Categories
Cinema News

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்ட போலிப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், இவை தொடர்ந்து இணையத்தில் உலாவுவது அவரது நற்பெயருக்கும், சமூக மதிப்பிற்கும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளுக்கும் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் ஸ்ருதி ஹாசன் என்ற தனிநபரோடு முடிந்துபோவதல்ல. பல காலமாகவே நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்களின் புகைப்படங்களை உருமாற்றுவதும், அவர்களின் பெயரில் போலி விளம்பரங்களை வெளியிடுவதும் சமூக ஊடகங்களில் தொடர்கதையாக உள்ளது. தற்போது ‘ஜெனரேட்டிவ் AI’ தொழில்நுட்பத்தின் வருகையால், இதுபோன்ற போலி உள்ளடக்கங்களை மிக எளிதாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது; அதேவேளையில் எது உண்மை, எது போலி என்று கண்டறிவது சாமானிய மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஒருவரின் ஒப்புதல் இன்றி அவரது முகம், குரல் அல்லது தோற்றத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. ஒருவர் திரைத் துறையிலோ அல்லது பொதுவெளியிலோ பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக, அவரது அனுமதியின்றி அவரது தோற்றத்தை டிஜிட்டல் முறையில் மாற்றவோ, தயாரிப்புகளுக்குப் போலியாகப் பயன்படுத்தவோ, தவறான சூழல்களில் சித்தரிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.

அந்த வகையில், ஸ்ருதி ஹாசன் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட நடவடிக்கை மிகவும் அவசியமான, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். தனது சுயமரியாதைக்காகவும் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்துள்ளதன் மூலம், கலைத் துறையில் ‘தனிநபர் சம்மதம்’ (Consent), பொறுப்புடைமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த முக்கியமான உரையாடலைத் தொடங்கி வைத்துள்ளார்.

பிரபலமாக இருப்பதால் இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து, தங்கள் அடையாளம் திருடப்படும்போது அதைச் சட்டப்படி எதிர்கொள்ள பிற கலைஞர்களுக்கும் இது பெரும் துணிச்சலைத் தரும். அதேபோல, “தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அது ஒருவரின் சம்மதத்திற்கு மேலானது அல்ல” என்ற உறுதியான எச்சரிக்கையை AI நிறுவனங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், டிஜிட்டல் படைப்பாளிகளுக்கும் இது உணர்த்துகிறது.

நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு ஒரு தொடக்கப் புள்ளிதான் என்றாலும், அசுர வேகத்தில் வளரும் AI காலத்தில் இந்தியக் குடிமக்களின் டிஜிட்டல் அடையாளங்களை எவ்வாறு சட்டப்படி பாதுகாப்பது என்பது குறித்த பரந்த விவாதத்திற்கு இது வித்திட்டுள்ளது. இப்போராட்டத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் முன்மாதிரியாக நின்று, கலைஞர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைப் பதித்துள்ளார்.

*Shruti Haasan’s Legal Stand Against AI Misuse Marks an Important Step for Artists*

In an age where artificial intelligence can recreate a person’s face, voice and likeness within seconds, consent and identity protection have become more important than ever. Actor and singer Shruti Haasan has taken a strong legal stand against the unauthorised use of her identity through AI-generated deepfakes, morphed images, manipulated videos and other misleading digital content.

The Bombay High Court has granted Shruti Haasan interim protection after finding a strong prima facie case in her favour. The court also directed the removal of specific content identified in her petition, observing that its continued circulation could cause irreparable harm to her reputation, goodwill and commercial interests.

This issue extends far beyond one individual. For years, actresses and other public figures have faced the circulation of morphed photographs, fake endorsements and misleading content across social media. The rise of generative AI has made such misuse easier, faster and increasingly difficult for audiences to identify.

A person’s face, voice or likeness should never be used without consent. Public visibility does not give anyone the right to digitally manipulate an artist’s identity, falsely associate them with a product or place them in fabricated and harmful situations.

Shruti Haasan’s decision to take legal action therefore represents a timely and necessary move. By standing up for her rights, she is also bringing greater attention to the need for consent, accountability and digital safety in the entertainment industry.

Her action could encourage more actresses and artists to challenge the misuse of their identities instead of accepting it as an unavoidable part of being in the public eye. It also sends a clear message to platforms, content creators and AI companies: technology cannot be allowed to replace consent.

While this interim order is an important development, it is also the beginning of a larger conversation about how India must protect individuals in the rapidly evolving AI era. Shruti Haasan is leading from the front and her stand could help make social media a safer, cleaner and more responsible space for everyone.

Categories
General News

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு.

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.

சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.

அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.

அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்,” என்று தெரிவித்துள்ளனர். 

Categories
Cinema News

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, “இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி,”நல்ல படத்தில் வேலை செய்து இருக்கிறோம் என்று திருப்தி உள்ளது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.

படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன், “என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன். என் முதல் படத்திலேயே எனக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி”.

பப்ளிசிட்டி டிசைனர் வியாகி, “ராஜா கதை சொன்னதிலிருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது. படத்தில் எல்லோருமே பாசிட்டிவாக இருந்தார்கள். அதனுடைய ரிசல்ட் பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கிறது”.

நடிகை சுமித்ரா தேவி, ” இந்த படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எங்கள் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இயக்குநருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

நடிகை வர்ஷினி கார்மேகம், “தயாரிப்பாளர்கள், இயக்குநர் ராஜா, ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது”.

நடிகர் திலீப், ” படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பல நாட்கள் கழித்து திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியுடன் செல்வதை பார்த்தேன். நன்றி”

நடிகை இனியா ராம், ” அறிமுக இயக்குநர் ராஜாவின் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படம் பார்த்த பலரும் என்னிடம் பாக்யராஜ் படம் பார்த்தது போல உள்ளது என்றார்கள். நிச்சயம் அடுத்த ஐந்து வருடத்திற்குள் இயக்குநர் ராஜா முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருப்பார். ரிஷிகாந்தும் திறமையான நடிகர். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி”.

நடிகை தீபிகா, “கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படம் மூலம் எங்கள் எல்லோருக்கும் அடையாளம் கிடைத்துள்ளது”.

நடிகர் கார்த்திகேயன் டிகே, “, எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. படத்தில் நடித்தவர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் இந்த படம் ரொம்பவே முக்கியமானது. நீண்ட பயணத்தின் முதல் படியாக இந்த வெற்றியை பார்க்கிறேன். நன்றி”.

நடிகர் அப்துல் லீ, ” வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்தில் நடித்த நடிகர்களையும் தொழில்நுட்ப குழுவினரையும் அடுத்த நிலைக்கு இந்த படம் எடுத்து சென்றுள்ளது. பல வருட உழைப்பிற்கு பிறகு என்னுடைய முகமும் இந்த படத்தின் போஸ்டரில் வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி”.

இசையமைப்பாளர் பரத் சங்கர், “என்னுடைய இசை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான மைல்கல். சின்ன படம், பெரிய படம் என்று கிடையாது. நல்ல படம், சுமாரான படம் என்று வேண்டுமானால் பிரிக்கலாம். ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை தயாரிக்க முன்வந்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி”.

நடிகர் சேத்தன், “புதிய திறமையானவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இயக்குநர் ராஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தோம். இந்தப் படத்தில் இருந்து பல சூப்பர் ஸ்டார்களும், லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள். ரிஷியை திரையில் பார்க்கும்பொழுது இளவயது அமிதாப்பச்சனை பார்ப்பது போல இருந்தது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் ராஜா கருப்பசாமி, “என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்”.

நடிகர் பகவதி பெருமாள், “சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்”.

நடிகர் ரிஷிகாந்த், ” உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

Categories
Cinema News

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறது

இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. உலகநாயகன் பாராட்டும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரின் இந்த சந்திப்பு, திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai*

The team of ‘Bethlehem Kudumba Unit’ recently had a special and memorable interaction with Ulaganayagan Kamal Haasan at his office in Chennai.

Kamal Haasan had watched the film and appreciated the work of the entire team, congratulating them for their efforts and the film’s engaging presentation. The interaction turned into a memorable moment for the team, with Kamal Haasan sharing his appreciation and words of encouragement with the cast and crew.

The meeting was attended by the film’s director Girish A.D., actors Dileesh Pothan, Fahadh Faasil, Kiran Josey, Sangeeth Prathap and Unnimaya, along with Future Runup Films Distributors Arun Narayanan and Anup Kumar.

Produced by Bhavana Studios, Bethlehem Kudumba Unit has already emerged as a major success in Malayalam, receiving strong appreciation from audiences and establishing itself as one of the notable Malayalam releases. The film is now reaching Tamil audiences as well, where it continues to create awareness and build its audience following.

Kamal Haasan’s appreciation of the film and the team adds another special moment to the film’s journey. His words of encouragement have brought immense happiness to the entire team as they continue their journey with the film.

The memorable interaction between Ulaganayagan Kamal Haasan and the ‘Bethlehem Kudumba Unit’ team marks a special occasion for the film and its entire cast and crew.

Categories
Cinema News

பாடகி தீ (DHEE) – அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு

பாடகி தீ (DHEE) – அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு.

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பாப் இசை கலைஞரான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, படலாசிரியர் விவேக் வரிகளில், பாடகி தீ குரலில் ஒலித்த ‘வாரி வாரி’ எனும் தமிழ் இண்டி பாடல் அண்மையில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடர்ந்து இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தருணத்தில் அமெரிக்க பாப் இசை பாடகியான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸை பாடி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சர்வதேச இசைக் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த ரீமிக்ஸ் பாடல் – கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாக திகழ்ந்து, இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

பாடகி தீ – லாரா ராஜ் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் – தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்களின் சர்வதேச இசைக் கூட்டணியில் உருவாகி, உலகளாவிய இசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

Singer DHEE and American Pop Star Lara Raj of KATSEYE collaborate for the remix of ‘VARI VARI’

Tamil singer DHEE, who has garnered international attention among music audiences through her independent music, has collaborated with American pop star Lara Raj of KATSEYE to release the remix version of the Tamil indie track ‘VARI VARI’.

The Tamil indie track ‘VARI VARI’, composed and produced by music composer Santhosh Narayanan, with lyrics by lyricist Vivek and vocals by singer DHEE, was recently released and has gone on to become a big success, garnering widespread appreciation from music audiences. At this juncture, DHEE has joined hands with American pop star Lara Raj of KATSEYE to sing and release the remix of ‘VARI VARI’. The remix has been composed by Santhosh Narayanan, with 808 Krshna serving as the co-producer. Created through the collaboration of international music artists DHEE and Lara Raj, this remix stands as a symbol of cultural exchange and has been winning the hearts of music lovers.

The song, featuring the voices of DHEE and Lara Raj, has been created through an international musical collaboration between two female artists of Tamil heritage, and has secured a place in the playlists of music lovers across the globe.

OUT NOW: https://dhee.lnk.to/varivariremix

Categories
General News

“Wild Tamil Nadu” Sundram Fasteners Limited.

“Wild Tamil Nadu” Sundram Fasteners Limited.

Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing the State’s Rich Biodiversity to the Big Screen.

Documentary captures Tamil Nadu’s diverse landscapes, wildlife and ecological heritage through a four-year filmmaking journey

Chennai, 4th September 2026: Wild Tamil Nadu, a wildlife documentary celebrating the extraordinary biodiversity of Tamil Nadu, is set to be distributed through PVR cinemas in numerous multiplex locations across the Country, on Monday, the 7th September 2026 taking audiences on an immersive journey through the State’s diverse landscapes and remarkable wildlife.

Produced as a CSR initiative by Sundram Fasteners Ltd., in collaboration with Nature inFocus and with the support of the Tamil Nadu Forest Department, the one-hour documentary brings together four years of footage from across Tamil Nadu. From mountains and forests to croplands, coastlines, coral reefs and arid landscapes, the film offers audiences a glimpse into the ecological richness and diversity of the State.

Drawing inspiration from the five classical landscapes of ancient Sangam literature – Kurinji (mountains), Mullai (forests), Marutham (croplands), Neithal (coasts) and Palai (arid zones) – Wild Tamil Nadu explores the wildlife that inhabits these varied ecosystems. The film features familiar species such as elephants and leopards alongside lesser-known inhabitants including the lion-tailed macaque, fireflies and the elusive Madras hedgehog.

The documentary brings together footage captured across the State by a dedicated team of cameramen from South India over a four-year period. Its soundtrack has been composed by three-time Grammy Award winner Ricky Kej, blending Carnatic traditions with orchestral arrangements, while renowned actor Arvind Swamy lends his voice as narrator.

Speaking about the film and its wider theatrical release, Ms. Arathi Krishna, Managing Director, Sundram Fasteners Ltd., said, “At Sundram Fasteners, we are proud to support initiatives that celebrate and safeguard our natural heritage. Wild Tamil Nadu captures the richness of Tamil Nadu’s wilderness and the remarkable biodiversity that exists across its landscapes. By taking the film to audiences through PVR cinemas, we hope to make these stories more accessible and inspire a deeper appreciation of the natural world and the need to protect it.”

Directed by Kalyan Varma, the documentary brings together years of on-ground filming to present Tamil Nadu’s natural heritage through a cinematic lens. The PVR release marks an important next step in the film’s journey, allowing audiences across multiple markets to experience the State’s wildlife and landscapes on the big screen.

With its release across cinemas, Wild Tamil Nadu invites audiences to discover the many ecological worlds that exist within Tamil Nadu – from its forests and mountains to its coastline and arid landscapes – and experience the State’s extraordinary natural heritage in a format designed for the scale and immersion of the cinema.

‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!

* ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.’

சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் கண்டுணர வைக்கும் ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும்.
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளின் முன்னெடுப்பாக, ‘நேச்சர் இன்:ஃபோகஸ்’ (Nature inFocus) நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவோடு இந்த ஒரு மணி நேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து, மலைகள், காடுகள், விளைநிலங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் செழுமையையும் அதன் பல்லுயிர் பன்முகத்தன்மையையும் இந்த திரைப்படம் ரசிகர்களின் கண்முன்னே நிறுத்துகிறது.

பழந்தமிழ் சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி (மலைகள்), முல்லை (காடுகள்), மருதம் (விளைநிலங்கள்), நெய்தல் (கடற்கரைகள்) மற்றும் பாலை (வறண்ட நிலங்கள்) ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, இந்த மாறுபட்ட இயற்கை சூழல்களில் வாழும் வனவிலங்குகளை நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறது. யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பரிச்சயமான விலங்குகளுடன், செங்குரங்கு (Lion-tailed macaque), மின்மினிப் பூச்சிகள் மற்றும் அரிதாக மட்டுமே கண்ணில் தென்படும் மெட்ராஸ் முள்ளெலி (Madras hedgehog) உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கையையும் இந்த ஆவணப்படம் திரையில் நேரடி அனுபவம் போல உணரச் செய்கிறது.

‘வைல்ட் தமிழ்நாடு’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
இயக்கம்: இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இதை இயக்கியுள்ளார்.

பின்னணிக் குரல்: பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி தனது கம்பீரமான குரலில் வண்ணனை (Narration) செய்துள்ளார்.
இசை: மூன்று முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்நாடக இசையையும் மேற்கத்திய வாத்தியங்களையும் நேர்த்தியாக இணைத்து இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு: தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர்கள் குழுவினர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து களத்தில் தங்கி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.
திரைப்படம் மற்றும் அதன் பரவலான திரையரங்கு வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆரத்தி கிருஷ்ணா (Ms. Arathi Krishna, Managing Director, Sundram Fasteners Ltd.) பேசுகையில், “நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், அதன் பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் அச்சரியமூட்டும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. பிவிஆர் திரையரங்குகள் வாயிலாக இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த கதைகள் அனைவரையும் எளிதில் சென்றடையச் செய்வதோடு, இயற்கை உலகின் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக வழங்குவதற்காக பல ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும், பல்வேறு நிலப்பகுதிகளிலும் இரவுபகல் பாராமல் களத்தில் நின்று எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படம், தமிழகத்தின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் எழில்மிகு நிலப்பகுதிகளையும் நேரடியாக பார்க்கும் அனுபவத்தை வெள்ளித்திரை மூலம் உணரச் செய்கிறது.

பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் ‘வைல்ட் தமிழ்நாடு’, காடுகள் மற்றும் மலைகள் தொடங்கி கடற்கரைகள் மற்றும் வறண்ட நிலங்கள் வரை தமிழ்நாட்டின் அடங்கியிருக்கும் பல்வேறு இயற்கை உலகங்களை பார்வையாளர்கள் அறிந்துகொள்ள ரசிகர்களை அழைக்கிறது. மாபெரும் திரை இணையும் இயற்கை பாரம்பரியத்தை, திரையரங்குகளுக்கே உரிய பிரம்மாண்டத்துடனும் நேரடி அனுபவத்துடனும் உணரும் வகையில் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

Categories
General News

7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA

7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA

THIRUVANANTHAPURAM | SEPTEMBER 4, 2026.

Seven-year-old Roohi Mohazzab, a young environmental voice from Kozhikode and a World’s Youngest United Nations Keynote Speaker, World’s Youngest Environmentalist and Climate Actionist, had an inspiring meeting with the Hon’ble Vice President of India, Shri C. P. Radhakrishnan Ji, at Lok Bhavan, Thiruvananthapuram.

The Hon’ble Vice President warmly received Roohi and showed keen interest in her initiatives promoting tree protection, paper conservation, recycling, climate compassion and children’s environmental action.

Roohi presented her message “SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH” and shared her vision for Roohi’s Paper Bank, encouraging children and schools to collect and recycle used paper.

The Vice President affectionately gifted Roohi chocolates, wrote an appreciation message”Your Concern for the Humanity is extraordinary, God bless you Keep the good thinking all the time” by C.P Radha Krishnan
Vice President of india
and signed her recycled-paper notebook. He also graciously accepted a plant pot and an artwork presented by Roohi expressing compassion and solidarity with Nepal.

Her compassion for Nepal has also inspired her to take action. Deeply moved by the recent floods in Nepal and their impact on children, trees and communities, Roohi hopes to visit the affected areas, support the children and participate in planting and protecting trees as part of her message of compassion, restoration and hope.

“CHILDREN FOR CLIMATE PEACE”

Roohi’s vision is now expanding beyond tree protection into a children-led movement for climate compassion, international cooperation and peace, focusing on forests, water, biodiversity, responsible consumption and protection of Earth’s shared resources.

Her emerging message is:
“Can children from different countries work together to protect the resources that humanity must share peacefully?”

Through The Children Movement for Climate Compassion Foundation, Roohi envisions initiatives including Tree Bank Nurseries, Roohi’s Paper Bank and cross-border children’s environmental projects, with a long-term vision of cooperation among children across 195 countries.

“I may be only a child, but I believe every child can help protect Mother Earth.”

Roohi believes that environmental action can become a pathway to cooperation, compassion and peace across generations and borders.

Her dream is simple:
“My dream is that saving paper and saving trees will become a responsibility shared by every child, every institution and every citizen.”

The meeting with the Hon’ble Vice President has further strengthened Roohi’s determination to take her message from one child to millions of children, and from one small action to a movement for Mother Earth.

ONE CHILD → MILLIONS OF CHILDREN

“When a child is heard, a dream can become a movement.”

SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH

ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!

திருவனந்தபுரம், செப்டம்பர் 4, 2026: கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், ஐக்கிய நாடுகள் சபையின் உலகிலேயே இளவயது உரையாளர், இளவயது சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை நடவடிக்கை செயற்பாட்டாளர் என்ற சிறப்புகளைப் பெற்றுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார்.

மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹியை அன்புடன் வரவேற்றார். மரங்களைப் பாதுகாத்தல், காகிதத்தைச் சேமித்தல், மறுசுழற்சி, காலநிலை மீதான அக்கறை மற்றும் குழந்தைகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ரூஹி தனது ’காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!! (SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH)’ என்ற செய்தியை அவரிடம் எடுத்துரைத்ததுடன், குழந்தைகள் மற்றும் பள்ளிகள் பயன்படுத்திய காகிதங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ’ரூஹியின் பேப்பர் பேங்க்’ குறித்த தனது தொலைநோக்குப் பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹிக்கு அன்புடன் சாக்லேட்டுகளை வழங்கியதுடன், அவரது முயற்சியைப் பாராட்டி,“மனிதகுலத்தின் மீதான உங்களது அக்கறை அசாதாரணமானது. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! எப்போதும் நல்ல சிந்தனையுடன் தொடர்ந்து செயல்படுங்கள்” என்று தனது கையெழுத்துடன் பாராட்டு செய்தியைப் பதிவு செய்தார். மேலும், ரூஹி வழங்கிய மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்பட்ட குறிப்பேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். ரூஹி வழங்கிய செடி தொட்டியையும், நேபாள மக்கள் மீதான அக்கறை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவர் வரைந்த ஓவியத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குழந்தைகள், மரங்கள் மற்றும் சமூகம் எதிர்கொண்ட பாதிப்புகளால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட ரூஹி, தனது அக்கறையை செயல்பாடாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆதரவளித்து, மரங்களை நடுதல் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் பங்கேற்க வேண்டும் என்பதே ரூஹியின் விருப்பமாக உள்ளது. அக்கறை, மறுசீரமைப்பு மற்றும் நம்பிக்கையை தனது செயல்பாடுகள் மூலம் எடுத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.

ரூஹியின் தொலைநோக்குப் பார்வை தற்போது மரங்களைப் பாதுகாப்பதைத் தாண்டி, குழந்தைகள் முன்னெடுக்கும் காலநிலை மீதான அக்கறை, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இயக்கமாக விரிவடைந்து வருகிறது. காடுகள், நீர், பல்லுயிர் வளம், பொறுப்பான நுகர்வு மற்றும் மனிதகுலம் அனைவருக்கும் பொதுவான பூமியின் வளங்களைப் பாதுகாப்பது ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன. மனிதகுலம் அமைதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய வளங்களைப் பாதுகாக்க வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா என்பதே அவர் சொல்லவரும் செய்தி.

தி சில்ட்ரன் மூவ்மெண்ட் பார் கிளைமேட் கம்பேசன் பவுண்டேஷன் மூலம் ட்ரீ பேங்க் நர்சரிஸ், ரூஹியின் பேப்பர் பேங்க் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை உருவாக்க ரூஹி திட்டமிட்டுள்ளார். நீண்டகால நோக்கமாக, உலகின் 195 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே அவரது கனவாகும். தான் ஒரு குழந்தை என்றாலும், ஒவ்வொரு குழந்தையும் தாய் பூமியைப் பாதுகாக்க உதவ முடியும் என்று தான் நம்புவதாக ரூஹி தெரிவிக்கிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தலைமுறைகளையும் நாடுகளின் எல்லைகளையும் கடந்து ஒத்துழைப்பு, அக்கறை மற்றும் அமைதிக்கான பாதையாக அமைய முடியும் என்று ரூஹி நம்புகிறார். அவரது கனவு எளிமையானது: “காகிதத்தைச் சேமிப்பதும், மரங்களைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு குடிமகனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.”

மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவருடனான இந்த சந்திப்பு, தனது செய்தியை ஒரு குழந்தையிடமிருந்து கோடிக்கணக்கான குழந்தைகளிடம் கொண்டு செல்லவும், ஒரு சிறிய செயலிலிருந்து தாய் பூமிக்கான மிகப்பெரிய இயக்கமாக மாற்றவும் ரூஹியின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் குரல் கேட்கப்படும்போது, ஒரு கனவு இயக்கமாக மாறும் என்கிறார் ரூஹி.

காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!!

Categories
General News

K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai

“Dr. B 360”

K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai

Pari Elavazhagan, Archana Ravichandran, Kishen Das, Deepshikha Chandran, Bhaviyathrika, RaaNav, Ismath Banu & Others Attend the Special Launch.

Chennai witnessed a star-studded gathering as several popular faces from the Tamil entertainment industry came together for the launch of Dr. B 360’s ‘Dr. B Baby Skin Hairless Programme’, powered by DEKA Italy’s Motus AZ+ advanced laser technology. The programme was unveiled by dermatologist and founder of The Dr. B 360 Dermatology Experiential Centre, Dr. Bhairavi Senthil, introducing a personalised approach that brings together international laser technology and her biology-first philosophy of dermatological care.

The launch was graced by Pari Elavazhagan, actor-director of the acclaimed Jama, and Archana Ravichandran, winner of Bigg Boss Tamil Season 7, as Chief Guests. The event also witnessed the presence of Kishen Das, Deepshikha Chandran, Angelin, Bhaviyathrika, RaaNav, Ismath Banu and Sumithra, bringing together a vibrant mix of actors, television personalities and digital creators from the Tamil entertainment fraternity.

For Pari Elavazhagan, the occasion carried a personal connect, as he has been a client of Dr. Bhairavi for some time. Speaking about his association with her, he said, “I have known Dr. B for quite some time and have also been a client. I have not come across someone in the field of dermatology as inspiring as her. Her approach, her commitment to her patients and the way she has built Dr. B 360 are genuinely inspiring.”

The evening also marked the presence of Mr. Francisco Baadi from DEKA, Italy, who spoke about Dr. Bhairavi’s work and the impact she is creating in the field of dermatology. He also highlighted the significance of bringing DEKA’s technology together with Dr. Bhairavi’s clinical approach, adding an international dimension to the launch.

At the heart of the newly introduced programme is DEKA’s Motus AZ+, an advanced laser platform for aesthetic and dermatological applications. At Dr. B 360, the technology is incorporated into a broader treatment philosophy that places the individual at the centre, understanding their skin biology, comfort and specific requirements before determining the appropriate treatment and long-term care pathway.

“Technology is not important by itself; its real value comes when we translate it into the right experience and protocol for a person’s individual needs and skin biology. At Dr. B 360, our approach has always been to understand the skin first and then choose the appropriate technology, treatment and maintenance pathway. The Dr. B Baby Skin Hairless Programme is a natural continuation of that philosophy,” said Dr. Bhairavi Senthil.

The launch also offered a lighter and more relatable perspective on personal grooming, with actor Kishen Das sharing his candid take on skincare and his interest in exploring Dr. B’s offerings. His presence, along with the participation of several young and popular personalities from the entertainment industry, added to the contemporary appeal of the event.

Founded by Dr. Bhairavi Senthil on January 19, 2025, The Dr. B 360 Dermatology Experiential Centre envisions a 360-degree ecosystem encompassing skin, hair, wellness and longevity. With over 15 years of clinical dermatology experience and training under internationally recognised dermatologists including Dr. Zein Obagi, Dr. Bhairavi has built her practice around skin biology, scientific understanding and long-term care.

The Dr. B 360 ecosystem also brings together BeWell Medi Salon, India’s first medical-grade salon, and AAVÉDERM, Dr. Bhairavi’s dermatologist-formulated skincare and nutraceutical brand. With Bevell Medi Saloon extending the ecosystem into professional salon care and AAVÉDERM bringing dermatologist-formulated skincare and nutraceutical solutions into everyday self-care, the larger vision of Dr. B 360 extends beyond clinical treatments.

With the launch of the Dr. B Baby Skin Hairless Programme, Dr. B 360 takes another step towards integrating advanced technology, personalised dermatological care and long-term skin wellness, while the presence of prominent names from the Tamil entertainment industry added considerable glamour to the special occasion.

சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில் பாரி இளவழகன், அர்ச்சனா ரவிச்சந்திரன், கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் மேம்பட்ட Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டரின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்தினார். சருமப் பராமரிப்பில் பயாலஜி அடிப்படையிலான தனது அணுகுமுறையுடன், சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பத்தை இணைத்து, தனிநபரின் தேவைக்கேற்ற சிகிச்சை முறையை இந்தத் திட்டம் வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில், ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், ஏஞ்சலின், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு மற்றும் சுமித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.

நடிகர், இயக்குநர் பாரி இளவழகன் பகிர்ந்து கொண்டதாவது, ”இந்த நிகழ்வு தனிப்பட்ட முறையிலும் எனக்கு முக்கியமானது. டாக்டர் பைரவி செந்திலிடம் சருமப் பராமரிப்பு சிகிச்சை பெற்று வருகிறேன். டாக்டர் பைரவியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். சரும மருத்துவத் துறையில் எனக்கு இன்ஸ்பயரிங் அவர்தான். அவரது அணுகுமுறை, நோயாளிகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் டாக்டர். பி 360-ஐ அவர் உருவாக்கிய விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை” என்றார்.

இந்த நிகழ்வில் இத்தாலியைச் சேர்ந்த DEKA நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ பாடியும் கலந்துகொண்டார். டாக்டர் பைரவி செந்திலின் பணிகள் குறித்தும், சரும மருத்துவத் துறையில் அவர் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்தும் அவர் பேசினார். மேலும், DEKA-வின் தொழில்நுட்பத்தை டாக்டர் பைரவியின் மருத்துவ அணுகுமுறையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் இந்த அறிமுக நிகழ்வுக்கு சர்வதேச அளவிலான சிறப்பும் கிடைத்தது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் புரோகிராமின் முக்கிய அம்சமாக DEKA நிறுவனத்தின் Motus AZ+ மேம்பட்ட லேசர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அழகியல் மற்றும் சரும மருத்துவப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்பட்ட லேசர் தளத்தை, டாக்டர் பி 360 தனித்துவமான சிகிச்சை அணுகுமுறையுடன் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் சருமத்தின் பயாலஜி, சிகிச்சையின்போது வசதி மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்ட பின்னரே, அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பு முறையைத் தீர்மானிப்பதே இதன் நோக்கம்.

“தொழில்நுட்பம் மட்டுமே முக்கியமானது அல்ல. ஒரு நபரின் தனிப்பட்ட தேவைகளுக்கும், அவரது ஸ்கின் பயாலஜிக்கும் ஏற்ப சரியான அனுபவத்தையும் சிகிச்சை முறையையும் உருவாக்கும்போதுதான் தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது. டாக்டர் பி 360-ல் எங்களது அணுகுமுறை எப்போதும் முதலில் தோலைப் புரிந்துகொள்வது. அதன் பின்னர் சரியான தொழில்நுட்பம், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பது. ‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ என்பது முன்பு நான் குறிப்பிட்டதன் தொடர்ச்சி” என்று டாக்டர் பைரவி செந்தில் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகுப் பராமரிப்பு குறித்த சுவாரஸ்யமான கருத்துகளும் இடம்பெற்றன. நடிகர் கிஷன் தாஸ், தோல் பராமரிப்பு குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதுடன், டாக்டர் பி நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதில் தனக்கு உள்ள ஆர்வத்தையும் தெரிவித்தார்.

