Categories
General News

அரேபிய மண்ணில் தமிழர்களின் வெற்றிக்கு மகுடம்!

அரேபிய மண்ணில் தமிழர்களின் வெற்றிக்கு மகுடம்!
துபாயில் பிரமாண்டமாக வெளியான “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1”
100 தலைவர்கள்… 100 வெற்றிக் கதைகள்… ஒரு வரலாற்றுப் பதிவு!

துபாய்: அரேபியாவில் தமிழர்களின் தொழில் சாதனை, தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் வெற்றிப் பயணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” சிறப்பு புத்தகம், Sikaram 2026 நிகழ்ச்சியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

தமிழர்களின் திறமை, உழைப்பு மற்றும் சாதனைகளை ஒரே பதிப்பில் பதிவு செய்யும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை WIT முன்னெடுத்துள்ளது. அரேபியாவில் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள 100 முன்னணி தமிழர்களின் வெற்றிக் கதைகள் இந்த முதல் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

MLA லீமா ரோஸ் வெளியிட்டார்

Lalgudi Constituency MLA மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் WIT-ன் Merlin முன்னிலையில், Vijayan Ayyappan அவர்கள் புத்தகத்தை MLA லீமா ரோஸ் அவர்களிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடைபெற்றது.

முதல் பிரதிகளைப் பெற்ற முன்னணி பிரமுகர்கள்

இந்த சிறப்புப் பதிப்பின் முதல் பிரதிகளை PSM Investment Group Chairman Habibullah, TVS Group-ன் Mr. Haider, Complyance-ன் Kalaiarasan, Power Group Chairman Jahir Hussain மற்றும் Lynx International-ன் Saravan Krishnamurthy உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Top 100 Tamil Leaders அனைவரும் இந்த பெருமைக்குரிய முயற்சியின் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர்.

“100 பெயர்கள் அல்ல… 100 தலைமுறைகளுக்கான உத்வேகம்!”

“Top 100 Tamil Leaders in Arabia” என்பது வெறும் புத்தகமாக இல்லாமல், அரேபியாவில் தமிழர்கள் உருவாக்கிய வெற்றியின் வரலாற்றுப் பதிவாக உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகள் மற்றும் வெவ்வேறு பின்னணிகளில் இருந்து அரேபியாவிற்கு வந்து, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை மற்றும் விடாமுயற்சியால் உயர்ந்த 100 தமிழர்களின் பயணம் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது. ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவுகளையும், போராட்டங்களையும், வெற்றிகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

“இது எங்களுக்கு privilege… pride…” – Merlin

இந்த முயற்சி குறித்து WIT ஏற்பாட்டாளர் Merlin கூறுகையில்:

“‘Top 100 Tamil Leaders in Arabia’ முதல் பதிப்பை வெளியிடுவது எங்களுக்கு மிகப்பெரிய privilege மற்றும் pride. இது 100 பேரின் பெயர்களை பதிவு செய்யும் ஒரு புத்தகம் மட்டுமல்ல; அரேபியாவில் தமிழர்கள் உருவாக்கியுள்ள சாதனைகளையும், அவர்களின் வெற்றிப் பயணங்களையும் வரலாற்றில் பதிவு செய்யும் ஒரு முயற்சி.”

“நமது சமூகத்தில் ஏற்கனவே சாதித்தவர்களை கௌரவிப்பதோடு, அவர்களின் பயணம் இன்னும் பல இளைஞர்களின் கனவுகளுக்கு நம்பிக்கையாக அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்று சாதித்தவர்கள், நாளைய தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.”

என்றார்.

தமிழர்களை இணைக்கும் புதிய தளம்

இந்த புத்தகத்தின் மூலம் சாதனையாளர்களை கௌரவிப்பதுடன், அரேபியாவில் உள்ள தமிழ் தொழில்முனைவோர், தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களை ஒரே தளத்தில் இணைக்கும் Business & Leadership Networking Platform உருவாக்கும் நோக்கத்தையும் WIT முன்னெடுத்து வருகிறது.

எதிர்காலத்தில் இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்தி, இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், networking, mentorship மற்றும் community collaboration போன்ற வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Sikaram 2026 – ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்

Sikaram 2026 நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீடு, அரேபிய தமிழர்களின் சாதனைகள் மற்றும் தலைமைத்துவத்தை கொண்டாடும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது.

“100 Leaders. 100 Journeys. One Tamil Legacy.”

என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட Top 100 Tamil Leaders in Arabia – Edition 1, அரேபியாவில் தமிழர்களின் வெற்றிக்கு ஒரு புதிய அடையாளத்தையும், அடுத்த தலைமுறைக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் உருவாக்கியுள்ளது.

இது ஒரு புத்தக வெளியீடு மட்டுமல்ல…
இது தமிழர்களின் வெற்றியை வரலாற்றில் பதிவு செய்யும் ஒரு பயணம்.

இது முதல் பதிப்பு மட்டுமே — இன்னும் பல சாதனையாளர்களின் கதைகள் தொடரும்.

Categories
Cinema News

Ilayathilagam Prabhu – Vijay Varma movie Shoot Started

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.

இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.

படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்களாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

Categories
Cinema News

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,

இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இயக்குநர் சுமார் ஏழு மாதங்கள் வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி, படத்தின் விஷுவல் மாடலைத் தயாரித்து என்னிடம் கொண்டு வந்தார். ‘சார், நீங்கள் இதுவரை பார்த்த சாதாரண தமிழ் படம் போல் இது இருக்காது. ஹாலிவுட் தரத்தில் இதை உருவாக்க முடியும்’ என்ற அவரது நம்பிக்கையே என்னையும் இந்தப் படத்தை தயாரிக்கத் தூண்டியது.

படப்பிடிப்பிற்கு முன்பாகவே நீண்ட காலம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டோம். அந்தத் தயாரிப்புப் பணிகள் மூலம் படத்தின் காட்சிகள் மற்றும் சிஜி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் படப்பிடிப்பில் பங்கேற்று எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினார். நான் தனிப்பட்ட முறையில் ஜி.வி. பிரகாஷ் சாரின் ரசிகன். அவர் இந்தப் படத்தில் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகி தேர்விலும் இயக்குநர் மிகவும் கவனமாக செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மூலமாக கயாது லோஹரை பார்த்து, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அணுகினோம். படத்தில் அவர் மிகவும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகள் சவாலான சூழ்நிலைகளில் படமாக்கப்பட்டன. குறிப்பாக, பல்வேறு ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளை உருவாக்குவதில் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முழுமையாக உழைத்துள்ளனர். ஒரு தயாரிப்பாளராக கலைஞர்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் பணியாற்ற வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியுள்ளோம். குறிப்பாக, விஷுவல்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்காக படக்குழு மிக நீண்ட காலமாக உழைத்துள்ளது. இந்தப் படம் உருவாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு உள்ளது. இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்திற்காக தனது முழு முயற்சியையும் அர்ப்பணித்துள்ளார். அவரது கனவு மற்றும் உழைப்பின் விளைவாக இந்தப் படம் இன்று மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, சவுண்ட், எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுடன் இருந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இம்மார்டல்’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் விஷுவல் அனுபவத்திலும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். படம் வெளியான பிறகு உங்கள் அனைவரின் ஆதரவும், கருத்துகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது..,

“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.

கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,

“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கயாது லோஹர் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத நிலையிலும், ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொண்டு சரியாகப் பேசுவதற்காக கடுமையாக உழைத்தார். சவாலான படப்பிடிப்பு சூழல்களிலும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சவுண்ட் டிசைன் குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்,” அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,

இம்மார்டல் எனக்கு மிகவும் முக்கியமான படம், சில படங்கள் செய்யும்போது இது தனித்துவமாக இருக்குமென நமக்கு தெரியும் அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்த படம்.

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் மிகவும் எனர்ஜியான மற்றும் பாசிட்டிவான மனிதர். ஒரு படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வமும், படக்குழுவினர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அவர் செய்யும் உதவிகளைக்கூட வெளியே சொல்லிக்கொள்ள விரும்பாத நல்ல மனிதர். ஜி.வி. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவமும், ஸ்கோப்பும் உள்ளது. அவர் அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னாவும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். ஒவ்வொரு இயக்குநருடனும் பணியாற்றும் அனுபவம் வித்தியாசமானது. அந்த வகையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும். என்னுடன் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து குழுவினருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது..,

“இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என படக்குழுவினரின் நேர்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.

குறிப்பாக, தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை இவ்வளவு தரமாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஜி.வி. பிரகாஷ் எப்போதும் தனது பணியில் அபாரமான ஆற்றலுடன் செயல்படுபவர். எத்தனை படங்களில் நடித்தாலும், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் அவரது உழைப்பும் வேகமும் குறைவதில்லை. அவர் வாங்காத தேசிய விருது இல்லை ஆனாலும் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் விஷனும் மிகப்பெரியது. ஒரு தயாரிப்பாளராக அவர் இந்தப் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், பிரமாண்டமாக படத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தும் முயற்சியும் பாராட்டுக்குரியது. நல்ல இயக்குநர்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் தயாரிப்பாளராக அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன்.

‘இம்மார்டல்’ ஒரு அழகான ரொமான்டிக் கதையுடன், பிரமிப்பூட்டும் விஷுவல்ஸ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒவ்வொரு ஃப்ரேமின் பின்னாலும் படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பை ரசிப்பார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்றார்.

நடன இயக்குநர் சபரீஷ் பேசியதாவது..,

“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். குறிப்பாக, இது எனது முதல் படத்தைப் போன்ற ஒரு உணர்வை எனக்குக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இது எங்களின் இரண்டாவது திரைப்படமாகும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண் அண்ணா, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது..,

“இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் படத்தின் பணிகளில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

மேலும், எனது குரு மற்றும் அவருடன் பணியாற்றிய அசோசியேட் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் எனது பயணத்தில் மிகவும் முக்கியமானது. ‘இம்மார்டல்’ திரைப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது அனைவரும் இணைந்து உழைத்த படம் என்பதால், உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.

நடிகர் டி.எம். கார்த்தி பேசியதாவது..,

“சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் கூறினார். அப்போது பேசிய கதாபாத்திரத்தை தற்போது இன்னும் விரிவுபடுத்தி முழு நீள கேரக்டராக உருவாக்கியிருந்ததால், இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு இசைப் போட்டியில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு பரிசு வழங்கியது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

‘இம்மார்டல்’ மிகவும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இதில் வழக்கமான மாஸ் என்ட்ரி இருக்காது, ஆனால் மாஸ் ரசிகர்கள் உட்பட அனைவரும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், ஜி.வி. பிரகாஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது..,

“பெரும்பாலும் சின்ன சின்ன கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்காகவே மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கேரக்டரை நான் மிகவும் ரசித்து நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தமிழ் தெரியாத நிலையிலும் நாயகி தமிழ் வசனங்களை மிகவும் அழகாகப் பேசி நடித்தது என்னை வெகுவாக கவர்ந்தது.

இது மொபைல், டிவி அல்லது ஓடிடியில் சாதாரணமாக பார்க்க வேண்டிய படம் அல்ல. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது..,

‘“ஜி.வி. பிரகாஷ் சார் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை ஆதரிப்பவர். இந்தக் கதையைக் கேட்டதுமே இது ஒரு எக்ஸ்பெரிமென்டல் முயற்சி என்பதால் கண்டிப்பாக நீ செய்ய வேண்டும் என்று கூறினார்.

படப்பிடிப்பின்போது பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக சில இடங்களில் படப்பிடிப்பு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தபோதும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் எந்தவிதமான தயாரிப்பு ரீதியான தடையும் ஏற்படுத்தாமல், எவ்வளவு நாட்கள் எடுத்தாலும் படத்தை தரமாக உருவாக்க வேண்டும் என்று முழு ஆதரவும் சுதந்திரமும் அளித்தார். அதுவே இந்தப் படம் இவ்வளவு தரமாக உருவாக முக்கிய காரணம்.

படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ‘இம்மார்டல்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், “டிராகன்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.

சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் – மாரியப்பன் சின்னா
தயாரிப்பு – அருண்குமார் தனசேகரன்
தயாரிப்பு நிறுவனம் – AK Film Factory
ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன்
இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ஷான் லோகேஷ்
கலை இயக்கம் – சிவசங்கர்
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
நடனம் – சபரீஷ்
ஆடை வடிவமைப்பு – வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U
DI – Get In Dream Studio
கலரிஸ்ட் – ஸ்ரீராம்
VFX – R. மஹி
ஸ்டில்ஸ் – இ. ராஜேந்திரன்
காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ்
ஒப்பனை – P. மாரியப்பன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

Categories
Cinema News

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ததர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர்கள் பசங்க பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரும் பங்கேற்று சக்திவேலனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும் நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜ சேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஜெயன், அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பிறந்தநாள் நாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திரையுலகைச் சேர்ந்த பல்வேறு முன்னணி பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டு வாழ்த்தியதால், சக்திவேலனின் பிறந்தநாள் விழா சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.

https://we.tl/t-td9jpQXZ5MjGcOvv

Categories
Cinema News

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர்.

முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாக தொடரும் சமூகப் பிரச்சினைகளை,
மக்களின் இரத்தமும் சதையுமான வாழ்க்கைக்குள் சென்று பதிவு செய்யும் ஆக்‌ஷன் எமோஷனல் டிராமாவாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி சாமி வந்து ஆவேசமாக ஆடும் தோற்றத்தில் தீவிரமான பார்வையுடன் காட்சியளிக்கிறார். பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலை மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது படத்தின் கிராமிய மற்றும் ஆன்மிக பின்னணியை வெளிப்படுத்துகிறது.

‘வேட்ட சாமி’ படத்தின் கிளிம்ப்ஸ், வில்லிசை கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கி, பாரம்பரிய தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டு அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோரின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. கிராமிய வாழ்வியலுடன் ஆன்மீக உணர்வையும் கலந்து அமைக்கப்பட்டுள்ள இந்த கிளிம்ப்ஸ், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகின்றன.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி எஸ் கே, ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பம்பர் படத்தை இயக்கிய M. செல்வகுமார் எழுதி இயக்கும் இப்படத்தை 7 Miles Per Second Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக G. துரைராஜ், சண்டைப்பயிற்சியை சிறுத்தை கணேஷ் கவனித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Categories
Cinema News

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு.

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு.

மும்பை, ஆகஸ்ட் 28, 2026:

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் சிறப்பான கூட்டணி மற்றும் படைப்பாற்றல் பார்வையின் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்ற பாராட்டுக்குரிய திறமையாளர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறப்பான படைப்புக் குழுவையும் எடுத்துக்காட்டியது.

மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மிகுந்த உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.

தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மும்பை வெளியீட்டு நிகழ்வு, பான் இந்தியா அளவில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இப்படம் எடுத்து வைக்கும் முதல் முக்கியமான அடியாக அமைந்துள்ளது.

🔗 https://youtu.be/bfrZLRxsink

Categories
Cinema News

ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

*40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !*

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,

படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில் கிடா வெட்டி, பொதுமக்களுக்கு விருந்து வழங்கி, அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய படக்குழுவின் இந்த செயல், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான மற்றும் முக்கியமான படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து பின்னணி கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Categories
Cinema News

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது.

குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இணைத்து இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லரில் தெரிய வருகிறது. டிரெய்லரைப் பார்த்தவுடனேயே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோசி கதையை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பான கலைஞர்கள் கூட்டணி இப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாவனா ஸ்டூடியோஸ் (Bhavana Studios) தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் Future RunUp Films வழங்கி விநியோகிக்கிறது. Primark Productions நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.  மலையாளத்தில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழ் ரசிகர்களிடமும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதல், நகைச்சுவை, உணர்வுகள் என ஒரு வித்தியாசமான உறவின் பல பரிமாணங்களை பேசும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு.

ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு.

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா… அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர்

நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘கிங் 100- KING100’ திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன்எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது. அத்துடன் ர.கார்த்திக்  நாகார்ஜுனா கூட்டணி மிகப் பெரும் சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

படைப்பாளுமை மிக்க இயக்குநர் ரா. கார்த்தியின் கற்பனையில் உருவான ‘கிங் 100 – KING 100’ படத்தின் பிரத்யேக காணொளியில்.. நாகார்ஜுனாவின் திரை தோற்றம்- திரை ஆளுமை – திரை பங்களிப்பு – என அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருப்பதால், நாகார்ஜுனாவின் ரசிகர்கள் இதனை பிறந்தநாள் பரிசாக கொண்டாடி, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இயக்குநர் ர. கார்த்திக், நாகார்ஜுனாவிற்காக அதிலும் அவருடைய நூறாவது திரைப்படத்திற்காக உருவாக்கி இருக்கும் காட்சி அமைப்புகள்- உரையாடல்கள்- அனைத்தும் பிரம்மாண்டமானதாகவும், ரசிகர்களுக்கு பிரமிக்கத்தக்க வகையிலான திரையரங்க அனுபவத்தை வழங்குவதாலும். இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.

நடிகர்,:
நாகார்ஜுனா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக்
தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர் :  அக்கினேனி குடும்பம்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : என். சதீஸ் குமார்
படத்தொகுப்பு :  நவீன் நூலி
கிரியேட்டிவ் புரொடியுசர்: பிரசாத் நிம்மகாயலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Categories
Cinema News

‘Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union

‘Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union.

Kaushik Krish, D Sathyaprakash & Hiphop Tamizha lend their voices to the soulful track; lyrics penned by Hiphop Tamizha

The musical journey of Hiphop Tamizha’s much-awaited entertainer Meesaya Murukku 2 continues to create waves, with the makers unveiling the film’s fifth single, ‘Kalaivaniye.’ Sung by Kaushik Krish, D Sathyaprakash and Hiphop Tamizha, the song features lyrics penned by Hiphop Tamizha and brings together romance, emotions and celebration in a beautiful musical package.

Adding a special significance to the song, ‘Kalaivaniye’ features the marriage union of Ramya Ranganathan and Hiphop Tamizha, presenting a memorable chapter from the film through music. The song captures the emotions and grandeur surrounding their wedding, promising to be one of the most special musical moments in Meesaya Murukku 2.

The release of ‘Kalaivaniye’ further strengthens the tremendous buzz surrounding the film’s soundtrack. Earlier released songs including ‘Aura 10/10,’ ‘Pappali Pazhamey,’ ‘Goindhamma’ and ‘Adi Podi’ have received an overwhelming response from audiences, emerging as chartbusters and dominating music platforms and social media.

With every song offering a distinct flavour, Meesaya Murukku 2 is shaping up to be a vibrant musical entertainer that blends youthful energy, romance, humour, friendship and family emotions. Hiphop Tamizha, who has taken charge as the writer, director and music composer, apart from playing the lead role, promises yet another entertaining and musically rich experience for audiences.

The film features Hiphop Tamizha, Chaithra J Achar, Ketika Sharma and Ramya Ranganathan in prominent roles, alongside Harshath Khan, Karunaas, Nasser, Aadukalam Naren and Sha Ra.

Following the massive anticipation generated by the film’s songs, Meesaya Murukku 2 is gearing up for a worldwide theatrical release on September 25. With its blend of music, romance, emotions, humour and celebration, the film promises to offer audiences an experience that is more than just a movie — it’s a concert in theatres.

