர்வமும் ரொம்பப் பெருசு. ஆரம்பத்துல இந்தப் படத்தை வெறும் 35 நாள் ஷூட்டிங்ல முடிச்சிடலாம்னு தான் பிளான் பண்ணோம். இது ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிரும்னு தான் நான் நெனச்சேன். ஆனா, மதி இந்த படத்தை இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு படைப்பா மாத்தியிருக்கார்ங்குறது நிஜமாவே நம்ப முடியல. அவரோட அந்தப் பார்வை நான் ஆரம்பத்துல எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெருசா வந்திருக்கு.
இந்த படத்துல வேலை செஞ்ச குழு சந்திச்ச சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பா நடுக்கடல்ல தினமும் 14 மணி நேரம் ஷூட்டிங் பண்றதுங்குறது சாதாரண விஷயம் கிடையாது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் சாரோட உழைப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். கடலோட அந்த ஆழமான தன்மையை இவ்ளோ தத்ரூபமா கேமரால கொண்டு வர்றது ஈஸியான காரியமே கிடையாது, ஆனா அதை அவர் மிகச் சிறப்பா செஞ்சிருக்கார்.
அதே மாதிரி பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்குத் தெரிஞ்ச மிகவும் கடின உழைப்பாளியான, தைரியமான ஒரு ஆக்ஷன் டைரக்டர் அவர்தான். இந்த படத்துல அவரோட அசாத்தியமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ் அவரோட ஷார்ப்பான கட்ஸ் மூலமா படத்தோட அந்த விறுவிறுப்ப கொஞ்சமும் குறையாம கொண்டு போயிருக்கார்.
முக்கியமா சூரி… இந்த படத்துல சூரியோட உழைப்பும், அவரோட அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் ரொம்பப் பெருசு. அவ்ளோ டயர்டா இருந்தாலும், உடம்புல சின்னச் சின்ன காயங்கள் பட்டாலும் கூட எந்தவொரு ஷாட்டுக்கும் அவர் சமரசம் செய்யவே இல்லை. ஒரு துணை நடிகரா தன் பயணத்தைத் தொடங்கி, இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துல ஒரு ஹீரோவா உயர்ந்திருக்கார்னா, அதுக்கு அவரோட அந்த விடாமுயற்சிதான் காரணம்.
‘மண்டாடி’ படம் கமர்ஷியலா ஒரு மாபெரும் வெற்றியைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், இந்த படத்துல வேலை செஞ்ச அத்தனை பேரோட அசாதாரண திறமைக்கும் இது ஒரு அடையாளமா இருக்கும்னு நான் உறுதியாக நம்புகிறேன். படம் பெரிய வெற்றியடைய படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!” என்றார்.
ஜி வி பிரகாஷ் பேசும்போது
இயக்குனர் மதியுடன் ‘உதயம் என்.எச்4’ படத்திலிருந்தே நெருங்கிய நட்பு இருக்கிறது. அவருடைய இரவு பகல் பாராத கடின உழைப்பும் சினிமா மீதான ஆழமான பார்வையும் அவரை இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விரைவில் உயர்த்தும். எந்த ஒரு சவாலான விஷயத்தையும் துணிச்சலாகவும் பிரமாண்டமாகவும் கையாளும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இந்த படத்தையும் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்றார்.
பீட்டர் ஹெயின் பேசும்போது
இயக்குனர் மதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், குறிப்பாக நடுக்கடலில் படமாக்கப்பட்ட படகு துரத்தல் (Boat Chase) காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் அனுபவமாக அமையும். தனது 34 கால சினிமா பயணத்தில் எக்ஸ்ட்ரீமான ஒரு சண்டைக்காட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசையை இயக்குனர் மதி இந்த படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் வெற்றிமாறனுக்கும் எனது நன்றி. நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக பணியாற்றிய இயக்குனர் மதியின் அர்ப்பணிப்பு இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இப்படத்தின் நாயகன் சூரி, எந்தவொரு கடினமான காட்சிக்கும் ‘முடியாது’ என்று சொல்லாமல் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒரு சண்டைக்காட்சியின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், மீண்டும் கரைக்குத் திரும்பாமல் நடுக்கடலிலேயே சக்கர நாற்காலி உதவியுடன் படகில் அமர்ந்தபடியே காட்சிகளை முடித்துக்கொடுத்த சூரியின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவருக்கு இணையாக நடிகர் சுஹாஸும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். மோட்டார் போன்ற எந்தவித நவீன தொழில்நுட்பமும் இன்றி, இயற்கையோடு போராடி காற்றின் விசையை மட்டுமே நம்பி சுமார் 20 கிலோமீட்டர் நடுக்கடலில் படமாக்கப்பட்ட இந்த படகு துரத்தல் காட்சிகள் மிகவும் சவாலானதாக அமைந்தது.
இப்படிப்பட்ட மிகக் கடினமான சூழலிலும் ஒவ்வொரு படகிலும் கேமராக்களை பொருத்தி நேர்த்தியாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனரின் உழைப்பு மிகப்பெரியது. சண்டைக் கலைஞர்கள் மட்டுமின்றி, படப்பிடிப்பிற்கு உறுதுணையாக இருந்த உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் இப்படம் சிறப்பாக உருவாக முக்கிய காரணமாக அமைந்தது. சில நாட்களில் மோசமான வானிலையால் ஒரு காட்சி கூட படமாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், மணி மற்றும் சொக்கு ஆகியோர் எவ்வித அழுத்தமும் இன்றி நடிகர்களுடன் படகிலேயே தங்கி முழுமையான ஆதரவை வழங்கினர். ஒரு போர்க்களத்தில் நிற்பது போன்ற சவாலான சூழலிலும் ஒட்டுமொத்த குழுவும் இணைந்து உருவாக்கியுள்ள ‘மண்டாடி’, திரையரங்குகளில் ஒரு மாபெரும் ஆக்ஷன் விருந்தாக அமையும் என்றார்.
ரவீந்திர விஜய் பேசும்போது
எனக்காக இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் நேரடி தமிழ்ப் படம். சின்ன வயதிலிருந்தே தமிழ் சினிமாவின் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும் ஈர்ப்பும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியில் இவ்வளவு சிறப்பான, சவாலான மற்றும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் மதி மாறன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஒரு பொண்ணுகிட்ட காதலைச் சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு மனநிலையில்தான் நான் இப்போ இருக்கேன். தமிழ் மக்கள் என்னையும் என் நடிப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்.
எங்களுடைய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாரைப் போல ஒரு தைரியமான தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. எந்தவொரு இடத்திலும் படத்திற்காக சமரசம் செய்துகொள்ளவே மாட்டார். இயக்குனர் ஒரு காட்சிக்கு 500 துணை நடிகர்கள் வேண்டும் என்று கேட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் 1500 பேரை ரெடி பண்ணிக் கொடுக்கும் மாஸான ப்ரொடியூசர் அவர். இந்த படத்திற்காக அவர் கொடுத்த ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி சார்.
சத்யராஜ் சார் இவ்வளவு பெரிய லெஜண்ட் ஆக இருந்தாலும் எங்களிடம் ரொம்பவே எளிமையாகப் பழகினார். அவருக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் கதிர் சாருடைய பணிக்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவர் கேமராவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. மஹிமா, மிதுன், பாலசரவணன் என அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். சுஹாஸைப் பற்றி சொல்லணும்னா, அவரோட முகத்துல ஒரு டுவாலிட்டி (Duality) இருக்கும். ஒரு பக்கம் ரொம்ப அப்பாவியாவும் தெரிவார், இன்னொரு பக்கம் மிரட்டலான வில்லனாகவும் மாறுவார். இந்த படத்தில் அது நன்றாக வேலை செய்திருக்கிறது.
சண்டைக் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்ன், மகேஷ் மாஸ்டர், திலீப் சுப்பராயன் மற்றும் அசார் மாஸ்டர் ஆகியோருக்கு ரொம்ப நன்றி. முக்கியமா தொண்டி கிராமத்தில் நடுக்கடலில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, எங்கள் உடனே இருந்து எங்களைப் பாதுகாத்த அந்த ஊர் படகு ஓட்டிகளான சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் அந்த கடலில் நாங்கள் எதுவுமே செய்திருக்க முடியாது.
இந்த விழாவிற்கு வந்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. ‘மண்டாடி’ திரைப்படம் தியேட்டரில் ஒரு பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். ரொம்ப நன்றி!” என்றார்.
சுஹாஸ் பேசும்போது
“முதலில் ஹாரிஸ், உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. என் மேலாளர் சன்னி, மணிகண்டன் சார், சொக்கலிங்கம் அண்ணா ஆகியோருக்கு ரொம்ப நன்றி. உதவி இயக்குனர்கள் பிரபா, பிரின்ஸ், தரணி மற்றும் இணை இயக்குனர் இளவரசு சார் ஆகியோரின் கடின உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆஃப் (Hats off). ஆடை வடிவமைப்பாளர் ஐஸ்வர்யா மற்றும் அருண், முழு படப்பிடிப்பிலும் எனக்கு உதவியாக இருந்த மொழிபெயர்ப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி. ஒளிப்பதிவு குழுவிற்கும், கலை இயக்குனர் கிரண் சாருக்கும், செட் அசிஸ்டென்ட் இப்ராஹிம் ஷாவுக்கும் எனது நன்றிகள்.
இந்த படத்தில் என் குடும்பமாக நடித்த ரேகா, ஸ்டண்ட் சிவா மாஸ்டர், கிரிஷ், ரியா, சிவானி, பத்மன் சார் அனைவருக்கும் செட்டில் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனது தனிப்பட்ட உதவியாளர்கள் ரமணா, பாலு, மோகன், ராஜா ஆகியோருக்கும் நன்றி.
ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்… உங்கள் பெயரைச் சொல்லும்போதே என் கால்கள் நடுங்குகின்றன! அந்த சண்டைக் காட்சிகளுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி மாஸ்டர். மகேஷ் மாஸ்டர், திலீப் சுப்பராயன் மாஸ்டர் மற்றும் அசார் மாஸ்டர் ஆகியோருக்கும் நன்றி. அசார் மாஸ்டர், உங்கள் எனர்ஜிக்கு ஈடு கொடுப்பது கஷ்டம், இருந்தாலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். தொண்டி கிராமத்தில் எங்களுக்கு உதவிய படகு ஓட்டிகளான சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நடுக்கடலில் நீங்கள்தான் எங்களை காப்பாற்றிய லைஃப் கார்ட்ஸ் (Life guards).
இங்கு வந்திருக்கும் வெற்றிமாறன் சாருக்கு நன்றி. இன்று இங்கு நிற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். ‘மண்டாடி’ எனக்கு மிகவும் சிறப்பான படம், ஏனென்றால் இது எனது முதல் நேரடி தமிழ்ப் படம். தமிழ் சினிமாவின் வலுவான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களையும், ஒரு நல்ல படத்தை மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதையும் பார்த்து நான் சிறு வயதிலிருந்தே வியந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே எக்சைட்டிங்காகவும், சவாலாகவும், நான் இதுவரை பண்ணாத ஒன்றாகவும் இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர் மதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி. நான் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன், ஒவ்வொரு படமும் ஒரு நடிகனுக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொடுக்கும். மந்தாடி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது, என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றிப் பாதுகாக்கும் சிறப்பான நினைவுகளைக் கொடுத்திருக்கிறது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ஒரு பொண்ணுகிட்ட காதலைச் சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு பதற்றத்துலதான் நான் இப்போ இருக்கேன். தமிழ் ஆடியன்ஸ் என்னையும் என் நடிப்பையும் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் இந்த படமும் எனது கதாபாத்திரமும் உங்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்.
எங்களுடைய தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சாரைப் போல ஒரு தைரியமான தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. இயக்குனர் ஒரு காட்சிக்கு 500 துணை நடிகர்கள் வேண்டும் என்று கேட்டால், அவர் 1500 பேரை ரெடி பண்ணிக் கொடுப்பார். படத்திற்காக அவர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு ரொம்ப நன்றி சார். சத்யராஜ் சார் ரொம்ப எளிமையாகப் பழகினார், அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் கதிர் சாருடைய வொர்க்கிற்கு நான் ரொம்ப பெரிய ரசிகன். இந்த படத்திற்குப் பிறகு நீங்களும் அவருக்கு ரசிகராகி விடுவீர்கள்.
மகிமா, ரவீந்திர விஜய், மிதுன் ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் பாலசரவணன் ப்ரோவின் நடிப்பை நீங்கள் கண்டிப்பாக என்ஜாய் பண்ணுவீர்கள். எடிட்டர் சார் மற்றும் நான் யார் பெயரையாவது சொல்ல மறந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.
இயக்குனர் மதிமாறன் பேசும்போது
“குடும்பத்தினர், ஊடக நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். முக்கியமாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தொண்டி, பாசிப்பட்டினம், முள்ளிமுனை மற்றும் மண்டாடி படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கம். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் எல்லார் பெயரையும் கூறிவிட்டார், அதனால் நான் பெயர்களை சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
‘மண்டாடி’ படம் எனக்கு ஒரு பெரிய பயணம். என் மனதின் ஆழத்திலிருந்து முதல் நன்றியை இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் இவ்வளவு பெரிய பிரமாண்டமாக உருவாக அவர்தான் காரணம். வாழ்க்கையில் நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் எனக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பவர் வெற்றி சார். அவர் இல்லையென்றால் என்னால் இன்று இங்கு நிற்க முடியாது. நான் அவர் எடுத்த ‘ஆடுகளம்’ படத்தில் வேலை செய்யவில்லை என்றால், இன்று இந்த ‘மண்டாடி’ படத்தை எடுத்திருக்க முடியாது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தை உருவாக்குவதற்கு மூன்று முக்கிய நபர்கள் காரணம். முதல் நபர், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார். ஒரு இயக்குனரின் கனவை நம்பி அதை நிறைவேற்றிக் கொடுக்கும் தயாரிப்பாளரை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்து என்னை இந்தக் கதையுடன் இணைத்தது ‘கடல்’. கடல் சார்ந்த இந்த கதைக்காக நான் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரைத் தேடினேன், அப்போதுதான் எனக்கு சார் கிடைத்தார். நான் கேட்டதை அவர் கொடுத்தார், அவர் கேட்டதை நான் கொடுத்தேன். என்னிடம், “எனக்கு பிரஷர் ஹேண்ட்லிங், டெட்லைன்லாம் வராது” என்று கூறினார். படப்பிடிப்பு நேரத்தில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் மணி அவர்களுக்கு என் நன்றிகள்.
இரண்டாவது நபர், சூரி சார். நீங்கள்தான் இந்த படத்தின் உயிர். படப்பிடிப்பின் போது உங்களுக்கு நிறைய கஷ்டங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் நான் உங்களைக் கவனிக்க முடியாமல் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். சூரி சாருக்கும் எனக்கும் நடந்த ஒரே ஒரு சம்பவம் பற்றி சொல்கிறேன்: ‘பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம், காதலில் முடிந்தது’ என்பது போலத்தான் சூரி சாருக்கும் எனக்குமான உறவு இருந்தது. படப்பிடிப்பு முடிந்து வந்துவிடுவோம், மறுநாள் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதே ஈடுபாட்டுடன் சூரி சார் வந்து நிற்பார். ஒருநாள் அவரிடம், “ஏன் சார், தூங்கவில்லையா?” என்று கேட்டேன். “ஆமாம், ஊர் புதுசா இருக்கிறதால தூக்கம் வரல” என்றார். இரண்டாவது நாளும் தூங்கவில்லை என்று சொன்னார். மூன்றாவதாக என் உதவி இயக்குனர் என்னிடம், “சூரி சார் தூங்காததற்கு நீங்கள் தான் காரணம்” என்று கூறினார். அப்போதுதான் நான் சூரி சாரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த படத்திற்காக அவர் செய்த தியாகங்கள், யூடியூப் கமெண்ட்ஸில் அவர் பெற்ற பாராட்டுகள் அனைத்திற்கும் அவர் தகுதியானவர். சூரி சாருக்கு இந்தப் படம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது எங்களுக்குச் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட்டன. இருப்பினும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு எனக்காகவும் படத்திற்காகவும் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுஹாஸ் சார், ஜி.வி. சார், சத்யராஜ் சார், மகிமா, மற்றும் ஒட்டுமொத்த டெக்னிஷியன்ஸ், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனக்கு இந்தப் படத்தைக் கையாளுவதற்குப் பெரிய சவாலாக அமைந்தது தொழில்நுட்பக் கலைஞர்கள் தான். என்னைச் சுற்றி எப்போதுமே பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கதிர் சார் போன்ற பெரிய டெக்னிஷியன்ஸ் இருப்பார்கள். பீட்டர் மாஸ்டருக்கு நிறைய டார்ச்சர் கொடுத்திருக்கிறேன். கதிர் சார், “கேமரா கடலில் விழுகக்கூடாது, ஒரு பாதுகாப்பான கோணத்தில் வைக்கலாம்” என்று சொன்னபோது, அவர் ஒரு ப்ரொபசர்போல வரைபடம் வரைந்து காட்டி, நான் நினைத்ததைச் சாதித்துக்கொடுத்தார். எடிட்டர் பிரதீப், பாலா சார் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றி.
மகிமா, உங்கள் வயதிற்கு மீறிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததற்கு நன்றி. இந்த பெரிய படகை இயக்குவதற்கு எனக்கும் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது என் உதவி இயக்குனர்கள்தான். குறிப்பாக அமீர் மற்றும் ஹாரிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த படம் என்னைக் கண்டுபிடித்ததா அல்லது நான் இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி பாரம்பரிய விளையாட்டோ, அதேபோல்தான் மீனவர்களின் இந்த பாய்மரப் படகுப் பந்தயமும். இதற்கும் அரசாங்கம் மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கி அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி நடந்தால் அதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி!” என்று கூறினார்.
ஆர்.ஜே. பாலாஜி பேசும்போது
“எல்லாருக்கும் வணக்கம். கிளீன் ஷேவ் பண்ணிட்டு இந்த ஈவென்ட்டுக்கு வந்தவங்களுக்கு எல்லாம் இப்போ தாடியே முளைச்சிருச்சு! நானே கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நினைச்சேன், ஆனா நான் வந்ததுக்கு அப்புறமே ஒரு மூணு நாள் ஆகியிருக்கு இந்த ஈவென்ட் நடந்து முடியறதுக்கு. ராமநாதபுரம் மாவட்டத்துல இருந்து பாசிப்பட்டினம், தொண்டி மற்றும் இன்னும் சில ஊர்கள்ல இருந்து வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க இல்லைனா இந்த ஈவென்ட்ல இந்த ஆரவாரமும் கூச்சலும் இருந்திருக்காது; இவ்ளோ சிறப்பா நடக்குறதுக்கு நீங்கதான் காரணம்.
இந்த படத்தோட டைரக்டர் மதி, செமையா பேசுனீங்க. நீங்க ஒரு ஃபர்ஸ்ட் டைம் டைரக்டர் மாதிரி பேசல; உங்ககிட்ட ஒரு தனி ‘Swag’ இருக்கு. இது உங்களுடைய முதல் பிளாக்பஸ்டரா அமைய வாழ்த்துகள். கதிர் சார், செம எடிட்டர் பிரதீப் ஈ ராகவ், பாலசரவணன், மிதுன், மகிமா, சுஹாஸ் சார்னு எல்லாருக்கும் என்னோட வாழ்த்துகள். மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், கடலுக்கு நடுவுல அவ்ளோ கஷ்டப்பட்டு கோர்ட் போட்டு ஷூட் பண்ணிருக்கீங்க. நான் வெற்றிமாறன் சார்கிட்ட கேட்டப்போ, ‘அவர் கோர்ட் போடாம வந்த ஒரே ஸ்பாட் என்னோட செட் தான்’னு சொன்னாரு. இப்படி ஒரு படத்துக்காக இவ்ளோ தூரம் உழைச்ச அத்தனை டெக்னீஷியன்களுக்கும் வாழ்த்துகள்.
எறும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைனு நீங்க நினைக்கலாம். நான் இங்க வந்திருக்கறதுக்கு ஒரே காரணம் என் நண்பர் சூரி சார்தான். அன்பாலே அடிப்பீங்க சூரி சார், கொஞ்சம் உட்காருங்க! நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சதில்ல, எங்களுக்குள்ள எந்த வொர்க்கிங் ரிலேஷன்ஷிப்பும் கிடையாது. ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் மானசீகமான அன்பும் மரியாதையும் வெச்சிருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க காமன் ஃப்ரெண்ட் உதய் மூலமாதான் நாங்க பேச ஆரம்பிச்சோம். எனக்கு ஒரு பிரச்னை வந்தப்போ, ஃபர்ஸ்ட் கால் பண்ணி ஆறுதல் சொன்னது அவர்தான். படம் ஜெயிச்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டதும் அவர்தான். நீங்க எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சார்.
Madras crocodile Bank சார்பாக மீண்டும் ஒருமுறை வருக வருக என வரவேற்கிறோம். இன்று, அதாவது 28 ஆகஸ்ட் 2026, Madras crocodile Bank தனது 50-வது வருடத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு முக்கியமான நாள். பின்னோக்கி பார்க்கும்போது, 49 வருஷ உழைப்பு தெரியுது. இந்த தருணத்தில, எங்களுடைய நிறுவனர்கள் பத்மஸ்ரீ ராமுலுஸ் விட்டேகர் மற்றும் சாய் விட்டேகர் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி, மூன்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம்.
1. ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது 4 (second Wednesday of every month) Madras crocodile Bank-5 வருகைதரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பார்வையாளர்களுக்கும் அனுமதி இலவசம். வரை, அனைத்து
2. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாக வரக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் கட்டண சலுகைகள் வழங்கப்படும்.
3. இந்தியாவிலேயே முதல்முறையாக, Reptile Conservation-க்காக நாடு தழுவிய ஒரு Madras Crocodile Bank 5 The Reptile Conservancy Alliance நிறுவனமும் இணைந்து, “save the reptiles” என்ற பெயரில் சுமார் 15,000 கிலோ மீட்டர், 22 மாநிலங்கள் வழியாக, சுமார் 120 நாட்கள், இன்றுதொடங்கி டிசம்பர் 2026 வரை பயணம் செய்யவிருக்கிறோம்.
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
oplus_0
இப்பிரச்சாரத்தை, இந்த சிறப்பான தருணத்தில், உங்கள் முன்னிலையில் ஆரம்பிக்க நாங்கள் விரும்புகிறோம்.
இந்த பயணத்தின்போது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்,மாநில வனத்துறை அலுவலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, ஊர்வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவிருக்கிறோம். இப்பயணம் வெற்றிபெற, ஊடக நண்பர்கள், தங்களது நல் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!
Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.
மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான டி. ஆண்டனி சாருக்கு நன்றி. பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பையும், உணர்வுகளையும் கொடுத்திருக்கிறோம். படம் எப்படி ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்த ஜேனட்டுக்கும், எங்களை வாழ்த்த வந்த தனஞ்செயன் சாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நன்றி.”
இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது..,
“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். இந்தப் படத்தை உருவாக்கும் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.
கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார். ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார். ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.
படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார். முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர். அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன. என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மார்க்கெட்டிங் பணிகளில் விவேக் அமிர்தலிங்கமும், சதீஷ் அண்ணாவும் எனக்கு மிகுந்த உதவி செய்தார்கள்.
குறிப்பாக தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது. சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
“அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சில வாரங்களுக்கு முன்பு ஆண்டனியின் படத்தின் போஸ்டரை பார்த்து, படத்தை பார்க்க வேண்டும் என்று அவரை தொடர்புகொண்டேன். உடனடியாக பிரிவியூ ஏற்பாடு செய்து படத்தை பார்க்க வைத்தார். குறுகிய காலத்தில் உருவாகியிருந்தாலும், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு அழகான, கவித்துவமான காதல் கதையாக உருவாகியுள்ளது.
ஆண்டனி, மதுமிதா தாஸ் இருவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆலம் ஷா, நவ்யா சுஜி, ஜீவா ரவி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள், அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக சிங்க் சவுண்டில், டப்பிங் இல்லாமல் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு குறுகிய காலத்தில் தரமான படத்தை உருவாக்கியதற்கு சிறப்பான முன்தயாரிப்பே காரணம். சிறு படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சிறு படங்களுக்கும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்.
தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நாளை அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஆலோசனை நடைபெறுகிறது. வெளியாகி 8 வாரங்கள் ஆன படத்தை ஓடிடி வாங்குவதில்லை, அது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும் பிரச்சனையை கவனத்தில் கொண்டு, அனைவரும் கலந்தாலோசித்து தொழில்துறையை பாதிக்காத வகையில் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆண்டனி விரும்புவது போல இந்தப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
Anthony’s Atelier நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், காதல், தனிமை மற்றும் வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான். அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.