அவருடன் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல இளம் மற்றும் பிரபலமான முகங்கள் பங்கேற்றது, இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் 2025 ஜனவரி 19 அன்று தொடங்கப்பட்ட தி டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரிமெண்டல் செண்டர் தோல், முடி, நலவாழ்வு மற்றும் நீண்ட நாள் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாது 360 டிகிரி ஒருங்கிணைந்த சுகாதாரச் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த அமைப்பில், இந்தியாவின் முதல் மெடிக்கல் கிரேடு சலூன் எனக் குறிப்பிடப்படும் பீவெல் மெடி சலூன் (BeWell Medi Salon) மற்றும் டாக்டர் பைரவியால் உருவாக்கப்பட்ட தோல் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலான AAVÉDERM ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் பிராண்டும் இடம்பெற்றுள்ளன.

பீவெல் மெடி சலூன் தொழில்முறை சலூன் பராமரிப்பை இந்த ஒருங்கிணைந்த அமைப்புடன் இணைக்கிறது. அதேபோல், AAVÉDERM மூலம் தோல் மருத்துவ நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் தயாரிப்புகள் அன்றாட சுய பராமரிப்புக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் டாக்டர் பி 360-ன் நோக்கம் மருத்துவச் சிகிச்சைகளைக் கடந்தும் விரிவடைகிறது.

‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுகத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், தனிப்பட்ட தோல் மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீண்டகால சரும நலவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனது பயணத்தில் டாக்டர் பி 360 மேலும் ஒரு முக்கியமான அடியை எடுத்துள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு, இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனத்தையும் சிறப்பையும் கொடுத்தது.

Categories
Reviews

‘ஐ ஆம் கேம்’ திரைப்பட விமர்சனம்

‘ஐ ஆம் கேம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

CAST & Crew:

Dulquer Salmaan – Dan John
Kayadu Lohar –  Isha
Mysskin – David Abraham
Antony Varghese – Vignesh “Vicky” Das
Samyuktha Viswanathan – Tharini
Vinay Forrt – Freddy
Kathir – Jason Antony

Director: Nahas Hidhayath
Produced by: Dulquer Salmaan & Jom Varghese
Story: Nahas Hidhayath
Screenplay: Sajeer Baba, Bilal Moidu, Ismail Aboobacker
Director Of Photography: Jimshi Khalid
Film Editor: Chaman Chakko
Music & Original Score: Jakes Bejoy
Production Designer: Ajayan Chalissery
Costume: Mashar Hamsa
Choreography: Sandy
Still Photographer: Sbk Shuhaib
Sound Design: Sync Cinema
VFX: Egg White VFX
PRO : Yuvraaj

‘I Am Game’ வித்தியாசமான ஒரு கதைக்களத்துடன் வந்திருக்கும் ஆக்‌ஷன் மிஸ்டரி ரிவெஞ்ச் திரைப்படம். துல்கர் சல்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார்.

பணக்கார குடும்பத்தை சேர்ந்த டான் ஜான் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். தந்தையின் உதவியுடன் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் அவருக்கு சூதாட்டத்தில் அதிக ஆர்வம். அதனால் கடனில் சிக்குகிறார். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பெரிய தொகையை இழந்து பிரச்சனையில் சிக்கும்போது அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் விபத்து ஏற்பட்டு தனது இடது கையை இழக்கிறார்.

அதன் பிறகு வேறு ஒரு விபத்தில் இறந்த இளைஞரின் கையை துல்கருக்கு பொருத்துகிறார்கள். இங்கிருந்துதான் படத்தின் முக்கியமான கதை ஆரம்பமாகிறது. தனக்கு பொருத்தப்பட்ட கை தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே செயல்பட ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த கை மிஷ்கின் நடித்திருக்கும் டேவிட் ஆபிரகாமை கொலை செய்ய முயற்சிக்கிறது. அந்த கை ஏன் இப்படி செய்கிறது அந்த கையின் உண்மையான பின்னணி என்ன அந்த கையை தானமாக கொடுத்தவர் யார் அவருக்கும் துல்கருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வித்தியாசமான கான்செப்ட். கட்டுப்பாட்டை மீறி செயல்படும் ஒரு கை என்ற ஐடியா ஆரம்பத்திலேயே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதல் பாதியில் மர்மத்தை தொடர்ந்து வைத்திருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நன்றாக உருவாகிறது. துல்கர் தனது புதிய சக்தியை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் காட்சிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

துல்கர் சல்மான் தனது நடிப்பால் படத்தை பெரும்பாலும் தாங்கி செல்கிறார். ஆரம்பத்தில் பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் இளைஞராகவும் பின்னர் தனது கையை கட்டுப்படுத்த முடியாமல் போராடும் கதாபாத்திரமாகவும் நன்றாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸும் சிறப்பாக இருக்கிறது.

மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் தனது வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். அவரது பார்வை உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு கவனம் பெறுகிறது. ஆனால் அவரைப் போன்ற ஒரு நடிகரின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.

கயாடு லோஹர் தனது கதாபாத்திரத்திற்குள் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆண்டனி வர்கீஸ் கதிர் வினய் ஃபோர்ட் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நன்றாக செய்திருக்கிறார்கள். பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும் அனைவருக்கும் இன்னும் முக்கியமான தருணங்கள் கொடுத்திருக்கலாம்.

