Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New _Street Fighter_ Trailer.
_The World Warrior Tour Kicks Off in Japan as the Trailer Makes History on YouTube. Street Fighter will release on 16 October 2026 across India in English, Hindi, Tamil and Telugu_
Paramount Pictures and Legendary Entertainment have kicked off the global World Warrior Tour with an epic first-ever trailer launch across the iconic Shinjuku Yunika Vision screens in Tokyo.
Stars Noah Centineo, Andrew Koji, Callina Liang and Jason Momoa were joined by local cast member Hirooki Goto, Japanese voice talent Eiko Kano, director Kitao Sakurai and Street Fighter game director Takayuki Nakayama for the first-of-its-kind event.
The New _Street Fighter_ Trailer Isn’t Just Watchable. It’s Playable. In conjunction with the Japan launch, Paramount Pictures and Legendary Entertainment debuted the first-ever playable full-length movie trailer on YouTube, inviting fans around the world to fight their way through the new _Street Fighter_ trailer as they watc
Set in 1993, estranged Street Fighters Ryu (Andrew Koji) and Ken Masters (Noah Centineo) are thrown back into combat when the mysterious Chun-Li (Callina Liang) recruits them for the next World Warrior Tournament: a brutal clash of fists, fate, and fury. But behind this battle royale lies a deadly conspiracy that forces them to face off against each other and the demons of their past. And if they don’t, it’s GAME OVER!
Helmed by director Kitao Sakurai, Street Fighter is set to bring the battle from the arcade to the big screen with Hadoukens, roundhouses, and all your favorite characters.
The cast includes Noah Centineo as Ken Masters, Andrew Koji as Ryu, Callina Liang as Chun-Li, Joe “Roman Reigns” Anoa’i as Akuma, David Dastmalchian as M. Bison, Cody Rhodes as Guile, Andrew Schulz as Dan Hibiki, Eric André as Don Sauvage, Vidyut Jammwal as Dhalsim, Orville Peck as Vega, Olivier Richters as Zangief, Hirooki Goto as E. Honda, Rayna Vallandingham as Juli, Alexander Volkanovski as Joe, with Curtis “50 Cent” Jackson as Balrog and Jason Momoa as Blanka.
_Street Fighter_ will release on 16 October 2026 across India in English, Hindi, Tamil and Telugu.
*புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரில் நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ மற்றும் ஆண்ட்ரூ கோஜி!*
*ஜப்பானில் தொடங்கி யூடியூபில் வரலாறு படைத்த ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ டிரெய்லர்! ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகிறது!*
பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
நடிகர்கள் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோருடன், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரைப் பார்ப்பதோடு மட்டுமல்லாது விளையாடவும் முடியும். ஜப்பான் வெளியீட்டுடன் இணைந்து, பாராமெளண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் யூடியூபில் முதல் முறையாக முழுநீள விளையாடும்படியான திரைப்பட டிரெய்லரை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், டிரெய்லரைப் பார்த்துக்கொண்டே அதில் நேரடியாக விளையாடி, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உலகத்துக்குள் நுழைய முடியும்.
1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், ஒருவரை ஒருவர் பிரிந்த நிலையில் இருக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் சண்டைக் களத்திற்குத் திரும்புகின்றனர். மர்மமான சுன்-லி (கலினா லியாங்), அடுத்த ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டிக்காக இருவரையும் அழைக்கிறார். அங்கு ஆக்ரோஷமான குத்துச்சண்டை, விதி மற்றும் கோபம் நிறைந்த கடுமையான மோதல் காத்திருக்கிறது. ஆனால், இந்தப் பிரம்மாண்டமான சண்டைக்குப் பின்னால் ஒரு ஆபத்தான சதித்திட்டம் இருப்பது தெரியவருகிறது. அந்தச் சதித்திட்டம் ரியூ மற்றும் கென் இருவரையும் ஒருவருக்கொருவர் மட்டுமல்லாமல், அவர்களின் கடந்த காலத்தில் புதைந்திருக்கும் தங்களது சொந்தப் போராட்டங்களையும் எதிர்கொள்ளத் தள்ளுகிறது. அவர்கள் அதை எதிர்கொள்ளத் தவறினால் கேம் ஓவர்!
இயக்குநர் கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, ஆர்கேட் கேமில் இருந்து பெரிய திரைக்கு இந்தப் புகழ்பெற்ற போராட்டத்தை கொண்டு வருகிறது. ஹடோகென்கள், ரவுண்ட்ஹவுஸ் கிக்குகள் என ரசிகர்களுக்குப் பிடித்த அனைத்து கதாபாத்திரங்களுடனும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் விருந்தை வழங்கவுள்ளது.
இந்தப் படத்தில் நோவா சென்டினியோ (கென் மாஸ்டர்ஸ்), ஆண்ட்ரூ கோஜி (ரியூ), கலினா லியாங் (சுன்-லி), ஜோ ’ரோமன் ரெயின்ஸ்’ அனோவாய் (அகுமா), டேவிட் டாஸ்ட்மால்சியன் (எம். பைசன்), கோடி ரோட்ஸ் (குயிலே), ஆண்ட்ரூ ஷுல்ஸ் (டான் ஹிபிகி), எரிக் ஆண்ட்ரே (டான் சாவேஜ்), வித்யுத் ஜம்வால் (தல்சிம்), ஆர்வில் பெக் (வேகா), ஆலிவர் ரிக்டர்ஸ் (சாங்கிஃப்), ஹிரூகி கோட்டோ (இ. ஹோண்டா), ரெய்னா வல்லண்டிங்ஹாம் (ஜூலி), அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி (ஜோ), கர்டிஸ் ’50 சென்ட்’ ஜாக்சன் (பால்ராக்) மற்றும் ஜேசன் மோமோவா (பிளாங்கா) ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 16 அக்டோபர் 2026 அன்று வெளியாகிறது.
நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு.
பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios) நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்( Primark Productions ) மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் (Future Run Up )Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை செப்டம்பர் நான்காம் தேதி முதல் தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன..
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் பஹத் பாஸில்- உன்னி மாயா பிரசாத்- இயக்குநர் கிரீஷ் ஏ டி- ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரான உன்னி மாயா பிரசாத் பேசுகையில்,
” இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பாருங்கள். மலையாள ரசிகர்களை போல் உங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் கிரீஷ் ஏ டி- பேசுகையில், ”எனக்கு கூட்டத்தின் முன்பு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாது. செப்டம்பர் நான்காம் தேதி வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தினருடன் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்றால்.., கேரளாவில் தேவாலயங்களில் அருகே உள்ளவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள்.
இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்வியல் இருந்து உருவான கேரக்டர்” என்றார்.
தயாரிப்பாளர் பஹத் பாசில் பேசுகையில்,
”படத்தின் நாயகனான நிவின்பாலி மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு வர இயலவில்லை.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கிரீஷ் ஏ டி- இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ் ,ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த திரைப்படத்தை தமிழில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிகின்றன.
Celebrating Tamil Excellence in Arabia: MLA Leema Rose Unveils “Top 100 Tamil Leaders in Arabia” at Sikaram 2026 in Dubai.
Dubai: A significant milestone celebrating the remarkable achievements of the Tamil community across the Arab world was marked at the grand Sikaram 2026 event in Dubai, with the launch of “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1.”
The prestigious publication shines a spotlight on Tamil entrepreneurs, business leaders and professionals who have carved inspiring success stories through their vision, perseverance and leadership across Arabia.
The book was officially unveiled by Hon. Leema Rose, MLA, Lalgudi Constituency, in the presence of WIT organizer Merlin. The ceremonial first copy was presented to the MLA by Vijayan Ayyappan.
The inaugural copies were received by prominent personalities including PSM Investment Group Chairman Habibullah, Mr. Haider of TVS Group, Kalaiarasan of Complyance, Power Group Chairman Jahir Hussain, and Saravan Krishnamurthy of Lynx International.
More than a publication, “Top 100 Tamil Leaders in Arabia” is envisioned as a tribute to determination, ambition and the extraordinary contribution of Tamils who have built successful enterprises and leadership journeys far from their homeland.
Speaking about the initiative, Merlin, organizer of WIT, said:
“This is not merely a book featuring 100 names. It is an effort to document a legacy of achievement. Behind every leader featured here is a journey of courage, perseverance and determination. By celebrating those who have succeeded, we hope to inspire the next generation to dream bigger and create their own success stories.”
Built around the inspiring vision, “100 Leaders. 100 Journeys. One Tamil Legacy,” the initiative also aims to evolve into a meaningful Business & Leadership Networking Platform, bringing together Tamil achievers, entrepreneurs and professionals across the Arab world.
More than a book, “Top 100 Tamil Leaders in Arabia” is a celebration of a community that has crossed borders, overcome challenges and created a powerful legacy of success. And this is only the beginning — Edition 1 marks the start of a journey that promises to discover, document and celebrate many more inspiring Tamil success stories from Arabia.
அரேபிய மண்ணில் தமிழர்களின் சாதனை சரித்திரம்!
Sikaram 2026 விழாவில் MLA லீமா ரோஸ் வெளியிட்ட “Top 100 Tamil Leaders in Arabia”**
துபாய்: உலகின் பல்வேறு துறைகளில் தமிழர்கள் தங்களின் திறமையாலும் உழைப்பாலும் தனி முத்திரை பதித்து வரும் நிலையில், அரேபிய நாடுகளில் தொழில், வணிகம் மற்றும் தலைமைத்துவத்தில் சாதனை படைத்த தமிழர்களின் வெற்றிப் பயணத்தை பதிவு செய்யும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” சிறப்பு நூல், துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற Sikaram 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டது.
லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் இந்த பெருமைக்குரிய நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், Vijayan Ayyappan நூலின் முதல் பிரதியை MLA லீமா ரோஸ் அவர்களிடம் வழங்கினார்.
அரேபிய நாடுகளில் தமிழர்கள் உருவாக்கியுள்ள தொழில் வெற்றிகளையும், அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவத்தையும் அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், வெறும் சாதனையாளர்களின் பட்டியல் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு உத்வேகப் பதிவாகவும் அமைந்துள்ளது.
இந்த சிறப்புப் பதிப்பின் முதல் பிரதிகளை PSM Investment Group Chairman Habibullah, TVS Group-ன் Mr. Haider, Complyance நிறுவனத்தின் Kalaiarasan, Power Group Chairman Jahir Hussain மற்றும் Lynx International-ன் Saravan Krishnamurthy உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த முயற்சி குறித்து WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin கூறுகையில்,
“இது வெறும் 100 தலைவர்களை அறிமுகப்படுத்தும் முயற்சி அல்ல. அரேபிய மண்ணில் தமிழர்கள் எழுதியுள்ள வெற்றிக் கதைகளை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுப் பதிவு. இன்று சாதித்தவர்களை கௌரவிப்பதோடு, நாளை சாதிக்கப் போகும் இளைஞர்களுக்கு அவர்களின் பயணம் ஒரு நம்பிக்கையாகவும் உத்வேகமாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.
“100 Leaders. 100 Journeys. One Tamil Legacy.” என்ற சக்திவாய்ந்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, அரேபிய நாடுகளில் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரு வலுவான Business & Leadership Networking Platform ஆகவும் உருவெடுக்க உள்ளது.
“Top 100 Tamil Leaders in Arabia” என்பது ஒரு புத்தகம் மட்டுமல்ல; எல்லைகளை கடந்து தமிழர்கள் உருவாக்கியுள்ள வெற்றியின் அடையாளம். இது முதல் பதிப்பு மட்டுமே… அரேபிய மண்ணில் இன்னும் பல தமிழர்களின் சாதனைப் பயணங்கள் அடுத்தடுத்த பதிப்புகளில் உலகிற்கு அறிமுகமாக உள்ளன.
‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்…
தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில்,
“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லை. ‘ஹாய்’ திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. இந்தப் படத்தை உருவாக்கியபோது, பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள். நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.
“இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்க முடியாது. தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு, ‘தம்பி, நீ எதுவும் சாப்பிடாதே, வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன், என்னிடம்தான் சாப்பிட வேண்டும்’ என்று அன்புடன் கூறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன், அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது,” என்றார்.
“பிலோவுடன் எனக்கு குடும்பம் போன்ற உறவு. இதுவரை நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதனால் அவரைப் பற்றி பேசுவதற்கே ஒரு தனி நெருக்கம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கியமானது,” என்றார்.
“விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக் கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும். அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அந்தக் கதையை ஒரு நல்ல படமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும், இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா பேசுகையில்..,
“அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு முழுவதும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டியதற்கும், சிறப்பான உணவு மற்றும் பரிசுகளை வழங்கியதற்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் முதன்முதலில் என்னிடம் கதையை விவரித்தபோதே, அவர் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவை நான் அன்பாக ‘தளபதி’ என்றுதான் அழைப்பேன். இந்த வாய்ப்புக்கும் படக்குழுவினரின் அன்பிற்கும் அனைவருக்கும் தனது நன்றி.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில்..,
“அனைவருக்கும் நன்றி. இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.
நடிகை அம்ருதா சீனிவாசன் பேசுகையில்..,
“என்னை மேடைக்கு அழைத்து பேச வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பிரபு சார், ராதிகா மேம், சுகாசினி மேம் போன்ற மூத்த கலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும். ‘ஹாய்’ உண்மையிலேயே ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம். இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்பவை. இசை, படத்தொகுப்பு, இயக்கம், கதை என ஒவ்வொரு துறையினரும் ஒன்றிணைந்து பங்களித்தால்தான் இப்படிப்பட்ட ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்க முடியும். இயக்குநர் விஷ்ணு ஒவ்வொரு ஃபிரேமையும் மிகவும் கவனமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு கிடைத்தது. ரசிகர்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வரும் வாரங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கிய லலித் சார், பிலோமின் ராஜ் சார், ஜென் மார்ட்டின் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
நடிகர் குரேஷி பேசுகையில்..,
“பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து நடிகர்களை வரவேற்றுள்ளேன். ஆனால், இன்று ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி. குறிப்பாக கவின் அண்ணாவுக்கு என் நன்றி. இயக்குநர் விஷ்ணு மிகவும் நல்ல மனிதர். மழை, புயல், வெள்ளம் என எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து, வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உள்ளது. அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிரபு சார், ராதிகா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக பிரபு சார் என்னிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகினார். புதிய நடிகர் என்ற எந்தத் தயக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தாமல், தானாகவே வந்து பேசுவார், அன்பாக விசாரிப்பார். அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை. ராதிகா மேடத்துடன் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் கலகலப்பானவர்; நம்மை கிண்டல் செய்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர்.
மேலும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நானே நம்புகிறேன். எனவே, எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி ஆதரிக்க வேண்டும்,” என்றார்.
நடிகை காவ்யா பேசுகையில்..,
“ ஹாய்’ படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம். கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது. ‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும்,” என்றார்.
இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,
“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.
எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
“நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது,” என்றார்.
“கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
நடிகை சுஹாசினி பேசுகையில்,
“ ‘ஹாய்’ படத்தில் எனக்கு ஒரு காட்சி மட்டுமே இருந்தாலும், அதில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது அவரது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பத்திலேயே பல சவால்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் கடந்து இனி அவரது பயணம் மேலும் மகிழ்ச்சியாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.
மேலும், “இந்தப் படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். அந்த உழைப்புக்கான பலன் இன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாய்’ படத்தைப் பற்றியே பலரும் நல்ல விதமாகப் பேசுவதை கேட்டு வருகிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைப்பதில்லை. எனவே, இந்த வெற்றியை முழுமையாக மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
நடிகர் பிரபு பேசுகையில்..,
“ ‘ஹாய்’ ஒரு அருமையான படக்குழு. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணு எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கும், இந்த வாய்ப்பிற்காக என்னை அழைத்த நயன்தாராவுக்கும் எனது நன்றி. படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. பாக்யராஜ் சாருடன் இணைந்து இருந்த தருணங்களும் மறக்க முடியாதவை,”.
“கவின் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரிடம் நிறைய திறமையும், நல்ல எதிர்காலத்திற்கான பலமும் இருக்கிறது. தொடர்ந்து இன்னும் சிறப்பாக வளர வேண்டும். ஜென் மார்ட்டினின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களும், நேர்மறையான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,”.
மேலும், “படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக விஷ்ணு படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தார். சில நேரங்களில் சிரிப்பார், சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பார். ஆனால், இன்று இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த உற்சாகத்துடன் ‘ஹாய்’ படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.
நடிகர் கவின் பேசுகையில்..,
“முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.
இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.
கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் veliyaana ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.
முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
TRISHA KRISHNAN, RADHIKA SARATHKUMAR AND APARNA BALAMURALI STARRER MARKS PANORAMA STUDIOS’ FIRST TAMIL PRODUCTION, IN ASSOCIATION WITH LOCOMOTIVE GLOBAL; RAJA KRISHNA MENON’S PSYCHOLOGICAL HORROR BEGINS SHOOT IN LONDON.
Panorama Studios, in association with Locomotive Global, is set to make its foray into Tamil cinema with its first Tamil production, an intriguing psychological horror film directed by acclaimed filmmaker Raja Krishna Menon. Starring Trisha Krishnan, Radhika Sarathkumar and Aparna Balamurali, the yet-to-be-titled film promises to bring together a dark psychological drama and horror in a compelling narrative. The film has gone on floors, with principal photography now underway.
The film brings together three accomplished actors with an impressive body of work across Tamil, Malayalam and Hindi cinema. Trisha Krishnan, one of Tamil cinema’s most celebrated leading actors, is known for acclaimed performances in 96, Vinnaithaandi Varuvaayaa, Ghilli and Ponniyin Selvan. Veteran actor Radhika Sarathkumar, fondly known as “Kaliarasi”, has delivered memorable performances across decades in films including Kizhakku Cheemaiyile, Pasumpon, Thanga Magan and Theri and Aparna Balamurali, who has emerged as one of the most acclaimed performers of her generation, known for her performances in SooraraiPottru, Maheshinte Prathikaaram and 8 Thottakkal.
Presented by Panorama Studios, in association with Locomotive Global, the film is a Fusion Flicks & Locomotive Global Production. It is produced by Kumar Mangat Pathak, Abhishek Pathak, Sunder Aaron, Vikas Sharma, and Amit Dalmia. Rajesh Menon and George Cameron serve as Co-Producers, while Abhinav Mehrotra is the Creative Producer.
The Tamil venture marks another significant step in Panorama Studios’ expanding South strategy, following the studio’s growing presence in Malayalam cinema through production, distribution and strategic collaborations. Its Malayalam production slate includes Anomie, Unmadham and Tiki Taka, while Production No. 4 and Munpe, starring Tovino Thomas, are currently on the floors. The studio has also entered strategic collaborations with leading names from the Malayalam film industry, including Fahadh Faasil. With its first Tamil production, Panorama Studios now expands its South India footprint into one of the country’s most vibrant and influential film industries.
Kumar Mangat Pathak, Founder & Chairman, Panorama Studios, said, “Tamil cinema has always been a space for bold, original and culturally rooted storytelling, and we wanted our first Tamil production to reflect exactly that spirit. This is a genre film with a very intriguing world at its core, and Raja has brought a distinctive vision to it. We are delighted to partner with such talented collaborators and are confident that this film will offer audiences a fresh cinematic experience.”
Director Raja Krishna Menon, known for films such as Airlift, Chef and Pippa, has consistently explored stories driven by strong human emotions and compelling worlds. With this film, Menon ventures into the psychological horror genre for the first time, bringing his distinctive storytelling sensibility to a dark and atmospheric narrative.
Director Raja Krishna Menon said, “Someone once quite aptly called me ‘genre agnostic’, and this film is another exploration in that journey. This is a story that is a first for me in many ways — my first film in Tamil, my first psychological horror, and my first story centred entirely around women. Adding to that is the privilege of working with Trisha Krishnan, Radhika ma’am, Aparna Balamurali, the wonderful cast and a fantastic crew. It makes this journey all the more exciting. Panorama Studios and Kumar Mangat ji have been incredibly supportive of my creative process, while Vikas and Sunder from Locomotive Global share the same commitment to telling the story the way it should be told, without compromising on anything. I couldn’t have asked for a better set of people to take this new journey with.”
Sunder Aaron, Managing Partner and Producer and Vikas Sharma, Producer, Locomotive Global, said: “At Locomotive Global, we are drawn to stories that transcend borders while remaining rooted in powerful human emotion. We were immediately drawn to the world of this Tamil-language psychological horror, with its mystery, atmosphere, emotional depth and sustained tension. Shot in London and led by an exceptional cast including Trisha Krishnan, Radhika Ma’am and Aparna Balamurali, the film marks an exciting step in our growing pipeline of elevated horror projects. Bringing together Raja Krishna Menon, Kumar Ji and Panorama Studios on a project with such a distinctive voice makes this a particularly meaningful collaboration for us. We look forward to taking this unique film to audiences.”
With a compelling story, an accomplished ensemble and a filmmaker known for his distinctive storytelling, the film will be a large screen cinematic experience. More details about the yet-to-be-titled film will be announced in due course.
*நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!*
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’தங்க மகன்’, ’தெறி’ உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் ‘சூரரைப் போற்று’, ’மகேஷிண்டே பிரதிகாரம்’, ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை அபர்ணா பாலமுரளி பதிவு செய்துள்ளார்.
பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோடிவ் குளோபல் புரொடக்ஷன் சார்பில் உருவாகிறது. இப்படத்தை குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது. தயாரிப்பு, விநியோகம் மற்றும் பல்வேறு முக்கிய கூட்டணிகள் மூலம் மலையாளத் திரையுலகில் தனது செயல்பாடுகளை இந்நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. பனோரமா ஸ்டுடியோஸின் மலையாளத் திரைப்படங்கள் பட்டியலில் ‘அனோமி’, ‘உன்மதம்’ மற்றும் ‘டிக்கி டாக்கா’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ’புரொடக்ஷன் நம்பர் 4’ மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் ’முன்பே’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பஹத் பாசில் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் முக்கிய படங்களில் கூட்டணி அமைத்துள்ளது . தற்போது தனது முதல் தமிழ் படத்தயாரிப்பின் மூலம், இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் துடிப்பான திரையுலகங்களில் ஒன்றான தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதிக்கிறது.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமா எப்போதுமே துணிச்சலான, தனித்துவமான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார கதைகளைச் சொல்லும் களமாக இருந்து வருகிறது. எங்களின் முதல் தமிழ் தயாரிப்பும் அதே உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். மிகவும் சுவாரஸ்யமான உலகத்தைக் கொண்ட வித்தியாசமான திரைப்படம் இது. இயக்குநர் ராஜா சிறப்பாக கதையை உருவாக்கியுள்ளார். இத்தகைய திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் ’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர். வலுவான மனித உணர்வுகளையும், சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை தொடர்ந்து கையாண்டு வரும் அவர், தற்போது முதன்முறையாக உளவியல் திரில் ஜானரில் களமிறங்குகிறார். இருண்ட மற்றும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மூலம், ராஜா கிருஷ்ண மேனன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் புதிய களத்தை கொண்டு வருகிறார்.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொருத்தமாக ஒருமுறை குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக இப்படம் அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம் மற்றும் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம், அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் குமார் மங்கத் ஜி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. அதேபோல், லோகோமோட்டிவ் குளோபலின் விகாஸ் மற்றும் சுந்தர் ஆகியோர் கதையை எந்தவித சமரசமும் இல்லாமல், அது சொல்லப்பட வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இத்தகைய சிறந்த குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்றார்.
லோகோமோட்டிவ் குளோபலின் மேனேஜிங் பார்ட்னரும் தயாரிப்பாளருமான சுந்தர் ஆரோன் மற்றும் தயாரிப்பாளர் விகாஸ் ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “எல்லைகளைக் கடந்து பயணிக்கும் அதே நேரத்தில், மனித உணர்வுகளை வலுவாக சொல்லும் கதைகளே லோகோமோட்டிவ் குளோபலின் தேர்வு. திகில், மிஸ்ட்ரி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இந்த தமிழ் மொழி சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தின் கதை எங்களை உடனடியாக கவர்ந்தது. த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, லண்டனில் படமாக்கப்படும் இப்படம், நாங்கள் உருவாக்கி வரும் தரமான திகில் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக மாறியுள்ளது.
ராஜா கிருஷ்ண மேனன், குமார் ஜி மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோரை ஒரே படத்தில் இணைத்து, இத்தகைய தனித்துவமான கதையை உருவாக்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றனர்.
சுவாரஸ்யமான கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் தனித்துவமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் என, இப்படம் பெரிய திரையில் ரசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சென்னையில் நடைபெற்ற ILWF INDIA – இந்திய சாதனையாளர் விருதுகள் 2026 விழா – தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் பங்கேற்பு.
சென்னை, ஆகஸ்ட் 30, 2026:
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், ILWF INDIA (Integrated Law Welfare Foundation India) சார்பில் “Grand Indian Achievers Awards 2026” விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சமூக சேவை, கல்வி, கலை, விளையாட்டு, தொழில், மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் இவ்விழா நடைபெற்றது.
ILWF INDIA-வின் தலைவர் திரு. S. K. Siva அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தலைமை விருந்தினராக நடிகர் கதிரவன் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், “Oranda” திரைப்பட நடிகை சனாகான் (Dhaniha), “Brothers and Sisters” தொடரின் நடிகை Luthuf, நடனக் கலைஞர் Azhar உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள், சட்டத்துறை மற்றும் சமூகநல ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், கலைத்துறையினர், மருத்துவத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், நடனம், பாடல் மற்றும் ஓவியம் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள் மற்றும் இறுதிப்போட்டி பங்கேற்பாளர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
பாரம்பரிய, மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தன.
ILWF INDIA தலைவர் திரு. S. K. Siva அவர்கள், சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்புகளை சமூகத்தின் முன் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தொடர்ந்து கௌரவித்து, அவர்களை ஊக்குவிக்கும் பணியை ILWF INDIA மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா – செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்!
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது.
படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர்.
இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்.. நடிகர் கதிர் பேசுகையில்..,
“‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். டிரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.
இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி; என்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டையும் புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்தேன். இதற்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற அளவுக்கு அந்த அனுபவம் இருந்தது,”
மேலும், “இந்தப் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் ‘I Am Game’ படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில்,
“சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம். அந்த வகையில், ‘I Am Game’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.
இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. படப்பிடிப்பின்போது குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட ஷெட்யூல் எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. துல்கர் சல்மானை சந்தித்தது அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.
படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். டிரெய்லரில் சில கதாபாத்திரங்களையே ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்; ஆனால் முழுப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படக்குழுவின் ஒற்றுமையும் உழைப்பும் ரசிகர்களுக்குப் புரியும்,” அமைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில்..,
“சென்னையில் நடைபெறும் என்னுடைய முதல் நிகழ்ச்சி இது. ‘I Am Game’ படத்தின் தமிழ் விளம்பர நிகழ்வுக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் என்னை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
துல்கர் சல்மான் மிக அழகான தயாரிப்பாளர், மிகப்பெரிய நடிகர், மிகச்சிறந்த மனிதர் என் நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படப்பிடிப்பின்போது எங்களுக்குள் இருந்த நட்பும் நகைச்சுவையான தருணங்களும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. எனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகம் சொல்ல முடியாது; படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.
நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில்..,
“நான் எந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சென்னைக்கு வந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாகச் சந்தித்து படத்தின் காட்சிகளையும் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.
‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்.
படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும்.
சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் பெப்பே, இந்தப் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன.
‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். Zee Music நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றியுள்ளது.
“I Am Game” மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “I Am Game” உருவாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
“I Am Game” செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.
லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி, எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, ‘நிழல்கள்’ ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலு குட்டி மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜீவன் கையாண்டிருக்கிறார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை ஆக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படம் – செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தினை ரசிகர்களிடம் சென்றடைவதற்காக விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சின்னி ஜெயந்த், கார்த்தி , எஸ்.ஜே.சூர்யா, நாசர், கவின், ரவி மோகன், நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், இயக்குநர்கள் பி. எஸ். மித்ரன், மோகன் ராஜா, தமிழ், சுந்தர் சி, ரத்ன குமார் இசையமைப்பாளர் சாம் சி எஸ் , படத்தொகுப்பாளர் விஜய் வேலு குட்டி சண்டை பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில்,*
” சர்தார் 2 எனும் மிகப்பெரிய திரைப்படத்தை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழி திருத்தேர் போல் இழுத்து வந்து ரசிகர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இந்தப் படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.
இது எங்களுடைய கனவு படைப்பு. இந்த திரைப்படத்தை இந்த அளவிற்கான தரத்துடன் உருவாக்கியது என்னுடைய சீன பெருஞ்சுவரான கார்த்தி தான்.
இயக்குநர் மித்ரன் கதை சொல்லும் போது இதன் பிரம்மாண்டம் தெரிந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு அழகான கதை. இவ்வளவு பெரிய விசயத்தை சண்டை காட்சிகளுடன் மட்டுமல்லாமல் எமோஷன் உடனும் உருவாக்கியிருக்கிறார். செப்டம்பர் 10ஆம் தேதி அன்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து சர்தார் 2 வை ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.
*நடிகர் சூர்யா பேசுகையில்,*
” சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இப்படத்தின் டீசரை பார்க்கும்போது இருட்டில் சண்டை நடக்கும். அதை பார்த்தவுடன் நெட்ஃபிளிக்ஸில் ஏதோ ஒரு இன்டர்நேஷனல் ஃபிலிம் என்றுதான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பார்த்தால் கார்த்தி உள்ளே வருகிறார். அதைப் பார்த்தவுடன், ‘ஹேய் நம்ம படமா இது..!’ என்ற எண்ணம் வந்தது. அதை ஆச்சரியமாக பார்த்தேன். அந்த டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வரப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தற்செயலாக அதை பார்த்த போது இப்படி எல்லாம் கூட தமிழில் படம் பண்ண முடியுமா ? மித்திரன் படமா இது? என்று எண்ணி வியந்தேன்.
டீசர் எப்படி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததோ…! அதேபோல் இந்தப் படத்தின் டிரெய்லரும் எனக்கு ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் கொடுத்திருக்கிறது.
இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியும், உண்மையாக நடந்த சம்பவங்களை அடித்தளமாக எடுத்துக்கொண்டு உருவான படம் இது. சர்தார் அப்படித்தான் 50 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் அது நடந்திருக்கிறது. நிகழ்த்தி காண்பித்திருக்கிறார்கள். அதிலிருந்து எடுத்துக்கொண்ட ஒரு கரு தான் இது.
நமக்குத் தெரியாத பல விசயங்கள் இருக்கிறது. அதை திரையில் சிறிதளவு தான் காண்பிக்க முடிகிறது. ஒரு ஸ்பை திரில்லரை தமிழில் அண்மை காலத்தில் இவ்வளவு தத்துரூபமாக உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக இவ்வளவு அழகியலுடன் நாம் பார்த்ததில்லை
இயக்குநர் மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர்- இயக்குநர்- இன்வெஸ்டிகேட்டட் ஜர்னலிசம் தெரிந்தவர் என நினைக்கிறேன். அவருடன் பேசும்போது.. அவரிடம் ஏராளமான கதைகள் உள்ளதை தெரிந்து கொண்டேன்
சர்தாரில் மிகப்பெரிய விவாதத்திற்குரிய கருத்தை முன் வைத்தீர்கள். சர்தார் 2வில் நான் நிச்சயமாக அதைவிட மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களின் அபாரமான உழைப்பு தெரிகிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
எழுத்தாளரும், படத்தொகுப்பாளரும் ஒன்றாக அமர்ந்து படத்தை தொகுத்திருக்கிறார்கள் என்று கேட்கும்போது.. ஆரோக்கியமான போக்காக இருக்கிறது.
என்னதான் கதை சிறப்பானதாக இருந்தாலும்.. அதனை ரசிகர்களிடத்திலும் பார்வையாளர்களிடத்திலும் கொண்டு செல்வது எஸ் ஜே சூர்யா போன்ற நட்சத்திர நடிகர்கள் தான். அதை இப்போதே என்னால் பார்க்க முடிகிறது.
ஒரு நடிகரை விட ஒரு கதாபாத்திரம் நிறைய பேசப்படுகிறது என்றால்.. அது ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம்.
கார்த்தி சர்தாராக திரையில் தோன்ற முடிகிறது. நிற்க முடிகிறது. எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள். இன்னும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு திரைப்படத்தின் பார்ட் 2 உருவாகி இருக்கிறது என்றால்… அதை நடிகனுக்கு கிடைத்த ஒரு ஆசியாக பார்க்கிறேன்.
கார்த்தியின் திரையுலக பயணத்தில் என்னை விட முக்கியமான படங்கள் நிறைய உள்ளது. அவரால் அதனை செய்ய முடிகிறது. அவரை ஒவ்வொரு படத்திலும் ரசித்தும் ஆச்சரியப்பட்டும், சந்தோஷமாகவும் நான் பார்க்கிறேன். அதில் ‘சர்தார்’- நான் மிக முக்கியமான படமாக பார்க்கிறேன்.
செப்டம்பர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் எல்லோரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து சர்தாரை பார்த்து கொண்டாடுவோம். அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைய உள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் நிச்சயமாக கார்த்திக்கு வேண்டும்.
தயாரிப்பாளர் லக்ஷ்மனும், கார்த்தியும் ஸ்கூல் படிக்கும் போதே பிரண்ட்ஸ். இந்த நேரத்தில் இவ்வளவு துணிச்சலுடன் மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல், குறிப்பாக பட்ஜெட்டை பற்றி யோசிக்காமல்.. நல்லதொரு தரமான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் கடவுளின் ஆசீர்வாதத்தால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் வெளியாகி வெற்றியைப் பெற வேண்டும். இயக்குநர் மித்திரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
*இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசுகையில்,*
”நான் படத்தைப் பற்றி பேசக்கூடாது என நினைக்கிறேன். படம் தான் மக்களிடம் பேச வேண்டும். அதனால் படத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் இந்தப் படம் எப்படி உருவானது? என்பதை பற்றி பேச விரும்புகிறேன்.
இதற்கு முதலில் தயாரிப்பாளர் லட்சுமண் குமாரை பற்றி தான் சொல்ல வேண்டும். சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்பதை முதலில் அவர் தான் எங்களிடம் சொன்னார். அதனால் இது அவருடைய கனவு படம். அத்துடன் எனக்கு முழு நம்பிக்கையை அளித்து இதனை சிறப்பான படமாக உருவாக்குங்கள் என்றார். இதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு உள்ள பொருளாதார சூழலில் இது போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்க வேண்டும் என யோசிப்பது மிகப்பெரிய விசயம்.
நான் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தி உடனும் ஆறாண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தியை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் நான் ஒருவன் தான். அதனால் கார்த்தியை பற்றி பேசுவதற்கு என்னிடம் ஏராளமான விசயங்கள் உள்ளன.
‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் ஒரு விசயத்தை சொன்னேன். யார் ஒருவர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுகிறார்களோ..! அவர்கள் மிகச் சிறந்த இயக்குநராக உருவாகிவிடுவார்கள். உங்களுடைய, பொறுப்புணர்வை அவர் மேம்படுத்தி விடுவார். அதாவது ஒரு விசயம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் ..அது அவருக்கு போதாது. அப்போது அவர் இன்னும் சிறப்பாக செயல்படலாம் என்பார். அப்படித்தான் இந்த படம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இந்தத் திரைப்படம் இந்த அளவிற்கு தரத்துடன் உருவாகி இருப்பதற்கு கார்த்தியும் ஒரு காரணம். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மிக முக்கியமான காரணம்.
இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற மனநிலையுடன் தான் அவரை சந்திக்க சென்றேன். ஏனெனில் அவருடைய எதிர்பார்ப்பு என்ன? என்பது எனக்கு ஓரளவு தெரியும். அவரிடம் நான் இயக்குநராக கதை சொல்லவில்லை. எஸ்ஜே சூர்யாவாக மாறி அவரிடம் கதையைச் சொன்னேன்.
எந்தவொரு விசயத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எந்த விசயத்தை சொன்னாலும் அது ரசிகர்களுக்கு புரிய வேண்டும்… பிடிக்க வேண்டும்… என்பதற்காக கடுமையாக போராடுவார். அது சாதாரண விசயம் அல்ல. அவருக்கு இருக்கும் பரபரப்பில் எனக்கு வாட்ஸ் அப்பில் 17 நிமிசங்கள் பேசிய ஆடியோவை அனுப்புவார். அதனால் இந்தப் படம் மிகப்பெரிய அளவிற்கு உருவானதற்கு எஸ் ஜே சூர்யாவின் உந்துதலும் ஒரு காரணம்.
சாம் சி எஸ் எப்போதும் எதற்காகவும் அசராத மனிதர். அவரை சந்தித்து எனக்கு இப்படி ஒரு விசயத்தை செய்து தாருங்கள் என்று சொன்னால் போதும். அதை ஒருபோதும் மறுக்கவே மாட்டார். அவரிடமிருந்து முடியாது என்ற வார்த்தை இதுவரை வந்ததே இல்லை. ‘ஓகே பிரதர் டோன்ட் வொர்ரி’ என்ற வார்த்தையை அதிகமாக சாம் சி எஸ் பேசித்தான் கேட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தின் கதையை நான் அவரிடம் விவரிக்கும் போது முழுவதுமாக கேட்டுவிட்டு, ‘பிரதர் இந்த கதையை படமாக எடுப்பதை விட சொன்னாலே ஹிட்டுதான்’ என்றார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் நூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டியால்தான் இயக்குநர்கள் அவரைத் தேடிச் செல்கிறார்கள். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் அவருக்கு எனர்ஜியை கொடுத்து, நூறு படங்களுக்கு இசையமைக்க வைத்திருக்கிறது. நூறு படங்கள் என்றால் நூறு படங்கள் மட்டுமல்ல .. அவை எண்ணூறு ரீல்கள். 800 ரீல்களுக்கு நீங்கள் இசை அமைத்திருக்கிறீர்கள் என்றால்… அது சாதாரணமான விசயம் அல்ல. அதனால் நீங்கள்தான் ரியல் இன்ஸ்பிரேஷன். சாம்பியன். சர்தார் படத்தின் தரத்திற்கு இவரும் ஒரு காரணம்.
ஆஷிகா ரங்கநாத்திடம் ஜென் ஸீ தலைமுறையை போல் நடிக்க வேண்டும் இன்று சொன்னேன். அதற்காக அவர்கள் உடையை தேர்வு செய்த பிறகு, ”ஃபர்ஸ்ட் நான் எனக்கு சௌகரியமான உடையில் நடிக்கிறேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆஷிகாவின் மிகப்பெரிய பலம் என்னவென்றால்.. அவர் தமிழ் வசனங்களை தமிழில் தான் பேசி பயிற்சி எடுத்து நடிப்பார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி.
குறிப்பாக கார்த்தியின் டபுள் ஆக்சன் வேடத்தை படமாக்கும் போது கார்த்தி விஜியாவும் நடிக்க வேண்டும். மேக்கப் செய்து கொண்டு சர்தாராகவும் நடிக்க வேண்டும். இவர்கள் இந்த இரண்டு கதாபாத்திரத்துடனும் ஆஷிகா ரங்கநாத் இருப்பார்கள். கார்த்தி மட்டுமல்ல ஆஷிகாவும் இரண்டு முறை நடிக்க வேண்டியது இருந்தது.
மாளவிகா நடித்த ‘தங்கலான்’ படத்தை பார்த்துவிட்டு, இவர்கள் பயங்கரமாக ஆக்ஷன் காட்சியில் நடிப்பார்கள் என நினைத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கலந்து கொள்ளும் முதல் நாள் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளை படம் பிடித்தேன். அவர் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நான் அவரிடம் ஆக்சன் காட்சிகள் குறித்து விவரித்தேன். 60.. 70 .. அடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும் என்றேன். அவர்கள் தயங்கினார்கள். அதன் பிறகு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
இந்த படத்தைப் பொறுத்தவரை மூன்று ஸ்டேஜ்கள் இருக்கிறது படத்தை உருவாக்கும் ஸ்டேஜ். படத்தை படமாக்கும் ஸ்டேஜ். எடுத்த படத்தை நிறைவு செய்யும் ஸ்டேஜ். இந்த மூன்று ஸ்டேஜ்களிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் உள்ளரங்க காட்சிகள் அதிகம். அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்த கலை இயக்குநருக்கு நன்றி.
என்னைப் பொறுத்தவரை எடிட்டர் விஜய் வேலு குட்டியும், நடிகர் எஸ் ஜே சூர்யாவும் ஒரே மாதிரி தான் இருவருமே போதும் போதும் என்று சொன்னாலும் நான் வேறு வகையில் நடித்துக் காட்டுகிறேன் என்றும்… நான் வேறு விதமாக படத்தை தொகுத்து காட்டுகிறேன் என்றும்.. சொல்வார்கள். ” என்றார்.
*நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில்,*
” நான் முதன்முதலாக சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோவில் பாடுவதற்காக சென்றிருந்தேன். ஆனால் அங்குள்ளவர்கள் ஏழு மணி நேரம் வரை காத்திருக்க செய்து, அதன் பிறகு எனக்கு குரல் வளம் இல்லை என்று நிராகரித்தார்கள். எனக்கு அப்போது இசை ஆர்வம் இருந்தது. ஆனால் பாட வேண்டும் என்று விரும்பினேன். அதன் பிறகும் தொடர்ந்து பல நிராகரிப்புகள்… அவமானங்கள்… தொடர்ந்தது.
நூறாவது படத்திற்கு இசையமைத்து, அதற்கான மேடையில் நான் நிற்கும் போது என்னுடைய இந்தப் பயணம் மிக நீண்டது. துயரம் மிகுந்தது. ஆனாலும் கடவுள் மற்றும் மக்களின் ஆதரவு இருந்ததால் இசையில் ஓரளவு குறிப்பிட்ட சாதனையை எட்டி இருப்பதாக நம்புகிறேன்.
என்னுடைய நூறாவது திரைப்படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. எனக்கு எப்போதும் அறிவாளியாய் உள்ள இயக்குநர்களிடம் பணியாற்றுவதற்கு ஆசையாக இருக்கும். அதிலும் இசை பற்றிய அறிவு அதிகம் உள்ள மித்திரன் போன்றவர்களிடம் பணியாற்றும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையில் ராகங்களை பற்றியும்.. இசை குறிப்புகளை பற்றியும் ..மித்திரனுக்கு நன்றாக தெரியும். இவரைப் போன்றவர்களை அசத்துவதற்காக இன்னும் ஏதாவது புதிதாக முயற்சிக்கலாம் என புதிதாக ஏதேனும் ஒன்றை செய்வேன். மித்திரன் என்னுடைய நண்பர். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததாக இருந்தது. நான் பணியாற்றிய இயக்குநர்களில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மித்ரன்.
இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது இயக்குநரும், நானும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாக எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான உழைப்பை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்.” என்றார்.
*நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில்,*
” திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு கூட்டு முயற்சியில் உருவாகும் கலை இது ஒன் மேன் ஷோ அல்ல.
இந்த சர்தார் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த நடிகர் சூர்யாவிற்கு நன்றி.
சினிமாவை மிகவும் நேசிக்கும் மனிதர் இயக்குநர் மித்ரன். அவர் சர்தார் உலகத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் இதில் சொல்லி இருக்கும் கதை உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தில் எனக்கு அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி.
இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாததாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு நுழைந்தவுடன் 150 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து ஆக்சன் சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. முதலில் தயங்கினேன். அதன் பிறகு ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பும், ஆதரவும் என்னை நடிக்கத் தூண்டியது. இதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு நன்றி. என்னுடைய எல்லைகளை வரையறுத்துக் கொண்டு நடித்தேன். அந்த எல்லைகளை மேலும் விரிவாக்கி வித்தியாசமான நடிப்பை என்னிடம் இருந்து பெற்றதற்காக இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும் நன்றி.
சர்தார் 2 படத்தின் டீசரில் சாம் சிஎஸ்ஸின் இசை மிக சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சிகள் சாம் சி எஸ் இன் இசையால் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
சக நடிகரான கார்த்தி அற்புதமான மனிதர். எளிமையாக பழகக்கூடியவர். பெருந்தன்மையானவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன்” என்றார்.
*இந் நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில்,*
” தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா – தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள். இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
கனவுகளை காகிதத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதனை இப்படி பிரம்மாண்டமான படைப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றால்… அதற்கு இந்த கதை மீது ஆர்வம் கொண்ட நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டும். அந்த வகையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இல்லை என்றால்… எங்களின் கனவு நனவாகி இருக்காது.
இந்தப் படத்தில் நான் ஏராளமான மூத்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் யோகி பாபுவை ‘முருகா’ என்று தான் அழைப்பேன். அவரும் என்னை ‘முருகா முருகா’ என்றுதான் அழைப்பார். ஒரு காட்சியை அவரிடம் கொடுத்தால்… அந்த காட்சியை சிறப்பாக வடிவமைப்பதற்காக கடினமாக உழைக்கிறார். அதன் பிறகு அந்தக் காட்சி மிகச் சிறப்பானதாக மாறுகிறது. அவரிடம் எழுத்து திறமையும் இருக்கிறது. தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இயக்குநர் நல்ல பெயரை பெற வேண்டும் என்ற மனசும் இருக்கிறது. இவ்வளவு விசயங்கள் அவரிடம் இருப்பதால்… அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் இருக்கிறது. அவருடைய கடுமையான உழைப்பை பார்த்து நான் பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன்… அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள். அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து.. அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, ‘அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல’ என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.
ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து பிறகு நீங்கள் இந்த படம் சொல்லும் விசயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விசயம்.
மித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விசயம் என்னவென்றால்… எழுத்தாளர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் வழங்குவது. எழுத்தாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது தான் ..அது அடர்த்தியானதாகவும் ரசிகர்களை உத்வேகத்துடனும் இருக்க வைக்கும். அத்துடன் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய உரையாடலை உண்டாக்கும். ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அது இந்த படத்தில் இயக்குநர் மித்திரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும்.
எந்த பின்புலமும் இல்லாமல் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது என்பது சாதனைதான். இன்னும் அவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு அற்புதமாக இசையமைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். சிலருக்கு வாழ்க்கை மிகப்பெரிய காத்திருப்பை வழங்குகிறது. ஆனால் வாய்ப்பை வழங்கும் போது மிகப்பெரிய அளவில் வழங்குகிறது. அதனால் இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு மிகப்பெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தப் படத்தில் சில காட்சிகளை பார்க்கும் போதே நமக்குள் பயம் ஏற்படும். இது ரசிகர்களுக்கு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தி வித்தியாசமான அனுபவம் வழங்கும்.
தற்போது திருநெல்வேலியில் இருந்து ஒரு பிரஷ்ஷான வில்லன் கிடைத்திருக்கிறார். அவர் இந்த படத்தில் செய்யும் ஒவ்வொரு விசயமும் ஜாலியாகவும் இருந்தது. அவர் நடிக்கும் கேரக்டரை கேமரா முன்னால் 100% … மைக்கிற்கு முன்னால் 500% …கொண்டு வந்து விடுகிறார். அவருடைய உழைப்பு அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது.அவருடைய வாழ்க்கைப் பயணம் தான் எல்லோருக்கும் உண்மையான இன்ஸ்பிரேஷன். எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை வேண்டுமானால் இமிடெட் செய்யலாம். ஆனால் அவருடைய எனர்ஜியை ஒருபோதும் நகலெடுக்க முடியாது.
என் அப்பாவை பற்றி ஒரு விசயத்தை யோசித்து இருக்கிறேன். இதுவரை அப்பா எனக்காக எந்த ஒரு கதையும் கேட்டதில்லை. நானே கதையைக் கேட்டு அதை தேர்வு செய்து முட்டி மோதி வரட்டும் என்று விட்டுவிட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் நம்மை வழி நடத்தவில்லை என்று யோசித்தேன். அவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் கூட என்ன கதை… எங்கு படபிடிப்பு.. யார் இயக்குநர்.. என்று எந்த ஒரு விவரத்தையும் என்னிடம் கேட்டதில்லை. இதுவே எனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரம் என நினைக்கிறேன்.
என் ரசிகர்களை கடந்த மூன்று வருடங்களாக ரொம்ப படுத்தி விட்டேன்.ஆனால் இந்த முறை ரசிகர்களாகிய உங்களுக்கு நான் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. முழுவதும் இறங்கி அடித்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷமாக வந்து பார்த்து என்ஜாய் செய்யும் வகையிலான படமாக சர்தார் 2 இருக்கும். என்ன செய்தால் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்க வேண்டும்… புரிய வேண்டும்… என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும். என்றார்.
அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’.
எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்… கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது.
தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான ஃபேண்டஸி அம்சம் – அந்த டீசரில் இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் ஃபேண்டஸியான கதைக்களமும், அதன் தனித்துவமான பின்னணியும், படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் இசையமைப்பாளர் கால பைரவாவின் இசையில் உருவான கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) என்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பாடலை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர்.
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் தனது மாயாஜால ஃபேண்டஸி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக உள்ளது
Don’t Trouble The Trouble Locks October 2nd Release Date.
Don’t Trouble The Trouble, presented by SS Rajamouli, is set to arrive in cinemas on October 2nd, 2026. Starring Fahadh Faasil and Ssara Palekar as Suri and Divya, the film promises a fun filled fantasy adventure. The newly unveiled release date poster showcases the lead duo against a fantasy backdrop, hinting at the magical experience that awaits audiences.
Produced by Shobu Yarlagadda and S. S. Karthikeya and directed by debutant Shashank Yeleti, the film has already created curiosity with its impressive teaser, which offered a glimpse into the intriguing fantasy element at the heart of the story. The fantasy and its unique setting are expected to be among the film’s major highlights.
Adding to the excitement, the makers recently released the catchy Cake-u Walk-u song, composed by music director Kaala Bhairava.
Don’t Trouble The Trouble is all set to bring its magical fantasy experience to audiences in Telugu, Tamil and Malayalam, worldwide in cinemas from October 2nd, 2026.
70-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்பு… பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘குறும்பட விருதுகள் 2026’ விழா!
திரைப்படத் துறையில் புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் Film Development Organisation (FilmDO – NGO) மற்றும் RMK Group of Company இணைந்து நடத்தும் ‘குறும்பட விருதுகள் 2026’ விருது விழா அறிமுகம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த விருது அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தயாரிப்பாளர் சி.வி. குமார், இயக்குநர் பேரரசு, எழுத்தாளர் லியாகத் அலி கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில் கஸாலி பேசியதாவது..
“குறும்பட விருதுகள் 2026 என்பது மிகவும் சிறப்பான முயற்சி. குறிப்பாக எதிர்காலத்தில் சினிமா துறைக்கு
இயக்குநர்களாக வர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பலருக்கு, எப்படி பயணத்தைத் தொடங்குவது, எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தயக்கமும் குழப்பமும் இருக்கும். அவர்களுக்கு ஒரு சிறிய வழிகாட்டியாகவும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமையும். இந்த விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தவுடன் முதலில் நினைவுக்கு வந்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். அழைத்தவுடனேயே உற்சாகமாக வருவதாக ஒப்புக்கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் எழுத்தாளர் லியாகத் அலி கான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சி.வி.குமார், வசனகர்த்தா விஜி உள்ளிட்ட திரையுலகின் பல முக்கிய பிரபலங்களும் இந்த புதிய தலைமுறை கலைஞர்களை ஊக்குவிக்க உடனடியாக சம்மதித்தனர். இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவரும் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தங்களது உணர்வையும் உழைப்பையும் ஒன்றாகச் சேர்த்து குறும்படங்களை உருவாக்கி, மிகுந்த எதிர்பார்ப்புடன் அனுப்பியுள்ள நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவோடு இந்த முயற்சி எதிர்காலத்தில் முழுநீள திரைப்படங்கள் தயாரிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது…
“இது மிகவும் மகிழ்ச்சியான நாள். கஸாலி எப்போது என்னை அணுகினாலும் திரையுலகின் நலனுக்காகவும், புதிய திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவுமே பேசுவார். அதனால் அவரது எந்த முயற்சிக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும்.
குறும்படங்களை உருவாக்கி அனுப்பியுள்ள இளம் படைப்பாளிகள் அனைவரும் நாளைய திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நல்ல கதைகளை உருவாக்கும் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உங்களைப் பாதிக்கும் நல்ல கதை இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள், அதை திரைப்படமாக உருவாக்க என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.
புதிய இயக்குநர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் இந்த ‘குறும்பட விருதுகள் 2026’ முயற்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
திரை எழுத்தாளர் லியாகத் அலிகான் பேசியதாவது…
“இந்த சிறப்பான விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு காரணமாக இருக்கும் கஸாலி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சினிமா துறையின் நலனுக்காக தொடர்ந்து சிந்தித்து, பேசிக்கொண்டிருப்பவர். நல்ல விஷயங்களை யாராவது கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லக்கூடியவர்.
ஒருவர் உயரத்துக்கு செல்ல அவரது தனிப்பட்ட திறமை மட்டும் போதாது; அவருடன் பயணிக்கும் நல்ல மனிதர்களின் ஆதரவும் முக்கியம். அதற்கு சிறந்த உதாரணம் கலைப்புலி எஸ். தாணு அவர்கள். பல திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர். விஜயகாந்த் அவர்களின் வளர்ச்சியிலும் அவரது பங்கு முக்கியமானது. புதியவர்களை ஊக்குவிப்பதிலும், நல்லது இல்லையென்றால் அதை நேரடியாகச் சொல்லி வழிகாட்டுவதிலும் அவர் தனித்துவமானவர்.
இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களில் பல நல்ல சமூக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப உறவுகள், பெண்களின் உரிமை, சமூகப் பொறுப்பு, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற முக்கியமான விஷயங்களை படைப்பாளிகள் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற படைப்புகள் மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்த குறும்படங்களை உருவாக்கிய இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகப் பாடுபட்ட மாரி பாண்டியரைப் பாராட்டுகிறேன்,” என்றார்.
இயக்குநர் மஜீத் பேசியதாவது…
“கஸாலி சார் வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும், அவருக்குள் சினிமா குறித்து ஏராளமான சிந்தனைகளும், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. குறும்படக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த முயற்சி நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்.
வெற்றி பெற்றவர்களை மட்டும் நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம். ஜெயித்தவன் வெற்றியாளர்; தோற்றவன் சாதனையாளர். எனவே, வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இன்றைய காலத்தில் சினிமாவுக்கு வருபவர்களுக்கு இதுபோன்ற தளங்கள் மிகப்பெரிய வாய்ப்பாக அமைகின்றன.
நான் பார்த்த குறும்படங்களில், தற்கொலை ஒரு தீர்வல்ல; மனதில் உள்ள பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஒரு படம் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. ஒருவரின் தற்கொலை அவரைச் சுற்றியுள்ள பலரையும் பாதிக்கிறது என்பதை படைப்பாளிகள் உணர்வுபூர்வமாகக் கூறியிருந்தனர்.
அதேபோல், அதிவேக பைக் பயணத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் குடும்பங்கள் சந்திக்கும் பாதிப்புகள், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் போன்ற சமூகப் பிரச்சினைகளையும் குறும்படங்கள் எடுத்துரைத்திருந்தன.
இதுபோன்ற சமூக விழிப்புணர்வு படைப்புகளுடன், இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து, சாதிக்கத் தூண்டும் நேர்மறையான கருத்துகளை மையமாகக் கொண்ட குறும்படங்களும் அதிகம் வர வேண்டும். சமூக அநீதிகளை கேள்வி கேட்கும் படைப்புகளும் உருவாக வேண்டும்.
இந்த விழாவில் பங்கேற்றுள்ள அனைத்து இளம் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் எதிர்காலத்தில் பெரிய சாதனையாளர்களாக உயர வேண்டும். இந்த சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி வரும் கஸாலி சாருக்கும், மாரி பாண்டியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் விஜி பேசியதாவது…
“குறும்படம் என்பது சினிமாவின் குட்டி வடிவம் அல்ல. ஒரு பிரமாண்டமான கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும், தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் சொல்வதுதான் குறும்படம். ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு நேர்த்தியாகவும் குறைந்த நேரத்திலும் சொல்லி முடிக்கிறோமோ, அதுவே சிறந்த படைப்பாக அமையும்.
நான் பார்த்த மூன்று குறும்படங்களும் சமூகத்தில் நடைபெறும் முக்கியமான பிரச்சினைகளைப் பேசியிருந்தன. குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை ஒரு படம் சிந்திக்க வைக்கும் வகையில் பதிவு செய்திருந்தது. அதேபோல், இளைஞர்கள் பைக் வீலிங் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அப்பாவி குடும்பங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை மற்றொரு குறும்படம் எச்சரிக்கையாகக் கூறியிருந்தது.
மற்றொரு குறும்படம், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மனம் திறந்து பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. குறும்படத்திற்கு நேரம் குறைவாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் தெளிவான நோக்கமும் இலக்கும் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்தை ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.
நான் பார்த்த இந்த மூன்று படங்களிலும் நடித்திருந்த கலைஞர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். இன்னும் பல குறும்படங்களை பார்க்க வேண்டியுள்ளது. எதைப் பற்றிப் பேசினாலும், மக்களை சிந்திக்க வைக்கும் ஒரு படைப்பு உருவாவது பாராட்டுக்குரிய விஷயம். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து குறும்பட படைப்பாளிகளுக்கும், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
“குறும்படம் என்பது சிறிய படமல்ல; அதில் ஒரு பெரிய திரைப்படத்திற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஒரு கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும், தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் சொல்வதுதான் குறும்படத்தின் மிகப்பெரிய பலம். இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு தங்களது திறமையை நிரூபிக்க குறும்படம் ஒரு சிறந்த தளமாக உள்ளது.
நான் பார்த்த குறும்படங்களில் பெரும்பாலானவை மக்களுக்கு நல்ல விஷயங்களையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டிருந்தன. தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பதை ஒரு குறும்படம் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. சிறிய பிரச்சினைகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்வதை விட, அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்ற கருத்து மிகவும் அவசியமானது.
அதேபோல், பைக் விபத்துகள் போன்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழும்போது, பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. பிள்ளைகளின் ஆசைக்காக அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அவர்களை சரியான முறையில் வளர்த்து வழிகாட்ட வேண்டும்.
இன்று பெரிய திரைப்படங்களில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நல்ல கருத்துகளையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் குறும்படங்கள் ஒரு ஆறுதலாக இருக்கின்றன. நீங்கள் பெரிய திரைக்கு வரும்போதும் இதேபோன்ற நல்ல கருத்துகளையும், சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வையும் உங்கள் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும். ஆயுதங்களைத் தூக்குவதை விட நல்ல சிந்தனைகளைத் தூக்கிச் செல்லுங்கள். அதுதான் ஒரு படைப்பாளியின் உண்மையான வெற்றி,” என்றார்.
மாரி பாண்டியர் பேசியதாவது…
“பெரிய திரைப்படங்கள் பெரும் காவியங்கள் என்றால், குறும்படங்கள் திருக்குறளைப் போன்றவை. குறைந்த நேரத்தில் மிகப்பெரிய கருத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். நான் பார்த்த மூன்று குறும்படங்களும் அந்த வகையில் சிறப்பாக இருந்தன.
குறிப்பாக முருகதாஸ் நடித்த குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆரம்பம் முதல் இறுதிவரை என்ன நடந்திருக்கிறது என்ற பதற்றத்தையும் ஆர்வத்தையும் பார்வையாளர்களிடம் தொடர்ந்து வைத்திருந்தனர். தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை, ஒரு தந்தை நேரடியாக விசாரிக்காமல் தனது பேச்சின் மூலம் புரிந்து கொண்டு, இறுதியில் அவளை மனம் திறந்து பேச வைப்பது மிகவும் இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்திருந்தது.
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு பல நேரங்களில் பேசுவதற்கான ஒரு சூழல் கிடைப்பதில்லை. ஆனால், மனதில் இருக்கும் பிரச்சினைகளை யாரிடமாவது பகிர்ந்து பேசினால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற மிக முக்கியமான கருத்தை இந்த குறும்படம் அழகாக பதிவு செய்துள்ளது.
குறிப்பாக திரைக்கதை, காட்சியமைப்பு மற்றும் எடிட்டிங் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பெரிய இயக்குநரின் பெயரில் இந்தப் படம் வெளியானிருந்தாலும் ரசிகர்கள் நிச்சயம் பாராட்டியிருப்பார்கள். அந்த அளவுக்கு இந்தப் படைப்பு என்னை கவர்ந்தது,” என்றார்.
இந்த விழாவை கஸாலி மற்றும் மாரி பாண்டியார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வில் 70-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்றுள்ளன. புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படத் துறையில் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்பும் கலைஞர்களுக்கு சிறந்த தளமாக இந்த விருது விழா அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறும்படத் துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சமூக கருத்தை பேசும் குறும்படம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த படத்திற்கு ரூ.25,000, சிறந்த இயக்குநருக்கு ரூ.15,000, சிறந்த நடிகருக்கு ரூ.10,000, சிறந்த சமூக கருத்தை மையமாகக் கொண்ட குறும்படத்திற்கு ரூ.10,000 என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
குறும்படங்களின் வழியாக சமூக கருத்துகள், காதல், நட்பு, குடும்பம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட பல்வேறு கதைகள் திறமையாக சொல்லப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் புதிய படைப்பாளர்களின் முயற்சிகளை ஊக்குவித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முயற்சியாகவே இந்த ‘குறும்பட விருதுகள் 2026’ விழா நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதிய திறமையாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் நடைபெற்ற இந்த ‘குறும்பட விருதுகள் 2026’ விழா, குறும்பட உலகைச் சேர்ந்த கலைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பாராட்டைப் பெற்றுள்ளது.