Categories
Cinema News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

ஜீத்து ஜோசப் கதையில் உருவான படம்… ஆர். மாதேஷ் இயக்கத்தில் புதிய கலாட்டா! இப்படத்தை புன்னகை பூ கீதா தயாரித்துள்ளார்.

லண்டன் சாப்ட்வேர் கம்பெனி பின்னணியில் காதலும்… மோதலும்… காமெடியும்!

விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.

காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!

விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News Videos

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். இந்த வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம். காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும், ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,”

மேலும், “இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எனது உதவி இயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி, மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப் பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த பழைய நினைவுப் பரிசுக்கு அருகில் வைக்கப் போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது,”

“இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணு விஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது, படப்பிடிப்பு, தயாரிப்பு, வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாக செயல்பட்டார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார். இந்தப் படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது,” இப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்று சிறப்பாக நடத்துகிறோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சீல்டு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு சீல்டுகளை வழங்குவதற்காக வந்துள்ள அருமை சகோதரர் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை வந்த பத்மஸ்ரீ பிரபுதேவா அவர்கள், ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். எங்களது நட்பின் காரணமாக அவர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இந்தப் படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தார். தயாரிப்பிலிருந்து படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் வரை அனைத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. முன்பெல்லாம் 100 நாள், 175 நாள், 200 நாள் என திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள். தற்போது அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த 50வது நாள் விழாவை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன்; அதேபோல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது; அப்போதே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்; அடுத்தடுத்த மாதங்களில் எங்களது புதிய படங்களும் வெளியாக உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. படத்தின் கிளைமாக்ஸை சிறப்பாக்கியவர், இந்த 50வது நாள் விழாவிலும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.

விஷ்ணு விஷால் பேசுகையில், “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோஷம். இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

“இந்தப் படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐசரி கணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை 50வது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன். தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி. சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விஷயம் அல்ல; அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று. அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி. அதேபோல், பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை. கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும், பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார். அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன் நான், இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி,”.

“செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர். எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்ட பயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான். அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நல்ல குடும்பப் படங்களை தொடர்ந்து கொடுங்கள். ‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம். வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் எங்களது சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பிரபுதேவா சாரும் கலந்து கொண்டுள்ளார். ஒரு படம் வெளியாகி முதல் வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது ஒரு விஷயம். ஆனால், அந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவது மிகவும் சிறப்பான விஷயம். திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ஓடிடியிலும் வெளியான இப்படம் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

“இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒரு வெற்றிப் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படும் இந்த விருது வெறும் நினைவுப் பரிசு மட்டுமல்ல; படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெருமையையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒரு தருணமாகும். வெற்றி விழா நடைபெற்ற நாளிலேயே, படத்தில் பங்காற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று என் தந்தை முடிவு செய்திருந்தார். அந்த எண்ணம் இன்று இந்த விழாவின் மூலம் நிறைவேறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

“‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இந்த வெற்றியின் பின்னால் இருக்கிறது. இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் உங்களுக்குப் பெருமையான தருணமாக அமையும் என்று நம்புகிறோம். இது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இனிவரும் பல வெற்றிகளுக்கான அழகான தொடக்கமாகவும் அமைய வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு வெற்றி விழாவில் கலந்து கொள்கிறேன். விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகு, அதை விட சிறப்பாக இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆவல் எனக்கு இருந்தது. இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான விஷயம்,” என்றார்.

“ஐசரி கணேஷ் சாருக்கு ஒரு மிடாஸ் டச் இருக்கிறது; அவர் தொடும் விஷயங்கள் எல்லாம் வெற்றியாக மாறுகின்றன. அந்த அதிர்ஷ்டம் இந்தப் படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படக்குழுவின் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் ரசித்தேன். செல்லா அய்யாவுவின் எழுத்தில் இயல்பாகவே நகைச்சுவை கலந்த ஒரு தனித்தன்மை இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘கட்டா குஸ்தி 3’ படத்திலும் விரைவில் சந்திப்போம்,” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், “அனைவருக்கும் எனது வணக்கம். அமைச்சர் அவர்களுக்கும், என் அண்ணன் போன்ற ஐசரி கணேஷ் சாருக்கும், விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு, குஷ்மிதா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தபோது கணேஷ் சார் என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறினார். எந்த நேரமாக இருந்தாலும் அவரது அழைப்புக்காக வந்துவிடுவேன் என்று சொன்னேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது. விஷ்ணு விஷாலின் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திற்கு மட்டுமல்லாமல், தனது ஒவ்வொரு படத்திற்கும் அவர் இதே உழைப்பையும், 200 சதவீத அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார். அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அவரது மனைவி ஜ்வாலா கட்டாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீராங்கனை,” என்றார்.

“இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி, அதையும் வெற்றிப் படமாக மாற்றுவது மிகவும் கடினமான விஷயம். அந்த சவாலை இயக்குநர் செல்லா அய்யாவு சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. ரம்யா கிருஷ்ணன் மேடம் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் எனது வாழ்த்துகள். ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும்,”.

“குஷ்மிதாவை சிறு வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். இன்று அவர் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது எனது வாழ்த்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற வெற்றி விழாவிலும், கலைஞர்களுக்கு சீல்டு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக ஒரு முக்கியமான இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு. என்னை அழைத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால், கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார். இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல், புத்தகம் படிப்பது, செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.

“எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர். அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். யாராவது உதவி கேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனம் கொண்டவர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம். இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும், குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.

“ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல், திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை, மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு, அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர், சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது. அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்த விழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள். என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக அமைத்து, இந்த மகிழ்ச்சியான தருணத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. விஷ்ணு விஷால் எனக்கு ஒரு அற்புதமான சக நடிகர். படம் வெளியான பிறகு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவா சாருக்கும் எனது நன்றி. நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நடனக் கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன். இந்த விழாவில் பிரபுதேவா சார் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது,”.

“செல்லா சார், ‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் நான் பணியாற்றிய மிகவும் அன்பான இயக்குநர்களில் ஒருவர். குஷ்மிதா, நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். தயாரிப்புத் தரப்பில் ஒரு பெண்ணாக எனக்கு நல்ல நண்பராகவும் ஆதரவாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சிறப்பான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்; நாம் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் உங்கள் பணியை சிறப்பாகச் செய்ததால்தான் இன்று இந்த 50வது நாள் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம்.

“என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள், கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள், சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ரூச்சி, ஸ்ரவந்தி, பரத், பாஸ்கர் சார், என் அன்புக்குரிய ஜாரா மற்றும் மீனு மிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

நடிகை மோக்ஷா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ் மக்களின் அன்புக்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும்தான் ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது. இனியும் இதேபோன்ற ஆதரவு எனக்குத் தேவை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு, இன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படத்தில் இடம்பெற்றிருப்பது இன்னும் கனவு போலவே இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஐசரி கணேஷ் சார், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி,” என்றார்.

“‘மீனாட்சி’ கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் செல்லா சாருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இன்னும் நம்ப முடியவில்லை. தற்போது என்னைப் பார்க்கும் பலரும் ‘மீனாட்சி’ என்றே அழைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிற மொழி ரசிகர்களும் அந்தக் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் உண்மையில் மீனாட்சி போல நீண்ட தலைமுடியுடன் இருப்பவள் அல்ல; நான் மோக்ஷா என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதே இப்போது சற்று சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கையே,‘மீனாட்சி’ கதாபாத்திரம் தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்கியுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், நான் விரும்பும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான பிரபுதேவா சாருக்கும் நன்றி. வேல்ஸ் குடும்பம், ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் என அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்,” என்றார்.

குழந்தை நட்சத்திரம் ஜாரா பேசுகையில்..,
“இந்த சீல்டைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னைத் தேர்வு செய்த எனது பெற்றோர், இயக்குநர், தயாரிப்பாளர், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஐஸ்வர்யா மேம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னை அன்பாகவும், வசதியாகவும் உணர வைத்த எனது சக நடிகைகளான மோக்ஷா மேம், ஐஸ்வர்யா மேம் மற்றும் ரித்தி மேம் ஆகியோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பையும் அன்பையும் அளித்த அனைவருக்கும் என் நன்றி,” என்றார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அந்தப் படத்தில் எனக்கு முழு நீளக் கதாபாத்திரம் கொடுத்தவர், இந்தப் படத்தில் சிறிய பகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார். ‘கட்டா குஸ்தி’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான். அதற்காக அவருக்கு எனது நன்றி,”.

“50வது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தப் படத்திற்காக 50வது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் 100வது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப் படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும். படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான். அமைச்சர் ராஜ்மோகன், பிரபுதேவா மாஸ்டர், ஐசரி கணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி,” என்றார்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ள இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம், படக்குழுவினரின் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Categories
Reviews

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்பட விமர்சனம்

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew:

D Anthony
Madhumita Das
Jeeva Ravi
Regin Rose
Navya Suji

Crew
Written, Directed & Edited by: D Anthony
Producer : D Anthony
Banner : M/s. Anthony’s Atelier
DOP : Pietro Villani
Special Thanks : Arunmani Palani
Music Composer (Songs) : Jaikar Harinath & Ashok Sridharan
Music Composer (RR) : Joey Reda
Lyricist : Karthik Netha, Tamil Mani
Singer : RK Adithya, Sanjana Kalmanje, Deepak Blue & Jaikar Harinath
Audiography : Jaikar Harinath
Sound Mixing: Anand Ramachandran
Art Director : KK Surendaran
Executive Producer : Hariharan & Santosh
Co Director : Janet Sophia
Associate Director : Sai Kishore
Production Manager : Vijayan
Production Controller : Udhayakumar & Sriram
PRO : Team Aim
Marketing Head : Vivek Amirthalingam
Publicity Designs : Udhaya Prakash

ஒரு வித்தியாசமான காதல் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா தான்
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’

சிறுவயதிலேயே அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பும் கிடைக்காமல் தனிமையில் வளரும் ஆண்டனி பின்னர் மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி எந்தவித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் அவரது வீட்டிற்கு வரும் மதுமிதா தாஸுடன் பழக்கம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் வெறும் பேச்சாக தொடங்கும் இவர்களது உறவு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்படும் சில பிரச்சினைகள் அவர்களை பிரிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதன் பிறகு இவர்களது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை

டி ஆண்டனி இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததோடு கதை எழுதி இயக்கி எடிட்டிங்கும் செய்திருக்கிறார். தனிமை காதல் தவிப்பு ஏக்கம் கோபம் என தனது கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மதுமிதா காணாமல் போகும் போது அவர் வெளிப்படுத்தும் தவிப்பு நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

மதுமிதா தாஸ் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். முதல் படத்திலேயே மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல் குறும்பு கோபம் ஏக்கம் மனவேதனை என பல உணர்வுகளை முகபாவனைகள் மூலமாகவே அழகாக வெளிப்படுத்துகிறார். ஆண்டனி மற்றும் மதுமிதா இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு நல்ல பலம்

படத்தின் இன்னொரு சிறப்பு அதன் ஒளிப்பதிவு மற்றும் இசை. பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு இயற்கையான முறையில் இருக்கிறது. குறிப்பாக கடற்கரை காட்சிகள் படத்தின் காதல் உணர்வுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. ஜெய்கர்ஹ ரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரனின் பாடல்களும் ஜோயி ரெடாவின் பின்னணி இசையும் படத்தின் எமோஷனல் காட்சிகளுக்கு நல்ல பலம் கொடுக்கின்றன

இயக்குநர் வழக்கமான ஹீரோ ஹீரோயின் காதலித்து பிரச்சனை வந்து கடைசியில் சேரும் கமர்ஷியல் பாணியில் கதையை சொல்லாமல் இரண்டு தனிமையான மனிதர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாக மாறுகிறார்கள் என்பதை நிதானமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அதனால் படம் சில இடங்களில் மெதுவாக நகர்வது போல் தெரிகிறது. நீளமான உரையாடல்கள் மற்றும் சில காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆங்கில உரையாடல்கள் அதிகமாக இருப்பதும் சிலருக்கு தடையாக இருக்கலாம்.

மொத்தத்தில், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய், மெதுவான திரைக்கதை மற்றும் சில நீளமான காட்சிகள் குறையாக இருந்தாலும் காதல் மற்றும் எமோஷனல் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும்.

Categories
Cinema News

மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் தோன்றும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’

‘Vikkals of Vikram’ Returns to the Stage to Entertain Audiences Once Again

After a brief hiatus, ‘Vikkals of Vikram’ is all set to return to the stage, making audiences laugh, think, and reflect.

Popular stand-up comedian and speaker Vikkals Vikram, known for bringing smiles to audiences while encouraging them to look at life’s challenges from a fresh perspective, is returning to the stage with new material and renewed energy. Having recently completed his work as the lead actor in a feature film, he is now set to continue his successful stand-up comedy journey. An official announcement regarding his return has been released.

Through stand-up comedy, debates, discussions, and public speaking engagements, Vikkals Vikram has consistently addressed the everyday social issues faced by people from all walks of life. With his signature style of observational and satirical humor, he has entertained audiences while also inspiring them to think critically about the society around them.

Vikkals Vikram has recently played the lead role in “Light Weight Baby,” directed by debut filmmaker K.C. Guru. Having successfully completed his commitments to the film, he is now making a comeback to the stage to perform stand-up comedy shows once again.

One of the unique aspects of his performances is the way he explores subjects such as love, family, relationships, cinema, sexuality, education, marriage, caste, and feminism. Through humor, he encourages audiences to reconsider many of the preconceived notions and social attitudes that continue to influence modern society.

His performances are not built around preaching or offering direct solutions. Instead, they are designed to spark thought and conversation, allowing audiences to arrive at their own conclusions about what is right and what is wrong. This blend of intelligence, self-reflection, and comedy has been a key reason behind the consistently strong audience turnout at his shows.

Having completed his role as a leading man in cinema, Vikkals Vikram is now focusing on the next phase of his journey through “Vikkals of Vikram.” He is currently planning to take the show to several international destinations. An official announcement regarding these overseas performances will be made soon.

Stand-up comedy is not merely about making people laugh; it is also about inspiring fresh perspectives and positive change in the way people think. Through his continuous self-examination of society and his ability to present those observations with wit and humor, Vikkals Vikram has built a unique connection with audiences—one that continues to grow stronger with every performance.

மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த மேடையில் தோன்றும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’

*ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’*

மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..! என்ற எண்ணத்தை விதைக்கும் நவரச பேச்சு நாயகன் ‘விக்கல்ஸ் ஆப் விக்ரம்’ – திரைப்படத்தில் நாயகனாக நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்தவுடன்… மீண்டும் புதிய விசயங்களுடன் மேடை ஏறி, ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ ஸ்டாண்ட் அப் காமெடியை நிகழ்ச்சியை தொடர்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பட்டிமன்றம்- பேச்சரங்கம்- கருத்தரங்கம்- என தமிழ் மொழியில்.. விளிம்பு நிலை மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள் வரை தினசரி சந்திக்கும் சமூகம் சார்ந்த சிக்கல்களை தனக்கே உரிய அவல நகைச்சுவை பாணியில் சரளமாக உரையாடி வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் விக்கல்ஸ் விக்ரம் இன்று வரை தனித்துவ பாணியை கடைப்பிடித்து வருகிறார்.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் கே. சி .குரு இயக்கத்தில் உருவான ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பணிகளை முழுமையாக நிறைவு செய்தவுடன் மீண்டும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்த மேடைக்கு திரும்பி இருக்கிறார்.

இவருடைய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் தனித்துவம் என்பது காதல்- குடும்பம்- உறவுகள்- சினிமா- பாலியல்- கல்வி- திருமணம் -சாதி- பெண்ணியம்- என இன்றைய சமூகத்தில் மக்களிடையே எதிர்மறையாக ஆக்கிரமித்து இருக்கும் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யும் வகையில் இவருடைய நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும்.

இவருடைய பேச்சில் அறிவுரை இருக்காது. பரிந்துரை இருக்காது. ஆனால் எது சரி எது தவறு என்பதை பார்வையாளர்களே யூகித்து முடிவெடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் இருக்கும். இதன் காரணமாகவே இவருடைய நிகழ்ச்சிகளுக்கு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் வருகை தொடர்கிறது.

திரைப்படத்தில் கதையின் நாயகனாக தன் பங்களிப்பை நிறைவு செய்திருக்கும் விக்கல்ஸ் விக்ரம்- தற்போது தன்னுடைய அடுத்த திட்டமான ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்’ நிகழ்ச்சியை பல சர்வதேச நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

ஸ்டாண்ட் அப் காமெடி என்பது பார்வையாளர்கள் சிரிப்பதற்கு மட்டுமல்ல… நம்முடைய எண்ணங்களில் உற்சாகமான புத்தாக்கம் ஏற்பட வேண்டும் என்பதாக இருப்பதால்… இவருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கும். அத்துடன் இவர் இந்த சமூகத்துடனான தன்னுடைய எதிர்வினையை தொடர்ந்து சுய பரிசோதனை செய்து கொண்டு, அதனை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதால்.. இவரின் மேடை பேச்சை ரசித்து கொண்டே இருக்கலாம்.

Categories
Reviews

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:

Nivin Pauly – Justin
Mamitha Baiju – Ashley
Sangeeth Prathap – Joel
Bindu Panicker – Kunjanty
Suresh Krishna – Baiju S
Vinay Fort – Alex
Srinda – Reshma
Shameer Khan – Brinto
Meenakshi Raveendran – Riya
Ayashankar Karimuttam -Thankachaj
Thankam Mohan – Rosily
Vettukili Prakash – Davis

*CREW*

Director – Girish AD
Producers – Dileesh Pothan , Fahadh Faasil , Syam Pushkaran
Music – Vishnu Vijay
Writters – Girish AD , Kiran Josey
Cinematographer – Ajmal Sabu
Film Editor – Akash Joseph Varghese
Art Director – Ashik S
Costume – Dhanya Balakrishnan
Sound Design – Sankaran AS, KC Sidharthan
Lyrics – Suhail Koya , Vinayak Sasikumar
Action – Santhosh
Production Executive – Jamsheer Purakkattiri
VFX – Egg White VFX
Executive Producers- Benny Kattapana , Jos Vijay
PRO – Yuvraaj

‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ இறந்துபோன காதலியின் நினைவில் திருமணம் செய்யாமல் வாழும் நிவின் பாலியின் வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக்கு வரும் கல்லூரி மாணவி மமிதா பைஜூவால் மீண்டும் காதல் வருகிறது. இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் இந்த காதலுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது. குடும்பத்தினர் இந்த காதலை எப்படி எதிர்கொள்கிறார்கள் அவர்களுடைய காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை

நிவின் பாலி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியில் இருக்கும் வலி மமிதாவின் குறும்புத்தனத்தை பார்த்து வெட்கப்படுவது மீண்டும் காதலில் விழும் தயக்கம் என பல உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். மமிதா பைஜூவும் தனது சுட்டித்தனமான நடிப்பால் படம் முழுவதும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக நிவினிடம் தைரியமாக காதலை சொல்லும் காட்சிகளில் நல்ல ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒன் லைன் கவுண்டர் வசனங்கள் பல இடங்களில் நல்ல சிரிப்பை வரவழைக்கின்றன. முதல் பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியிலும் சுவாரஸ்யம் இருந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. சில காமெடி காட்சிகள் இயல்பாக இல்லாமல் செயற்கையாக இருப்பது மட்டும் குறையாக தெரிகிறது

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பலம். அந்த ஊர் தேவாலயம் வீடுகள் என படம் நடக்கும் இடங்களை மிகவும் இயல்பாக காட்டியிருக்கிறார். விஷ்ணு விஜய்யின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியும் உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது

மொத்தத்தில்,’பெத்லகேம் குடும்ப யூனிட்’ குறையாக இருந்தாலும் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. மலையாள சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக ஒரு லைட்டான காதல் மற்றும் காமெடி படமாக பெத்லஹேம் குடும்ப யூனிட் ஒருமுறை பார்க்கலாம்.

Categories
Reviews

‘4 இடியட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

‘4 இடியட்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 2/5

Cast & Crew:
Director: Sajo Sundar Murugesan

Cast: Pugazh, Pragya Nayan , Ravi Maria, Kumki Ashwin, Vincent Asokan, Indran Ilangovan, and Thidiyan Thiruchelvam

‘4 இடியட்ஸ்’ நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்து உருவாகியிருக்கும் படம். கொரோனா காலத்தில் தொழில் செய்ய முடியாமல் இருக்கும் நான்கு திருடர்கள் கடைசியாக ஒரு கொள்ளையை செய்து செட்டிலாகலாம் என்று நினைத்து கடற்கரை பங்களா ஒன்றில் இருக்கும் பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க செல்கிறார்கள். அங்கு காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக்கொள்ளும் அவர்கள் எதிர்பாராத பல மர்மங்களை சந்திக்கிறார்கள்.

புகழ் கதையின் முக்கிய (ஹீரோ) கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கும்கி அஷ்வின் திடியன் மற்றும் இந்திரன் ஆகியோர் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களது கூட்டணியில் சில இடங்களில் காமெடி நன்றாக வருகிறது. ரவி மரியா காவலாளியாக தனது வழக்கமான நடிப்பில் கவர்கிறார். வின்சென்ட் அசோகன் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். பிரக்யா நயனுக்கும் சில முக்கியமான திருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரே பங்களாவை மையமாக வைத்து பெரும்பாலான காட்சிகள் நகர்வதால் யு கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. சுபாஷ் முனிரத்னத்தின் இசையும் பின்னணி இசையும் படத்தின் காமெடி மற்றும் திகில் காட்சிகளுக்கு உதவுகிறது.

படத்தின் முக்கிய குறை காமெடி தான். சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தாலும் சில இடங்களில் காமெடியை வலுக்கட்டாயமாக திணித்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. கதாபாத்திரங்களுக்கும் இன்னும் அழுத்தமான வடிவமைப்பு கொடுத்திருக்கலாம்.

அதே நேரத்தில் ஒரு பங்களா நான்கு திருடர்கள் ஒரு மர்மமான காவலாளி பணம் மற்றும் பின்னணியில் இருக்கும் ரகசியம் என சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இறுதியில் வரும் கருத்தும் கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில்,’4 இடியட்ஸ்’ காமெடி திரில்லர் படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

Categories
Cinema News Videos

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் வெற்றி விழா

Full Video: ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் வெற்றி விழா | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Aishwarya Lekshmi

#kollywoodmix
#GattaKusthi2 | #VishnuVishal | #aishwaryalekshmi | #tamilcinema #GattaKusthi2
#GattaKusthi
#VishnuVishal
#AishwaryaLekshmi
#RamyaKrishnan
#YogiBabu
#Karunas
#Munishkanth
#KaaliVenkat
#Karunakaran
#ZaraZyanna
#Mokksha
#TarakPonnappa
#ChellaAyyavu
#SeanRoldan
#TamilCinema
#TamilMovie
#Kollywood
#TamilMovies
#50thDayCelebration
#50thDaySuccess
#GattaKusthi2Success
#கட்டாகுஸ்தி2
#விஷ்ணுவிஷால்
#தமிழ்சினிமா

gatta kusthi 2, gatta kusti, gatta kusthi 2 2026, gatta kushthi 2, gatta kusthi 2 tamil, gatta kusthi 2 movie, gatta kusthi 2 muvie, gatta kushti 2 movie, gatta kushti 2 hindi, gatta kusthi 2 story, gatta kusthi 2 netflix, gatta kusti muvie, gatta kusthi 2 full movie, gatta kusthi 2 movie 2026, gatta kushti 2 movie in hd, gatta kusthi 2 movie full, 2026 gatta kusthi 2 movie, gatta kusthi 2 explained, gatta kusthi 2 movie hindi, gatta kusthi 2 south movie, gatta kusthi 2 hindi movie, gatta kusthi 2 tamil movie, gatta kusthi 2 movie faltu

Categories
Reviews

‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரை விமர்சனம்

‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

ஆண்டனி வர்க்கீஸ் – இஸ்மாயில் (Ismail)

ஐ. எம். விஜயன் – ஐ. எம். விஜயன் (IM

Vijayan)

ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா (Raheena)

-லுக்மான் அவரான் – முனீர் (Munir)

பாலு வர்க்கீஸ் – தீபக் (Dhepak)

தனிஷ் பி.கே – உமர் (Umar)

அமல் – குஞ்சு (Kunju)

பாசித் – பர்ஹான் (Barhan)

Producer – T.Ashok

Banner – Phoenix Studio

Director – Nikhil Premraj

Screenplay & Dialogue – Nikhil premraj

Music and Background Score – Jakes Bejoy

DOP – Faiz Siddik

Editor – Noufal Abdullah

Lyrics – Tamil Kumaran, Raja Gurusamy

Colorist – Srik Varier

Art Director – Jayan Crayon

Designer – Badusha

Stills – Santhosh Pattambi

Makeup – Jithu Payyannur

Costumes – Arun Manohar

Associate Directors – Premnath

VFX Supervisor – I-VFX

PRO: velu

‘7 ஸ்டார் பாய்ஸ்’ கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு அழகான ஃபீல் குட் ஸ்போர்ட்ஸ் டிராமா படம்.

கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஏழு சிறுவர்கள் இருக்கிறார்கள். கால்பந்து அவர்களுக்கு வெறும் விளையாட்டு கிடையாது. அதுதான் அவர்களுடைய கனவு. எப்படியாவது ஒரு நல்ல அணியை உருவாக்கி உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் அவர்கள் பயணிக்கிறார்கள். ஆனால் திறமை மட்டும் இருந்தால் போதாது. சரியான பயிற்சியும் வழிகாட்டுதலும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும். அந்த இடத்தில்தான் ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் இஸ்மாயில் கதாபாத்திரம் சிறுவர்களுக்கு துணையாக நிற்கிறது

சிறுவர்களின் கால்பந்து கனவை மையமாக வைத்து கதை நகர்வதால் படத்தில் ஒரு அழகான எளிமை இருக்கிறது. இது வழக்கமான ஹீரோ வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் ஸ்போர்ட்ஸ் கமர்சியல் படம் கிடையாது. இந்த படத்தின் உண்மையான ஹீரோக்கள் அந்த ஏழு சிறுவர்கள்தான். அவர்களுடைய குறும்புத்தனம் கால்பந்து மீதான ஆர்வம் நண்பர்களுக்குள் இருக்கும் பாசம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை என எல்லாமே இயல்பாக காட்டப்பட்டிருக்கிறது

குறிப்பாக உமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனிஷ் பி கே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது முகபாவனைகளும் இயல்பான நடிப்பும் நம்மை எளிதாக ஈர்க்கிறது. அவருடன் நடித்திருக்கும் மற்ற சிறுவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குழந்தைகள் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட உண்மையிலேயே ஒரு கிராமத்தில் கால்பந்து விளையாடும் சிறுவர்களை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு பல காட்சிகளில் கிடைக்கிறது.

ஆண்டனி வர்கீஸ் இந்த படத்தில் மிகவும் இயல்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவையில்லாத ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் சிறுவர்களுடன் பழகும் விதத்திலும் அவர்களுடைய கனவை புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தும் விதத்திலும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரது இயல்பான எனர்ஜியும் ஸ்கிரீன் பிரசன்ஸும் படத்திற்கு பலமாக இருக்கிறது

இந்த படத்தின் இன்னொரு முக்கியமான பலம் ஐ எம் விஜயன். இந்திய கால்பந்தில் பெரிய அடையாளத்தை உருவாக்கிய அவர் இந்த படத்தில் சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் நம்பகத்தன்மையை கொடுக்கிறது. கால்பந்து பற்றிய காட்சிகளில் அவரது இருப்பு படத்திற்கு நல்ல பலமாக அமைந்திருக்கிறது

படத்தின் முதல் பாதி சிறுவர்களின் உலகத்தையும் அவர்களுடைய கால்பந்து கனவையும் நமக்கு அறிமுகப்படுத்துவதில் அதிக நேரம் செலவிடுகிறது. அதனால் சில இடங்களில் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல தெரிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் குறிப்பாக இறுதியில் வரும் கால்பந்து போட்டி ஆரம்பித்தவுடன் படத்தின் வேகம் நன்றாக அதிகரிக்கிறது

கடைசி அரை மணி நேரம்தான் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். போட்டியில் என்ன நடக்கப்போகிறது யார் வெற்றி பெறுவார்கள் இந்த சிறுவர்களுடைய உழைப்புக்கு என்ன முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள். கால்பந்து போட்டியை படமாக்கிய விதமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு உண்மையான கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பரபரப்பு சில காட்சிகளில் கிடைக்கிறது

ஜேக்ஸ் பிஜோயின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கும் போட்டி காட்சிகளுக்கும் நன்றாக பொருந்துகிறது. ஃபைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு கிராமத்து சூழல் கால்பந்து மைதானம் மற்றும் போட்டி காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது

படத்தில் ஒரு சிறிய காதல் பகுதியும் வருகிறது. அது கதைக்கு பெரிய இடையூறாக இல்லாமல் கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே வருகிறது. அதேபோல் நகைச்சுவை மற்றும் சிறுவர்களை சுற்றி வரும் கலகலப்பான காட்சிகளும் படத்தை சீரியஸாக மட்டுமே செல்லாமல் ரசிக்க வைக்கின்றன

மலையாளத்தில் வெளியான ஆனபரம்பிலே வேர்ல்ட் கப் திரைப்படம் தற்போது 7 ஸ்டார் பாய்ஸ் என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்ற உணர்வு அதிகமாக தெரியாத அளவுக்கு தமிழ் டப்பிங்கும் காட்சிகளும் அமைந்திருக்கிறது

படத்தில் பெரிய புதுமையான கதை என்று சொல்ல முடியாது. ஸ்போர்ட்ஸ் படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. முதல் பாதியின் மெதுவான நகர்வும் சிலருக்கு குறையாக தெரியலாம். ஆனால் இந்த குறைகளை தாண்டி சிறுவர்களின் நடிப்பும் அவர்களுடைய கால்பந்து மீதான ஆர்வமும் இறுதிக்கட்ட போட்டியும் படத்தை ரசிக்க வைக்கிறது

மொத்தத்தில் கால்பந்து மீது ஆர்வம் கொண்ட சிறுவர்களின் கனவையும் அதை நோக்கிய அவர்களுடைய பயணத்தையும் அழகாக சொல்லியிருக்கும் ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம் 7 ஸ்டார் பாய்ஸ்

கிரிக்கெட்டை, கபடி மையமாக வைத்து நிறைய படங்கள் வரும் நிலையில் கால்பந்தை மையமாக வைத்து இப்படம் வந்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு எளிமையான ஸ்போர்ட்ஸ் என்டர்டெய்னர் கால்பந்து ரசிகர்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் பிடிக்கக்கூடிய படம் ‘7 ஸ்டார் பாய்ஸ்,

Categories
Cinema News

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்.

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்.

கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார்.

கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கமல்ஹாசனும், திரைப்பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் இந்த புதிய தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த ரகசியத்தைக் காக்கும் அதே வேளையில், படத்திற்காக உருவாக்கப்படும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வையை ரசிகர்களுக்கு அளித்து பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லுக் டெஸ்ட்’ வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

English Press Release

Kamal Haasan – S.U. Arun Kumar Collaboration Creates Buzz; Look Test Goes Viral

Kamal Haasan is once again at the centre of a wave of excitement, as his look from his upcoming film has taken social media by storm.

With Kamal Haasan headlining the project, the look test for the film was conducted yesterday, and glimpses from the test have already gone viral, creating immense curiosity and anticipation among fans and film audiences. Kamal Haasan’s striking new appearance has become a talking point across social media, with fans eagerly awaiting more details about the project.

The film marks the first collaboration between Kamal Haasan and filmmaker S. U. Arun Kumar, making the combination all the more intriguing. Known for constantly reinventing himself and embracing distinctive characters, Kamal Haasan’s latest look has once again sparked widespread interest, offering audiences a glimpse into the world being created for the film while keeping its larger narrative firmly under wraps.

The much-awaited project is jointly produced by RaajKamal Films International (RKFI) and Turmeric Media, bringing together two prominent production houses for this highly anticipated collaboration. With Kamal Haasan leading the project and S.U. Arun Kumar at the helm, the film has already generated considerable buzz even before commencing production.

Following the successful completion of the look test, the film is expected to commence shooting soon. Further details about the project will be officially revealed at a later stage.

Categories
Cinema News

‘MOONWALK’ TO LIGHT UP DIWALI 2026 WITH HAPPINESS, LAUGHTER AND FAMILY ENTERTAINMENT. – ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

‘MOONWALK’ TO LIGHT UP DIWALI 2026 WITH HAPPINESS, LAUGHTER AND FAMILY ENTERTAINMENT.