முதல் பாதி படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. மர்மம் ஆக்‌ஷன் மற்றும் துல்கரின் கதாபாத்திர மாற்றம் ஆகியவை நல்ல வேகத்தில் செல்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் வேறு ஒரு பாதைக்கு செல்கிறது. ஆரம்பத்தில் இருந்த வித்தியாசமான கான்செப்ட்டை ஓரமாக வைத்துவிட்டு சாதாரணமான பழிவாங்கும் கதைக்குள் படம் செல்ல ஆரம்பிப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தேவையில்லாமல் நீளமாக இருப்பதால் வேகம் குறைகிறது. குறிப்பாக நீண்ட ஃபிளாஷ்பேக் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் சில ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றன. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் கிரிஸ்ப்பாக இருந்திருக்கும்.

ரிவெஞ்ச் கதைக்கு தேவையான எமோஷனல் கனெக்ட் முழுமையாக வரவில்லை என்பதும் படத்தின் ஒரு குறையாக இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் பழிவாங்கும் போது அதற்கான காரணத்துடன் பார்வையாளர்களும் உணர்வுப்பூர்வமாக இணைந்தால் தான் அந்த பழிவாங்கல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த விஷயத்தில் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்றிருக்கலாம்.

தொழில்நுட்ப ரீதியாக ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு நல்ல பலம். குறிப்பாக முதல் பாதியில் மிஸ்டரி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அவரது இசை நல்ல எனர்ஜி கொடுக்கிறது. ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை ஸ்டைலிஷாக படமாக்கியிருக்கிறார். படத்தின் விஷுவல்ஸ் ரிச்சாகவும் டிரெண்டியாகவும் இருக்கின்றன.

மொத்தத்தில், I Am Game வித்தியாசமான கான்செப்ட் மற்றும் துல்கர் சல்மானின் நடிப்புக்காக படம் கவனம் பெறுகிறது. ஆனால் அந்த கான்செப்ட்டை இன்னும் வலுவான திரைக்கதையுடன் கொண்டு சென்றிருந்தால் I Am Game இன்னும் சிறப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக இருந்திருக்கும்.

Categories
Reviews

‘Immortal’ திரைப்பட விமர்சனம்

Immortal திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Cast & Crew:

Starring : GV Prakash Kumar, Kayadu Lohar, TM Karthik, Kumar Natarajan, Lollu Sabha Maaran, Aaditya Kathir, Arshu Maharjan, Pema Tsamchoe, Sunita Shrestha & Others.

Theatrical Release by Sakthi Film Factory

Banner : AK Film Factory
Produced by Arunkumar Dhanasekaran
Writer and Director : Mariyappan Chinna
Director of Photography : Arun Radhakrishnan
Music Director : Sam CS
Editor : Rajesh M
Art Director : Siva Sankar
Stunt : R.Sakthi Saravanan, G.N.Murugan
Publicity Designer : Gopi Prasanna
Choreography : M. Sherif, Sabarish
Costume Designer : Vynod Sundar, Tamilselvan UK
Makeup : P.Mariyappan
Costumer : Ravi Devaraj
Lyrics : Sam CS, Shalli C, Sharanya Gopinath, Tamizh Aadhavan, Sathyan Illanko, Na.Idhaya
Singers : Sam CS, G V Prakash Kumar, Sharanya Gopinath, Adithya RK, Reshma Shyam, Gana Guna
PRO : Sathish (AIM)

‘இம்மார்டல்’ கதை, வாடகைக்கு வீடு தேடும் ஜி வி பிரகாஷ் குமாருக்கு கயாது லோஹர் தனது வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விடுகிறார். அழகான வீட்டையும் கயாது லோஹரின் அழகையும் பார்த்து மயங்கும் ஜி வி பிரகாஷ் அங்கே குடியேறுகிறார். ஆரம்பத்தில் காதலாக செல்லும் இவர்களது உறவு, அந்த வீட்டில் நடக்கும் மர்மமான சம்பவங்களால் திகில் நிறைந்ததாக மாறுகிறது.

கயாது லோஹர் சாதாரண பெண் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் ஜி வி பிரகாஷ், அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக்கதை.

ஜி வி பிரகாஷ் குமார் பயம் மற்றும் பதற்றத்தை நன்றாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அவரை விட கயாது லோஹர் தனது அழகும் நடிப்பும் கலந்த கதாபாத்திரத்தில் அதிக கவனம் பெறுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

சாம் சி எஸ் பின்னணி இசையும், ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக இருக்கின்றன. ஒரே வீட்டை மையமாக வைத்து கதை நகர்ந்தாலும் காட்சிகளை சுவாரசியமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் வித்தியாசமான கதைக்களம் இருந்தாலும் திரைக்கதையில் சில லாஜிக் குறைகள் இருக்கின்றன. முதல் பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் இரண்டாம் பாதியில் சற்று குறைந்து விடுகிறது. சில விஷயங்களுக்கு சரியான விளக்கம் இல்லாததும் படத்தின் பலவீனம்.

மொத்தத்தில்,’இம்மார்டல்’ இது தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி, ஒரு முறை பார்க்கக்கூடிய ஹாரர் திரில்லர் படமாக இம்மார்டல் இருக்கிறது.