full screen background image
Search
Wednesday 22 July 2026
  • :
  • :
Latest Update

‘லிங்கம்’ (Web series) விமர்சனம்

‘லிங்கம்’ (Web series) ரேட்டிங்: 3.5/5

Cast & Crew

Kathir
Divya Bharathi
Poornima Ravi
Bose Venkat
Sathya
Kaali Venkat
Chandrakumar
Prashanth Pandiaraj
Shanmugam Muthusamy
Dileepan

Director & Writer – Lakshmi Saravanakumar
Presenter – Prashanth Pandiaraj
Cinematography – Dinesh Purushothaman
Editing – Ganesh Siva
Music – Tony Britto
Streaming – JioHotstar

‘லிங்கம்’ போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஒரு சாதாரண கபடி வீரன், சூழ்நிலைகளால் எப்படி குற்ற உலகிற்குள் தள்ளப்படுகிறான் என்பதையே இந்த தொடர் விறுவிறுப்பாக சொல்லுகிறது. செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் அவனது வாழ்க்கை, அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள், துரோகம், அரசியல், சட்டவிரோத சாராய வியாபாரம், பழிவாங்கும் உணர்வு என ஒவ்வொரு கட்டமாக அவனை ஒரு பெரிய ரவுடியாக மாற்றுகிறது.

கதிர் இந்த தொடரின் மிகப்பெரிய பலம். ஆரம்பத்தில் லட்சியத்துடன் வாழும் இளைஞனாகவும், பின்னர் கோபமும் வன்முறையும் நிறைந்த கேங்ஸ்டராக மாறும் கதாபாத்திரத்தையும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகபாவனைகள், உடல்மொழி, கண்களில் தெரியும் கோபம் மற்றும் வலி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. சத்யா, போஸ் வெங்கட், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம் ஆகியவை தொடரின் தரத்தை மேலும் உயர்த்துகின்றன. குறிப்பாக கன்னியாகுமரியின் கடலோர பகுதி, அந்த காலகட்டத்தின் சூழல், சிறைச்சாலை, கிராமப்புற வாழ்க்கை ஆகியவை மிகவும் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னணி இசையும் ஆக்ஷன் மற்றும் பதற்றமான காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கிறது.

இயக்குநர் லட்சுமி சரவணகுமார், ஒரு மனிதன் எப்படி சூழ்நிலைகளால் குற்றவாளியாக மாறுகிறான் என்பதை எதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். முதல் சில எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக நகர்கின்றன. ஒவ்வொரு எபிசோடும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் வழக்கமான கேங்ஸ்டர் படங்களின் சாயல் தெரிகிறது. சில கதாபாத்திரங்களின் மாற்றங்களும், சில காதல் காட்சிகளும் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற உணர்வும் வருகிறது. அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகளும் அனைவருக்கும் பொருந்தாது.

மொத்தத்தில், ‘லிங்கம்’ ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைகளை விரும்புபவர்களுக்கு இந்த தொடர் கண்டிப்பாக ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் இந்த முதல் பாகம் வெற்றிகரமாக உருவாக்கி முடிகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *