Categories
Cinema News

‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், “‘சிக்மா’ திரைப்படம் இயக்குநர் சஞ்சய்க்கு மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல் படம் ‘கத்தி’. இப்போது ஜேசன் சஞ்சய் எங்கள் தயாரிப்பில் அறிமுகமாகிறார் என்பது பெருமையாக உள்ளது. சஞ்சய் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார். படம் நன்றாக வந்து இருக்கிறது. ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் இயக்குநர் நெல்சனையும், ‘டான்’ திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தியும் அறிமுகப்படுத்தினோம். இன்று அவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ‘சிக்மா’ திரைப்படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயம் சஞ்சய் பெரிய உயரத்தை அடைவார். ஹீரோ சந்தீப் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக உழைத்து உள்ளனர். அண்ணன் சுபாஸ்கரன் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை ஃபரியா அப்துல்லா, ” தயாரிப்பாளர்கள் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். ஃபிலிம் மேக்கிங், சினிமா மீது சஞ்சய்க்கு அதிக ஆர்வம் உண்டு. ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். சந்தீப் கிஷனை இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, “லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இயக்குநர் சஞ்சய்க்கு இது தங்கமான வாய்ப்பு. அதை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். பொறுமையாக எடுத்து சொல்லி தனக்கு வேண்டிய வேலையை சஞ்சய் சரியாக வாங்கி விடுவார். அவருக்காகவே இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இசையமைப்பாளர் தமன் சாருக்கும் நன்றி. சஞ்சய் இயக்கிவிட்டார், அடுத்து அவர் நடிக்கவும் வரவேண்டும். வாழ்த்துக்கள் ப்ரோ”.

நடிகர் சந்தீப் கிஷன், “இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இந்த படத்தில் உழைத்திருக்கிறார். ‘சிக்மா’ மிக ஜாலியான ஜென்ஸீ திரைப்படம். உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போல தான் ‘சிக்மா’ படத்திற்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் சின்சியராக உழைத்து உள்ளனர். நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும்”.

இயக்குநர் ஜேசன் சஞ்சய், “‘சிக்மா’ படத்தின் பிரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது மகிழ்ச்சி. ஏனென்றால், ‘சிக்மா’ படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், இங்கு நிறைய அழகான நினைவுகள் உண்டு. சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், ஃபரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி. நான் இயக்கிய முதல் படம் ‘சிக்மா’ அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் ‘சிக்மா’ திரைப்படம். திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

Categories
Cinema News

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது. மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், “ட்ரோன்ஸ்” திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்ததையடுத்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

Categories
Cinema News

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் மண்ணின் மணம் வீசும் கதைக்களத்தை கையாள்கிறார்

இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை” விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி (இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்) உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு துவக்க விழாவில் ‘மஞ்சணத்தி’ படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பாக இப்படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா விழாவில் குத்துவிளக்கேற்றி படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

இப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்
கூறியதாவது..,

“என்னுடைய திரைப்படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியதில்லை. ஆனால் இந்தப் படத்தை அப்படித்தான் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் இளையராஜா சார் இருப்பது என்னுடைய வாழ்நாள் சாதனை. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காலங்கள் உண்டு. இன்று அவர் என்னுடைய திரைப்படத்திற்கு பணியாற்றுகிறார் என்பது என் வாழ்நாளில் நான் சாதித்த மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன். என் மனைவி திவ்யா செல்வராஜுக்கும் இளையராஜா சாரை நேரில் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இளையராஜா பணியாற்றுவது எங்களால் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

நான் என் உழைப்பு, வாசிப்பு, அரசியல் என அனைத்திலும் கர்வமாக இருந்திருக்கிறேன். ஆனால், எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து, ‘உனக்காகத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன், வா’ என்று இளையராஜா சார் அழைத்த அந்த நிமிடத்தில், நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்” என்றார். பல தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து பணியாற்றி வரும் அவரது உழைப்பும், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தக்கூடிய எங்கள் ராஜாவின் கர்வமும், திமிரும் என்றுமே அழகானது, உயர்வானது, மகத்துவமானது.