BEHINDWOODS PRODUCTIONS proudly announces that MOONWALK, featuring the iconic combination of Prabhudeva and A R Rahman, will hit theatres worldwide this DIWALI 2026, promising audiences a spectacular festive celebration filled with laughter and unforgettable family moments.

Designed to transform theatres into a true festival of joy, MOONWALK aims to create an experience that audiences of all ages can cherish together.

With A R Rahman’s chartbuster soundtrack, MOONWALK stars Prabhudeva in the lead, supported by an exciting cast featuring Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satz, Nishma, Sushmitha, Redin Kingsley, Mottai Rajendran, Lollu Sabha Swaminathan, Dr. Santhosh Jacob, Deepa Shankar, and Ramkumar Natarajan. More importantly, A R Rahman makes his acting debut in a fun cameo. Another highlight of the movie is Yogi babu appearing in 16 different roles.
Positioned as one of the most anticipated Tamil family entertainers of 2026, MOONWALK seamlessly blends comedy, music and dance into a vibrant cinematic celebration. At a time when families are looking for wholesome entertainment that can be enjoyed together, MOONWALK arrives as a refreshing theatrical experience created exclusively for the festive season.

MOONWALK is written and directed by Manoj NS, Founder and CEO of India’s leading digital media platform, Behindwoods. Speaking about the announcement, Manoj NS said: “Diwali is a festival that brings families together, and we want Moonwalk to do the same. This film has been created as a celebration of happiness, laughter, music, and dance. This Diwali, our MOONWALK team happily invites family audiences to come together and experience a film that will leave them smiling.”

The three tracks released from MOONWALK – Yethu, Tinga and Macarena have received a tremendous response from Music and Dance lovers world wide. Mayile, the fourth song, featuring AR Rahman and Prabhudeva in it, will be released soon.

With its energetic soundtrack, entertaining storytelling, and feel-good narrative, MOONWALK is poised to become a grand laughter-filled family celebration of Diwali 2026.
The film features cinematography by Anoop V. Shylaja, choreography by Sekhar VJ and Piyush Shazia, production design by Shanoo, and costume design by Divya George and Swetha Raju.

MOONWALK, produced by Manoj NS, Divya Manoj and Praveen Elak under Behindwoods Productions, will release simultaneously in Tamil, Telugu and Hindi languages. Romeo Pictures has acquired the worldwide distribution rights, while Lahari has acquired the film’s music rights.

*‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது*

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்

ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஜாலியான சிறப்புத் தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுவது படத்தின் மற்றொரு பெரிய ஹைலைட் ஆகும்!

2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள ‘மூன்வாக்’, நகைச்சுவை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைத்து ஒரு கலகலப்பான திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. குடும்பங்கள் ஒன்றாகக் கண்டு மகிழக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தேவைப்படும் இந்தக் காலத்தில், பண்டிகைக் காலத்திற்காகவே சிறப்புமிக்க ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக ‘மூன்வாக்’ வருகிறது.

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஊடக நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods)-ன் நிறுவனர் (Founder & CEO) மனோஜ் என்.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து இயக்குநர் மனோஜ் என்.எஸ் கூறுகையில்: “தீபாவளி என்பது குடும்பங்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருவிழா, அதே வேலையை எங்களுடைய ‘மூன்வாக்’ திரைப்படமும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த படம் மகிழ்ச்சி, சிரிப்பு, இசை மற்றும் நடனத்தின் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வந்து, முகம் நிறைய சிரிப்போடு திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு திரைப்பட அனுபவத்தைப் பெற ‘மூன்வாக்’ குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.”

இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஏத்து’
(Yethu), ‘டிங்கா’ (Tinga) மற்றும் ‘மகரினா’ (Macarena) ஆகிய மூன்று பாடல்களும் உலகெங்கிலும் உள்ள இசை மற்றும் நடனப் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘மயிலே’ (Mayile) என்ற நான்காவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

ஆற்றல் மிக்க இசை, பொழுதுபோக்கு நிறைந்த கதைக்களம் மற்றும் மனதை மகிழ்விக்கும் அம்சங்களுடன், 2026 தீபாவளிப் பண்டிகையைச் சிரிப்பால் நிரப்பும் ஒரு சிறப்பான குடும்பக் கொண்டாட்டமாக ‘மூன்வாக்’ அமையவுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அனூப். வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, சேகர் வி.ஜே மற்றும் பியூஷ்-ஷாஜியா நடன இயக்கம் செய்துள்ளனர். ஷனூ கலை இயக்குநராகவும், திவ்யா ஜார்ஜ் மற்றும் ஸ்வேதா ராஜு ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘மூன்வாக்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் (Romeo Pictures) பெற்றுள்ளது, மேலும் இசை உரிமையை லஹரி (Lahari Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.