Triumph World Record 319 students cook 319 types of food in 4.27 minutes Padayal Sivakumar set a world record
Under the patronage of Elite Matriculation School CEO Paul Sebastian, the selfless and soulful work of the school’s teachers and students, Dr.Padayal Sivakumar’s World Record Award was held very successfully.
This world record event called Flame off No Oil – No Boil was presided over by Venerable Vedatri Maharishi Atmartha Seeda and Scientist Prof. Dr Azagar Ramanujam, Dr. VK venkatesan, Actor Sai Sakthi, Sruthikalai, VJ Vijay, Rs Loganathan.
In this grand world record event, natural vegetables, divine flowers, herbs, traditional and small grain varieties of aval, fruits etc. are used to improve the health of the body without oven, without oil, without milk and milk products, without any kind of chemicals…No Oil No Boil. Delicious traditional laddus, bio-energetic pulses, vegetable pretzels and vegetable sandwiches. Various types of cowpeas in vegetables, small-grain and traditional puddings, small-grain khichdi, non-oiled vada, non-boiled traditional puddings, natural and traditional mixed rice, delicious and energetic almond resin and flower payas, non-dairy natural vegetarian buttermilk varieties.
319 students from different parts of Tamil Nadu, Bengaluru along with most of the students from Elite School, 319 types of natural food, in 4.27 minutes, different types of natural food, colorfully , they set a world record by cooking without an oven and without oil.
This world record was evaluated by the Triumph World Record Institute and honoured with a World Record Certificate.
This great event was held to introduce and follow healthy diet, natural lifestyle, traditional and natural diet among the future generation children especially students.
Triumph உலக சாதனையை 319 மாணவர்கள், 319 வகையான உணவுகளை 4.27 நிமிடங்களில் சமைத்து படையல் சிவக்குமார் உலக சாதனை படைத்தார்
எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டின் பேராதரவில் , பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தன்னிகரில்லா ஆத்மார்த்தமான உழைப்பிலும் , பெருமுயற்சியில் , முனைவர் படையல் சிவக்குமார் உலக சாதனை நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்றது..
Flame off No Oil – No Boil என்ற இந்த உலக சாதனை நிகழ்வை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ஆத்மார்த்த சீடரும் , விஞ்ஞானியுமான Dr C அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமை தாங்கினார்..
இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வில் இயற்கை காய்கறிகள் , தெய்வீக மலர்கள் , மூலிகைகள் , பாரம்பரிய மற்றும் சிறுதானிய அவல் வகைகள் , பழங்கள் போன்ற உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்தி அடுப்பில்லாமல் , எண்ணெயில்லாமல் , பால் மற்றும் பால் பொருட்கள்இன்றி, எந்த வித ரசாயனங்களும் இல்லாமல்…No Oil No Boil என்ற முறையில் சுவைமிகு பாரம்பரிய லட்டு வகைகள், உயிர் ஆற்றல் மிகுந்த முளைதானிய பயறு வகைகள் , ,காய்கறி பிரட்டல் வகைகள் காய்கறி சாண்ட்விச் வகைகள். காய்கறிகளில் வகையான பசும்பொறியல் வகைகள் , சிறுதானிய , மற்றும் பாரம்பரிய புட்டு வகைகள், சிறுதானிய கிச்சடி , எண்ணையில் பொரிக்காத வடை , வேகவைக்காத பாரம்பரிய கொழுக்கட்டை , இயற்கை பாரம்பரிய கலவை சாதங்கள் , சுவையும் , ஆற்றலும் மிகுந்த பாதாம் பிசின் மற்றும் மலர்களில் பாயாச வகைகள் , பால் இல்லா இயற்கை சைவ மோர் வகைகள் என மிக பிரம்மாண்டமாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு லிருந்து வருகை தந்த மாணவர்களுடன் எலைட் பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்களும் இணைந்து 319 மாணவர்கள் , 319 இயற்கை உணவு வகைகள் , 4.27 நிமிடங்களில் இயற்கை உணவு வகைகளை, வகை வகையாய் , வண்ணமயமாய். , அடுப்பில்லாமல் , எண்ணெயில்லாமல் சமைத்து உலக சாதனை படைத்தனர்.
இந்த உலக சாதனையை Triumph உலக சாதனை நிறுவனம் மதிப்பீடு செய்து , உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி சிறப்பித்தது..
வருங்கால தலைமுறையினரான குழந்தைகள் அதிலும் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு முறை , இயற்கை வாழ்வியல் முறை , பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு முறையை அறிமுகப்படுத்தி பின்பற்ற செய்யவே இந்த மாபெரும் நிகழ்வு நடத்தப்பட்டது..