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக இருக்கும். திரைக்கதை எழுதும்போது நடிகர்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள் என பல விஷயங்களை யோசிப்பேன். ஆனால் இந்தப் படத்தை எழுதும்போது, ‘இந்த இடத்தில் ராஜா சார் எப்படி இசையமைப்பார்?’ என்றுதான் அதிகம் யோசித்தேன். இந்தப் படம் திரைக்கு வரும் நாள் என் வாழ்நாளின் முக்கியமான நாளாக இருக்கும். கதிர் இந்தப் படத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. நான் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பதற்கும் அவரும் ஒரு முக்கிய காரணம். கதையை கூறுவதற்கு முன்பே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்ட நடிகர்களுக்கும் படத்தில் சிறப்பான பங்கு உள்ளது. படம் பார்க்கும்போது அது அனைவருக்கும் தெரியும். இந்தத் திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் தழுவியதாக இருக்கும். அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.”

படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியதாவது..,

“நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய வீடு வந்துவிடும். நானும் இங்குதான் பிறந்தவன். காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.

“உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”

ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம்.

அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் இசையமைப்பது என் வேலை. கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன். என் வேலை என்னவோ, அதுதான் சரஸ்வதி எனக்குக் கொடுத்தது. அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் என் இசையை கொண்டாடக்கூடிய ஒருவர்.

இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இதில் பங்குபெற்ற அனைவரும் நல்ல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

படத்திற்கு எழில் அரசு K ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும், சாண்டி நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார். சுரேன்.G, அழகியகூத்தன்.S ஆகியோர் ஒலி வடிவமைப்பையும், ரஞ்சித் அம்பாடி மேக்கப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

VFX பணிகளை ஹரிஹரசுதன் R கவனிக்கிறார். பப்ளிசிட்டி டிசைனை கபிலன் மேற்கொள்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகம் பணியாற்றுகிறார்.

திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் மற்றும் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ் லால்வானி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் எண்டஎடெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
General News Videos

Inchcape & communiTREE Support Fisher Community in Pattinampakkam

பட்டினப்பாக்கம், சென்னை | 8 செப்டம்பர் 2026

https://www.facebook.com/share/v/1KGPtQynz6/

பட்டினப்பாக்கத்தில் மீனவ சமூகத்திற்கு வாழ்வாதார முயற்சிகள் மூலம் உதவி வழங்கிய இன்ச்கேப் மற்றும் கம்யூனிட்ரீ

இன்ச்கேப் நிறுவனம், கம்யூனிட்ரீ அமைப்புடன் இணைந்து, பட்டினப்பாக்கத்தில் மீனவ சமூகத்திற்கு இரு வாழ்வாதார முயற்சிகள் மூலம் இன்று உதவி வழங்கியது: 5 மீன்பிடி படகுகளுக்கு வண்ணம் பூசி 20 குடும்பங்களுக்குப் பயனளித்தது, மேலும் 15 மீனவப் பெண்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி, அவர்களின் மீன் பிடிப்பை நீண்ட நேரம் பாதுகாக்கவும் கெட்டுப்போவதைக் குறைக்கவும் உதவியது.

இந்நிகழ்ச்சியில் இன்ச்கேப் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் தலைமை பொறுப்பாளர் ராஜினி ரவி, குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி பெஞ்சமின் ஹார்ம்ஸ்டார்ஃப் ஆகியோர் கலந்துகொண்டனர். கம்யூனிட்ரீநிறுவனர் ஹபீஸ்கான் செயல்படுத்தும் பங்குதாரராகக் கலந்துகொண்டார்.

இந்த முயற்சி, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, நிலைத்த வாழ்வாதாரங்களை ஆதரிக்கும் சமூக மைய நடவடிக்கைகளுக்கான இன்ச்கேப் மற்றும் கம்யூனிட்ரீயின் இணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

திட்ட சிறப்பம்சங்கள்

இடம்: பட்டினப்பாக்கம், சென்னை

தேதி: 8 செப்டம்பர் 2026

CSR பங்குதாரர்: இன்ச்கேப்

செயல்படுத்தும் பங்குதாரர்: கம்யூனிட்ரீ

வண்ணம் பூசப்பட்ட மீன்பிடி படகுகள்: 5 (20 குடும்பங்களுக்குப் பயன்)

வழங்கப்பட்ட ஐஸ் பெட்டிகள்: 15 (15 மீனவப் பெண்களுக்கு)

பங்குதாரர்கள் பற்றி

இன்ச்கேப்: பல சந்தைகளில் இயங்கும் முன்னணி உலகளாவிய வாகன விநியோக மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம்.

கம்யூனிட்ரீ: சமூக மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தடைமுறை, உள்ளூர் தேவைக்கேற்ற நடவடிக்கைகளை செயல்படுத்தும் பங்குதாரர்.

Inchcape & communiTREE Support Fisher Community in Pattinampakkam

Through

Livelihood Initiatives

Pattinampakkam, Chennai |

8 September 2026

Inchcape, in partnership with communiTREE, today supported the fishing community in Pattinampakkam with two livelihood initiatives: painting 5 fishing boats, benefiting 20 families, and distributing 15 ice boxes to 15 fisherwomen to help preserve their catch and reduce spoilage.

The inauguration was attended by Rajini Ravi, Global Head of Finance Operations | CFO, and Benjamin Harmstorf, Group CFO, Inchcape, along with Hafizkhan, Founder of communiTREE.

The initiative reflects Inchcape and communiTREE’s shared commitment to community-centred interventions that support resilient livelihoods.

Project Highlights

Location: Pattinampakkam, Chennai

Date: 8 September 2026

CSR Partner: Inchcape

Implementing Partner: communiTREE

Fishing boats painted: 5 (benefiting 20 families)

Ice boxes distributed: 15 (to 15 fisherwomen)

About the Partners

Inchcape: A leading global automotive distribution and retail group with a presence across multiple markets.

communiTREE: Implementing partner facilitating practical, locally relevant interventions for social and livelihood development.

Categories
Cinema News

டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என பெயர் சூட்டப்பட்டது!

கன்னட சூப்பர் ஸ்டாரும், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்குகிறார்.

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார்.

டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். பழம்பெரும் நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமாரின் தனித்துவமான திரை ஆளுமையுடன், அடுத்த தலைமுறை கலைஞரான அபிஷன் ஜீவிந்த்தின் புதிய தலைமுறை நடிப்புத் திறன் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாக்டர் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரின் இயல்பான, குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் மாறுபட்ட காட்சியமைப்பை உருவாக்குகின்றன.

மேலும், ‘பிக்காசோ’ என்ற தலைப்பு கையால் வரையப்பட்ட மஞ்சள் நிற எழுத்துக்களில் இடம்பெற்றிருப்பது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. படத்தின் கதையும் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இரு நடிகர்களின் திரை இணைவு, ‘பிக்காசோ’ படத்தை சுவாரஸ்யமான திரைப்படமாக மாற்றியுள்ளது.

இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் இப்படத்தை தயாரிக்கிறார். ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இணைந்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் படத்தின் உலகம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dr. Shivarajkumar & Abhishan Jeevinth Film Titled ‘PICASSO’! Actor-Director Rishab Shetty unveils the First Look

The Kannada Superstar and the next-gen sensation come together in a striking new-age entertainer directed by debutant Gowtham Sivaraman.

The title and first look of the much-awaited collaboration between Kannada superstar Dr. Shivarajkumar and young sensation Abhishan Jeevinth have been unveiled, introducing the film as ‘PICASSO’. Filmmaker-actor Rishab Shetty, one of the iconic personalities of Indian film industry released the first look. Presented by Drama Company, the film marks an intriguing coming together of the legendary star’s commanding screen presence and the distinctive energy of a next-generation artiste, with filmmaker Gowtham Sivaraman making his directorial debut.

The first look immediately grabs attention with its unusual visual language. Dr. Shivarajkumar and Abhishan Jeevinth appear together in traditional white attire, seated with an effortless, almost mischievous coolness, amid a striking spread of spent firecrackers. Their relaxed postures and expressive presence create a striking contrast against the explosive setting, while the hand-painted yellow lettering of ‘PICASSO’ adds a vibrant artistic edge to the frame. The visual leaves behind a sense of curiosity, hinting that the film could be as unconventional in its storytelling as it is in its appearance.

The collaboration between Dr. Shivarajkumar and Abhishan Jeevinth adds another layer of excitement to the project. While Shivarajkumar continues to command a massive following across languages with his charismatic screen presence, Abhishan has emerged as one of the promising new-generation talents following the success of his directorial Tourist Family and as an actor in ‘With Love’, where he has captured the young crowds. Their pairing, bringing together two distinct generations and sensibilities, makes PICASSO an especially intriguing proposition.

The film is written and directed by Gowtham Sivaraman, with Leon James composing the music and Pragadeesh Prabhu handling cinematography. Suresh is the editor, while Swathi Ramakrishnan takes care of the costumes and Viju Vijayan is the art director. Shivani Nagaram plays the female lead and Yogalakshmi appears in a pivotal role and singer Gana Vinoth makes his acting debut.

Produced by A. Balamurugan under Drama Company, the film is co-produced by R. Kaarthikeyan, Dinesh Balachandran and R. R. Deepan Raj, with Green God and D Pictures associated with the production. With filming completed and post-production currently underway, ‘PICASSO’ is poised to reveal more about its distinctive world through its upcoming updates.

Categories
Cinema News

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.

Categories
Cinema News Videos

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், “பல சிறிய விஷயங்களுக்கு இந்த படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் கடுமையான உழைப்பு இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்”.

நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம், “ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எங்களிடம் இயல்பாக பழகினார். படம் நன்றாக வந்திருக்கிறது”.

நடிகர் பிரதீப், “இது ஒரு அருமையான படம். இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர், அண்ணன் கருணாஸூக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டி கொள்கிறேன்”.

நடிகர் தர்ஷன், “இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கேரக்டர். அனுப்பி வைத்த எல்லா விருது விழாக்களிலும் இந்தப் படம் விருது வென்றது. மிகச்சிறந்த வெற்றி படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை நிரோஷா, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பு என்று தெரியாமல் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.

நடிகர் கவி, “பல நாடுகளின் விருது விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்த படத்தை பார்க்க இருக்கிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். மக்களுடன் இணைந்து இந்த படத்தை கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.

நடிகர் பாண்டி, “ரொம்ப நாள் இந்தப் படத்திற்காக காத்திருந்தோம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களை தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.

நடிகை சாஷா, “இயக்குநர் சஜீவ் சார், தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். 13 விருது விழாக்களில் இந்த படம் விருது வென்று இருக்கிறது. எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

இயக்குநர் சஜீவ் பழூர், ” ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையானது. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் கருணாஸ், “கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படம் சாமானியர்களை பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழு கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்த படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது.

அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. ‘நந்தா’ படத்திற்கு பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக இந்த படத்தில் தான் பாராட்டி இருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்த படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Categories
Cinema News

ஏஜிஎஸ் 29 பூஜையுடன் தொடங்கியது

ஏஜிஎஸ் 29 பூஜையுடன் தொடங்கியது

*’பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’*

*ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்*

*விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் உருவாகவுள்ள ‘ஏஜிஎஸ் 29’*

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது.

கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இதற்கு முன்னர் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கும் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும். அதே சமயம், நகைச்சுவை போன்ற இதர சுவாரஸ்யமான அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.

‘கேஜிஎஃப்’ மற்றும் சமீபத்திய ‘பிளாஸ்ட்’ படங்கள் மூலம் பிரபலமான ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்; பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு இயக்க, தினேஷ் மனோகரன், பல்லவி சிங் மற்றும் செல்வி தங்கராஜ் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாகவும், டூனி ஜான் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியா மோகன், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

‘AGS 29’ starts with pooja

*After ‘Blast’ blockbuster victory, Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh produce ‘AGS 29′ directed by M.S. Anandan starring Jai, Priyanka Mohan & Yogi Babu*

*Rajiv Menon, Nassar, G.M. Sundar, Ramesh Thilak, Arul Doss play key roles*

*’AGS 29’ to take shape as an adrenaline pumping action thriller with comedy and other elements*

South India’s leading cinema conglomerate AGS Entertainment, which is back to back rolling out successful films, today announced its 29th production venture following the grand success of its last venture ‘Blast’. The project started with a pooja in Chennai.

Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment are producing this movie with the working title ‘AGS 29’. It is written and directed by M.S. Anandan who earlier made Vishal-starrer ‘Chakra’.

Starring Jai, Priyanka Mohan and Yogi Mohan in pivotal roles, the film will feature Rajiv Menon, Nassar, G.M. Sundar, Ramesh Thilak and Arul Doss in important characters.

According to Director M.S. Anandan, “this film will be an edge-of-the-seat action thriller that would keep the audience engaged from start to finish. At the same time, there will also be other interesting ingredients like comedy in adequate doses. I am so excited to direct this film for AGS Entertainment.”

Shooting for the movie will take place in Ooty, Chennai and other places. Archana Kalpathi is the Creative Producer, while Aishwarya Kalpathi is the Associate Creative Producer. S.M. Venkat Manickam is the Executive Producer.

Ravi Basrur of ‘KGF’ and the recent ‘Blast’ fame is scoring the music for the film, while Bala Subramaniem is the Director of Photography. Editing is by Pradeep E. Raghav, art direction is by S. Kannan, stunt choreography by Phoenix Prabu, costume designing by Dinesh Manoharan, Pallavi Singh and Selvi Thangaraj, and publicity designing by Tuney John.

Produced by Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, and Kalpathi S. Suresh for AGS Entertainment, directed by M.S. Anandan, and starring Jai, Priyanka Mohan and Yogi Babu in lead roles, the pooja of ‘AGS 29’ happened in Chennai today (September 6) and the shoot will commence from September 10.

Categories
Cinema News

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.

*என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் – அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி*

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.

‘வதந்தி சீசன் 2’ இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம்.

கலைத்துறை அறிமுகத்திற்கான பிளாஷ்பேக்..?

சின்ன வயதில் இருந்தே டிவியில் ஒரு படம் ஓடினால்.. அது தொடர்பான சம்பவங்களை அப்பா சொல்வார். சில நேரங்களில் ஒவ்வொரு காட்சியைப் பற்றி சொல்லும்போது… அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவங்களை சுவாரசியமாக விவரிப்பார். அதை கேட்டு கேட்டு படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினருடன் பழக வேண்டும்… திரை துறையில் பணியாற்ற வேண்டும்… என்ற ஆசை எழுந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் அப்பா பணியாற்றும் படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் நான் திரையில் பார்த்தது வேறு. நிஜத்தில் பார்ப்பது வேறாக இருந்தது. கேமராமேன் – லைட் மேன்- புரொடக்ஷன்- என ஒவ்வொருவரும் தங்களுடைய கடுமையான உழைப்பை அளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்காகவே விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் போது படப்பிடிப்புக்கு செல்ல முடியாது. இது அப்பாவின் கடுமையான உத்தரவு. அதன் பிறகு 12 வது படிப்பு முடித்தவுடன் அப்பாவிடம் ‘விஸ்காம் படிக்கிறேன்’ என்று சொன்னேன். ‘அது வேண்டாம் உனக்கு பொருத்தமாக இருக்காது. நீ சட்டம் படி’ என்றார். அதற்காக தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன்.

நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குநரான டேஞ்சர் மணியிடம் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன்.

என்னுடைய உருவத்தை வைத்தும்… நிறத்தை வைத்தும்… நிறைய பேர் கேலி செய்தனர் ‘கருப்பா இருக்கியே.. உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா..? ‘என பேசினர். இதனால் என் மனதிற்குள் ஏன் நம்மால் நடிக்க முடியாதா? நான் நடிகனாகக் கூடாதா? என்ற வெறித்தனமான எண்ணம் ஏற்பட்டது. முதலில் நடிகனாவதற்கான தகுதி என்னவோ… அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். ஜிம்முக்கு சென்றேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்தேன். சினிமா சம்பந்தமான ஒர்க்ஷாப் நடந்தால்… அதில் கலந்து கொள்வேன். மைம் என்ற கலையையும் கற்று வருகிறேன். சண்டைக் காட்சிகளை நடிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்று வருகிறேன். நடனமும் கற்று வருகிறேன்.

என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை?

ஆக்சன் ஹீரோ என்பதை விட நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதைத்தான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு பசுபதி அவர்கள்.. எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார்.‌ இந்த கேரக்டர் என்று எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பொருந்தி என் சிறந்த நடிப்பை வழங்குவேன். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் இதுதான் என் ஆசை. இதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.

வதந்தி சீசன் 2 வாய்ப்பு…?

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் அப்பா பணியாற்றுவதால்.. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர் – காயத்ரி அவர்கள் என்னை பார்த்தார்கள். என் தந்தையிடம், ‘நன்றாக இருக்கிறானே..! ஆடிசன் வைக்கலாமா? அனுப்புவீர்களா?’ என கேட்டனர். அதன் பிறகு எனக்கு ஆடிசன் டெஸ்ட் வைத்தனர். முதலில் புஷ்கர் – காயத்ரி மேடம் வைத்த டெஸ்டில் பாஸ் செய்தேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். அப்போது இயக்குநர், ‘எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியாப்பா?’ என கேட்டார். ‘வதந்தி சீசன் 1 சூப்பர் ஹிட் சார். அந்த சூப்பர் ஹிட்டான தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றாலே.. அதை விட்டு விட மனமில்லை…’என்று சொன்னேன். அதன் பிறகு செலக்ட் ஆனேன். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.

உங்கள் பார்வையில் வதந்தி சீசன் 2…?

வதந்தி சீசன் 1 போல்.. சீசன் 2 வரும் சூப்பர் ஹிட். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு புது அனுபவமாகவே இருந்தது. வதந்தி சீசன் 2 வை பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்கள்.

ஃப்யூச்சர் ஐடியா..?

இந்த வெப்சீரிஸிற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என் நூறு சதவீத உழைப்பை கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர்களின் பெயரை காப்பாற்றும் வகையில் நடிக்க வேண்டும்.

திரைத் துறையிலும், மக்கள் மனதிலும் எனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. ‘தெய்வத்தால் ஆகாது எனினும்..’ என்ற திருக்குறளை போல் கடுமையாக முயற்சித்தால்… அந்த நம்பிக்கை என்னை கைவிடாது என்று நம்புகிறேன்.

சினிமாவில் தான் என் வாழ்க்கை. நடிகராக இல்லை என்றால்.. சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும்.

உங்கள் சமூக ஊடக பக்கம்..?

சோசியல் மீடியாவில் நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் arjun_chakkaravarthy என்ற ஐடியை வைத்திருக்கிறேன். அதிலும் இந்த ஐடியை இதுவரை பிரைவேட்டாகத்தான் வைத்திருந்தேன். வதந்தி சீசன் 2 வெளியான பிறகு தான் அதனை பப்ளிக் ஆக்கினேன். இதில் இனிமேல் என் படம் சம்பந்தமான விசயங்கள்… என்னுடைய எண்ணங்கள் ஆகியவற்றை போஸ்ட் செய்வேன்.

அவெர்னஸ் தொடர்பான போஸ்ட்களை ரீபோஸ்ட் செய்திருக்கிறேன். சில விசயங்களில் என்னுடைய கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறேன்.‌

விஜய் Vs வதந்தி சீசன் 2..?

முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.‌ வதந்தி சீசன் 2 வை விஜய் பார்த்துவிட்டு என்ன சொல்வார் ? என்ற பதட்டம் நிறையவே இருக்கிறது.

அதர்ஸ் வெப் சீரிஸ் – வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ் என்ன டிஃபரன்ஸ்?

டைரக்டர் ஆண்ட்ரூ சார் இதற்காக மூன்று ஆண்டு காலம் கடினமாக உழைத்து எழுதி, இயக்கி இருக்கிறார். நாங்கள் அனைவரும் இரண்டு ஆண்டு காலம் கஷ்டப்பட்டும்… இஷ்டப்பட்டும்… உழைத்திருக்கிறோம். இது அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொல்வதை விட நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதற்காக காத்திருக்கிறேன்.

* உங்களுடைய முதல் ரசிகரை பற்றி…?

வதந்தி சீசன் 2 வை பார்த்துவிட்டு, அதில் சுந்தரேசனை ரசித்து என்னுடைய ரசிகராக அதிலும் முதல் ரசிகராக யாராக இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். அதனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் சந்தோஷம்தான்.

சினிமா இல்லாமல் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி இருக்கிறீர்களே.. இது குறித்து எப்பவாவது கவலைப்பட்டதுண்டா… ?

இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் இங்கு கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எனக்கு எதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ.. அதில் நூறு சதவீதம் உழைத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

வதந்தி சீசன் 2 – மறக்க முடியாதது எது?

இந்த வெப்சீரிஸில் சுந்தரேசன் அதிகமாக யாரிடம் பேச மாட்டான். அதில் அவனை ஒரு காட்சியில் தலை கீழாக கட்டி போட்டு தொங்க விட்டு இருப்பார்கள். அந்த காட்சியை பற்றி இயக்குநர் சொன்னவுடன் தலைகீழாக நாம் தொங்க வேண்டும் என்பதற்காக சாப்பிட வேண்டாம் என நினைத்து காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அந்த காட்சிக்காக காத்திருந்தேன். காலையில் எட்டு மணிக்கு வந்த என்னை இரவு எட்டு மணிக்கு கட்டித் தொங்க விட்டார்கள். படப்பிடிப்பு விடிகாலை ஐந்து மணி வரை சென்றது. எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நான் அழத் தொடங்கி விட்டேன். வலி பின்னி எடுத்தது. அதன் பிறகு என்னை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தூக்கி, காரில் உட்கார வைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்தேன். வலி இருந்தாலும் அதனையும் சுகமாகவே அனுபவித்தேன். இதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நடித்த போது அங்கு கூடியிருந்த படக் குழுவினர் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறாய் என கைத்தட்டி பாராட்டினார்.

சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை படித்து வரும் நீங்கள் இந்த இணைய தொடரில் சுந்தரேசன் எனும் பள்ளி மாணவனாக சீருடை அணிந்து நடித்த போது என்ன நினைத்தீர்கள்..?

பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்ததுண்டு. ஆனால் சுந்தரேசனை போல் எந்த பெண்ணையும் ஃபாலோ செய்யவில்லை. அதே சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது நான் சுந்தரேசன் கேரக்டருக்கு நேர் ஆப்போசிட். எப்போதும் பிரண்ட்ஸ்களுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துக் கொண்டே இருப்பேன். அதனால் சுந்தரேசனாக ஸ்கூல் யூனிபார்மை அணிந்து நடித்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது.

———–

அர்ஜூன் சக்கரவர்த்தியின் ராபிட் ஃபயர்
மொமண்ட்ஸ்

பெற்றோர்கள் …

அவர்கள் தான் என்னுடைய முதல் கடவுள்

நம்பிக்கை ….

எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்பிக்கை மட்டும் தான் நம்மை கடைசி வரை காப்பாற்றும் ஆயுதம். இந்த நம்பிக்கையை யாரும் ஒருபோதும் கைவிடாதீர்கள்.

ஆக்சன் ஹீரோ ….

அர்ஜூன் சார் இருக்கிறாரே..! சினிமாவில் ஆக்சன் ஹீரோக்கள் அடியாட்களை தூக்கி அடித்து பறக்க விடும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதை இங்கு நானே செய்ய வேண்டும் என்ற போது இரட்டிப்பு சந்தோஷம் வரும். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

பிடித்த நடிகர்….

விஜய் சார். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டே இருக்கலாம்.

பிடிச்ச ஹீரோயின்….

எல்லாரையும் பிடிக்கும்.

பிடிச்ச செலிபிரிட்டி….

‘வதந்தி சீசன் 2’வில் முடக்கத்தான் மணியாக நடித்திருக்கும் யஷ்வந்த்- ஒரு சோசியல் மீடியா செலிபிரிட்டி தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த போஸ்ட்டை லைக் செய்திருக்கிறீர்கள். ஷேர் செய்திருக்கிறீர்கள்?

இப்போ வதந்தி சீசன் 2 தொடர்பான போஸ்ட்களை மட்டும் தான் லைக் செய்கிறேன். ஷேர் செய்கிறேன். அதில் என்னுடைய போஸ்ட் ஏதேனும் வருகிறதா? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.