full screen background image
Search
Wednesday 22 July 2026
  • :
  • :
Latest Update

‘கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்

‘கட்டா குஸ்தி 2’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew

Starring – Vishnuu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat, Karunakaran, Zara, Mokksha and others.

Written and Directed by – Chella Ayyavu
Produced by Vels Film International, Vishnuu Vishal Studioz.
Producers : Dr Ishari K Ganesh & Vishnuu Vishal
Co- Producers : Shubhra, Aryan Ramesh & Ishan Saksena
Music : Sean Roldan
DOP : KM Bhaskaran
Editor : Barath Vikraman
Art Director : Jayachandran
Costume designer : Ruchi Munoth
Subtitles – Sajid Ali
Publicity Designer : Viyaki
Marketing and Promotions : Siddarth Srinivas
Executive Producer : Seetharam
Creative Producer : Shravanthi Sainath
PRO – Sathish (AIM)

முதல் பாகத்தை விட ‘கட்டா குஸ்தி 2’ எனக்கு இன்னும் அதிகமாக பிடித்திருக்கிறது. முதல் பாகத்தில் கணவன் மனைவி உறவை மையமாக வைத்து கதை நகர்ந்திருந்தது. ஆனால் இந்த முறை குடும்ப வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி புரிதல், பெண்ணின் கனவு, குடும்ப பொறுப்பு என எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

கதையை தேவையில்லாமல் இழுக்காமல், ஆரம்பத்திலேயே சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்கள். மனைவியின் கனவுக்காக ஹவுஸ் ஹஸ்பண்டாக மாறி வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ளும் விஷ்ணு விஷாலும், தேசிய அளவில் சாதிக்க போராடும் குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லட்சுமியும் கதையை தங்களது தோளில் சுமந்து செல்கிறார்கள். ஒரு சிறிய தவறான புரிதல் எப்படி பெரிய பிரச்சனையாக மாறுகிறது என்பதையும், அதை எந்த வித பிரச்சாரமும் இல்லாமல் குடும்ப பொழுதுபோக்காக சொல்லியிருப்பது படத்தின் பெரிய பலம்.

விஷ்ணு விஷால் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். மனைவிக்கு உறுதுணையாக இருக்கும் கணவர், பாசமான அப்பா, தேவையான இடத்தில் ஆக்ஷன் ஹீரோ என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக மகளுடன் வரும் காட்சிகள் மிகவும் ரசிக்க வைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியும் முதல் பாகத்தை விட இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறார். குஸ்தி வீராங்கனையாகவும், கண்டிப்பான அம்மாவாகவும், பாசமான மனைவியாகவும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது.

இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம் பேபி சாராவை. அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. கருணாஸ் வழக்கம்போல தனது டைமிங் காமெடியால் சிரிப்பு வெடிகளை கொளுத்துகிறார். முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிசி ஆண்டனி, மோக்ஷா ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களில் நல்ல பங்களிப்பு கொடுத்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் கைதட்டல் வாங்குகிறார்கள்.

கே எம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது. குஸ்தி போட்டி காட்சிகள் திரையில் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்திற்கு நல்ல பலம். குறிப்பாக சம்பவக்காரி பாடல் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெறும். பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் படத்தை எந்த இடத்திலும் சோர்வில்லாமல் நகர்த்துகிறது.

இயக்குநர் செல்லா அய்யாவு இந்த முறை சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியம், குழந்தைகளின் விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், குடும்ப பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களையும் மிகவும் எளிமையாக சொல்லியிருக்கிறார். எந்த இடத்திலும் அறிவுரை போல தெரியாமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்காக சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்க முடிந்தாலும், நகைச்சுவை, குடும்ப செண்டிமென்ட், நடிகர்களின் நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை அந்த குறைகளை மறக்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று மனம் விட்டு சிரித்து ரசிக்க வேண்டிய நல்ல கமர்ஷியல் படம். எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *