‘நிழல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
‘நிழல்’ – விறுவிறுப்பான பழிவாங்கும் கதைக்கு உணர்வுப்பூர்வமான திரைக்கதை!
மருத்துவரான ஜனனி, தொழிலதிபரின் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது நண்பர்களை கொடூரமாக தாக்கும் சம்பவத்துடன் தொடங்கும் ‘நிழல்’, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளை சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையுடன் வெளிப்படுத்துகிறது. பழிவாங்கும் கதையாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக வலுவான கருத்தை முன்வைப்பதன் மூலம் படம் தனித்துவம் பெறுகிறது.
கதையின் மையமாக இருக்கும் ஜனனி, கோபம், வேதனை மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி, ஆக்ஷன் காட்சிகளிலும் தனது அர்ப்பணிப்பை நிரூபித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக விஷாகன், வில்லனாக ஹரி விஜய் மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் கெளஷிக் ஆகியோர் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மோகன்குமார், இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார். எம். அபுபக்கரின் பின்னணி இசை திரில்லர் உணர்வை அதிகரிக்கிறது. தினேஷின் படத்தொகுப்பு, குறிப்பாக இரண்டாம் பாதியில் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது.
இயக்குநர் ஏ.கே.குமார், வழக்கமான பழிவாங்கும் கதையை உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன், சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களோடு சொல்லி ரசிகர்களை ஈர்க்கிறார்.
மொத்தத்தில், ‘நிழல்’ சமூக கருத்துடன் ரசிகர்களை கவரும் படமாக அமைந்துள்ளது.






















