full screen background image
Search
Tuesday 16 June 2026
  • :
  • :

‘Double Occupancy’ திரைப்பட விமர்சனம்

‘Double Occupancy’ திரைப்பட ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன்.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – அஸ்வின் கந்தசாமி

தயாரிப்பு – ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா), குஷ்பு சுந்தர் (அவ்னி மூவிஸ்)

இசை – சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு – சந்தகுமார் சக்கரவர்த்தி

படத்தொகுப்பு – பிரவீன் ஆண்டனி

கிரியேட்டிவ் புரொடியூசர் – அனந்திதா சுந்தர்

‘Double Occupancy’ தமிழ் சினிமாவில் அரிதாக பார்க்கப்படும் ஒரு வித்தியாசமான பேண்டஸி காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் மாறும் ஒரு மனிதரின் வாழ்க்கையை மையமாக வைத்து, காதல், நகைச்சுவை, செண்டிமென்ட், சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை கலந்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி.

பல வருடங்களாக குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதிக்கு ஒரு அதிசய குழந்தை பிறக்கிறது. பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழக்கும் அந்த குழந்தை, ஒரு அற்புத நிகழ்வின் மூலம் மீண்டும் உயிர் பெறுவதோடு, பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் மாறும் வித்தியாசமான சக்தியையும் பெறுகிறது. காலப்போக்கில் அந்த இரு உருவங்களும் தனித்தனியாக வாழ்க்கையை வாழ்ந்து, தனித்தனியாக காதலிக்கத் தொடங்குகின்றன. இந்த ரகசியத்தை மறைத்துக்கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அவர்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயலும் மரபணு ஆராய்ச்சி நிறுவனத்துடனான மோதல்களும் கதையை நகர்த்துகின்றன.

சந்தோஷ் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் இருவரும் ஒரே உயிரின் இரண்டு பரிமாணங்களை நம்பும்படியாக வெளிப்படுத்தியுள்ளனர். காதல், செண்டிமென்ட், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி காட்சிகளில் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக ரேஷ்மா தனது ஏக்கங்களையும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகரான சந்தோஷும் முழுமையான ஹீரோவாக தன்னை நிரூபிக்க முயன்றிருக்கிறார்.

வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் காதல் காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளனர். விடிவி கணேஷ் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். பகவதி பெருமாள், போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்டோர் தங்களது அனுபவமான நடிப்பால் கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசை படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று. பாடல்கள் துள்ளலாக இருப்பதோடு, பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் உயிர் கொடுக்கிறது. சந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாகவும் கண்ணுக்கு கவர்ச்சியாகவும் காட்டியுள்ளது. பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு சிக்கலான கதைக்கருவை குழப்பமின்றி நகர்த்த உதவியுள்ளது.

இயக்குநர் அஸ்வின் கந்தசாமியின் மிகப்பெரிய வெற்றி, மிகவும் வித்தியாசமான மற்றும் நம்ப முடியாத ஒரு கதையை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக சொல்லியிருப்பதுதான். முதல் பாதி வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. காதல், நகைச்சுவை மற்றும் பேண்டஸி அம்சங்கள் ரசிகர்களை ஈர்க்கின்றன. இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைவதும், சில காட்சிகள் நீளமாக உணரப்படுவதும் சிறிய குறைகளாக இருந்தாலும், உணர்ச்சிகரமான தருணங்களும் கிளைமாக்ஸ் காட்சிகளும் அந்த குறைகளை ஓரளவு மறக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘Double Occupancy’ வித்தியாசமான கதைகளை விரும்புபவர்களுக்கும், இளைஞர்களுக்கும், காதல் மற்றும் பேண்டஸி கலந்த திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கும் இந்த படம் ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *