‘கார்டியன்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Hansika, Pradeep Rayan, Suresh Menon, Sriman, Sriram Parthasarathy, Mottai Rajendran, Tiger Garden Thangadurai, Shobana Pranesh, Baby Krishitha
Directed By : Guru Saravanan and Sabari
Music By : Sam CS
Produced By : Film Works
பொதுவாக பேய் படங்களில் பங்களாக்குள் பேய் இருக்கும், அரண்மனையில் பேய் குடித்தனம் செய்யும், ஊருக்குள் பேய் சவுண்டு தந்து போற வர்றவங்களை பயமுறுத்தும். ஆனால், நம்ம ஹன்சிகா மோட்வானி நடித்து வெளியாகியுள்ள ‘கார்டியன்’ படத்தில், ஒரு கல்லுக்குள் பேய் ஒளிந்துகிட்டு வெளிய வருது. பேயை கல்லுக்குள் மறச்சு வைக்கிற ஐடியாவை யோசித்த டைரக்டர் குரு சரவணன் படத்தை எடுக்கறதுல வித்தியாசமா யோசிச்சு இருக்காறாங்கறத பார்க்கலாம்!
எல்லா பேய் படத்திலும் பேய் ஓட்டும் சாமியார்ங்க கிளைமாக்ஸ்லதான் வருவாங்க. இந்த படத்தில் முதல் காட்சியிலேயே ஓம் கிரீம்ன்னு மந்திரம் சொல்லி பேயை மந்திரிக்கபட்ட ஒரு கல்லுக்குள் செலுத்துறாங்க. சின்ன வயசிலிருந்தே தான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என நம்பும் ஹன்சிகா (ஹன்சிகாவை ரொம்ப நாளைக்கு அப்புறம் ஸ்க்ரீன்ல பார்க்குறதே ரசிகர்களுக்கு லக்தான்) இந்த கல்லை மிதிக்கிறாங்க. அதுக்கப்புறம் ஹன்சிகாவுக்கு பல அமானுஷ்ய சக்திகள் வர ஆரம்பிக்குது. நாலு பேர் சாகப்போறாங்க என்ற விஷயமும் தெரிய வருது. இந்த நாலு பேர் யார்? என்ன பண்ணாங்கறதுதான் கதை.
பொதுவா பேய் படத்தில் பேய்கள் தன்னை கொன்னவங்களை யார் உடம்புகுள்ளையாவது வாடகை தராமல் புகுந்து பழி தீர்க்கும். இந்தப் படத்திலும் பேய் இதைத்தான் செய்யுது. படத்தின் முதல் பாதியில் கதை நகர்ந்த விதமும், கேமரா நகர்ந்த விதமும் ரொம்பவே நல்லா இருந்தது. இரண்டாவது பாதி பல படங்களில் பார்த்த ரிபீட் மோடில் இருக்கு. சாம் CS முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஒரே மாதிரி மியூசிக் போட்டதால ரொமான்ஸ் காட்சிகளிலும் பயந்து, பயப்பட வேண்டிய காட்சிகளிலும்கூட சிரித்துவிடுகிறோம். ஒரு சில காட்சிகளில் மட்டும் பேய் கொஞ்சமா பயமுறுத்துகிறது.
ஹன்சிகா பல காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், சில காட்சிகளில் ஓவர் ஆக்ட்டிங் செய்கிறார். குழந்தைக்கு அம்மாவாக நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நாலு வில்லன்கள் இருந்தாலும் சுரேஷ் மேனன் சூப்பர் டெரர் காட்றாரு. மொட்டை ராஜேந்திரன், தங்க துரை காமெடி அதுபாட்டுக்கு தனி ட்ராக்ல ஓடிக்கிட்டிருக்கு. கஷ்டப்பட்டு முயற்சி பண்ணாலும் சிரிப்புதான் வர மாட்டேங்குது.
மொத்தத்தில் பேய் என்னும் ‘கார்டியன்’ ஹன்ஷிகாவுக்கு கைகொடுக்கவில்லை.