‘இதயம் முரளி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew:
Starring:
Atharvaa
Preity Mukundhan
Kayadu Lohar
Natty
Thaman S
Niharika
Rakshan
Dravid
Angeline
Anju Kurian
Sudhakar
Yashashree
Jonita
Technician Team:
Director – Aakash Baskaran
Music – Thaman S
DOP – Manoj Paramahamsa, CH Sai
Editor – Pradeep E Ragav
Production Designer – M.R.Karthik Rajkumar
Dialogues – Ramanagirivasan
Additional Dialogues – Aakash Baskaran, Dravid Selvam
Lyrics – Vivek
Choreographer – Anusha Viswanathan
Co-Director – LK Senthilkumar
Costume Designer – Pallavi Singh & Meenakshi N
Stills – Jaikumar Vairavan
VFX Supervisor – Praveen D
Sound Design – Suen G, Alagiakoothan
Post Production Supervisor – Guna
Publicity Designer – Kabilan
PRO – Suresh Chandra, Sathish (AIM)
Creative Producer – Dev Ramnath
Executive Producer – Krishna Chandar Elango
Line Producer – Vickys RA
Production Controller – K. Sridhar Raj, Sadagopan
Marketing Headed – Manoj Maddy
Chief Makeup – Edward Kennedy
Costumer – Moorthy
‘இதயம் முரளி’ ஒருதலை காதல் என்றாலே நமக்கு முரளி நடித்த இதயம் படம் நினைவுக்கு வரும். அந்த நினைவுகளை மனதில் வைத்தே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இது அதே மாதிரி சோகமான காதல் படம் இல்லை. ஒரு இளைஞன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் பல காதல்களையும் அவற்றில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் தருணங்களையும் நகைச்சுவையுடன் சொல்ல முயற்சிக்கிறது.
இதய முரளியாக நடித்துள்ள அதர்வா தனது பள்ளி பருவம் முதல் கல்லூரி வாழ்க்கை வரை பல பெண்களை காதலிக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தனது தயக்கம் காரணமாக காதலை சொல்ல முடியாமல் அந்த காதல் தோல்வியில் முடிகிறது. இறுதியில் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
அதர்வா இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். தோற்றம் உடை நடை எல்லாமே முந்தைய படங்களை விட புதிதாக இருக்கிறது. காதல் காட்சிகளில் இயல்பாக நடித்தாலும் உணர்ச்சிப்பூர்வமான சில இடங்களில் இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.
ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் திரையில் அழகாக தோன்றுவதோடு தங்களது கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். நட்டி நட்ராஜ் மாமா கதாபாத்திரத்தில் மனதில் நிற்கிறார். பரிதாபங்கள் சுதாகர் ரக்ஷன் தமன் நிஹாரிகா டிராவிட் உள்ளிட்ட நண்பர்கள் கூட்டணி முதல் பாதியில் நிறைய சிரிக்க வைக்கிறது. சிறப்பு தோற்றத்தில் வரும் பகத் பாசில் க்ளைமாக்ஸில் நல்ல சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் வண்ணமயமாகவும் அழகாகவும் இருக்கிறது. தமனின் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும் பின்னணி இசை பல இடங்களில் படத்திற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக பழைய பாடல்களின் பயன்பாடு நாஸ்டால்ஜியா உணர்வை தருகிறது.
இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் 90களின் நினைவுகள் ஒருதலை காதல் நண்பர்கள் கலாட்டா ஆகியவற்றை கலந்த ஒரு ஜாலியான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். முதல் பாதி கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் தேவையில்லாத நீளமான காட்சிகள் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சில கதாபாத்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. கிளைமாக்ஸும் வழக்கமான தமிழ் சினிமா பாணியில் முடிகிறது.
மொத்தத்தில், ‘இதயம் முரளி’ ஆழமான காதல் கதையை எதிர்பார்க்காமல் மனதுக்கு இதமாக ஒரு ரொமான்டிக் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த படம் ஒரு முறை பார்க்கலாம்.






