CAST:
* Hiphop Tamizha
* Chaithra J Achar
* Ketika Sharma
* Ramya Ranganathan
* Harshath Khan
* Karunaas
* Nasser
* Aadukalam Naren
* Sha Ra

CREW:
* Writer & Director: Hiphop Tamizha
* Produced by: Avni Movies & Benzz Media Pvt. Ltd.
* Producers: Khushbu Sundar & ACS Arun Kumar
* Music Director: Hiphop Tamizha
* Editor: Fenny Oliver
* Director of Photography: Balaji Subramanyam
* Additional DOP: Madhesh Manickam
* CEO, Benzz Media: R Madhan Kumar
* Executive Producer: Anandita Sundar
* Creative Producer: Aswin Raam
* Costume Designer: Poornima Ramaswamy
* Art Director: V S Dinesh Kumar
* Production Executive: P Balagopi
* Choreography: Baba Baskar, Santhosh, Raghu Thapa
* Stunt Director: Action Sandhosh
* DI: Knack Studios
* Colorist: Prasath Somasekar
* VFX: 85FX, Hocus Pocus
* Additional Dialogues: Karan Karky & Nithish D
* Title Card Animation: Ashwin Kumar
* Marketing: Bonk Digital
* Production Marketing Team: Beatroute
* Publicity Designs: Raghavartz
* Hair & Make-up Designer: Velmurugan
* Costumer: Arun
* Still Photographer: P K Raja
* Sound Mixing: Kannan Ganpat
* Sound Design: A Sathish Kumar
* Production Controller: Hari Venkat C
* Production Manager: Vignesh Rathinam
* PRO: Riaz K Ahmed, Paras Riyaz, Sathish (S2 Media)

‘மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு

ஹிப்ஹாப் தமிழா ஆதி, கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் குரல்களில் உருவான காதல் திருமணப் பாடல்!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலின் அடுத்த கட்டமாக அமைந்துள்ள திருமண நிகழ்வை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் பாடல், ரசிகர்களுக்கு காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருசேரக் கடத்தும் வகையில் அமைந்துள்ளது.

இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் ‘மீசைய முறுக்கு 2’, முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான இசை என அனைத்து அம்சங்களையும் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

‘மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தின் இசை மற்றும் இளைய தலைமுறையினருடன் ஒன்றிணைந்த அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள ‘கலைவாணியே’ பாடலும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் நடிப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். அவருடன் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை, காதல், நட்பு, குடும்பம், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, திரையரங்குகளில் ஒரு திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு இசைக் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

நடிகர்கள்:
• ஹிப்ஹாப் தமிழா
• சைத்ரா ஜே ஆச்சார்
• கேதிகா ஷர்மா
• ரம்யா ரங்கநாதன்
• ஹர்ஷத் கான்
• கருணாஸ்
• நாசர்
• ஆடுகளம் நரேன்
• கருணாகரன்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:
கதை, இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பு: அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார்
இசை: ஹிப்ஹாப் தமிழா
படத்தொகுப்பு: பென்னி ஒலிவர்
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்
கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்
CEO – பென்ஸ் மீடியா: ஆர். மதன் குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆனந்திதா சுந்தர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அஸ்வின் ராம்
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார்
புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்: பி. பாலகோபி
நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
DI: Knack Studios
கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்
VFX: 85FX, Hocus Pocus
கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D
டைட்டில் கார்டு அனிமேஷன்: அஷ்வின் குமார்
மார்க்கெட்டிங்: Bonk Digital
புரொடக்ஷன் மார்க்கெட்டிங்: Beatroute
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: Raghavartz
முடி & மேக்கப் வடிவமைப்பு: வேல்முருகன்
காஸ்ட்யூமர்: அருண்
ஸ்டில் புகைப்படம்: பி.கே. ராஜா
ஒலிக்கலவை: கண்ணன் கணபத்
ஒலி வடிவமைப்பு: ஏ. சதீஷ்குமார்
புரொடக்ஷன் கண்ட்ரோலர்: ஹரி வெங்கட் C
புரொடக்ஷன் மேனேஜர்: விக்னேஷ் ரத்தினம்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (S2 Media)