‘டார்க்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
CAST & CREW
Ajay Karthi (Vignesh)
Anchana Nethrun (Priya Dharshini)
Natraj Subramani (A) Natty (Balachander)
K. Bhagyaraj (Karunakaran)
VTV Ganesh
Indhumathi manikandan
Sibi Chakravarthy (Santhosh)
Genre: Psychological Horror
Writer & Director:- Kalyan K Jegan
Distributor: 5 Star Senthil
Production Company Name: MG Studios, 5 Star
Story: Ganesh K Babu
Producer: APV Maran, Ganesh K Babu
Cinematographer: Ravi Sakthi D.F.T
Editor: Kathiresh Alagesan
Music: Manu Ramesan
Art Director:- Shanmugaraja
Costume Designer: Gayathri Balasubramanian
Stunt:- Knife Naren
Sound designer:- Arunachalam sivalingam
Lyrics:- Yuga bharathi, Vivek, Ganesh K Babu
Executive producer:- Meena Arunesh
Publicity designer:- Vikranth
Sound engineer:- Muthu krishnan
PRO:- Nikil Murukan
‘டார்க்’ பேய் படங்களுக்கு வழக்கமாக சேர்க்கப்படும் காமெடி, தேவையற்ற பாடல்கள் போன்ற விஷயங்களை தவிர்த்து, ஆரம்பம் முதல் இறுதி வரை திகிலும் மர்மமும் கலந்த கதையாக படம் நகர்கிறது. குறைந்த வாடகைக்காக ஏற்கனவே மர்மமான சம்பவங்கள் நடந்த வீட்டில் குடியேறும் இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும், அதை தொடர்ந்து நடக்கும் மர்ம மரணங்களும், அதற்கான போலீஸ் விசாரணையும் திரைக்கதையை சுவாரஸ்யமாக முன்னோக்கி நகர்த்துகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை இயக்குநர் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறார்.
நாயகனாக நடித்துள்ள அஜய் கார்த்திக் தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் தைரியமாக இருக்கும் இளைஞன், அமானுஷ்ய சம்பவங்களால் மனதளவில் சிதைந்து பயத்தில் தவிக்கும் தருணங்களை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி தனது அனுபவமான நடிப்பால் கதைக்கு பெரிய பலமாக இருக்கிறார். கே பாக்யராஜ் குறைந்த நேரமே வந்தாலும் தனது திரை இருப்பால் கவனம் ஈர்க்கிறார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ரவி சக்தியின் ஒளிப்பதிவு இந்த படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று. இருளையும் அமைதியையும் பயன்படுத்தி ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறார். மனு ரமேஷின் பின்னணி இசை தேவையற்ற சத்தங்களை நம்பாமல், அமைதியையே பயன்படுத்தி திகில் உணர்வை அதிகரிக்கிறது. கதிரேஷ் அழகேசனின் படத்தொகுப்பும் கதையின் வேகத்தை குறையாமல் கொண்டு செல்கிறது.
எழுதி இயக்கியுள்ள கல்யாண் கே ஜெகன், வழக்கமான பேய் கதையை உளவியல் ரீதியாக சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் லாஜிக் குறைகள் மற்றும் ஒரே இடத்தில் கதை நகர்வது போன்ற உணர்வு இருந்தாலும், சஸ்பென்ஸ், திகில், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை அந்த குறைகளை மறக்க வைக்கின்றன.
மொத்தத்தில், ‘டார்க்’ திகில் பட ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படமாக இது அமைந்துள்ளது.

















