full screen background image
Search
Friday 24 July 2026
  • :
  • :
Latest Update

‘லவ் ஓ லவ்’ திரைப்பட விமர்சனம்

‘லவ் ஓ லவ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Love Oh Love Cast and Crew details

KS Ravikumar as Rajendra
Selvaraghavan as Inspector Harichandran
Vanitha as Lekha
Pavish as Raghuvaran
Nagadurga as Avanthika
Ramya as Raadhika (Heroine Mother)
Soundarya as Shanthi
Kathir as Maaran
Ashwath as Tatoo

Movie Credits :

Written and Directed by Magesh Rajendran
Produced by Zinema Media and Entertainment Ltd & Creative Entertainers and Distribution
Producers : Dinesh Raj, G Dhananjheyan
Starring : Pavish Narayan, Naga Durga, Selvaraghavan, K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Ashwath, Soundarya, Adithya Kathir and others
Finance Controller : Lalithaa Valasamuthu
Music : Foxn
Director of Photography : P.G. Muthiah
Editor : N.B. Srikanth
Art Director : Pa. Mahendran
Stunts : Abishek Srinivas
Costume Designer : Harshika Ramesh
Story Discussion : S. Devaraj, Rajesh Sundaramoorthy, Jaisee, Jayaprakash Ilamparathi, Gomathiramalingam, Velmurugan Subramani, Jasmine, Harish B
Co-Directors : Mutharasan Shanmugam, Suriya Thavamani Pandian
Associate Directors : V. Ramachandar, N. Yuvaraj, S.K. Vikram, Vimal, Santhosh Balaji
Dubbing : K. Jagan – Le Magic Lantern Studio
VFX : D NOTE – Murthy
DI : Vels – D Studio
Colorist : KS. Rajasekaran D.F. Tech
Mixing : S.P. Narayanan
Sound Design : Shreyas Bhat
Publicity Designer : Sathish TP
Production Executive : Rajesh Kanna
Production Manager : Saravana Kumar. V
Accounts : K Chellan
Stills : Mahesh Jayachandran
PRO : Rekha
Promotions : N S Jegadeesan (DIGITALLY)

‘லவ் ஓ லவ்’ இன்றைய இளைஞர்களின் காதல், செலவு, கடன் மற்றும் பொறுப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள ரொமான்டிக் டிராமா.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐடி ஊழியரான ரகுவரன் காதலுக்காக தனது சம்பளத்தை விட அதிகமாக செலவு செய்து, கிரெடிட் கார்டு மற்றும் லோன் மூலம் பெரும் கடன் சுமையில் சிக்கிக்கொள்கிறார். அதன் காரணமாக குடும்ப நிம்மதி, வேலை, மரியாதை என அனைத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதற்கெல்லாம் காரணம் காதலியின் ஆடம்பர ஆசைகள்தான் என்று நினைக்கும் அவர், காதலியை விட்டு பிரிய முடிவு செய்கிறார். ஆனால் காதலை நிரூபிக்க விரும்பும் நாயகியிடம், கடந்த நான்கு ஆண்டுகளாக தான் அனுபவித்த வாழ்க்கையை நான்கு மாதங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வித்தியாசமான நிபந்தனையை வைக்கிறார். அந்த சவாலை ஏற்ற பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நாயகனாக நடித்துள்ள பவிஷ், இது தனது இரண்டாவது படம் என்றாலும் நல்ல முன்னேற்றத்தை காட்டியிருக்கிறார். காதல், ஏமாற்றம், கோபம், குடும்ப பாசம், கடன் சுமை என எல்லா உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் தனுஷின் நடிப்பு சாயல் தெரிந்தாலும், தனக்கான அடையாளத்தை உருவாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.

நாகதுர்கா அறிமுக நாயகியாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் பணத்தின் மதிப்பை அறியாத இளம்பெண்ணாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து மாறும் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். பவிஷ் மற்றும் நாகதுர்கா இருவருக்கும் நல்ல திரை ரசாயனம் இருக்கிறது.

கே எஸ் ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் ஆகிய மூவரும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர குடும்ப தந்தையாக கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பும், போலீஸ் இன்ஸ்பெக்டராக செல்வராகவனின் அமைதியான நகைச்சுவை கலந்த நடிப்பும் ரசிகர்களை கவர்கிறது. வனிதாவும் தனது வழக்கமான எனர்ஜியுடன் வந்த காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்தியுள்ளது. நடுத்தர குடும்ப வாழ்க்கையையும் நகர்ப்புற இளைஞர்களின் வாழ்க்கை முறையையும் அழகாக பதிவு செய்துள்ளார். பாக்ஸன் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும் பின்னணி இசை பல காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. என் பி ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், காதல் கதையை மட்டும் சொல்லாமல் காதலுக்காக அளவுக்கு மீறி செலவு செய்வதால் இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகளையும் பேச முயற்சித்திருக்கிறார். காதலில் பொறுப்பும் புரிதலும் அவசியம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். முதல் பாதி நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளால் வேகமாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக இருப்பதும், சில இடங்களில் திரைக்கதை ஆழம் குறைவாக இருப்பதும், கிளைமாக்ஸ் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தையும் தருகிறது.

மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை எளிமையாக சொல்லும் இந்த படம் ஒரு முறை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *