லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது!
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
#MissionChapter1 in cinemas near you from PONGAL 2024! 📽️✨
@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_ @sandeepkvijay_ @editoranthony @silvastunt @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @SSSMOffl #Rajashekar #Swathi @prathool.nt @shiyamjack @DoneChannel1
#MissionChapter1FromPongal
நடிகர்கள்:
அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
இயக்கம்: விஜய்,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ்குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்: அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி – மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்: மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி