full screen background image
Search
Tuesday 29 April 2025
  • :
  • :

கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் – சூர்யா நெகிழ்ச்சி கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா !!

பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா

ப்ருத்விராஜ், பஞ்சு அவர்களின் மூத்தமகன் விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்றார். எங்கள் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விக்ரமன், கிருஷ்ணன்பஞ்சு அவர்கள் தமிழ் சினிமாவிற்கே பெருமை என்றும், புராண படங்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், பராசக்தி மாதிரியான ஒரு படத்தை தைரியமாக வெளியிட்டு சாதனை படைத்தனர். அதுமட்டுமின்றி, இயக்குநர் என்றாலே ஈகோ கண்டிப்பாக இருக்கும். இயக்குநராக இருந்தாலும் இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. அப்படியிருக்கையில், இருவரும் இத்தனை ஆண்டுகாலம் ஒற்றுமையாக இருந்து தமிழ் சினிமாவிற்கு வைர கிரீடம் சூட்டியிருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும், பஞ்சு அவர்களின் இரண்டாவது மகன் சுபாஷ் எனது நண்பர், மிகவும் உதவும் குணம் படைத்தவர் என்றும் பாராட்டினார்.

குட்டி பத்மினி பேசுகையில், நடிப்பை வெளிகொண்டு வருவதில் பஞ்சு அவர்களை விட சிறந்த இயக்குநர் வேறு எவரும் இருக்க முடியாது. எனக்கு அறுபது வயதானாலும் குழந்தையும், தெய்வமும் படத்தைப் பற்றி இன்னும் எல்லோராலும் பேசப்படுவதற்கு காரணம் கிருஷ்ணன்பஞ்சு அவர்கள்தான் என்று கூறினார்.

குகநாதன் அவருடன் ஒன்றாக வாழ்ந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

AVM குமரன் அவர்கள், நான் Line Producerஆக கிருஷ்ணன் பஞ்சுவிடம் பணியாற்றியிருக்கிறேன். என்னிடம் காட்சிகளை காண்பித்து அதைப் பற்றி என்னிடம் கருத்துக்களை கேட்டுதான் தேர்வு செய்வார். நிறை குறை எதுவாக இருந்தாலும் நான் அவரிடம் கூறிவிடுவேன். அதை அவர் ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்வார். அதுமட்டுமல்லாமல் பஞ்சு அவர்கள் படப்பிடிப்புக்கு முதல்நாளே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மறுநாள் எடுக்கப் போகும் காட்சிகளை பற்றி நன்றாக திட்டமிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை செய்து விட்டுதான் படப்பிடிப்பு எடுக்க ஆரம்பிப்பார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், இந்த ஆவணப்படம் ஒரு பொக்கிஷம் என்று கூறினார். எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதை நன்றாக செய்வதே அவர்களின் பலம் என்றும் பாராட்டினார். மேலும் குடும்பத்தில் கணவன், மனைவி அன்யோன்யம் இருந்தால் தான் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்ய முடியும் என்று அவருக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.

எழுத்தாளர் மகேந்திரன் பேசுகையில், தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆவணப்படத்தை தயாரித்த பஞ்சு அவர்களின் மகன்களை பாராட்டினார். கிருஷ்ணன் பஞ்சு அவர்களிடம் பணிபுரிந்தது கடவுள் கொடுத்த வரம் என்றும் கூறினார்.

சுபாஷ், பஞ்சு அவர்களின் இரண்டாவது மகன், இத்தருணத்தில் நான் எனது தாய், தந்தையரை நினைவு கூர்கிறேன். அவர்கள் இங்கு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். மற்றும் இச்சமயத்தில் என் தாயாரை பற்றி கூறியே ஆக வேண்டும். எங்கள் தாயார் வீட்டையும் கவனித்துக் கொண்டு எங்கள் தந்தைக்கும் பக்கபலமாக இருந்தார். மேலும், AVM குடும்பத்தாருடன் படங்களை தாண்டி தனிப்பட்ட உறவு இருந்தது என்றும் கூறினார்.

இயக்குநர் P.வாசு அவர்கள், நான் இயக்குநராக பேசுவதைவிட மாணவகனாக பேசவே ஆசைப்படுகிறேன். இன்று நான் இங்கு நிற்பதற்கு கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பார்த்து வளர்ந்ததே காரணம் என்றும், நான் படித்த படிப்பு சினிமா, என் கல்லூரி கிருஷ்ணன்பஞ்சு என்றும் அவர்களுக்கு பெருமை சேர்த்தார். Editing King பஞ்சுவின் ஆவணப் படத்தை எடுத்ததற்கு தனஞ்செயனை பாராட்டினார்.

எழுத்தாளர் ஞானி, ஒரு சினிமா படம் எப்படி எடுக்க வேண்டும் என்று வழிமுறையை கற்றிக் கொடுத்தவர்கள் கிருஷ்ணன்பஞ்சு. அவர்கள் சினிமாவிற்கு அளித்த பங்களிப்பை அவர்கள் ஆவணப்படம் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி. இதே மாதிரி திரைத்துறையை சார்ந்த மேதைகளை பற்றி திரைப்பட சங்கம், இயக்குநர் சங்கம் போன்றவர்கள் தயாரிக்க வேண்டும். மேலும், அப்படி எடுக்கப்படும் படங்கள் மேதைகளை வாழும் காலத்திலேயே எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இயக்குநர் சசி கூறுகையில், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் இவற்றைத் தாண்டி தொழில்முறையிலும் ஒன்றாக இருப்பது அரிதான விஷயம் என்றும் அதை இரண்டு மணி நேரத்தில் அழகாக காட்டிய தனஞ்செயனுக்கு பாராட்டு என்று கூறினார்.

M.N.ராஜம் பேசுகையில், கிருஷ்ணன்பஞ்சு அவர்கள் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல, தெய்வம் என்று கூறினார். N.S.K. அவர்களின் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த என்று ‘இரத்தக்கண்ணீர்’ படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணன்பஞ்சு அவர்கள். அப்படம் பாதி முடிவடைந்த நிலையில் என்னை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சர்ச்சை எழவே, அந்த பெண்ணை நீக்கினால் எங்களையும் நீக்கி விடுங்கள் என்று கிருஷ்ணன்பஞ்சு அவர்கள் திடமாக கூறிவிட்டார்கள். அன்று அவர்கள் அப்படி கூறவில்லையென்றால் நான் என்ன ஆகியிருப்பேனோ? என்று உருக்கமாக பேசினார். மேலும், அவர்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் எனக்கு ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுத்துவிடுவார்கள்.

S.S.ஸ்டான்லி பேசுகையில், அவர்களின் திறமையை பார்த்து வியந்ததாகக் கூறினார்.

மோகன்V.ராம் அவர்கள், கிருஷ்ணன்பஞ்சு இருவரும் பணிபுரிந்த விதம் பற்றியும், அவர்கள் காட்சி பலகை அமைத்த விதம் பற்றியும், படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்களாக திகழ்ந்தனர் என்று புகழாரம் சூட்டினார். அதுமட்டுமல்லாமல், சிவாஜிகணேசன் அவர்களுக்கு செவாலிய விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த கிருஷ்ணன் அவர்களை பார்த்தவுடன் அனைவரின் முன்னிலையிலும் காலில் விழுந்து வணங்கினார் என்று தன் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.

எழுத்தாளர் ஆரூர்தாஸ் அவர்கள், கிருஷ்ணன்பஞ்சு அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பகிர்ந்துக் கொண்டார். மேலும், தான் சினிமாவிற்கு வந்தது பற்றியும், தன்னுடைய வசனத்தை பேசி நடிக்காத நடிகர், நடிகைகளே கிடையாது என்றும், அது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார். தனஞ்செயன் என்றால் அர்ஜுனன் என்றும், தனக்குத் தானே செய்பவன் என்றும் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் தனஞ்செயனை பாராட்டினார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், 40 வருடங்களாக 4 தலைமுறையை வைத்து படம் எடுத்த கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பற்றி 2 மணி நேரத்தில் அழகாக கொடுத்த தனஞ்செயனை பாராட்டிப் பேசினார். மேலும் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் சூர்யா பேசுகையில், உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இயக்குநர் தனஞ்செயன் அவர்கள் பேசுகையில், இப்படம் எடுப்பதைப் பற்றி பஞ்சு அவர்களின் மூன்றாவது மகன் அபிமன்யு முதலில் என்னிடம் பேசினார். இப்படத்தை முடித்த பிறகு, இன்னும் பல சாதனையாளரின் ஆவணப்படங்களை இயக்க ஆவலாக உள்ளேன் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். மேலும், இயக்குநர் சுபாஷ் அவர்களும் இந்த ஆவணப்படத்தில் கிருஷ்ணன்பஞ்சு அவர்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். ஆனால், இன்று அவர் நம்மிடையே இல்லை. இப்படம் எடுத்து முடிக்கும் முன்பே அவர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார். அவருக்கும் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன் என்று கூறினார்.

இறுதியாக பேசிய அபிமன்யு, பஞ்சு அவர்களின் மூன்றாவது மகன் இப்படத்திற்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி கூறினார். பின்பு, அப்பாவின் நினைவு நாளான இன்று இப்படம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் இதே நாளில் சிறந்த எடிட்டர் மற்றும் இயக்குநருக்கான விருதுகளை கிருஷ்ணன்பஞ்சு என்ற பெயரில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனை நடிகர் சிவகுமார் அவர்கள்தான் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யா எடிட்டர் கே.எஸ்.விக்னேஷ் அவர்களுக்கும், BOFTAவின் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசினை வழங்கினார்.

படத்தின் சிறு குறிப்புகள் :

இந்திய சினிமாவின் பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களுக்கு அஞ்சலி

இந்திய சினிமாவின் முன்னோடிகளான கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெற்றிகரமாக படங்களை கொடுத்திருக்கிறார்கள். இரட்டையர் என்று சொல்லப்படும் இவர்களில், கிருஷ்ணன் திரைக்கதை மற்றும் வசனங்களையும், பஞ்சு படத்தயாரிப்பு மற்றும் எடிட்டிங்கையும் கவனித்துக் கொண்டனர். இந்த இருவரும் இணைந்து இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் 40 ஆண்டுகளாக 56 படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரையிலுமே ஒன்றாக இணைந்தே பணிபுரிந்தனர்.

இவர்கள் இணைந்து பணிபுரிய ஆரம்பித்த படம் M.G.ஆரின் சதிலீலாவதி (1936). இவர்கள் சிவாஜிகணேசனை அறிமுகப்படுத்திய முதல் படம் பராசக்தி (1952), தமிழ் படங்களிலேயே பெரிய சாதனை படைத்தது.

கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள், சிவாஜிகணேசன், S.S.ராஜேந்திரன், பானுமதி, சாரதா, M.N.ராஜம், M.K.முத்து, ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, `குலதெய்வம்’ ராஜகோபால் மற்றும் பல திறமையான நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். M.R.ராதா அவர்களை ரத்தக்கண்ணீர் மூலம் மீண்டும் திரைப்படத்திற்கு கொண்டு வந்த பெருமை இவர்களை இருவரையே சாரும். M.R.ராமசாமி போன்ற முன்னனி நடிகர்கள் இருக்கையில், நகைச்சுவை நடிகர்களான, N.S.கிருஷ்ணன், நாகேஷ், `குலதெய்வம்’ ராஜகோபால், T.R.ராமச்சந்திரன் மற்றும் `தெங்கை’ ஸ்ரீனிவாசன் போன்றோர்களை கதாநாயகனாக்கிய பெருமையும் இவர்களுக்கு உண்டு. நடிகர் சிவக்குமாரை அறிமுகப்படுத்தி அவரை வெற்றிப்பெற வைத்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள்.

`பேரறிஞர் அண்ணாதுரை, மு.கருணாநிதி, `திருவாரூர்’ தங்கராஜு மற்றும் பல எழுத்தாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்கள் இந்த இரட்டையர்கள். மேலும், `முரசொலி’ மாறன், K.S.கோபாலகிருஷ்ணன் மற்றும் கவிஞர் வாலி அவர்களை தங்கள் படங்களில் திரைக்கதை எழுதவும் வைத்தார்கள்.

A.பீம்சிங், SP.முத்துராமன், விட்டல், பட்டு, திருமலை மகாலிங்கம் போன்றவர்களுக்கு மத்தியிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து தமிழில் 41 படங்களும், ஹிந்தியில் 11 படங்களும், தெலுங்கில் 3 படங்களும் மற்றும் கன்னடத்தில் 1 படமும், பல ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களும் எடுத்துள்ளனர். 56 படங்களில் ஹிந்தியில் எடுத்த `பாபி’ படம் 50 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. 3 படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. 21 படங்கள் 100 நாட்களையும், சில படங்கள் 100 நாட்களை நெருங்கியும், பல படங்கள் 50 நாட்களையும் தாண்டி ஓடியது.

ஐந்து முறை தேசிய விருதும் மற்றும் மாநில விருதுகளும் மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணப்படத்தை தனஞ்செயன் இயக்கியுள்ளார். பஞ்சு அவர்களின் மூன்று மகன்களான பஞ்சு ப்ருத்விராஜ், பஞ்சு சுபாஷ் சந்திரன் மற்றும் பஞ்சு அபிமன்யு இப்படத்தை தயாரித்துள்ளனர். நாசர் இப்படத்தை நாசர் விவரிக்கிறார். J.S.விக்னேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். ஒளிப்பதிவினை BOFTA மாணவர்கள் செய்திருக்கிறார்கள்.

‘முன்னோடி இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு’ ஆவணப்பட வெளியீட்டு விழா!

இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் இணைபிரியாத இரட்டையர் கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரை கௌரவிக்கும் பொருட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணப்பட வெளியீட்டுவிழா.

சென்னை, 6 ஏப்ரல் 2017:

புகழ்பெற்ற இயக்குநர் இணையில் (கிருஷ்ணன்) பஞ்சு என்கிற எஸ்.பஞ்சாபகேசன் அவர்களது 33-வது நினைவு நாளையொட்டி, பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சினிமாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற இயக்குநர் இணை ‘கிருஷ்ணன்-பஞ்சு’ குறித்த ஆவணப்படத்தை, இந்திய சினிமாவின் மரியாதைக்கு உரிய பிரபலங்களின் முன்னிலையில் புகழ்பெற்ற நடிகரும் ஓவியரும் சொற்பொழிவாளருமான திரு. சிவகுமார், நடிகர் திரு. சூர்யா ஆகியோர் இன்று வெளியிட்டனர். இந்த ஆவணப்படத்தை ‘புளூ ஓஷன் பிலிம் அண்டு டெலிவிஷன் அக்காடமி’யின் தலைவர் திரு. தனஞ்செயன் இயக்கியுள்ளார். இதற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் சுதர்சன் சீனிவாசன். பாஃப்டா திரைப்படக்கல்லூரியின் ஒளிப்பதிவுத்துறை மாணவர்கள், இவருக்கு உதவியாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். இதன் படத்தொகுப்பைக் கையாண்டிருப்பவர் ஜே.எஸ்.விக்னேஷ். பஞ்சு அவர்களின் புதல்வர்கள் பிருத்விராஜ், சுபாஷ் சந்திரன், அபிமன்யு ஆகியோர் ‘பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இணை, தமிழ் – தெலுங்கு – இந்தி – கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றதன் மூலம், பிற தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகளும் அவர்களைப் பின்பற்ற வழியமைத்துக் கொடுத்தனர். திரு.கிருஷ்ணன் படத்தின் திரைக்கதையில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார்; திரு.பஞ்சு படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்துக்கொள்வார். மூன்று இந்திய மொழிகளில், நாற்பது ஆண்டு கால அளவுக்குள் ஐம்பத்தாறு திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் இணை இவர்கள் மட்டுமே!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதிலீலாவதி’ (1936) படத்தின்போது தொடங்கிய இந்த (கிருஷ்ணன் பஞ்சு) கூட்டணி, 1952-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் அறிமுகம் செய்தது. பின்னர் இந்த இரு திலகங்களுடனும் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிலேயே எவரும் செய்யாத சாதனையைச் செய்தது. மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, சாரதா, எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, ‘குலதெய்வம்’ ராஜகோபால், மு.க.முத்து உட்படத் திறமையான கலைஞர்கள் பலரை அறிமுகம் செய்தவர்களும் இவர்கள்தான். ‘ரத்தக்கண்ணீர்’ படம் மூலம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவை சினிமாவுக்கு மீண்டும் அழைத்துவந்ததும் இயக்குநர் இணைதான்!

கே.ஆர்.ராமசாமி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உருவானதற்கும்… நகைச்சுவை நடிகர்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், ‘குலதெய்வம்’ ராஜகோபால், டி.ஆர்.ராமச்சந்திரன், ‘தேங்காய்’ சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாகத் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும் இந்த இயக்குநர் இணையே காரணகர்த்தாக்கள். ‘மார்க்கண்டேய’ நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், திரையுலகில் வெற்றி பெற்றதும் இந்த இயக்குநர் இணையின் மூலமாகத்தான்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசு ஆகியோர் திரைப்பட வசனகர்த்தாக்களாகப் புகழ்வெளிச்சம் பெற்றதும் இவர்களால்தான். ‘முரசொலி’ மாறன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் வாலி ஆகியோரை திரைக்கதை வசனகர்த்தாக்களாக அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாகப் புகழ்பெற்ற ஏ.பீம்சிங், எஸ்பி.முத்துராமன், ஆர்.விட்டல், பட்டு என்கிற பட்டாபிராமன், திருமலை மகாலிங்கம் ஆகியோரது வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்களும் இவர்கள்தான். திரையுலகில் பின்னாளில் புகழ்பெற்ற கே.பாலசந்தர், ஜே.மகேந்திரன், ஆரூர்தாஸ் போன்றோருடனும் இந்த இயக்குநர் இணை பணியாற்றியுள்ளனர்.

கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் மொத்தம் இயக்கியுள்ள படங்கள்: 56. தமிழில் இவர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை: 41. இந்தியில் 11 படங்களையும், தெலுங்கில் 3 படங்களையும், கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளனர். இத்துடன் ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளனர். இவற்றில் இந்திப்படமான ‘பாபி’ 50 வாரங்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. ‘பராசக்தி’ (தமிழ்), ‘லேத மனசுலு’ (தெலுங்கு), ‘தோ கலியான்’ (இந்தி) ஆகியவை 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. மீதமுள்ளவற்றில் 21 படங்கள் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. 31 படங்கள் 50 முதல் 75 நாட்கள் வரை ஓடியுள்ளன. இந்த இருவரது 40 ஆண்டுகால இயக்குநர் பணியின் வெற்றிச் சாதனையின் சதவிகிதம், இவர்களின் சமகால இயக்குநர்களின் வெற்றி சதவிகிதத்தை விடப் பல மடங்கு அதிகம்!

தமிழ்நாட்டின் நான்கு முதல்வர்களான அறிஞர் அண்ணா (‘நல்லதம்பி’), மு.கருணாநிதி (‘பராசக்தி’, ‘பிள்ளையோ பிள்ளை’ உட்பட 3 படங்கள்), எம்.ஜி.ஆர். (‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘இதயவீணை’, ‘எங்கள் தங்கம்’), ஜெ.ஜெயலலிதா (‘எங்கள் தங்கம்’, ‘அனாதை ஆனந்தன்’, ‘அக்கா தம்முடு’) ஆகியோருடன் பணியாற்றியுள்ளனர்.

இவர்களின் ஐந்து படங்கள் ரூ ‘குலதெய்வம்’, ‘தெய்வப்பிறவி’, ‘அன்னை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘குழந்தையும் தெய்வமும்’ ஆகியவை தேசிய விருது பெற்றன. இரண்டு படங்கள்: ‘உயர்ந்த மனிதன்’, ‘எங்கள் தங்கம்’ ஆகியவை தமிழக அரசின் பரிசுகளையும் பெற்றுள்ளன.

[Message clipped] View entire message




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *